Advertisment

நேர் திசையா எதிர் திசையா? -ஆர். பரசுராமன்

/idhalgal/balajothidam/direct-direction-or-opposite-direction-r-parasuraman

னிதனின் வாழ்க்கைக்கு கல்வி, செல்வம், வீரம் தேவை. கல்வியின் அருமையும், செல்வத்தால் வரும் பெருமையும் நாம் அனைவரும் அறிந்ததே. இங்கே ஜோதிடரீதியாக வீரத்தைப்பற்றி தெரிந்துகொள்வோம்.

Advertisment

dd

வீரம் இருக்கும் இடத்தில்தான் துணிச்சல் இருக்கும், துணிச்சல் இருக்கும் இடத்தில்தான் உயிர்த்தியாகமும் இருக்கும். எந்த காரணத்துக்காக ஒருவர் உயிர்த்தியாகம் செய்கிறாரோ, அதைப் பொருத்துதான் அவர் தியாகியா அல்லது தீவிரவாதியா என்று உலகம் முடிவு செய்யும். நாட்டுக்காகவ

னிதனின் வாழ்க்கைக்கு கல்வி, செல்வம், வீரம் தேவை. கல்வியின் அருமையும், செல்வத்தால் வரும் பெருமையும் நாம் அனைவரும் அறிந்ததே. இங்கே ஜோதிடரீதியாக வீரத்தைப்பற்றி தெரிந்துகொள்வோம்.

Advertisment

dd

வீரம் இருக்கும் இடத்தில்தான் துணிச்சல் இருக்கும், துணிச்சல் இருக்கும் இடத்தில்தான் உயிர்த்தியாகமும் இருக்கும். எந்த காரணத்துக்காக ஒருவர் உயிர்த்தியாகம் செய்கிறாரோ, அதைப் பொருத்துதான் அவர் தியாகியா அல்லது தீவிரவாதியா என்று உலகம் முடிவு செய்யும். நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் ஆயுதம் ஏந்தியவர்கள் இராணுவத்தில், காவல் துறையில் பணிபுரிகிறவர்களாக இருப்பார்கள். தன் சுயநலத்துக்காக ஆயுதம் ஏந்தியவர்களை கொள்ளைக்காரன், கொலைகாரன், தீவிரவாதி என்று உலகம் கூறும்.

இப்பொழுது காவல் துறையில் உயரதிகாரியாகப் பணியாற்றிய ஒருவரின் ஜாதகத்தைப் பார்ப்போம். இந்த ஜாதகத்தில் முக்கியமான விஷயம், 9, 10-க்குடையவர்கள் பரிவர்த்தனையாக இருந்து தர்மகர்மாதிபதி யோகமடைந்த காரணத்தி னால், இவர் காவல்துறையின் உயரதிகாரியாக (ஐ.பி.எஸ்) இருந்தார். இது மட்டுமில்லாமல், காவல்துறைக்கு முக்கியமான கிரகம் செவ்வாய் சூரியனுடனும், லக்னாதிபதி புதனுடனும் அமர்ந்து, குரு பார்வை, பௌர்ணமிச் சந்திரன் பார்வையும் பெற்று மிக வலுவான நிலையில் அமைந்துள்ளது.

Advertisment

இன்னும் இவர் ஜாதகத்தை நுணுக்கமாகப் பார்த்தால், இவர் வேலைக்குச் சென்றோம் வந்தோமென்று இல்லாமல், சிறையில் நிறைய சீர்திருத்தங்களை மேற்கொண்டார். பொதுவாக லக்னத்தில் கேது எந்த கிரகத்துடனும் சேராமல், எந்த கிரகத்தின் பார்வையும் பெறாம-ருந்தால் அவர் கள் பொதுநல வாதியாக இருப்பார்கள். பிறரின் நன்மையை முக்கியமாக நினைத்து வாழ்வார்கள். இதற்கு வலுசேர்க்கும் விதமாக ஐந்தாமிடத்தில் குரு நீச நிலையில் இருந்த காரணத்தினால், அவர் நல்வழியில் வரும் பணத்தை மட்டுமே விரும்பினார்.

தவறான வழியில் வரும் பணத்தை விரும்பவில்லை.

சிலரது முக்கிய சந்தேகம் என்னவென்றால், என்னிடம் வீரம், துணிச்சல், திறமை இருக்கிறது.

ஆனால் அரசு வேலை இல்லை என்பது. இந்த மூன்று விஷயங்கள் ஒருவருக்கு இருந்தால் அவருக்கு செவ்வாய் நல்லநிலையில் இருக்கிறார் என்று பொருள். ஆனால் அரசு வேலை கிடைக்க வில்லையென்றால் சூரியன் ஒத்துழைக்க வில்லை. ஆனாலும் தனியார் துறையில் வீரம், திறமை, ஆற்றல் அனைத்துக்குமே மதிப்புதரும் வகையில் பிரைவேட் செக்யூரிட்டி, பிரைவேட் பாடிகார்ட் என பலதரப்பட்ட வேலைவாய்ப்பு கள் உள்ளன. அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நேர்திசையில் போகும் பாதையில் தடங்கல். வந்தால் மாற்று திசையில்தான் போகவேண்டும். எதிர்திசையில் செல்லக்கூடாது. இதை மனதில் வைத்து வாழவேண்டும்.

செல்: 90801 23711

bala100921
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe