உறவுகளால் உண்டாகும் நோய்கள்! -பரணிதரன்

/idhalgal/balajothidam/diseases-caused-by-relationships-baranitharan

ஜோதிட சாஸ்திரம் என்பது வாழ்க்கையின் அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கிய தாகும். பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான அனைத்தையும் ஜோதிடத்தின் வழியாகத் தெரிந்துகொள்ள முடியும் என்பதே ஜோதிட சாஸ்திரத்தின் வெற்றியாகும். இதில் ஒரு பகுதிதான் நோய்கள், கண்டம் என்று சொல்லலாம்.

பொதுவாக ஆயுள் காரகனான சனி பகவானின் சஞ்சார நிலையை வைத்தும், பார்வை நிலையை வைத்தும் ஒவ்வொரு ஜாத கரின் நிலையை, ஆரோக்கியத்தை, நோய் களின் தாக்கத்தை நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.

dd

சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும்போதும், சுகஸ்தானமான நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும்போதும், ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கும்போது ஜென்மத்தைப் பார்ப்பதாலும், ஆயுள்ஸ்தானமான எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கும்போதும், ஜென்மத்திற்கு விரயஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கும்போதும் எந்தரீதியிலாவது ஜாதகருக்குப் பாதகமான நிலையை உண்டாக்கிவிடுகிறார்.

ஒவ்வொருவரின் பூர்வபுண்ணியப் பலன்களுக்கேற்ப அவர்களுக்குண்டாகும் பாதிப்பினுட

ஜோதிட சாஸ்திரம் என்பது வாழ்க்கையின் அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கிய தாகும். பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான அனைத்தையும் ஜோதிடத்தின் வழியாகத் தெரிந்துகொள்ள முடியும் என்பதே ஜோதிட சாஸ்திரத்தின் வெற்றியாகும். இதில் ஒரு பகுதிதான் நோய்கள், கண்டம் என்று சொல்லலாம்.

பொதுவாக ஆயுள் காரகனான சனி பகவானின் சஞ்சார நிலையை வைத்தும், பார்வை நிலையை வைத்தும் ஒவ்வொரு ஜாத கரின் நிலையை, ஆரோக்கியத்தை, நோய் களின் தாக்கத்தை நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.

dd

சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும்போதும், சுகஸ்தானமான நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும்போதும், ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கும்போது ஜென்மத்தைப் பார்ப்பதாலும், ஆயுள்ஸ்தானமான எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கும்போதும், ஜென்மத்திற்கு விரயஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கும்போதும் எந்தரீதியிலாவது ஜாதகருக்குப் பாதகமான நிலையை உண்டாக்கிவிடுகிறார்.

ஒவ்வொருவரின் பூர்வபுண்ணியப் பலன்களுக்கேற்ப அவர்களுக்குண்டாகும் பாதிப்பினுடைய அளவும் அமைந்து விடுகிறது. ஒருசிலர் சாதாரண சிகிக்சையுடன் தப்பித்துக்கொள்கின்றனர். ஒருசிலர் மருத்துவமனையில் ஐ.சி.யூ வரை சென்று வருகின்றனர். ஒருசிலர் உயிர் பிழைத்தது மறுபிறவி என்று சொல்லும் அளவுக்கு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

சனி பகவானின் பாதிப்புகளிலிருந்து விடுபட்டு மீண்டு வருகிறோம். நம் உடல் நிலையில் முன்னேற் றத்துடன், ஆரோக்கியத் துடன், 'அப்பாடா! நோய்களெல்லாம் மறைந்துவிட்டன. இனி நன்றாக வாழப் போகிறோம்' என்ற எண்ணத்துடன் வாழ ஆரம்பிக்கிறோம். அந்த நிலையில்தான் மீண்டும் ஒரு அதிர்ச்சிக்கு ஆளாகிறோம்.

ஜோதிடரீதியாக நோயிலிருந்து விடுபட்டு விட்டோம் என்று நம்பிக்கொண்டிருந்த நிலையில், "இனி உங்கள் உடல்நிலையில் எந்த பாதிப்பும் உண்டாகாது' என்று ஜோதிடர்கள் கூறியநிலையில், மீண்டும் நோய்கள் புதுப்புது வடிவங்கள் எடுக்கிறதே! இது எப்படி? அப்படியென்றால் ஜோதிடம் பொய்யா? ஜோதிடர் சொன்னது பொய்யா என்ற சிந்தனைகள் நமக்குள் மேலோங்கும்.

ஜாதகம் என்று வரும்போது, ஒருவருடைய ஜாதகத்துடன் அவர்களுக்குரிய பலன்கள் முடிந்துவிடுவதில்லை. ரத்த சம்பந்த உறவு களான கணவன்- மனைவி, பிள்ளைகளுடைய ஜாதகங்களினாலும் ஒருசில பலன்கள் கண்டிப்பாக உண்டாகும். அதில் நோய் நொடிகளும் கண்டங்களும் அடங்கும்.

கணவனுடைய ஜாதகத்திலோ, மனைவி யினுடைய ஜாதகத்திலோ சனி பகவான் ஜென்மச்சனியாக சஞ்சரிக்கும்போது, அங்கிருந்து தனது ஏழாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தைப் பார்த்திடுவார். அந்த நிலையில் அந்த இடம் பாதிப்பிற்கு ஆளாகும்.

கணவனுக்கு ஜென்மச்சனி வரும்போது மனைவியின் உடல்நிலையில் சங்கடங்கள் உண்டாகும். அதேபோல் மனைவிக்கு ஜென்மச்சனி வரும்போது கணவனின் உடல்நிலையில் பாதிப்புகள் தோன்றும். இதே போல், கணவனுடைய ஏழாம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிக்கும்போது மனைவிக்கும், மனைவியினுடைய ஏழாம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிக்கும்போது கணவனுக்கும் உடல்நிலையில் கோளாறுகள், விபத்துகள் ஏற்படும்.

கணவன்- மனைவிக்கடுத்து பிள்ளை களின் ஜாதகம். நம்முடைய மண்ணில் ஒரு பழக்கமுண்டு. "தாய்க்கு தலைப்பிள்ளை, தந்தைக்கு இளையபிள்ளை' என்று ஈமச் சடங்குகள் செய்வதற்கு வகுத்துவைத்துள்ளனர்.

பொதுவாக ஒரு பிள்ளையினுடைய ஜாத கத்தில் மாதுர் ஸ்தானமெனும் நான்காம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தி லும் அல்லது நான்காம் வீட்டினைப் பார்க்கின்ற காலத்திலும் அவனுடைய தாய்க்கு நோய்நொடி, கண்டம் என்று உண்டாகும்.

இதேபோல், ஒரு பிள்ளையினுடைய பிதுர் ஸ்தானமெனும் ஒன்பதாம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிக்கும்போதும் அல்லது அந்த வீட்டினை சனி பகவான் பார்த்திடும் காலத்திலும் அவனுடைய தந்தைக்கு நோய்நொடி, கண்டம் என்று உண்டாகும்.

கணவன்- மனைவி இருவருடைய ஜாதகத் திலும் கோட்சாரரீதியாக சனி பகவான் புத்திர ஸ்தானமெனும் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கும்போதும் அல்லது ஐந்தாம் வீட்டினைப் பார்த்திடும் காலத்திலும் பிள்ளை களுக்கு சங்கடங்கள், ஏதேனும் பாதிப்புகள் உண்டாகும்.

இத்தகைய பாதிப்புகள் அவரவருடைய ஜாதக பலத்திற்கேற்ப சாதாரண சிகிச்சை யோடு முடியக்கூடியதாகவும் இருக்கும்; அறுவை சிகிச்சை செய்து மீண்டுவரக் கூடியதாகவும் இருக்கும். பொதுவாக ஜோதிடம் பார்ப்பவர்கள் தங்களுடைய ஜாதகத்தை மட்டும் பார்த்து- அதிலும் நற்பலன்களை மட்டுமே தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். ஆயுள் பற்றியெல்லாம் பெரும்பாலோர் கேட்பதுமில்லை. தெரிந்துகொள்ள விரும்புவதுமில்லை.

ஒவ்வொருவரும் தெளிவாகத் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல், உங்களுடைய ஜாதகத்தை மட்டுமே வைத்து பாதிப்புகள் உண்டாவதில்லை. ரத்த சம்பந்த உறவுகளின் ஜாதகங்களினாலும் உங்கள் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

இத்தகைய காலகட்டத்தில் முடிந்த வரையில் சம்பந்தப்பட்டவருடன் ஒரே வீட்டில் இருப்பதைத் தவிர்த்து கல்வியின் காரணமாகவோ, வேலையின் காரணமா கவோ வேறிடத்தில் இருக்கலாம். இதன் வழியாக பாதிப்புகள் பெருமளவில் குறைந்து, "தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது' என்ற நிலையைக் காணலாம். எனவே ஒவ்வொருவரும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் ஜாதகங்களையும் பார்த்து அதன்வழியே எச்சரிக்கையுடன் வாழ்ந்திடவேண்டும்.

bala121121
இதையும் படியுங்கள்
Subscribe