கிரகணம் என்பது ஒரு வானவியல் நிகழ்வு. வானில் பல கோள்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. அவை நகர்ந்து செல்லும்போது சிலசமயம் ஒன்றின் பாதையில் மற்றொன்று குறுக்கிட நேரிடும்.
பூமி, தன் அச்சில் 23 1/2 பாகை சாய்ந்துள்ளது. சூரியன் தன் அச்சில் ஏழு பாகை சாய்வாகவும், சந்திரன் ஐந்து பாகை சரிவாகவும் பூமியைச் சுற்றுகிறது. இவ்வாறு சுற்றிவரும்போது பூமி, சூரியன், சந்திரன் ஆகிய மூன்றும் சில சமயங்களில் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றன. அப்போது ஏதாவது ஒரு கோள் நமது பார்வையிலிலிருந்து மறைக்கப்படுகிறது. மறைக்கப்படும் கோளின் பெயரை வைத்து எந்த கிரகணம் என்று சொல்லப்படுகிறது.
சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் உண்டாகிறது.
சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும்போது, சூரியனின் கதிர்கள் நிலவின்மீது படாமல் பூமி மறைத்துவிடுவதால் ஏற்படுவதாகும்.
சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. கிரகணம் நிகழும்பொழுது சூரிய சந்திரர்கள் ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும், கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
பொதுவாக ஒரு வருடத்தில் இரண்டிலிலிருந்து ஐந்து சூரிய கிரகணமும், அதிகபட்சமாக மூன்று சந்திர கிரகணமும் ஏற்படலாம். சில சமயம் ஒரு சந்திர கிரகணம்கூட ஏற்படாமலும் போகலாம். ஆனால் ஒரு வருடத்தில் அதிகபட்சம் ஏழு கிரகணங்கள்தான் வரும். இதில் நான்கு சூரிய கிரகணமாகவும், மூன்று சந்திர கிரகணமாகவும் இருக்கலாம்.
நடப்பு மங்களகரமான விளம்பி வருடத்தில் மூன்று சூரிய கிரகணமும் இரண்டு சந்திர கிரகணமும் ஏற்படுகிறது. ஆடி மாதம் 11-ஆம் தேதி (27-7-2018) வெள்ளிக்கிழமை இரவு உத்திராடம் மற்றும் திருவோண நட்சத்திரத்தில் நிகழும் கேது கிரகஸ்த முழு சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும்.
இது ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா முழுமைக்கும் தெரியும். தென் அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிலிருந்து இக்கிரகணம் தொடங்குகிறது.
கிரகணம் எல்லா நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தென்படாது. மாறாக வெவ்வேறு நேரங்களிலேயே தென்படும். கிரகணத்தின்போது புவியின் மேற்பரப்பில் வெளிச்சம் குறைவதைக் காணலாம்.
சந்திர கிரகணம் பற்றிய புராணக்கதை சந்திரன் செய்த பாவ காரணத்தால் அவருக்கு ராகு தோஷம் ஏற்பட்டுவிடுகிறது. இதனால் ராகு (பாம்பு) அவரைப் பிடித்து முடமாக்க நினைக்கிறார்.
ஆனால் சந்திரன் பகவானைப் பிரார்த்தித்து சுலோகங்கள் சொல்லவும், இறைவன் சந்திரனுக்கு அருள, சந்திரனுக்கு இருந்த ராகுதோஷம் நீங்குகிறது.
இதனால் கிரகணத்தின்போது பக்தியுடன் இறைவனைப் பிரார்த்தித்து வந்தால் அவரவர் செய்த பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கையாகும். மேலும், இறைவன் அருளும் கிடைக்கும்.
ஸபர்ச காலம்- கிரகண ஆரம்ப காலம்: 27-7-2018 இரவு 11.54 மணி.
நிமீலன காலம்- சந்திரன் முழுவதும் மறைந்துவிடும் காலம்: முழு கிரகண ஆரம்ப நேரம்: 28-7-2018 இரவு 12.59 மணி.
மத்திய காலம்- மறைய ஆரம்பித்த நேரத்திலிலிருந்து மறுபடியும் சந்திரன் தெரிய ஆரம்பிக்கும் நேரம்.
கிரகண மத்தியம் 28-07-2018 நள்ளிரவு 1.52 மணி.
உன்மீலன காலம்- பாம்பின் பிடியிலிருந்து சந்திரன் வெளிப்பட்டு நன்றாகக் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிக்கும் காலம். முழு கிரகண முடிவு 28-7-2018 பின்னிரவு 2.43 மணி.
மோட்ச காலம்- பாம்பின் பிடியிலிலிருந்து சந்திரன் விடுபட்டு பூரணமாகத் தெரியும் நேரம். கிரகண முடிவு 28-7-2018 அதிகாலை 3.49 மணி. கிரகண கால அளவு தோராயமாக 3 மணி, 55 நிமிடம், 35 விநாடிகள்.
கிரகண காலங்களில் செய்யக்கூடாதவை
வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்குப் பிறகு உணவு உண்ணக்கூடாது. செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பைப் புல்லைப் போட்டு வைக்கவேண்டும்.
பௌர்ணமி திதி சிரார்த்தம் மறுநாள் சனிக்கிழமை செய்யவேண்டும்.
கர்ப்பிணிப் பெண்கள் வெள்ளிக்கிழமை இரவு 11.45 முதல் இரவு 3.55 வரை சந்திரனைப் பார்க்கக்கூடாது. முடிந்தவரை வெளியூர்ப் பயணங்களைத் தவிர்த்தல் நலம். ஆலயங்கள் அனைத்தும் மூடியிருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.
கிரகண காலங்களில் செய்யக்கூடியவை
நமக்கு ஒரு பக்கம் சந்திரனும், கிழக்கு- மேற்கு 180 டிகிரியில், வடக்கு- தெற்கு கிராந்தியின் படியும் 180 டிகிரியில் துல்லியமாக சூரியன் வரும்.
இந்த நிலையில் ஆன்மகாரகன்- மனோகாரகன் இருவரும் மிகவும் அதீத உணர்வு நிலையில் இருப்பார்கள்.
அதனால்தான் உடலையும் உள்ளத்தினையும் அன்று ரிலாக்ஸாக, வேறு எந்த வேலையுமில்லாமல் இருக்க வைப்பதற்காக உடலிலின் செயற்கை இயக்கத்தினை நிறுத்தி வைக்கிறோம். (ஜீரணம்முதல் கடும் வேலைகள்வரை).
மனதின் ஆற்றலும் ஆன்மாவின் ஆற்றலும் வெளிப்படும் இந்த நொடிகளை அனைவரும் ஆன்ம சுத்திக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
மனதின் அதீத சக்திகள் இந்தமுறை ராகுவால் தூண்டப்படும்படி உள்ளதாலும், கடகத்தில்- அதாவது சந்திரனின் வீட்டிலேயே நடப்பதாலும் குலதெய்வ உபாசனை நடத்தலாம்.
ராகுவின் தூண்டுதலால் எந்த தீய சிந்தனையும் உண்டாகக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டும்.
சந்திரன்- ராகு, சூரியன்- கேது இவை இரண்டுமே நல்ல இணைவுகள் அல்ல.
ஆனாலும் ஆன்ம சாதனையில்... முக்கியமாக மந்திரஜபம் சித்தியாகிற நேரமாக இதனை மாற்றலாம். ஆன்மாவும் நமது மனதின் சக்தியும் உச்சமாகி... ராகு- கேதுக்களின் பாதையில் நேர்க்கோட்டில் வரும் அந்த நொடிகளில் அமானுஷ்யமான விஷயங்களை உண்டாக்கும்.
அந்த நொடியில் நாம் இறைவனை சரணடைந்துவிட்டால், இறைவனின் அரிய சக்திகள் நம்முள்ளும் நிறைந்து பலவிதமான நன்மைகளைத் தந்துவிடும்.
காயத்திரி மந்திரம் மற்றும் ராமநாமப் பாராயணம் செய்யலாம்.
பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், கிருத்திகை, ரோகிணி, உத்திரம், ஹஸ்தம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களும், வெள்ளிக்கிழமை பிறந்தவர்களும் மறுநாள் சனிக்கிழமை சாந்தி செய்துகொள்ளவும்.
கிரகணத்தை தொலைநோக்கி உதவியுடன் பார்க்கலாம்; எந்த தோஷமும் இல்லை.
கிரகண தோஷ காலம்
கிரகணம் ஏற்பட்ட நாளுக்கு முன்பும் பின்பும் ஏழு நாட்கள் கிரகண தோஷ காலமாகும். கிரகணம் ஏற்பட்ட நட்சத்திரத்தில் ஆறு மாத காலத்திற்கு முகூர்த்தம் செய்யக்கூடாது.
கிரகணத்தால் பூமிக்கு நேரும் மாற்றம்
விண்வெளியிலுள்ள அனைத்துக் கோள்களும் சூரியனின் ஒளியைப் பெற்று இயங்குவதால், சூரிய ஒளியிலிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் மற்றும் அகச்சிவப்புக் கதிர்களே பூமிக்கு பரிபூரண இயக்கத்தைத் தருகின்றன. இந்த சூரிய ஒளியை நிழல் கிரகங்களான ராகு- கேதுக்கள் மறைக்கும்போது பூமிக்குக் கிடைக்கும் ஒளிசக்தித் திறன் குறைகிறது. அதனால் கிரகண காலத்திற்கு முன்- பின் ஏழு நாட்கள் பூமிக்கு தோஷ காலமாகும்.
கிரகண காலங்களில் பிறக்கும் குழந்தைகளின் வினைப்பதிவு எப்படி இருக்கும்?
பூமியில் ஜனனமாகும் ஒரு ஆன்மா தன் வினைப்பதிவு முழுமையாக அனுபவிக்கக்கூடிய கிரக நிலவரம் எப்பொழுது வருகிறதோ அப்பொழுதுதான் பிறப்பெடுக்கும்.
சூரிய கிரகணத்தில் பிறக்கும் குழந்தைகள் தந்தைவழி கர்மாவையும், சந்திர கிரகணத்தில் பிறக்கும் குழந்தைகள் தாய்வழி கர்மாவையும் அதிகம் சுமந்து பிறக்கும். கிரகணம் சம்பவிக்கும்போது ராகு- கேது, சூரியன்- சந்திரன் இணைவு பெறும் கிரகங்களும், அந்த சொந்த பாவகமும், நின்ற பாவங்களும் பாதிக்கப்படும்.
கிரகணத்தில் பிறந்த ஜாதகருக்கு
சூரியன், ராகு- கேது அல்லது சந்திரன், ராகு- கேது சேர்க்கையை குரு பார்த்தாலோ அல்லது சேர்ந்தாலோ சூட்சும சக்திகள் இருக்கும். தீய சக்திகள்- பில்லி சூனியம், மாந்த்ரீகம், செய்வினை எளிதில் தாக்காது.
கிரகணத்தில் பிறந்தவர்களுக்கு
சூரியன், ராகு- கேது சேர்க்கையுடன் சனி, செவ்வாய் தொடர்பு பெற்றால் உடல் ஊனம், நோய்த் தாக்கம், மன வளர்ச்சிக் குறைவு, ஆயுள் குறைவு ஏற்படுகிறது.
இந்த நான்கு பிரச்சினைகளும் இல்லாமல் பிறக்கும் குழந்தைகள் போதிய கல்வியின்மையாலும், திருமணத்தடையாலும் பாதிப்படைகின்றனர்.
திருமணத்தடையை சந்திப்பவர்களில், தலைகீழாக நின்றும் திருமணமே நடக்காதவர்கள் பத்து சதவிகிதம் பேர் கிரகண காலங்களில் பிறந்தார்கள்.
அப்படி என்ன பாவம் செய்து கிரகண காலத்தில் பிறந்தவர்கள் என்ற கேள்வி இங்கே எழும். என் ஆய்வில், இவர்களின் முன்னோர்கள் வட்டித்தொழில் செய்தவர்களாகவும், சர்ப்பங்களைத் துன்புறுத்தியவர்களாகவும் இருக்கின்றனர்.
இங்கே இவர்களின் முன்னோர்களைக் குறைகூறுவதா? வினைப்பதிவை அனுபவிப்பவரை குற்றம் கூறுவதா?
"ஊழிற் பெருவலிலி யாவுள
மற்றொன்று
சூழினுந் தான் முந்துறும்'
என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க, ஊழினைவிட வலிலிமையானது எதுவுமில்லை. அந்த ஊழினை மற்றொன்று மாற்ற நினைத்தாலும், அந்த ஊழ்வினையானது தனது பயனை ஏற்படுத்த முந்தி நிற்கும். ஊழ்வினைப் பயனை அனுபவித்தே தீர்க்க வேண்டும்.
"ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்' என்பது சிலப்பதிகார வரி.
எனவே நம் வழித்தோன்றல்களுக்கு புண்ணியப் பலன்கிடைக்க நாம் நல்வழியில் முயலவேண்டும்.
செல்: 98652 20406