கிரகங்கள் ஜாதகத்தில் அமர்ந்த குணங்களுக்குத் தக்கவாறு பலன்களைக் கொடுக்கின்றன. கிரகங்கள் அமர்ந்த சூழ்நிலை களை மகரிஷி பலபத்திரர் "ஹோரா ரத்னம்' என்ற நூலில் தெளிவாக விளக்குகிறார். ஒரு ஜோதிடர் பலன்களைக் கூறுவதற்குமுன், கிரகத்தினுடைய கண்ணியத்தை (Dignity) கீழே கொடுக்கப்பட்டுள்ள அம்சங்களைக்கொண்டு கவனமாக ஆராய்தல் அவசியம் என்று அறிவுறுத்துகிறார். அவற்றை இங்கு காண்போம்.
1. ஒரு கிரகத்தின் இயற்கை குணம் சுபத் தன்மை கொண்டதா, அசுபத்தன்மை கொண்டதா என்பதை ஜோதிடர்கள் அறிதல் நன்று.
2. கிரகங்கள் எத்தகைய அவஸ்தைகளை அனுப வித்துக் கொண்டிருக்கின்றன என்றும்;
3. கிரகங்கள் ராசியில் நட்பு ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதா, திரிகோணம் பெற்றுள்ளதா, உச்சம் பெற்றுள்ளதா, நீசத்தில் உள்ளதா, நீசத்தில் இருந்தால் நீசபங்கம் அடைந்துள்ளதா, பகைபெற்ற ராசியில் உள்ளதா, பகை வருடன் இணைவு பெற்றுள்ளதா அல்லது பகைவரால் பார்க்கப்பட்டுள்ளதா, நட்பு கிரகத்துடன் இணைவு அல்லது பார்வையில் உள்ளதா என்று ஆராய்ந்தால் அந்த கிரகத்தின் நிலைப்பாடு (Status) தெரியவரும்.
4. மேலே குறிப்பிட்ட நிலையை ஆராயும்போது கிரகத்தின் பலமும் பலவீனமும் தெரியவரும்.
5. கிரகம் தான் அமைந்திருக்கும் ராசியாதிபதியுடன் தொடர்புகொண்டுள் ளதா அல்லது தனியாக இருக்கிறதா என்பதைப் பொருத்து குணங்களை வெளிப் படுத்தும். கிரகத்தின் பஞ்சபூதத் தொடர்பு களையும் ஆராய்ந்தறிதல் நன்மையாகும்.
6. மற்ற கிரகங்களின் தொடர்புகளையும் பார்வைகளையும் எவ்வாறு அந்த கிரகம் அனுபவிக்கிறது என்று காணவேண்டும். (உதாரணத்திற்கு, ஒரு கிரகத்திற்கு உச்சம் பெற
கிரகங்கள் ஜாதகத்தில் அமர்ந்த குணங்களுக்குத் தக்கவாறு பலன்களைக் கொடுக்கின்றன. கிரகங்கள் அமர்ந்த சூழ்நிலை களை மகரிஷி பலபத்திரர் "ஹோரா ரத்னம்' என்ற நூலில் தெளிவாக விளக்குகிறார். ஒரு ஜோதிடர் பலன்களைக் கூறுவதற்குமுன், கிரகத்தினுடைய கண்ணியத்தை (Dignity) கீழே கொடுக்கப்பட்டுள்ள அம்சங்களைக்கொண்டு கவனமாக ஆராய்தல் அவசியம் என்று அறிவுறுத்துகிறார். அவற்றை இங்கு காண்போம்.
1. ஒரு கிரகத்தின் இயற்கை குணம் சுபத் தன்மை கொண்டதா, அசுபத்தன்மை கொண்டதா என்பதை ஜோதிடர்கள் அறிதல் நன்று.
2. கிரகங்கள் எத்தகைய அவஸ்தைகளை அனுப வித்துக் கொண்டிருக்கின்றன என்றும்;
3. கிரகங்கள் ராசியில் நட்பு ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதா, திரிகோணம் பெற்றுள்ளதா, உச்சம் பெற்றுள்ளதா, நீசத்தில் உள்ளதா, நீசத்தில் இருந்தால் நீசபங்கம் அடைந்துள்ளதா, பகைபெற்ற ராசியில் உள்ளதா, பகை வருடன் இணைவு பெற்றுள்ளதா அல்லது பகைவரால் பார்க்கப்பட்டுள்ளதா, நட்பு கிரகத்துடன் இணைவு அல்லது பார்வையில் உள்ளதா என்று ஆராய்ந்தால் அந்த கிரகத்தின் நிலைப்பாடு (Status) தெரியவரும்.
4. மேலே குறிப்பிட்ட நிலையை ஆராயும்போது கிரகத்தின் பலமும் பலவீனமும் தெரியவரும்.
5. கிரகம் தான் அமைந்திருக்கும் ராசியாதிபதியுடன் தொடர்புகொண்டுள் ளதா அல்லது தனியாக இருக்கிறதா என்பதைப் பொருத்து குணங்களை வெளிப் படுத்தும். கிரகத்தின் பஞ்சபூதத் தொடர்பு களையும் ஆராய்ந்தறிதல் நன்மையாகும்.
6. மற்ற கிரகங்களின் தொடர்புகளையும் பார்வைகளையும் எவ்வாறு அந்த கிரகம் அனுபவிக்கிறது என்று காணவேண்டும். (உதாரணத்திற்கு, ஒரு கிரகத்திற்கு உச்சம் பெற்ற கிரகம் மற்றும் நீசம்பெற்ற கிரகங்களின் பார்வை படும்பொழுது, உச்சம்பெற்ற கிரகத்தின் பலன்களை அந்த கிரகம் அனுபவிக்கும்).
7. கிரகங்கள் தாங்கள் அமைந்திருக்கும் பாவங்களைப் பொருத்து தங்களுடைய குணங்களை மாற்றிக்கொள்ளும்.
8. சாயநாடி அவஸ்தைகளை கிரகங்கள் எவ்வாறு அனுபவிக்கின்றன என்றும், அந்த அவஸ்தைகளை எப்படிப்பட்ட பலன்களால் வெளிப்படுத்தும் என்பதையும் அறிதல் நன்மை பயக்கும்.
மேலே கூறியுள்ளபடி ஒரு ஜாதகத்தை ஆராயும்பொழுது, கிரகங்கள் தங்களுக்கு உரித்தான குணங்களைத் தாங்கள் அமைந்திருக்கும் ராசிகளுக்கு ஏற்பவும், படும் அவஸ்தைகளுக்குத் தக்கபடியும் வெளிப்படுத்துகின்றன. அத்தகைய குணங்கள் நல்லவையாகவோ கெட்டவையாகவோ இருக்கும். மேற்கண்ட எட்டுவிதமான அம்சங் களை "கண்ணியம்' என்பர். ஆங்கிலத்தில்'Dignity' என்பர். கண்ணியத்திற்கேற்ப செயல்படுவது கிரகங்களின் கடமையாகிறது. கிரகங்கள் தங்களுக்கே உரித்தான கண்ணியத்துடன் செயல்படும்பொழுது, தங்களுடைய சமூகநிலைக்கு (Status) ஏற்றவாறு பலன்களைப் பிரதிபலிக்கின்றன.
ஜோதிடர்களாகிய நாம் ஒரு ஜாதகத்தை ஆராயும்பொழுது, கிரகங்களின் கண்ணியத்தையும் (Dignity) சமூக நிலையையும் (Planet's Status)அதிக கவனத்துடன் மேலே கொடுக்கப் பட்டுள்ள அம்சங்களின் அடிப்படையில் ஆலோசனை செய்தல் அவசியமாகிறது. இவையெல்லாம் கொடுப்பினைகள் என்று கூறப்படுகின்றன. இத்தகைய கொடுப்பினைகள் அப்படியே நடைமுறையில் செயல்படுத்துமா என்பதை தற்பொழுது நடைபெறுகின்ற தசா, புத்தி, அந்தரங்களே உணர்த்தும். அத்தகைய கொடுப்பினையால் உண்டாகும் பலன்களை உடனே கொடுக்குமா அல்லது அவற்றை ஒதுக்கி விட்டு தசா, புக்தி நாதர்கள் படும் அவஸ்தைகளைப் பிரதிபலிலித்து அதற்கேற்ப பலன்களைக் கொடுக்குமா என்பதை கவனித்தல் அவசியமாகின்றது.
