Advertisment

ஒளிமயமான எதிர்காலத்துக்கு எண்ணியல் பரிகாரங்கள்! (9)

/idhalgal/balajothidam/digital-solutions-bright-future-9

பிறவி எண்- 9

நவகிரகங்களில் செயலாற்றலுள்ள கிரகம் செவ்வாய். ஆற்றல், ஆதிக்கம், பராக்கிரமம். வீரதீரச் செயல்கள், அதிகாரம் செலுத்துதல், ஆளுமைத் திறன், நம்பிக்கை, வளைந்துகொடுக்காத தன்மை, தர்மம், நேர்மை, நியாயம் போன்ற எண்ணிலடங்கா தன்மைகள் கொண்ட கிரகம். கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவர்கள். போலீஸ், இராணுவம், தீயணைப்புத் துறை, உயர்பதவிகள், சகோதர உறவுகள், மண், மனை, வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட் போன்றவற்றுக்கான அதிபதி செவ்வாய். நம் உடலில் முக்கியமாக ரத்த சம்பந்தமான சில விஷயங்கள் சீராக இருக்க செவ்வாய் முக்கிய காரணம். போட்டி, பந்தயங்கள், உடல்திறன், சாகச நிகழ்ச்சிகள் போன்றவற்றில் புகழ்பெறவும், ரியல் எஸ்டேட், பில்டிங் கான்ட்ராக்ட், சிவில் இன்ஜினியரிங், அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்கள், நெருப்பு சம்பந்தமான தொழில்கள் சிறக்கவும் செவ்வாயின் அருள் அவசியம். செவ்வாய் பகவான் ரத்த காரகன் என்பதால் எதிலும் தீவிரமாக ஈடுபட வைப்பார். பெண்களுக்கு களத்திர காரகன். சுக்கிரனுடன் செவ்வாய் தொடர்பு பெறும்போது இல்லற இன்பத்தில் அதிக நாட்டத்தை ஏற்படுத்திவிடுவார். காதல் வயப்படுபவர்களுக்கு மற்றவர்களுடைய எதிர்ப்பு பெரிதாகத் தெரியாது. இந்த துணிச்சலைத் தருபவர் செவ்வாய் பகவான்.

Advertisment

பிறவி எண்- 9, விதி எண்- 1

செவ்வாய் மற்றும் சூரியனின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் செவ்வாயும் சூரியனும் பலம்பெற்றால் தொட்டதெல்லாம் பொன்னாகும். தந்தையின் செல்வாக்கும், சொல்வாக்கும் அரவணைப்பும் கிடைத்துக்கொண்டே இருக்கும். ஜாதகர் நிலையான எண்ணம் மற்றும் செயல்பாடு கொண்டவராக இருப்பார். தலைமைப் பண்புள்ள பெற்றோருக்குப் பிறந்தவர்கள். தாய்- தந்தை, தந்தைவழி உடன்பிறந்தவர்களுடன் கூட்டுக் குடும்பத்தில் வசிப்பார்கள். மிகுதியான பூர்வீக சொத்து இவர்களுக்குண்டு. இவரின் பேச்சுக்கு குடும்பம் கட்டுப்படும். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தலைமைப் பண்பு, நிர்வாகத் திறமையுடையவர்கள். ஜாதகரின் குடும்பத்திற்கென்று தனி மதிப்பும், மரியாதையுமுண்டு. உயர்வான உறவுகள் நிரம்பப் பெற்றவர்கள். உடனிருப்பவர்களை சுகமாக வைத்துக்கொள்வது, பரம்பரை கௌரவத் தொழில், கூட்டுத் தொழில், வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றம் போன்ற புண்ணியப் பலன்கள் வாழ்நாள் முழுவதும் துணைநிற்கும். சுய ஜாதகத்தில் செவ்வாய், சூரியன் பலம்குறைந்தால் சுய முடிவெடுக்கத் தெரியாது. தன் சொந்த உழைப்பால் முன்னுக்கு வரமுடியாது. குடும்ப உறுப்பினர்களின் குணத்திலிருந்து மாறுபட்டவர்களாக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்களால் ஒதுக்கப்படுவார்கள் அல்லது அவமானப்படுத்தப்படுவார்கள். சரியான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள்.

Advertisment

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை சுவாமிமலை முருகனை வழிபட வேண்டும். அல்லது தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும்.

dd

பிறவி எண்- 9, விதி எண்- 2

செவ்வாய் மற்றும் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில்

செவ்வாய் மற்றும் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் செவ்வா யும் சந்திரனும் பலம் பெற்றால் நிலையான- நிம்மதியான தனப் பிராப்த முண்டு. சொத்து, சுகம், வாகன வசதி நிறைந்தவர்கள். இவர்களுக்கு சந்திர மங்கள யோகத்திற்கு இணையான பலன்கள் நடக்கும். தாய்- தந்தைவழி உறவுகள்மூலம் சொத்து கிடைக்கும். பண்ணைத் தொழில், ரியல் எஸ்டேட்மூலம் நல்ல வருமானமுண்டு. நண்பர்கள் வட்டாரம் அதிகமிருக்கும். அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் யோகசாலியாக இருப்பார்கள். தன்னுடைய சுய சம்பாத்தியத்தைவிட தந்தைவழி சம்பாத்தியத்தையும், சுகபோகத்தையும் அனுபவித்து சுகவாசியாக இருப்பார்கள். ஒரு டிகிரி படித்தபிறகு உயர் கல்விக்கு வெளியூர், வெளிநாடு செல்வார்கள். ஒழுக்கத் தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். குல கௌரவம், சமுதாய அந்தஸ்து நிறைந்த வர்கள். உண்மையையும், நேர்மையையும், சத்தியத்தையும் கடைப்பிடிப்பவர்கள். சுய ஜாதகத்தில் செவ்வாயும் சந்திரனும் பலம்குறைந்தால் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கத் தவறுவார்கள். தாய் மற்றும் தாய்வழி உறவுகளுடன் சண்டை, சச்சரவு மிகுதியாக இருக்கும். பள்ளி, கல்லூரிப் படிப்பில் தடுமாற்றம் மிகுதியாக இருக்கும். சுய ஒழுக்கம் குறையும். இரண்டு திருமணமுண்டு. சிலர் குடும்பத்தைவிட்டு குறுகியகாலம் பிரிந்துவாழ்வார்கள். இவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே உயர்ந்த, உன்னத நிலையை அடைய முடியும்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை நவகிரக சந்திரனை வழிபடவேண்டும். அல்லது அம்பாள் வழிபாடு செய்ய வேண்டும்.

பிறவி எண்- 9, விதி எண்- 3

செவ்வாய் மற்றும் குருவின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் செவ்வாய், குரு பலம்பெற்றால் குரு மங்கள யோகத்திற்கு இணையான பலன் கிடைக்கும். ஜாதகர் ஆன்மிக நாட்டமுள்ள வர். வாக்கு பலிதமுண்டு. பேச்சில் தெய்வத் தன்மை வெளிப்படும். கோவில் கட்டுதல், கும்பாபிஷேகம் செய்தல், கல்வி நிறுவனம் நடத்துதல், தான, தர்மம் செய்தல் போன்ற பாக்கியப் பலன்கள் உண்டு. மற்றவர்களுக்கு உபதேசம் செய்துகொண்டே இருப்பார்கள். அதிர்ஷ்டத்தாலும், யோகத்தாலும் முன்னேற்றமடைவார்கள். சுயமுயற்சி உள்ளவராக இருப்பார்கள். ஜாதகர் சாதாரண குடும்பத் தில் பிறந்திருந்தாலும் சுய உழைப்பில் பொருளாதாரத்தில் முன்னேற்றமுண்டு. ஆசிரியர், ஜோதிடம், சட்டம், புரோகிதம், கூட்டுத் தொழில், உணவுத் தொழில், அயல் நாட்டுத் தொடர்பு போன்ற தொழில்களில் நல்ல வருமானமுண்டு. சுய ஜாதகத்தில் செவ்வாய், குரு பலம் குறைந்தால் குடும்ப கௌரவத்திற்கு பங்கம் ஏற்படுத்துவார்கள். சொத்து, சுகங்களை அனுபவிக்கும் பாக்கியம் குறைவுபடும். சம்பாதிக்கின்ற பணம் தவறான வழிகளில் செலவாகிவிடும். வாக்கில் நிதானமிருக்காது. பொய், பித்தலாட்டம்மூலம் சம்பாதிப்பார்கள். குடும்பத்தில் கலப்புத் திருமணம், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் உண்டு.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை நவகிரக குரு பகவானை அல்லது தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

பிறவி எண்- 9, விதி எண்- 4

செவ்வாய் மற்றும் ராகுவின் ஆதிக்கம் நிறைந்த எண். பெண்களுக்குத் திருமண வாழ்க்கையை அதிகம் பாதிக்கும் கிரக எண்கள். பொய், பித்தலாட்டத்தால் குடும்பத்தில் கலகம் ஏற்படுத்துவார்கள். குடும்ப வாழ்க்கை சிறப் பாக அமையாது. தாய்வழி உறவுகளால் நெருக்கடியுண்டு. தாயார், வீடு, வாகனவழியில் விரயமிருக்கும். சிலர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாகனத்தை மாற்றிக்கொண்டே இருப்பர். இவர்களுக்கு வாஸ்து குறையுள்ள மனையே அமையும். வீட்டை இடித்துக் கட்டியே பாதி ஆயுளையும், மன நிம்மதியையும் குறைத்துக் கொள்வார்கள். ஒருசிலருக்கு சொந்த வீடு பாக்கியமே இல்லாமல், வாடகை வீட்டைக்கூட மாற்றிக்கொண்டே இருப்பார்கள். தவறான நிலத்தை வாங்குவது, நிலத்தினால் நட்டம் இருக்கும். கடனுக்காக வீட்டை விற்கும் நிலைகூட வரும். தாயாரின் ஆரோக்கியத்தில் சிறு குறைபாடு இருந்துகொண்டே இருக்கும். சிறு வயது குழந்தைகள் கல்விக்காக பெற்றோரைப் பிரிந்து விடுதியில் தங்கும் நிலை ஏற்படும். இந்த அமைப்பைப்பெற்ற விவசாயிகள், பண்ணையாளர்கள் பெரிய லாபம் பார்க்கமுடியாது. கால்நடை, வீட்டு விலங்கு வளர்ப்பவர்களுக்கு அடிக்கடி விலங்குகள் உயிரிழப்பால் சேதம் மிகுதியாகும்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை ராகு வேளையில் துர்க்கை அல்லது காளியை வழிபடவும்.

பிறவி எண்- 9, விதி எண்- 5

செவ்வாய் மற்றும் புதன் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் செவ்வாய், புதன் பலம்பெற்றால் இளமைப் பொலிவுடன் நல்ல உடல்வாகு கொண்டவராக இருப்பார்கள். தைரியம், வீரம் மிகுந்தவர்கள். எந்த செயலிலும் திட்டமிட்டு வெற்றிக் கனியை சுவைப்பார்கள். சிறந்த நுண்ணறிவு உடையவர்கள். தன் திறமையால், அறிவால் அனைவரையும் கவரும் திறன் படைத்தவர்கள். அடிக்கடி பயணம், இடமாற்றம் ஏற்படும். கமிஷன், தரகு, தொலைதொடர்பு, டிராவல்ஸ், ஏஜென்ஸி, கூட்டுத் தொழில், வெளிநாட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். தன் இன உறவுகளின்மீது மட்டும் அன்பும் பிரியமும் உள்ளவராக இருப்பார்கள். புகழ்ச்சியை விரும்பக்கூடியவர்கள். சிறு வயதுமுதல் இளம் வயதுவரை நட்பு பாராட்டும் நண்பர்களுண்டு. உறவில் திருமணம் நடக்கும். தம்பதிகள் கௌரவமான, ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்தவர்கள்.

சுய ஜாதகத்தில் செவ்வாய் புதன் பலம்குறைந் தால் குல கௌரவத்திற்குத் தகுந்த வாழ்க்கைத் துணை அமையாது. பேராட்டமான திருமண வாழ்க்கையுண்டு. நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால், வாழ்க்கைத் துணையால் அனுகூலமற்ற பலனுண்டு. அண்டை அயலாருடன் ஒத்துப்போகாது. ஆவணங்கள் தொடர்பான பிரச்சினையுண்டு. தவறான காதலர்களைத் தேர்வுசெய்து வாழ்வைத் தொலைப்பதில் முன்னணியில் நிற்பவர்கள். பங்கு வர்த்தகத்தில், ரேஸ், லாட்டரி போன்றவற்றில் பணம் விரயமாகுமென்பதால் அவற்றைத் தவிர்க்கவேண்டும்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை சக்கரத்தாழ்வாரை துளசி சாற்றி வழிபடவும். அல்லது சிவப்பு துவரை தானம் வழங்கவும்.

பிறவி எண்- 9, விதி எண்- 6

செவ்வாய் மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் இணைந்த எண். செவ்வாயும் சுக்கிரனும் பலம்பெற்ற தம்பதிகளுக்கு ஆசிர்வதிக்கப்பட்ட திருமண வாழ்க்கை அமையும். ஈருடல் ஓருயிராக வாழ்வார்கள். எல்லாவகையான யோகங்களையும் அனுபவிப்பார்கள். ஆண் ஜாதகத்தில் மனைவியைக் குறிக்கும் சுக்கிரனுக்குப் பெண் ஜாதகத்தில் கணவனைக் குறிக்கும் செவ்வாய்க்கும் எந்த விதத்தில் சம்பந்தம் இருந்தாலும் முறையற்ற காதல், கலப்புத் திருணம் ஏற்படும். பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை ஏற்படுத்துகிறது. சில ஆண்களுக்கு பெண்களால் அவப்பெயர் ஏற்படுகிறது. கணவன்- மனைவி உறவில் விரிசல் ஏற்படும். திருமண வாழ்வில் குழப்பங்கள் அதிகரிக்கும். பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்கும். ஆடம்பரத்திற்கும், அதிகப்படியான சந்தோஷத்திற்கும் காரக கிரகமாக சுக்கிரன் இருப்பதால், சிலர் தகுதிக்குமீறிய ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வாழ்நாள் கடனாளியாகிறார்கள். தங்கம், வெள்ளி நகைகள் அடமானத்திற்குப் போகும் அல்லது இழக்கநேரும். பொருளாதார நெருக்கடி மிகும். அத்தை, அக்கா, மூத்த மகள் போன்ற உறவுகளால் பண இழப்பு, மன உளைச்சல் ஏற்படுகிறது. கணவனால் மனைவிக்கு பிரயோஜனமற்ற நிலை அல்லது மனைவியைப் பராமரிக்கமுடியாத நிலை அல்லது பிரச்சினைக்குரிய மனைவியை அடைவார்கள்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை சுக்கிர ஓரையில் விநாயகரை வழிபடவேண்டும்.

பிறவி எண்- 9, விதி எண்- 7

செவ்வாய் மற்றும் கேதுவின் ஆதிக்கம் நிறைந்த எண். பெண்களுக்குத் திருமணம் காலதாமதமாகும். சிலர் வாழ்க்கைத் துணை பற்றிய மிகையான எதிர்பார்ப்பால் நல்ல வரனைத் தவறவிடுவார்கள். உத்தியோகம், தொழில் நிமித்தமாக தம்பதிகள் அதிக காலம் பிரிந்துவாழ்வார்கள். சிலருக்கு நிரந்தரமான பிரிவுமுண்டு. அல்லது கணவன்- மனைவிக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டு குடும்ப வாழ்வு சந்தோஷமில்லாமல் இருக்கும். வீடு, வாகன யோகம் தாமதமாக அமையும் அல்லது பராமரிப்பு செலவு அதிகரிக்கும். வாகனம், சொத்து, படிப்பு சார்ந்த விஷயங்களுக்காக கடன்பெற்றால் திரும்ப அடைப்பதில் சிரமம் ஏற்படுமென்பதால், திரும்பச் செலுத்தும் திறனறிந்து கடன்பெற வேண்டும். சொத்து தொடர்பான வில்லங்கமுண்டு. இவர்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு, ரியல் எஸ்டேட் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இதயம், நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் முருகனை வழிபடவும்.

பிறவி எண்- 9, விதி எண்- 8

செவ்வாய் மற்றும் சனியின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் செவ்வாய், சனி பலம்பெற்றால் மனவுறுதி, நல்லொழுக்கம், ஆன்மபலம், மதப்பற்றுள்ளவராக இருப்பார் கள். சமயச் சடங்குகள், சம்பிரதாயங்களில் நம்பிக்கையுண்டு. பூர்வீகச் சொத்தும், முன்னோர்களின் நல்லாசியும் நிரம்பப் பெற்றவர்கள். தந்தைவழிச் சொத்துகளை அனுபவிக்ககூடியவராக இருப்பார்கள். தந்தை, தந்தைவழி உறவினர்கள்மூலம் சொத்து, ஆதாயம், குலத்தொழில் வருமானமுண்டு. குடும்ப உறுப்பினர்களும் ஜாதகரும் ஒருமித்த கருத்துடன் ஒற்றுமை யாகலி அன்பாக இருப்பார்கள். தன விருத்தியுண்டு.

சுய ஜாதகத்தில் செவ்வாய், சனி பலம் குறைந்தால், தன் முயற்சியால் மேம்பட்ட நிலைக்கு செல்ல நினைத்தாலும் அதில் முழுமைபெற இயலாது. மத நம்பிக்கை குறைவுபடும். பல் தொந்தரவுண்டு. ஆரோக்கியக் குறைபாடு மிகுதியாக இருக்கும். அடிக்கடி நோய்வாய்ப்படுவார் அல்லது விபத்து நேரும். ஆரம்பத்தில் ஆன்மிகவாதி, பின் நாத்திகவாதி. எந்த முயற்சியிலும் வம்பு வழக்குகளை எதிர்கொள்பவர். சுயநலமும் கஞ்சத்தனம் உள்ளவராக இருப்பார்கள். ஞாபக சக்தி குறையும். பாகப் பிரிவினை சுமுகமாக இருக்காது. ஜாதகரின் முயற்சியின்றி பூர்வீகச் சொத்து கிடைக்காது. சிலருக்கு பூர்வீக சொத்தால் பயனிருக்காது. உடன்பிறந்தவர்களுடன் சொத்து தொடர்பான மன உளைச்சல் ஏற்படும். திருமணத்தடை இருக்கும். காதல், கலப்புத் திருமணம் நடக்கும் அல்லது பொருத்தமில்லாத வரன் அமையும். பலருக்கு இருதார யோகத்தைத் தரும் கிரக எண்கள். வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கையில் விருப்பம் அதிகம்.

பரிகாரம்

செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் பிரதோஷ வழிபாடு செய்யவேண்டும்.

பிறவி எண்- 9, விதி எண்- 9

தனித்த செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் செவ்வாய் பலம்பெற்றால் கட்டுப்பாடும், திறமையும், சவால்களைத் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையும் உண்டு. பயமில்லாதவர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவும் அனுசரணையும் உண்டு. எந்த நிர்வாகத்திலும் தலைமைப் பதவி அல்லது பொறுப்புகள் கிடைத்தால் அவற்றில் மிகவும் தீவிரமாகவும், சிறப்பாகவும் ஈடுபட்டு, அந்தக் காரியங்களைச் செய்துமுடிப்பார்கள். சொத்துகள் நிறைந்தவர்கள். அதிகாரமுள்ள காவல்துறை, இராணுவம் ஆகிய துறைகளில் மிகவும் விருப்பம் உடையவர்கள். பிறர் பயப்படும் காரியங்களைத் துணிந்து செய்வார்கள். உடலும் திடகாத்திரமாக, கட்டுமஸ்தாக இருக்கும். இவர்களுக்கு கோபம், ரோஷம், தன்மானம் ஆகிய மூன்று குணங்களும் நிறைந்திருக்கும். போட்டி, பந்தயம், வேட்டை, உடற்பயிற்சிகள், சர்க்கஸ், வாகனம் ஓட்டுவதில் விருப்பம் அதிகம். சிறு வயதில் மிகவும் சிரமப்பட்டாலும், தங்களது மனவுறுதியினாலும், விடாமுயற்சியினா லும், இவர்கள் எப்படியும் பிற்காலத்தில் முன்னேறிவிடுவார்கள். சுய ஜாதகத்தில் செவ்வாய் பலம்குறைந் தால் உடலில் காயங்கள், விபத்துகள் போன்றவை ஏற்படும். இவர்களுக்கு முன்கோபமும், படபடப்பும், நோயும் உண்டு. உடன்பிறந்தவர்களுடன் எப்பொழுதும் அனுசரித்துச் செல்லமாட்டார்கள். ஜாதகர் பிறரிடம் பகையையும், விரோதத்தையும் சம்பாதிப்பார். எளிமையாக முடிக்கவேண்டிய வேலைகள்கூட கடுமையானதாக மாறி மனக் கசப்பைத் தரும். பெண்களுக்கு திருமணம் தாமதமாகும்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் வைத்தீஸ்வரன் கோவில் சென்று வணங்கவும். சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் பலம்பெற்றவர்களுக்கே பிறவி எண்ணும் விதி எண்ணும் சிறப்பாக அமையும். அது சார்ந்த கிரகமும் சுய ஜாதகத்தில் பலம்பெறும். பிறவி எண், விதி எண் பலம்குறைந்தவர்கள் அந்த குறையை நிவர்த்திசெய்யும் வகையில் பெயரை மாற்றியமைப்பது நல்லது.

(தொடரும்)

செல்: 98652 20406

bala060123
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe