சூரியன், புதன், குரு லக்னத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். சாஸ்திரங்களைக் கற்றவராக இருப்பார். எழுத்தாளராக இருப்பார் பல பொருட்களைச் சேர்த்துவைப்பவராக இருப்பார். சாதுரியமாக பேசுபவராக இருப்பார். சிலர் பெரிய பதவிகளில் இருப்பார்கள்.

சூரியன், புதன், குரு 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு நல்ல பேச்சுத் திறமை இருக்கும். எல்லா விஷயங்களிலும் கவனமாக இருப்பார். சிலர் எழுத்தாளர்களாக இருப்பார்கள். சிலர் மருத்துவர்களாக இருப்பார்கள். சிலர் ஜோதிடர்களாக இருப்பார்கள். சிலர் இளமையில் கஷ்டப்படுவார்கள். சிலர் வியாபாரிகளாக இருப்பார்கள். அதில் நல்ல வருமானம் இருக்கும்.

சூரியன், புதன், குரு 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தன் குடும்பத்தை நன்கு காப்பாற்றுவார். நிறைய படித்தவராக இருப்பார். பரரயணம்செய்து, பணம் சம்பாதிப்பார். சகோதரர்கள் நல்லவர்களாக இருப்பார்கள். சிலர் பேராசிரியர்களாக இருப்பார்கள். சிலர் கமிஷன் ஏஜென்டாக இருப்பார்கள்.

gg

Advertisment

சூரியன், புதன், குரு 4-ஆம் பாவத்தி-ருந்தால், ஜாதகருக்கு பூர்வீக சொத்து இருக்கும். நன்கு படித்தவராக இருப்பார். சுய முயற்சியால் பெயர், புகழ் பெறுவார். சிலர் எழுத்தாளர்களாக இருப்பார்கள். சிலர் ஜோதிடர்களாக இருப்பார்கள். சிலர் நீதிபதிகளாக இருப்பார்கள்.

சூரியன், புதன், குரு 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் பெரிய அரசாங்க பதவிகளில் இருப்பார்கள். சிலர் எழுத்தாளர்களாக இருப்பார்கள். சிலர் பேராசிரியர்களாக இருப்பார்கள். சிலர் ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.பி.எஸ். பதவிகளில் இருப்பார்கள். வாரிசுகள் நல்லவர்களாக இருப்பார்கள். பெயர், புகழ் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சூரியன், புதன், குரு 6-ஆம் பாவத்தில் இருந்தால், பகைவர்கள் குறைவார்கள். ஏதாவது விபத்து உண்டாகி, கா-ல் காயம் ஏற்படும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடுகளில் நல்லபெயர் இருக்கும். சிலர் நிறைய படித்தவர்களாக இருப்பார்கள். சிலர் புரோகிதர்களாக இருப்பார்கள். அதிகமாக பயணம் செய்வார்கள். சிலர் பேராசிரியர்களாக இருப்பார்கள். சிலர் கமிஷன் ஏஜென்டாக இருப்பார்கள். மார்க்கெட்டிங் திறமை உள்ளவர்களாக இருப்பார்கள்.

சூரியன், புதன், குரு 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். வேலைக்குச் செல்பவராக இருப்பார். பெயர், புகழ், பணம் இருக்கும். திருமண வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும். அழகான மனைவி இருப்பாள். 32 வயதிற்குப் பிறகு வாழ்க்கை யில் வளர்ச்சி இருக்கும். சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள்.

சூரியன், புதன், குரு 8-ஆம் பாவத்தில் இருந்தால், இளம்வயதில் உடல் நலம் கெடும். நல்ல பண வசதி இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். சிலர் விவசாயியாக இருப்பார்கள். சிலர் வெளிநாட்டு தொடர்புள்ள வர்த்தகத்தைச் செய்வார்கள்.

சூரியன், புதன், குரு 9-ஆம் பாவத்தி-ருந்தால், குடும்பத்தில் ஜாதகருக்கு பெயர், புகழ் இருக்கும்.

ஜாதகர் தன் முன்னோர்களின் பெயரைக் காப்பாற்றுவார். பணவசதி இருக்கும். நல்ல படிப்பு இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். வாரிசுகள் நன்றாக இருப்பார்கள்.

சூரியன், புதன், குரு 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் புகழ்பெற்ற ஜோதிட ராக இருப்பார். சிலர் பெரிய ஆராய்ச்சியாளராக இருப்பார் கள். சிலர் நீதிபதிகளாக இருப்பார்கள். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். வியாபாரத்தில் பெயர், புகழ் இருக்கும். சிலர் பெரிய அரசியல்வாதியாக இருப்பார்கள். நியாயமாக வாழ்க்கையை நடத்துவார்கள். நேர்மையாக இருப்பார்கள்.

சூரியன், புதன், குரு 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். வாரிசு இருக் கும். பெரிய அளவில் பணம் சம்பாதிப்பார். நல்ல பேச்சுத் திறமை இருக்கும். தைரிய குணம் இருக்கும். பிள்ளைகளால் பெயர், புகழ் கிடைக்கும். சொத்துகள் இருக்கும். மனைவி நல்லவ ளாக இருப்பாள்.

சூரியன், புதன், குரு 12-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். வெளியூருக்குச் சென்று, அங்கு தொழிலை நடத்துவார். அதில் பெயர், புகழ் கிடைக்கும். வாழ்க்கையின் இரண்டாவது பகுதி நன்றாக இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும்.

செல்: 98401 11534