Advertisment

ஒளிமயமான எதிர்காலத்துக்கு எண்ணியல் பரிகாரங்கள்! (3)

/idhalgal/balajothidam/digital-solutions-bright-future

பிறவி எண்- 3

"நல்லவனின் நேர்மை நாணயத்தில் தெரியும்' என்பார்கள். குருவின் ஆதிக்கம் நிறைந்த 3-ஆம் எண்ணில் பிறந்தவர்கள் நாணயம், கௌரவம் என்ற கொள்கையில் வாழ்க்கையை நடத்துவார்கள். தனம் என்ற பணத்திற்கு ஜாதகத்தில் குருவே பிரதானம். எந்தவொரு ஜாதகத்திலும், எந்த லக்னமாக இருந்தாலும் குரு வலுவாக, கெடாமல் இருக்கும்போது யாருடைய பணமாவது அவர்கள் கையில் வந்துவிட்டுதான் போகும். அவர்களிடம் பணம் இல்லாவிட்டாலும் பணம் புழங்குமிடங்களில் அவர்கள் இருப்பார்கள். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் கடைசிநேரத்தில் பணம் கைக்கு வந்துவிடும்.

பிறவி எண்- 3, விதி எண்- 1

Advertisment

குரு மற்றும் சூரியனின் ஆதிக்கம் கலந்த எண். சுய ஜாதகத்தில் குருவும் சூரியனும் பலம்பெற்றால் அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் நிரம்பியவர்கள். நேர்மையைக் குறிக்கும் கிரகமான குருவும், கௌரவத்தை வெளிப்படுத்தும் கிரகமான சூரியனின் ஆதிக்கத்தையும் பிரதிபலிக்கும் எண் என்பதால், மிடுக்கான தோற்றமும் நளினமும் நிரம்பியவர்களாக இருப்பார்கள். தாயும் தந்தையும் பாக்கியவான்கள். உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். கல்வி, நிதி, நீதி, ஆசிரியர், வங்கிப் பணி, நிர்வாகப் பதவியில் இருப்பார்கள். பூர்வீகச் சொத்து, சுய உழைப்பால் உருவாகும் சொத்து மிகையாக இருக்கும் இவர்கள் ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதியோடு குரு தொடர்புகொண்டால் மற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் எண்ணமிருக்காது. ஒருவர் உதவி வேண்டுமென்று நினைத்தாலே உடனே ஓடிச்சென்று உதவிசெய்து விடுவார்கள். சுய ஜாதகத்தில் குருவும் சூரியனும் வலிமையிழந்தால், பணத்தால் பிரிந்த குடும்பங்கள் பலவுண்டு. சில நேரங்களில் அதீத இரக்கப்பட்டு ஏமாறும் நிலையும் ஏற்படும். ஒரு ஜாதகத்தில் கோட்சாரத்தில் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி நடக்கும் காலகட்டங்களில் 6, 8-க்குடைய தசை நடக்கும் காலகட்டங்களில் பிறருக்குப் பணத்தை நம்பிக் கொடுத்து, ஜாமின் கொடுத்து ஏமாறுவார்கள். கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டால் கௌரவம் குறையுமென்று பிறர் பிரச்சினையைத் தன் தலையில் சுமப்பார்கள்.

பரிகாரம்

வியாழக்கிழமை நவகிரக குரு பகவானை வழிபடவேண்டும்.

as

பிறவி எண்- 3, விதி எண்- 2

குரு மற்றும் சந்திரனின் ஆதிக்கத்தைப் பிரதிபலிக்கும் குருச்சந்திர யோகம் நிறைந்த எண். இவர்களுக்கு பணப் புழக்கம் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும். சுய ஜாதகத்தில் தன, லாப கிரகம் பலம்பெற்றால் தொட்டது துலங்கும்.

Advertisment

அசையும், அசையா சொத்துகளின் சேர்க்கை நல்ல நிலையிலிருக்கும். பள்ளிப் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். பேச்சை மூலதனமாகக்கொண்ட தொழிலைச் செய்பவர்களுக்கு வருமானம் அதிகமாக இருக்கும். வாழ்நாள் முழுவதும் வருமானம் வந்துகொண்டே இருக்கும். அதன்மூலம் புகழ், அந்தஸ்து, கௌரவம் கூடும். சுகபோகம் மிகுந்த வீடமையும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். வீட்டினருகில் உற்றார்- உறவினர்கள் அதிகமாக

பிறவி எண்- 3

"நல்லவனின் நேர்மை நாணயத்தில் தெரியும்' என்பார்கள். குருவின் ஆதிக்கம் நிறைந்த 3-ஆம் எண்ணில் பிறந்தவர்கள் நாணயம், கௌரவம் என்ற கொள்கையில் வாழ்க்கையை நடத்துவார்கள். தனம் என்ற பணத்திற்கு ஜாதகத்தில் குருவே பிரதானம். எந்தவொரு ஜாதகத்திலும், எந்த லக்னமாக இருந்தாலும் குரு வலுவாக, கெடாமல் இருக்கும்போது யாருடைய பணமாவது அவர்கள் கையில் வந்துவிட்டுதான் போகும். அவர்களிடம் பணம் இல்லாவிட்டாலும் பணம் புழங்குமிடங்களில் அவர்கள் இருப்பார்கள். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் கடைசிநேரத்தில் பணம் கைக்கு வந்துவிடும்.

பிறவி எண்- 3, விதி எண்- 1

Advertisment

குரு மற்றும் சூரியனின் ஆதிக்கம் கலந்த எண். சுய ஜாதகத்தில் குருவும் சூரியனும் பலம்பெற்றால் அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் நிரம்பியவர்கள். நேர்மையைக் குறிக்கும் கிரகமான குருவும், கௌரவத்தை வெளிப்படுத்தும் கிரகமான சூரியனின் ஆதிக்கத்தையும் பிரதிபலிக்கும் எண் என்பதால், மிடுக்கான தோற்றமும் நளினமும் நிரம்பியவர்களாக இருப்பார்கள். தாயும் தந்தையும் பாக்கியவான்கள். உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். கல்வி, நிதி, நீதி, ஆசிரியர், வங்கிப் பணி, நிர்வாகப் பதவியில் இருப்பார்கள். பூர்வீகச் சொத்து, சுய உழைப்பால் உருவாகும் சொத்து மிகையாக இருக்கும் இவர்கள் ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதியோடு குரு தொடர்புகொண்டால் மற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் எண்ணமிருக்காது. ஒருவர் உதவி வேண்டுமென்று நினைத்தாலே உடனே ஓடிச்சென்று உதவிசெய்து விடுவார்கள். சுய ஜாதகத்தில் குருவும் சூரியனும் வலிமையிழந்தால், பணத்தால் பிரிந்த குடும்பங்கள் பலவுண்டு. சில நேரங்களில் அதீத இரக்கப்பட்டு ஏமாறும் நிலையும் ஏற்படும். ஒரு ஜாதகத்தில் கோட்சாரத்தில் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி நடக்கும் காலகட்டங்களில் 6, 8-க்குடைய தசை நடக்கும் காலகட்டங்களில் பிறருக்குப் பணத்தை நம்பிக் கொடுத்து, ஜாமின் கொடுத்து ஏமாறுவார்கள். கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டால் கௌரவம் குறையுமென்று பிறர் பிரச்சினையைத் தன் தலையில் சுமப்பார்கள்.

பரிகாரம்

வியாழக்கிழமை நவகிரக குரு பகவானை வழிபடவேண்டும்.

as

பிறவி எண்- 3, விதி எண்- 2

குரு மற்றும் சந்திரனின் ஆதிக்கத்தைப் பிரதிபலிக்கும் குருச்சந்திர யோகம் நிறைந்த எண். இவர்களுக்கு பணப் புழக்கம் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும். சுய ஜாதகத்தில் தன, லாப கிரகம் பலம்பெற்றால் தொட்டது துலங்கும்.

Advertisment

அசையும், அசையா சொத்துகளின் சேர்க்கை நல்ல நிலையிலிருக்கும். பள்ளிப் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். பேச்சை மூலதனமாகக்கொண்ட தொழிலைச் செய்பவர்களுக்கு வருமானம் அதிகமாக இருக்கும். வாழ்நாள் முழுவதும் வருமானம் வந்துகொண்டே இருக்கும். அதன்மூலம் புகழ், அந்தஸ்து, கௌரவம் கூடும். சுகபோகம் மிகுந்த வீடமையும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். வீட்டினருகில் உற்றார்- உறவினர்கள் அதிகமாக இருப்பார்கள். சுய ஜாதகத்தில் குருவும் சந்திரனும் கெட்டால், இது கெடுதியான கொடுரமான அமைப்பு. வாழ்க்கை எனும் கப்பல் கடலில் மூழ்கும். ஜாதகத்தில் ஆறு, எட்டு தசை நடந்தால் மீளமுடியாத துயரம் ஏற்படுகிறது. இவர்களிடம் கடன் வாங்கும்போது வீட்டிற்கு அலைந்தவர்கள், கடனைத் திரும்ப வாங்குவதற்கு இவர்களை அலையவைத்து விடுவார்கள். அடிக்கடி இடமாற்றம் செய்து கொண்டே இருப்பார்கள். இவர்கள் சகோதரர்களுக்காகவே வாழ்வார்கள்.

பரிகாரம்

வியாழக்கிழமை சந்திர ஓரையில் உணவு தானம் செய்யவேண்டும்.

பிறவி எண்- 3, விதி எண்- 3

தனித்த குருவின் ஆதிக்கம் நிறைந்த எண் என்பதால் அற்புதமான உன்னதப் பலன்களை அனுபவிக்கிறார்கள். சுய ஜாதகத்தில் குரு பலம்பெற்றால் தொழில், வியாபாரம், வேலைவாய்ப்பு, வட்டி வரவு, ஷேர் மார்க்கெட், கட்டட வாடகை, புரோக்கர், கமிஷன் ஏஜென்சி என்று எத்தனையோ நூற்றுக் கணக்கானவகையில் தனவரவு உண்டாகிறது. கல்வியில் சாதனைமேல் சாதனை செய்யும் அமைப்புண்டாகும். சிறப்பான மணவாழ்க்கை, தொழில்ரீதியாக மேன்மை, பொருளாதார உயர்வுகள், இறுதிக் காலத்தில் புத்திரர்களால் உயர்வு, சமுதாயத்தில் பெயர், புகழ் உயரக்கூடிய வாய்ப்பு போன்ற யாவும் உண்டாகும். பலர் உயர்பதவியில் உள்ள நீதிபதிகள், குருமார்கள், பணப்பொறுப்பிலுள்ள பணி, நிதி நிறுவனப் பணி, ஆசிரியர்கள், வங்கிகள் போன்றவற்றில் நற்பெயர் அடைகிறார்கள். சுய ஜாதகத்தில் குரு பலவீனமாக இருந்தால், மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் வல்லவரான இவர்கள், தங்கள் சொந்தப் பிரச்சினைக்கு அப்படி செய்யலாமா- இப்படி செய்யலா என்று குழம்புவார்கள். முறையான திட்டமிடுதல் இல்லாமல் ஏற்ற- இறக்கமான வாழ்க்கை வாழ்கிறார் கள். பிறறை ஏமாற்றிப் பணம்பறித்தல், போலிச் சாமியார், குழந்தை கடத்தல், பாலியல் வழக்கில் சிக்குதல், போக்சோ சட்டத்தில் சிறை தண்டனை அனுபவித்தல், மாணவர்களைத் துன்புறுத்திய வழக்கு என அசுப வழியில் பிரபலமடைகிறார்கள்.

ரிகாரம்

ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிக்க உதவவேண்டும். கனக புஷ்பராக ரத்தினம் பயன்படுத்தலாம்.

பிறவி எண்- 3, விதி எண்- 4

குரு மற்றும் ராகுவின் ஆதிக்கம் நிறைந்த எண். இதை ஜோதிடரீதியாக குரு சண்டாள யோகமென்று கூறலாம். இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். சுய ஜாதகத்தில் குருவும் ராகுவும் இணைந்து ஒரே ராசியில் இருந்தாலோ, ராகுவை குரு பார்த்தாலோ குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. இந்த கிரகக் கூட்டணி சுபமாகவோ அல்லது பலமாகவோ அமைந்துவிட்டால் அங்கு யோகம்தான் அதிகமாக வேலைசெய்யும். மாறாக ஜனன ஜாதகத்தில் பலவீனமாகவோ அல்லது அசுபமாகவோ அமைந்துவிட்டால் தோஷமே அதிகமாக வேலைசெய்யும். குருவுடன் இணைந்த ராகு குருவாக செயல்பட்டு தாராள பொருள் வரவு, குழந்தைப்பேறு, வீடு, வாகன யோகம் என அபரிமிதமான யோகங்களை வழங்குவார். வசதியில்லாத குடும்பத்தில் பிறந்தாலும் ராகு, குரு தசைக் காலத்தில் நல்ல வசதியான வாழ்க்கையை குருட்டு அதிர்ஷ்டத்தில் அனுபவிக்கிறார்கள். ஆனால் தங்கள் வாழ்நாளில் மிகவும் நேசித்த உறவுகளிடம் "சண்டாளா, சண்டாளி' என்ற அவப்பெயரைப் பெறவைத்துவிடுகிறது. இந்த கிரகச் சேர்க்கை பலருக்கு கடுமையான புத்திர தோஷத்தை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு செயற்கைக் கருத்தரிப்புமூலம் குழந்தை பிறக்கச் செய்கிறது. பெற்றோர்களும் குழந்தைகளும் மனம் ஒன்றாமல் தனித் தீவாகவே வாழ்கிறார் கள். குரு தசையில் ராகுவோடு 8 டிகிரிக்குள் இணைந்தால் குரு தன்னுடைய பார்வை பலத்தையும், காரக, ஆதிபத்திய பலனையும் இழந்து, தன்னுடைய பார்வையால் பார்க்குமிடத்தைப் புனிதப்படுத்தும் தகுதியை இழந்துவிடுவார். அதனால்தான் ராகு தசையில் சம்பாதித்த அனைத்தையும் குரு தசையில் இழக்க நேர்கிறது.

பரிகாரம்

வியாழக்கிழமை யானைக்கு கரும்புதானம் தரவேண்டும். பிரதோஷமும் வியாழக் கிழமையும் இணைந்தநாளில் சிவனுக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்ய வேண்டும்.

பிறவி எண்- 3, விதி எண்- 5

குரு மற்றும் புதனின் ஆதிக்கம் கலந்த அற்புதமான எண்கள். இந்த அமைப்பில் பிறந்தவர்கள் ஜாதகத்தில் தனகாரகன் குரு மற்றும் புத்திக்காரகன் புதன் பலம்பெற்றால், தொழில், வியாபாரம் செய்பவர்களைப் பார்த்து தாமும் தொழில் செய்யவேண்டுமென்று ஓர் உந்துசக்தி இவர்கள் மனதில் தோன்றும். இவர்கள் கையை ஊன்றிக் கரணம் போட்டு, பல உருட்டல் புரட்டல்கள் செய்து சொந்தமாகக் கடை, தொழிற்சாலை, கான்ட்ராக்ட், ஏஜென்சி என்று வைத்து முன்னேறுகிறார்கள். அதேநேரத்தில் இவர்களால் தனியாளாக செயல்படமுடியாது. யாரை யாவது துணைக்குச் சேர்த் துக்கொண்டு கூட்டாகச் சேர்ந்து தொழில், வியா பாரம் செய்து முன்னேறு வார்கள். சிலர் சுயமாக தொழில்தொடங்கி, அதன் பிறகு தங்கள் நம்பிக்கைக்குரியவர்களைக் கூட்டாகச் சேர்த்துக்கொண்டு தொழில் செய்கிறார்கள். நிலையான- ஏற்றமான தொழில், வியாபாரமென்பது இயற்கையாக உருவாகிவிடுகிறது. சிலர் முதலீடில்லாத வார்த்தை ஜாலத்தால் பொருளீட்டுவது, ஆடிட்டர், வக்கீல், பொறியாளர், இயல், இசை, நாடகம்போன்ற துறைகளில் உள்ளவர்கள் திட்டங்கள் தீட்டிக்கொடுத்து சம்பாதிப்பது, யோசனை சொல்லி செல்வம் திரட்டுவது போன்றவற்றில் வெற்றிவாகை சூடுகிறார்கள். வாக்கு சாதுரியத்தால் உடலுழைப்பு இல்லாமல் மூளையைப் பயன்படுத்தி பேச்சின்மூலம் பணம் சேர்க்கிறார் கள். சுய ஜாதகத்தில் குருவும் புதனும் பலம் குறைந்தால் முறையான திட்டமிடுதல் இன்மையால் தவறான கூட்டாளிகள் மற்றும் நண்பர்களால் கூட்டுத் தொழிலில் பிரிவினை அல்லது நட்டம் ஏற்படுகிறது.

பரிகாரம்

வியாழக்கிழமை புதன் ஓரையில் மகாவிஷ்ணுவை வழிபடவேண்டும். மரகதப் பச்சை நவரத்தினம் பயன்படுத்தலாம்.

பிறவி எண்- 3, விதி எண்- 6

குரு மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் கலந்த எண். ஜோதிடரீதியாக குரு, சுக்கிரன் பகை கிரகச் சேர்க்கையென கூறப்பட்டாலும், இந்த கிரக இணைவு பலமான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. குரு ஒருவருக்கு சுப காரியங் களான திருமணம், குழந்தைப்பேறு, நல்லொழுக்கம் முதலியவற்றை வழங்க வல்லவர். சுக்கிர பகவான் ஒருவருக்கு பொருளாதார முன்னேற் றம், வசதி, வாய்ப்பு, ஆடம்பரம், செல்வத்தை வழங்கக்கூடியவர். சுய ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் பலம்பெற்ற இந்த அமைப்பினர் அதிர்ஷ்டப் பலனை அனுபவிக்கிறார் கள். பெரும்பாலும் திருமணத் திற்குப்பிறகு பொருள் வரவை அதிகப்படுத்துகிறது. அதிர்ஷ்டமான தொழில், உத்தியோகம்மூலம் பொன், பொருள், அசையும்- அசையா சொத்துகள் அமைகிறது. திருமணத்தின்போது மறைமுகப் பணவரவு, வரதட்சணை, உயில் சொத்து, லாட்டரி, ரேஸ், புதையல் என பல வகைகளில் பொருள் குவியும். செல்வம் பலவகைகளில் சேரும். பெரும்பாலானோ ருக்கு மனைவிமூலம் சொத்து, சம்பாத்தியம் கிடைத்து யோகம் வருகிறது. மனைவிமூலம் சொத்தென்றால் மாமனார்மூலம் உதவி, சொத்து பாகப்பிரிவினை, உயில், தொழில், வியாபாரம் என்று பணம் சேரும். இந்த அமைப்பு பொருளாதாரத்தில் தன்னிறைவைத் தந்தாலும், ஒன்றுக்கு மேற்பட்ட திருமண வாழ்க்கை அல்லது பெண்கள் தொடர்பை ஆண்களுக்கு வழங்கத் தவறு வதில்லை. சுய ஜாதகத்தில் குரு, சுக்கிரன் பலம்குறைந்தால் வறுமை, மீளமுடியாத- மீட்கமுடியாத நகைக் கடன், தவறான நபரிடம் மாட்டி வாழ்க்கையைத் தொலைப் பது போன்ற நிலை ஏற்படுகிறது.

பரிகாரம்

வியாழக்கிழமை சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபடவும்.

பிறவி எண்- 3, விதி எண்- 7

குரு மற்றும் கேதுவின் ஆதிக்கம் கலந்த கோடீஸ்வர யோகமான அமைப்பா கும். குருவுக்கு கேந்திரம், திரிகோண இடங்களில் கேது நிற்பதும், குரு 5, 7, 9-ஆம் பார்வையால் கேதுவைப் பார்ப்பதும் உயர்தர கோடீஸ்வர யோகத்தைத் தரும். குரு, கேது கெடாமல் இணைந்து நின்றாலும் தன் புத்தி, உழைப்பால் கோடீஸ்வரராகிவிடுவர். குரு, கேது இணைவும், கேதுவுக்கு குரு பார்வை ஏற்படுவதும் குரு தசை யிலோ, கேது தசையிலோ சாதாரணமானவரையும் எதிர்பாராத நிலைக்கு உயர்த்தி, புகழுடன் கோடீஸ்வரராக்கிவிடும். வாழ்க்கையில் சுகத்துக்குப் பஞ்சமிருக்காது. பஞ்சமாதிபதி, தனஸ்தானாதிபதி தசை, சுபகிரக பார்வை யுடன் நடைபெற்றால், சொகுசான வாழ்க்கை ஏற்பட்டு கோடீஸ்வரனாகும் யோகம் உண்டாகும். குரு, கேது பலம்குறைந்தால் அன்றாடம் வேலைக்குச் சென்று வாழ்க்கை நடத்தவேண்டியுள்ளது. பலர் பல விஷயங் களுக்காக ஏதாவது உருட்டல், மிரட்டல் செய்தே காலத்தைத் தள்ளவேண்டியுள்ளது. கையில் காசு பணம் தங்காத நிலை, வட்டி, வட்டிக்கு வட்டி, கடன், நகைக் கடன், வங்கிக் கடன், வாகனக் கடன், வீடு, நிலம் வாங்கியதில் கடன் என்று பணம் பல்வேறு வகைகளில் கையில் இருப்பில்லாத அமைப்பு ஏற்படும்.

பரிகாரம்

வியாழக்கிழமை எமகண்ட நேரத்தில் விநாயகரை வழிபடவேண்டும்.

பிறவி எண்- 3, விதி எண்- 8

குரு மற்றும் சனியின் ஆதிக்கம் இணைந்த தர்மகர்மாதிபதி யோக அமைப்பாகும். ஒருவருக்கு இந்த கிரக எண்களால் வாழ்நாள் முழுவதும் புண்ணிய பலன்கள் கிடைக்க ஜனனகால ஜாதகத்தில் குருவும் சனியும் சுபவலிமை பெறவேண்டும். நீசம், வக்ரம், அஸ்தமனமாகாமல் இருப்ப தோடு அஷ்டம, பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெறாமல் இருக்கவேண்டும். இவ்வாறு இருந்தால் நூறு சதவிகிதம் சுபத்தன்மையுடன் வரமாக செயல்படும். இக்கிரக சேர்க்கை இருப்பவர்கள் குடும்பமே கஷ்டப்பட்டாலும் ஜாதகர் மட்டும் எப்படியும் நல்ல நிலைமைக்கு வந்துவிடுவார். இந்த எண்கள் சம்பந்தம் பலருக்கு பெரிய திருப்புமுனையைத் தந்திருக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. கூரை வீட்டில் வாழ்ந்தவரைக்கூட குபேரனாக மாற்றியுள்ளது என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. இவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலைக்குச் செல்வார்கள். தர்மகர்மாதிபதி அமைப்பைப் பெற்றவர்கள் நாடாளும் யோகம் பெற்ற அரசியல்வாதிகளாக இருப் பார்கள். அரசு உத்தியோகத்தில் உயர் பதவியில் இருப்பார்கள். தனியார் நிறுவனத் தில் நிர்வாகப் பதவி வகிப்பார்கள். சுய தொழிலில் பிரபலமடைவார்கள். முன்னோர்களால், குலதெய்வத்தால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். பரம்பரை பூர்வீக சொத்து நிச்சயமுண்டு. வம்சாவளி யாக பூர்வீகச் சொத்தால் ஆதாயமுண்டு. அதிர்ஷ்டம், குன்றாத செல்வம், புகழ், கீர்த்தி யுண்டு. குலப் பெருமை, கௌரவமுண்டு. புத்திரர்களால் நிம்மதி, சந்தோஷம் அடை வார்கள். பிள்ளைகள் பிறந்தபின்பு வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். சுய ஜாதத்தில் குருவும் சனியும் பலம்குறைந்தால் குலதெய்வ அனுக் கிரகம், முன்னோர்களின் நல்லாசி இருக்காது. கஷ்ட ஜீவனம், கடன், வறுமை நீடிக்கும்.

பரிகாரம்

சனிக்கிழமை குரு ஓரையில் சிவ வழிபாடு செய்யவேண்டும்.

பிறவி எண்- 3, விதி எண்- 9

குரு மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் கலந்த குரு மங்கள யோகமாகும். சுய ஜாதகத்தில் குரு, செவ்வாய் பலம்பெற்ற இந்த எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு பூமி, மனை சேர்க்கை, செல்வச் செழிப்பு அதிகரிக்கும். தாய், தாய்வழி உறவினர் களின் அன்பும் அனுசரணையும் பெற்றவர்கள். விவசாயம், கால்நடை வளர்ப்பதில் ஆர்வம் மிகுந்தவர்கள். சுய உழைப்பிலும் சொத்து யோகமுண்டு. பெற்றோர்களுடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வாழ்வார்கள். பூர்வீகச் சொத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்கள். முன்னோர்களின் பூர்வீகச் சொத்துகள் பெற்றோரின் காலத்திற்குப்பின் முறையாக இவர்களைச் சென்றடையும். இல்வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆடம்பரப் பொருட்கள் வீட்டில் அதிகம் இருக்கும். ரியல் எஸ்டேட் துறையில் கொடிகட்டிப் பறப்பவர்களுக்கு இந்த அமைப்பிருக்கும். இதற்கு அசுபகிரக சம்பந்தமிருந்தால்- குரு, செவ்வாய் பலம்குறைந்தால் வீடு, மனை அமைவது சிரமம். பூர்வீக சொத்து இருப்பினும் உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடிருக்கும். அந்த சொத்து உடன்பிறந் தோரின் கடனை அடைப்பதிலேயே முடிந்து விடும் அல்லது பறிபோகும் அல்லது ஜாதகரே விட்டுக்கொடுக்கும் நிலை உருவாகும். அல்லது அண்டை, அயலாருடன் எல்லைத் தகராறிருக்கும். தாயின் ஆரோக்கி யம் கெடும். வறுமை, வாஸ்து குறைவான வீட்டில் வாழுதல் போன்ற நிலை நீடிக்கும்.

பரிகாரம்

வியாழக்கிழமை செவ்வாய் ஓரையில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு தேவை யறிந்து உதவவும்.

(தொடரும்)

செல்: 98652 20406

bala251122
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe