நியூமராலஜி எனும் எண்கணித சாஸ்திரம் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வுலகில் ஜனிக்கும் அனைத்து மனிதர்களையும் மூன்று விதமான எண்கள் மட்டுமே ஆட்டுவிக் கின்றன. அவை பிறவி எண், விதி எண், பெயர் எண்.
மனிதராய்ப் பிறந்த அனைவருக் கும் ஒரு பிறவி எண் மற்றும் விதி எண் உண்டு. பிறவி எண், விதி எண் ஒருவருடைய பூர்வஜென்ம பலத்திற்கேற்பவே அமையும். ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டத்தைத் தருவதும், துரதிர்ஷ்டத்தைத் தருவதும் பிறவி எண், விதி எண் என்றால் அது மிகையாகாது. கர்மவினைக்கேற்ப அமையும் பிறவி, விதி எண்களை நம்மால் மாற்ற இயலாது. ஆனால் பிறவி எண், விதி எண்ணுக்கேற்ப பெயர் எண்னை அமைத்துக்கொண்டால் வினைப் பதிவைக் குறைக்கமுடியும். இந்த மூன்று எண்களில், பெயர் எண்ணை மற்ற இரண்டு எண்களுக்கும் நட்பு விகிதத்தில் வரும்படி அமைத்துக் கொள்ளலாம். எண்கணிதத்தை ஜாதகத்தின் அடிப்படையில் வைத்துக் கொள்வதன்மூலம் ஒளிமயமான எதிர்காலத்தை நம்மால் உருவாக்கிக் கொள்ளமுடியும்.
பிறவி எண்
ஒருவருடைய பிறந்த தேதியைக் கூட்டினால் வருவது பிறவி எண்ணாகும். பிறந்த தேதி எண் அடிப்படையில் ஒருவருடைய குணம், ஆசைகள் மற்றும் செயல்பாடுகள் அமையும்.
விதி எண்
ஒருவருடைய பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் வருவது விதி எண்ணாகும். விதி எண்மூலம் எதிர்காலம், தொழில் மற்றும் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள இயலும்.
பெயர் எண்
ஒருவரின் பெயரிலுள்ள எழுத்து களுக்கான எண்களைக் கூட்டினால் வருவது பெயர் எண் எனப்படும். பிறவி எண், விதி எண் இரண்டில் எந்த எண் பலம்பெற்றுள்ளதோ, அந்த எண்ணிற்கு நட்பின் அடிப்படையில் நாம் பெயரை வைத்துக்கொள்வதன்மூலம் நம்மால் அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொள்ளமுடியும்.
பிறவி எண்ணும் விதி எண்ணும் ஒன்றாக அமைவது சிறப்பு. ஒன்றுக் கொன்று நட்பாக அமைந்தவர்களின் வாழ்க்கை மிகமிக சிறப்பாகவே அமைகிறது. இந்த இரண்டும் பகை எண்ணாக அமைந்தவர்களின் வாழ்க்கை இன்னல்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. நாம் இந்த கட்டுரையில் பிறவி எண்ணிற்கு விதி எண்ணால் ஏற்படக்கூடிய நன்மை- தீமைகளையும், அதற்கான தீர்வினையும் பார்க்கலாம்.
ஆங்கில எழுத்துகளும், அவற்றுக் குரிய எண்களும், எண்களின் கிரக அதிபதியும் கீழே தரப்பட்டுள்ளன.
A, I, J, Q, Y#1#- சூரியன்
B, K, R# 2- சந்திரன்
C, G, L, S- 3- குரு
D, M, T- 4- ராகு
E, H, N, X- 5- புதன்
U, V, W- 6- சுக்கிரன்
O, Z- 7- கேது
F, P- 8

F, P- 8- சனி
பிறவி எண்- 1, விதி எண்- 1
சூரியனின் ஆதிக்கம் நிறைந்த ஒன்றாம் எண் ஆதிக்கத்தில் பிறவி எண்ணும் விதி எண்ணும் அமைவது சிறப்பு. சுய ஜாதகத்தில் சூரியன் பலம்பெற்றால் ஆன்மபலம், ஆளுமைத் தன்மை, நிர்வாகத்திறன், சுய கௌரவம், கம்பீரத் தோற்றம் நிறைந்தவர். புகழ், முன்னேற்றம், அந்தஸ்து அனைத்தும் தேடிவரும்.
அரசியல் ஆதாயமுண்டு. எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை- தீமைகளை முன்பே அறியும் ஞானம் இருக்கும். தந்தையின் ஆதரவுண்டு. ஏதாவதொரு துறையில் நிச்சயம் முன்னேற்றமுண்டு. சூரியன் பகை, நீசம், அஸ்தமனம் பெற்றிருந்தால் புகழ், அந்தஸ்து கௌரவம் மட்டுப்படும். முன்னேற்றம் கிடைக்காது. தாய்- தந்தையின் ஆதரவு குறையும். தலை, கண், இதயம் சார்ந்த பாதிப்புண்டு.
பரிகாரம்
தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும். சூரியனின் ரத்தினமான மாணிக்கம் அணியலாம்.
பிறவி எண்- 1, விதி எண்- 2
சூரியனின் 1-ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்து சந்திரனின் 2-ஆம் எண் ஆதிக்கத்தில் விதி எண் அமைந்தால், சுய ஜாதகத்தில் சூரியன், சந்திரன் பலம்பெற வேண்டும். இவர்கள் இருவரும் பலம்பெற்றால் தாய், தந்தையின் ஆதரவு மற்றும் ஆதாயமுண்டு. சிந்தித்து செயலாற்றுவதில் வல்லவர்கள். அழகிய தோற்றப் பொ-வு நிறைந்தவர். அரசியல், அரசுசார்ந்த தொழில், உத்தியோகங்கள் அமையும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை, குடும்ப உறவுகளின் ஆதரவுண்டு. தொட்டது துலங்கும். தாராள தனவரவு இருந்துகொண்டே இருக்கும். திரண்ட சொத்து உண்டு. பேச்சுத் திறமை யால் அனைவரையும் கவர்வதில் வல்லவர்கள். சூரியன், சந்திரன் பலம்குறைந் தால் தாய்- தந்தையின் ஆதரவு கிடைக்காது. குடும்பத்தைவிட்டுப் பிரிந்துவாழ நேரும். பொருளாதாரத் தட்டுப்பாடு அதிகமிருக்கும். வெப்ப நோய், ஜீரணக் கோளாறு, பார்வைக் குறைபாடு, தண்ணீர் கண்டம், வீசிங் தொந்தரவு இருக்கும். திருமணத் தடையிருக்கும். ஆத்மஞானம் கிடைக்காது.
பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமை காலை 9.00-10.00 மணிவரையிலான சந்திர ஓரையில் சிவ வழிபாடு செய்தல் நலம். முத்து, சந்திரகாந்தக் கல் அணியலாம்.
பிறவி எண்- 1, விதி எண்- 3
சூரியனின் 1-ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்து குருவின் 3-ஆம் எண் ஆதிக்கத்தில் விதி எண் அமைந்தால் அதிர்ஷ்டசா-கள். சூரியனும் குருவும் பலம்பெற்றால் பேரதிர்ஷ்டம் நிறைந்தவர்கள். தெய்வபக்தி நிறைந்தவர்கள். பிறருக்கு உதவும் குணம்கொண்டவர்கள். பொருளாதாரத்திலும், குடும்ப வாழ்க்கை யிலும் தன்னிறைவுண்டு. அரசருக்குரிய அந்தஸ்துடன் வாழ்வார்கள். ராஜபோக வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் உண்டு.
சொந்த வாழ்க்கையைவிட பொது வாழ்க்கையில் அதிக ஆர்வம் இருக்கும். கதை, கவிதை கட்டுரை எழுதுவதில் அதிக ஈடுபாடிருக்கும். தர்ம ஸ்தாபனங்கள், கோவில் நிர்வாகம், ஊர்த் தலைமை போன்றவற்றில் கௌரவப் பதவியுண்டு. சூரியனும் குருவும் பலம்குறைந்தால் அரசியல் ஈடுபாடிருக்கும். ஆனால் ஆதாயமிருக்காது. பல சமயங்களில் பிறருக்காகவே உழைப்பார்கள். தொழில் மந்தம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, மனக் கஷ்டம் ஏற்படும். மஞ்சள் காமாலை, எலும்பில்லாத உறுப்புகளில் அடிக்கடி தொந்தரவிருக்கும்.
பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமை பகல் 11.00-12.00 மணிவரையிலான குரு ஓரையில் சிவதரிசனம் செய்யவேண்டும். கனக புஷ்பராகம் அணியலாம்.
பிறவி எண்- 1, விதி எண்- 4
சூரியனின் ஒன்றாம் எண் ஆதிக்கத்தில் பிறந்து ராகுவின் 4-ஆம் எண் ஆதிக்கத்தில் விதி எண் அமைவது சிறப்பான பலனல்ல. தந்தைக்கு முன்னேற்றம் குறையும். அல்லது தந்தையைப் பிரிந்துவாழ்வார்கள். சாண் ஏறினால் முழம் சறுக்கும். முயற்சிக்குத் தகுந்த முன்னேற்றம் இருக்காது. பலருடைய விரோதமும் எதிர்ப்பும் இருக்கும். பூர்வீகத்தில் வாழும் வாய்ப்பு குறைவு. அல்லது பூர்வீகச் சொத்து விரயமாகும். திடீர் ஏற்றம் அல்லது எதிர்பாராத இறக்கம் அமையும். தன் சக்திக்கு மீறிய காரியத்தில் ஈடுபட்டு மனவேதனை அடைவார்கள். இவர்களின் உழைப்பு பிறருக்கே பயன்படும். சுய ஜாதகத்தில் சூரியன், ராகு பலம்பெற்றால் அரசாங்க ஆதரவு, சுகபோக வாழ்க்கையுண்டு. அதன்மூலம் பெரும் புகழும் செல்வமும் அடைவார்கள்.
பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமை ராகு வேளையில் காளி அல்லது துர்க்கையை வழிபட வேண்டும். கோமேதகக் கல் அணியலாம்.
பிறவி எண்- 1, விதி எண்- 5
சூரியனின் 1-ஆம் எண் ஆதிக்கம் பிறவி எண்ணாகவும், புதனின் 5-ஆம் எண் விதி எண்ணாகவும் அமைந்தவர்கள் மிகவும் பாக்கியசா-கள். சுய ஜாதகத்தில் சூரியனும் புதனும் சுப வலுப்பெற்றால் நல்ல கல்வி அறிவுண்டு. கற்ற கல்வியால் பயனுண்டு. பெரும்பாலும் ஆசிரியர், வங்கிப்பணி, கல்வி நிறுவனம், ஜோதிடத்தில் புகழடைகிறார்கள். சமுதாய அந்தஸ்து நிறைந்த நண்பர்கள் உண்டு. அவர்கள்மூலம் கூட்டுத் தொழில் ஆதாயமுண்டு. சிலர் அரசு அலுவலகங்களில் புரோக்கர் வேலை செய்வார்கள். கௌரவமான காதல் பின்னணி உள்ளவர்கள். சுருக்கமாக எந்த சூழ்நிலையிலும் தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றிக்கொள்வார்கள். சூரியனும் புதனும் அசுப வலுப்பெற்றால் கல்வியறிவு குறைவுபடும். ஆனால் படிக்காத மேதை. கண்ணளவு, கையளவு என பார்த்த மாத்திரத் தில் எதையும் கணிக்கும் நிபுணத்துவம் உண்டு. தண்ணீரில்லாத காட்டையும் விலைபேசும் தந்திரவாதிகள்.
பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமை காலை 8.00-9.00 மணிக்குள் சிவன் மற்றும் மகாவிஷ்ணுவை வழிபடவும்.
பிறவி எண்- 1 விதி, எண்- 6
சூரியனின் 1-ஆம் எண் ஆதிக்கம் பிறவி எண்ணாகவும், சுக்கிரனின் 6-ஆம் எண் விதி எண்ணாகவும் அமைந்தால் சாதகமும் பாதகமும் கலந்தே இருக்கும். சூரியன், சுக்கிரன் சுபவலுப் பெற்றவர்களுக்கு அழகு, ஆடம்பரம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும். அதிகாரப் பதவிகள் தேடிவரும். பணியாளர்களை அனுசரித்து வேலை வாங்குவதில் வல்லவர்கள். மனிதநேயமும் தொழில் நியாயமும் இவர்களது நோக்கமாக இருக்கும். சூரியன், சுக்கிரன் அசுப வ-மை பெற்றால் தொழில், அரசியல், சமூகரீதியாக நல்ல பலன்களைக் கொடுத்தாலும் திருமண வாழ்க்கை மன நிறைவு தருவதில்லை. தம்பதிகளுக்குள் கௌரவப் பிரச்சினையால் அன்யோன்யம் குறைந்து பிரிவினை ஏற்படுகிறது. குடும்பத்தில் விட்டுக்கொடுத்து வாழும் தன்மை இருக்காது. கடன்பெற்று நிர்வாகச் செலவு, ஊதாரித்தனமாக செலவுசெய்வார்கள்.
பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமை காலை 7.00-8.00 மணிவரையிலான சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபடவும். சுக்கிரனை வ-மைப்படுத்த வைரம் அணியலாம்.
பிறவி எண்- 1, விதி எண்- 7
சூரியனின் 1-ஆம் எண் ஆதிக்கம் பிறவி எண்ணாகவும், கேதுவின் 7-ஆம் எண் விதி எண்ணாகவும் அமைவது பொதுவாழ்க்கைக்கும், சந்நியாசிகளுக்கும் சிறப்பு. நாணயமான அரசியல்வாதிகள் என்று பெயரெடுப்பார்கள். புதிய திட்டத்துடன் சளைக்காமல் செயலாற்றுவார்கள். சிவ வழிபாட்டில் ஆர்வமதிகம். பலருக்குத் திருமணம் நடக்காது. திருமணம் நடந்தவர்கள் விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்கிறார் கள். அல்லது கல்யாணத்திற்குப்பிறகு குடும்ப வாழ்க்கையில் பற்று குறைந்து இல்லற சந்நியாசியாக வாழ்கிறார்கள். இளமையில் வறுமையுடன் வாழ்கிறார்கள். மத்திம வயதிற்குப்பிறகு பொருளாதார முன்னேற் றம் ஏற்படுகிறது. இந்த அமைப்பைப்பெற்ற பலர் குழந்தையின்மையால் அவதிப்படுகிறார் கள். பலர் ஆன்மபலமிழந்து சூழ்நிலைக் கைதியாக வாழ்கிறார்கள். பல திறமைசா-கள் வாழ்க்கையில் முன்னேறமுடியாமல் கடனால், வம்பு, வழக்கால் பாதிப்படைகி றார்கள்.
பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமையில் சித்திரகுப்தரை வழிபடவேண்டும். வைடூரியத்தைப் பயன்படுத்தலாம்.
பிறவி எண்- 1, விதி எண்- 8
சூரியனின் 1-ஆம் எண் ஆதிக்கம் பிறவி எண்ணாகவும், சனியின் 8-ஆம் எண் விதி எண்ணாகவும் அமைவது பொது வாழ்க்கைக்கும், அரசியல்வாதிகளுக்கும் சிறப்பு. சூரியன், சனி பலம்பெற்றால் நீதிபதிகள், வக்கீல்கள், பேராசிரியர்கள் ஆகிய பெரும் பதவிகளை வகிப்பார்கள். பார்ப்பதற்கு கடுமையானவர்களாகத் தோன்றினாலும் கள்ளம், கபடமில்லாமல் வெள்ளை மனதுடன் அன்பாக மற்றவர்களிடம் பழகுவார்கள். சூரியன், சனி பலம்குறைந்தால் கடின உழைப்பில் குறைந்த ஊதியம் பெறுவார்கள். பலமுறை தோல்விகளைச் சந்தித்தாலும் சளைக்காமல் உழைப்பார்கள். நடுவயதில் இவர்கள் பல வாழ்க்கைப் பிரச்சினைகளை சந்திப்பார்கள். ஆரோக்கியக் குறைவுண்டு. இவரின் உழைப்பு இவரைவிட பிறருக்கே பயன்படும். தீவிர உழைப்பாளி. புகழுக்காக உழைத்தாலும் புகழ் பெறமாட்டார்கள். வாழ்வின் பிற்பகுதியில், தாங்கள்பெற்ற அனுபவங்களைக்கொண்டு, ஆனந்தமான வாழ்க்கை வாழ்வார்கள். தந்தை- மகன் கருத்து வேறுபாடுண்டு. வெளியூர் அல்லது வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பு.
பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமை காலை 10.00-11.00 மணிவரையிலான சனி ஓரையில் சிவ வழிபாடு செய்யலாம். நீலநிற ரத்தினத்தைப் பயன்படுத்தலாம்.
பிறவி எண்- 1, விதி எண்- 9
சூரியனின் 1-ஆம் எண் ஆதிக்கம் பிறவி எண்ணாகவும், செவ்வாயின் 9-ஆம் எண் விதி எண்ணாகவும் அமைவது மிகச் சிறப் பான பலன். நிர்வாகத் திறன் கொண்ட சூரியனும் அதிகாரத் தோரணை நிறைந்த செவ்வாயும் ஜாதகத்தில் பலம்பெற்றவர்கள் அன்பிற்கு அடிபணிவார்கள். அதிகாரத்திற்கும், ஆணவத்திற்கும் அடிபணிய மறுப்பார்கள். புகழ்பெற்றவர்களாகவும் தங்களை மற்றவர்கள் மதிக்கவேண்டும்- தங்களது ஆலோசனைகளைக் கேட்கவேண்டுமென்றும் எதிர்பார்ப்பார்கள். இராணுவம், போலீஸ் போன்ற துறையில் தனித் திறமையுடன் மிளிர்வார்கள். எல்லாம் எனக்குத் தெரியும் என்ற கர்வமுண்டு. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று, எந்த விஷயத்திலும் தனித்து செயல்படுவார்கள். சூரியன், செவ்வாய் பலம்குறைந்தால் வாழ்க்கையில் தனியாகப் போராடப் பிறந்தவர்கள். தாய்- தந்தை, உறவினர்கள், உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்காது. முயற்சிக்குத் தகுந்த முன்னேற்றம் கிடைக்காது. பலருடைய விரோதமும் எதிலும் அவசரமும் ஆத்திரமும் உண்டு. தங்கள் முயற்சியில் அடுத்தவர் தலையீட்டை விரும்பமாட்டார்கள்.
பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00-8.00 மணிக்குள் முருக வழிபாடு செய்யவேண்டும். பவளத்தைப் பயன்படுத்தவேண்டும்.
(தொடரும்)
செல்: 98652 20406