மேலே கொடுத்துள்ள 8-ஆவது அம்சத்தில் கூறியுள்ள "சாயநாடி' அவஸ்தைகளை ஒவ்வொரு கிரகமும் எவ்வாறு அனுபவிக்கிறது- அவற்றை எவ்வாறு கணக்கிடுதல் வேண்டும்- அதற் குரிய பலன்கள் என்னவென்பதை பலபத்திரர் விளக்குகிறார். பலன்களை கிரகங்கள் அனுபவித்தாலும், வெளிப்படுத்தும் முறையில் வேறுபாடு கொண்டுள்ளன என்றும் கூறுகின்றார்.
சாயநாடி அவஸ்தைகளை ஆராய்வதற்கு முன்பாக, மேலும் சில அவஸ்தைகளை, கிரகங்கள் ராசியில் இருக்கும்பொழுது எப்படி, எத்தகைய வேகத்தில் செயல் படுத்துகின்றன என்பதை சற்று விளக்கமாகக் காண்போம்.
ஒரு ராசியில் 30 டிகிரி உள்ளது என்பதை அனைவரும் அறிவோம். ஒவ்வொரு கிரகமும் தான் எந்த கோணத்தில் (Degree) அமைந்துள்ளதோ அதற்குத் தகுந்தவாறு அவஸ்தைகளை அனுபவிக்கிறது. இத்த கைய அவஸ்தைகளை மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு பருவத்திலும் அனுபவிக்கின்ற அனுபவத்தோடு ஒப்பிட லாம். ராசியை ஐந்து பிரிவுகளாக ஆறு டிகிரி வீதம் (50 ஷ் 60= 300) பிரிக்கின்றனர்.
1. முதலில் வருவது குழந்தைப் பருவத்தில் அமைந்துள்ள நிலையில், குழந்தைக் குண்டான அவஸ்தையைப் பெறுகின்றன. ஒரு கிரகம் ராசியில் பூஜ்ஜியம் டிகிரி முதல் ஆறு டிகிரிக்குள் இருக்கும்பொது பாலாவஸ்தையை (குழந்தை அவஸ்தை- Infant State) அனுபவிக்கிறது. குழந்தைப் பருவத்தில் கிரகம்படும் அவஸ்தையின்போது பலன்களை கால்பகுதியளவே (25%) கொடுக்கின்றன.
2. அடுத்து வாலிப அவஸ்தை (Youthful State). குமாராவஸ்தை என்று கூறுவர். ஒரு கிரகம் 6 டிகிரியிலிருந்து 12 டிகிரி இடைவெளியில் இருக்கும்பொழுது வாலிலிப அவஸ்தையை அனுபவிக்கும். அப்பொழுது தங்களுடைய பலன்களின் பாதியளவு (50%) வெளிப்படுத்தும்.
3. மூன்றாவதாக, பருவ வயதில் அனுபவிக்கும் யுவாவஸ்தை. (Adulescent State). 12 டிகிரியிலிருந்து 18 டிகிரிவரை அமைந்துள்ள கிரகங்களின் அவஸ்தை மிகவும் துரிதமாகவும், உத்வேகத்துடனும் பலன்களைப் பிரதிபலிக்கும். இந்த நிலையில் உள்ள கிரகங்கள் தங்களின் முழுவீச்சோடு பரிபூரணமாக 100 சதவிகிதப் பலன்களைக் கொடுக்கத் தவறுவதில்லை.
4. அடுத்து, முதிர்ந்த நிலையிலுள்ள விருத்தாவஸ்தை. (Advanced State). 18 டிகிரியில் ஆரம்பித்து 24 டிகிரிவரையுள்ள கிரகங்கள் முதிர்ந்த நிலையில் தளர்ச்சியடைந்து தங்களது பலன்களை மிக பலவீனமாகவே கொடுக் கின்றன. ஆதலால் அத்தகைய கிரகங்களின் பலன்கள் சொல்லிலிக்கொள்ளும்படியாக இருப்பதில்லை.
5. அடுத்ததாக 24 டிகிரியிலிலிருந்து 30 டிகிரிக்குள் அமைந்திருக்கும் கிரகங்களின் பலன்கள் சுத்தமாக இல்லையென்றே கூறலாம். அதாவது அதீத முதிர்ச்சி நிலையில் முழுமையாக பலத்தை இழந்து தவிக்கும் நிலையை மிருத்தாவஸ்தா (Dead State)என்று கூறுவர். இந்த நிலையையே நாம் ராசிசந்தி என்று கூறுகிறோம். மேலேகூறிய அவஸ்தை நிலைகள் ஆண் ராசியில் இருக்கும் கிரகங்களுக்குப் பொருந்தும். பெண் ராசியில் இருக்கும் கிரகங்களின் அவஸ்தைக்கும் அதனால் உண்டாகும் பலன்களும் மேலேகூறிய டிகிரி அளவீடு களையொத்து, கீழேயிருந்து மேல்முகமாக எதிர்மாறாக நடைபெறும்.
ஒரு ராசியில் ஒரு கிரகம் உச்சத்தில் அல்லது சொந்த ராசியில் பலம்பெற்றிருக்கிறது. ஆதலால் அந்த கிரகத்தின் பலன்கள் அற்புத மாக இருக்கும். அமோகமாக வாழ்க்கையை அனுபவிப்பார்கள் என்று பலன்களைக் கூறினால், அத்தகைய கிரகங்கள் மேற்கண்ட பாதக அவஸ்தைகளை அனுபவிக்கும் பொழுது ஜாதகர்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கமுடியாமல், அதற்கு மாறான தீய பலன்களைக் கொடுத்துக்கொண்டு இருக்கும்.
பொதுவாக கிரகங்கள் மூன்றுவிதமான நிலைகளில் எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்கும்.
1. விழிப்புணர்வோடு இருப்பது (Awakening State) கிரகங்கள் தங்களுடைய சொந்த ராசியில் இருக்கும்பொழுது அல்லது உச்சம்பெற்றிருக் கும்பொழுது மிகுந்த விழிப்புணர்வோடு, துடுக்காகவும், மிடுக்காகவும் எந்த நேரத்திலும் எந்த செயலையும் சாதிக்கும் ஆற்றல் பெற்ற நிலையில் இருக்கும். அத்தகைய நிலை யிலுள்ள கிரகத்தின் பலன்கள் முழுவே கத்துடன் பரிபூரணமாகக் கிடைக்கப்பெறும்.
2. கனவுலகில் இருப்பது (Dreaming State) கிரகங்கள் தங்களுடைய நட்பு கிரகங் களின் ராசியில் இருக்கும்பொழுது அல்லது நடுநிலையாக உள்ள கிரகங்களின் ராசியில் இருக்கும்பொழுது கனவுகளுடன் பயணம் செய்யும் நிலையாகும். இந்த நிலையிலுள்ள கிரகங்கள் தங்களுடைய பலன்களை நடுத்தரமாகக் கொடுகின்றன.
3. நித்திரையில் இருக்கும் கிரகங்கள் (Sleeping State) ஒரு கிரகம் நித்திரையில் இருக்குமானால் அந்த கிரகத்தினால் எந்த பலன்களும் கிடைக் கப்பெறுவதில்லை. அத்தகைய கிரகங்கள் எதிரி ராசிகளிலோ அல்லது நீசமடைந்தோ (Debilitation) இருக்கும்.
ஆகவே, ஒரு ஜாதகத்தைப் பார்த்து பலன் களைக் கூறுவதற்கு முன்பாக, கிரகங்களின் பல்வேறுபட்ட அவஸ்தைகளையும், அவற்றின் கண்ணியத்தையும் (Dignity), சமூக நிலை யையும் (Status) நன்கு ஆராய்ந்து பலன்களைக் கூறினால் மிகவும் நன்று.
செல்: 91767 71533