Advertisment

ஒளிமயமான எதிர்காலத்துக்கு எண்ணியல் பரிகாரங்கள்! (6)

/idhalgal/balajothidam/digital-solutions-bright-future-6

பிறவி எண்- 6

மனிதன் ஆசையில்லமால் வாழமுடியாது. ஆசைக்கு அளவில்லை. ஆசைக்கு சொந்தக்காரன் சுக்கிரன்.

Advertisment

சுக்கிரன் என்றாலே சொகுசு தான். அதுபோல் காதல், காம எண்ணங்களுக்கும் சுக்கிரனே அதிபதி. அலங் காரம், ஆடம்பரத்தில் விருப்பம், அமைதியான தோற்றம் இவை சுக்கிரனின் குணங்கள். காதல் என்னும் வார்த்தையை அனுபவித்து, கடந்துசெல்ல சுக்கிரனின் தயவு கண்டிப்பாக வேண்டும். காதலின் முடிவான காமத்தை ஒரு மனிதன் அனுபவிக்கவும் சுக்கிரனின் பங்கு இன்றியமை யாதது.

ஆடம்பரமான வீடு, சொத்து சுகம், வாசனை திரவியம் உபயோகிப்பது, கவர்ச்சியான தோற்றம், அடிக்கடி தன்னை அழகு படுத்திக்கொள்வது, காதல் சார்ந்த எண்ணங்கள் போன்றவை ஆறாம் எண் ஆதிக்கத்தில் பிறந்த வர்களுக்கு சற்று அதிக மாகவே இருக்கும்.

உண்மையைச் சொன்னால் சுக்கிரன் எல்லருக்கும் நல்ல பலனைக் அள்ளி- இல்லை கிள்ளிக்கூட கொடுப்ப தில்லை. சுய ஜாதகத்தில் சுக்கிரன் பலம்பெற்று, லக்னரீதியான சுபரானால் பெரும் செல்வம், ஆடம்பர வாழ்க்கையுண்டு. சுக்கிரன் லக்னரீதியான அசுபராகி பலம்பெற்றால் வறுமை, கடன், பெண்களால் பிரச்சினை இருக்கும்.

பிறவி எண்- 6, விதி எண்- 1

Advertisment

சுக்கிரன் மற்றும் சூரியனின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதக்தில் சுக்கிரன் மற்றும் சூரியன் பலம்பெற்றால் அழகான- ஆடம்பரமான ஆடை அணிவதிலும், தங்களை அழகுபடுத்திக்கொள்வதிலும் ஆர்வமுண்டு. பொருளாதார உயர்வுண்டு. பொறுப்பானவர்களாகவும், வசதியானவர்களாகவும், புகழ்பெற்றவர்களாகவும் இருப்பார்கள். பணவரவை நிர்வாகம் செய்யும் தொழிலில் இருப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்கும் இவர்கள் அடுத்த வரைப் புகழ்ந்துபேசத் தயங்குவார்கள். நல்ல வாழ்க்கைத்துணை இயற்கையாகவே அமைந்துவிடும். அன்பான பெற்றோர் கள், உடன்பிறப்புகள், பண்பான குழந்தை கள் என நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். தன் காரியத்திற்காக அனைவரையும் பயன்படுத்துவார்கள். தங்களது கலாச்சாரத்தைவிட்டு வெளியே வரத் தயங்குவார்கள் என்பதால் காதல் இவருக்கு வெற்றியைத் தராது. சுய ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன் பலம்குறைந்தால் கண் பாதிப்பு நிச்சயமுண்டு. தைரியம், வீரியம் குறைந்தவர். வருமானத்தை விட நிர்வாகச் செலவு மிகுதியாக செய்வார்கள். அழகு, ஆடம்பரத்திற்காக எதையும் இழக்கத் துணிவார்கள். அடக்கம், பொறுமை, பெரியோருக்கு கீழ்ப்படிதல், தன்நம்பிக்கை, நீதி, நேர்மை, கௌரவம் ஆகிய குணங்கள் குறைவுபடும். தவறான காதல், காமத்துடன் கௌரவப் போர்வையில் வாழ்வார்கள். பெண் சாபம் நிறைந்தவர்கள்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை சுமங்கலிப் பெண்களிடம் ஆசிபெறவேண்டும்.

ff

பிறவி எண்- 6, விதி எண்- 2

சுக்கிரன் மற்றும் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த எண். இளமை யான தோற்றம் கொண்ட வர்களாகவும் இனிமை யாகப் பேசுபவர்களாகவும் இருப்பார்கள். பல திறமை களைத் தன்னுள் கொண்டவர்கள். குழந்தை யைப்போல் எவரிடமும் சுலபமாகப் பழகுபவர்கள். பிறரை மகிழ்விப்பவர். சுகவாழ்க்கையில் நாட்டமுண்டு. சமூக அதிகாரம் மிகுந்தவர்கள். பயணம் சார்ந்த தொழில் மற்றும

பிறவி எண்- 6

மனிதன் ஆசையில்லமால் வாழமுடியாது. ஆசைக்கு அளவில்லை. ஆசைக்கு சொந்தக்காரன் சுக்கிரன்.

Advertisment

சுக்கிரன் என்றாலே சொகுசு தான். அதுபோல் காதல், காம எண்ணங்களுக்கும் சுக்கிரனே அதிபதி. அலங் காரம், ஆடம்பரத்தில் விருப்பம், அமைதியான தோற்றம் இவை சுக்கிரனின் குணங்கள். காதல் என்னும் வார்த்தையை அனுபவித்து, கடந்துசெல்ல சுக்கிரனின் தயவு கண்டிப்பாக வேண்டும். காதலின் முடிவான காமத்தை ஒரு மனிதன் அனுபவிக்கவும் சுக்கிரனின் பங்கு இன்றியமை யாதது.

ஆடம்பரமான வீடு, சொத்து சுகம், வாசனை திரவியம் உபயோகிப்பது, கவர்ச்சியான தோற்றம், அடிக்கடி தன்னை அழகு படுத்திக்கொள்வது, காதல் சார்ந்த எண்ணங்கள் போன்றவை ஆறாம் எண் ஆதிக்கத்தில் பிறந்த வர்களுக்கு சற்று அதிக மாகவே இருக்கும்.

உண்மையைச் சொன்னால் சுக்கிரன் எல்லருக்கும் நல்ல பலனைக் அள்ளி- இல்லை கிள்ளிக்கூட கொடுப்ப தில்லை. சுய ஜாதகத்தில் சுக்கிரன் பலம்பெற்று, லக்னரீதியான சுபரானால் பெரும் செல்வம், ஆடம்பர வாழ்க்கையுண்டு. சுக்கிரன் லக்னரீதியான அசுபராகி பலம்பெற்றால் வறுமை, கடன், பெண்களால் பிரச்சினை இருக்கும்.

பிறவி எண்- 6, விதி எண்- 1

Advertisment

சுக்கிரன் மற்றும் சூரியனின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதக்தில் சுக்கிரன் மற்றும் சூரியன் பலம்பெற்றால் அழகான- ஆடம்பரமான ஆடை அணிவதிலும், தங்களை அழகுபடுத்திக்கொள்வதிலும் ஆர்வமுண்டு. பொருளாதார உயர்வுண்டு. பொறுப்பானவர்களாகவும், வசதியானவர்களாகவும், புகழ்பெற்றவர்களாகவும் இருப்பார்கள். பணவரவை நிர்வாகம் செய்யும் தொழிலில் இருப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்கும் இவர்கள் அடுத்த வரைப் புகழ்ந்துபேசத் தயங்குவார்கள். நல்ல வாழ்க்கைத்துணை இயற்கையாகவே அமைந்துவிடும். அன்பான பெற்றோர் கள், உடன்பிறப்புகள், பண்பான குழந்தை கள் என நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். தன் காரியத்திற்காக அனைவரையும் பயன்படுத்துவார்கள். தங்களது கலாச்சாரத்தைவிட்டு வெளியே வரத் தயங்குவார்கள் என்பதால் காதல் இவருக்கு வெற்றியைத் தராது. சுய ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன் பலம்குறைந்தால் கண் பாதிப்பு நிச்சயமுண்டு. தைரியம், வீரியம் குறைந்தவர். வருமானத்தை விட நிர்வாகச் செலவு மிகுதியாக செய்வார்கள். அழகு, ஆடம்பரத்திற்காக எதையும் இழக்கத் துணிவார்கள். அடக்கம், பொறுமை, பெரியோருக்கு கீழ்ப்படிதல், தன்நம்பிக்கை, நீதி, நேர்மை, கௌரவம் ஆகிய குணங்கள் குறைவுபடும். தவறான காதல், காமத்துடன் கௌரவப் போர்வையில் வாழ்வார்கள். பெண் சாபம் நிறைந்தவர்கள்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை சுமங்கலிப் பெண்களிடம் ஆசிபெறவேண்டும்.

ff

பிறவி எண்- 6, விதி எண்- 2

சுக்கிரன் மற்றும் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த எண். இளமை யான தோற்றம் கொண்ட வர்களாகவும் இனிமை யாகப் பேசுபவர்களாகவும் இருப்பார்கள். பல திறமை களைத் தன்னுள் கொண்டவர்கள். குழந்தை யைப்போல் எவரிடமும் சுலபமாகப் பழகுபவர்கள். பிறரை மகிழ்விப்பவர். சுகவாழ்க்கையில் நாட்டமுண்டு. சமூக அதிகாரம் மிகுந்தவர்கள். பயணம் சார்ந்த தொழில் மற்றும் கடல் சார்ந்த தொழிலில் ஆர்வம் அதிகம். ஞாபகசக்தி மிகுந்தவர்கள். புதிய தொழில் முயற்சியால் சுய வருமானத் தில் செல்வம் சேரும். திட்டமிட்டு செயல்பட்டு வாழ்நாளில் தைரியசாலியாக வலம்வருவார்கள். இவர்கள் முதலீடு அதிகமில்லாத சுயதொழில் செய்யலாம். இவர்களை வாடிக்கையாளர்கள் அதிகம் தேடித்தேடி வருவார்கள். சிறு சில்லரை வணிகம் செய்தால் பெரும் லாபம் கிடைக்கும். உற்றார்- உறவினர்களுக்கு உதவிபுரியும் குணம்கொண்டவர்கள். ரகசியத்தைக் வாழ்நாள் முழுவதும் காப்பவர்கள். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்பவர்கள்.

சுய ஜாதகத்தில் சுக்கிரனும் சந்திரனும் பலம்குறைந்தால், தான் மட்டும் அறிவாளியென்று நினைக்கக் கூடியவர். பெண்களே பெண்களை எதிரியாக நினைப் பார்கள். இவர்களுக்குக் காதல்மீது மோகம் அதிகம். துணிந்து காதலில் ஈடுபடுவார்கள். குழந்தை பாக்கியம் குறைவு. நிலையான தொழில் அல்லது உத்தியோகத்தில் இருக்கமாட்டார்கள். அடிக்கடி தொழில், வேலையை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். எதிர்பாலினத்தவர்மூலம் பலவிதமான இடையூறுகள் ஏற்படும். காதல் திருமணம் போன்றவற்றில் அவசரப் படுவார்கள் அல்லது ஏமாற்றமடைவார்கள். காதல் விஷயங்களில் கவனமாக இல்லா விட்டால் வாழ்க்கையே கசந்துவிடும்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை சந்திர ஓரையில் சக்தி வழிபாடு செய்யவேண்டும்.

பிறவி எண்- 6, விதி எண்- 3

சுக்கிரன் மற்றும் குருவின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் சுக்கிரனும் குருவும் பலம்பெற்றால் ஒருவித குருட்டு தைரியம் இவர்களுக்கு மனதில் இருந்துகொண்டே இருக்கும். புதிய சாதனைகளை விரைந்து செய்யவேண்டுமென்ற விருப்பம் நிறைந்த வர்கள். இவர்களுக்கு இறைவனின் அருளால், திடீர் யோசனைகள் அல்லது ஞானோதயம் ஏற்படும். எல்லா துறையிலும் தனித்தன்மையுடன் ஜொலிப்பவர்கள். எடுத்த காரியத்தில் வெற்றிதரும் ராஜவசியம் கொண்ட எண். பிறர் செய்யமுடியாத காரியங்களையும் செய்து சாதிப்பார்கள். மிதமிஞ்சிய அதிர்ஷ்டசாலி. சாதாரண மனிதர்கள் முதல் ஆட்சியில் இருப்பவர்கள்வரை ஆதரவுண்டு. அரசாங்க ஆதரவு, சமூகத்தில் உயர்ந்த பதவிகள் கிடைக்கும். அரசனைப் போன்று அனைத்து வசதிகளுடனும் வாழ்வார்கள்.

பொதுவாக சுய ஜாதகத்தில் குரு, சுக்கிரன் சம்பந்தமிருந்தால், பல பூக்களை நுகரும் வண்டுகளாக இருப்பார்கள். முகத்தைப் பார்த்துப் பேசமாட்டார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் அதிகமென்று நினைப்பார்கள். 60 வயதிலும் இளமையாக காதல், காமம் என்று வாழ்வார்கள். இவர்கள் இந்த விஷயத்தில் தவறு செய்தாலும் எளிதில் சட்டத்தின் பிடியில் சிக்கமாட்டார்கள்.

சுய ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் பலம் குறைந்தால் முன்கோபம் மிகுதியானவர்கள். சொல்லாலும் செயலாலும் ஒன்றமுடியாதவர்கள். நன்கு படித்திருந்தாலும் தன் தகுதிக்கு சம்பந்தமில்லாத- தகுதிக் குறைவான இடத்தில் குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படும். சட்டத்திற்குப் புறம்பான அல்லது சட்டத்திற்கு உட்படாத வேலை, தொழில் செய்பவர்களுக்கு இந்த கிரகச் சேர்க்கை இருக்கும். செய்த தவறுக்கு ஆதாரத்துடன் சிக்குவார்கள்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை ராகு வேளையில் சித்தர்களை வழிபடவும்.

பிறவி எண்- 6, விதி எண்- 4

சுக்கிரன் மற்றும் ராகுவின் ஆதிக்கம் கலந்த எண். சற்றேறக்குறைய பிறவி எண் 4, விதி எண் 6-க்கு சொன்ன அனைத்து பலன்களும் பொருந்தும். ஆண்களுக்கு கடுமையான திருமணத் தடை அல்லது திருமணத் தோல்வியைத் தரும் ஆதிக்க எண். இவர்களுக்கு துணிச்சலும் அறிவுத் திறமையும் உண்டு. நன்றாக முன்னுக்கு வந்துவிடுவார்கள். தன் திறமையினால் வேகமாக முன்னேறுவர். ஜனவசியர். வெற்றிகளைப் பெறக்கூடியவர். சுயநலவாதிகள். திடீரென தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு பொருள்களை இழக்கும் அபாயமுமுண்டு. எனவே, கவனமாக இருக்கவேண்டும். மனோ சக்தி மிகுந்தவர்கள். இவர்களுக்கு குழந்தை பிறப்பது சற்று தாமதமாகும். முறைதவறிய காதல் விவகாரங்களில் ஈடுபடாதிருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை ராகு வேளையில் துர்க்கை அல்லது காளிக்கு ரோஜாமாலை அணிவித்து வழிபடவும்.

பிறவி எண்- 6, விதி எண்- 5

குரு மற்றும் புதனின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் சுக்கிரனும் புதனும் பலம்பெற்றால் முக்கியப் பிரமுகராக விளங்குவார்கள். அரசாட்சி, பொதுமக்கள் தொடர்பு, மற்றையோரைக் கவருகின்ற ஆற்றலைப் பெறுவார்கள். மனோசக்தி, புத்திக்கூர்மை, சிறந்த பேச்சாற்றல், இரட்டை அர்த்தம் நிறைந்த சொற்களைப் பிரயோகித்தல், தடையில்லாமல் பேசுபவராக இருப்பார்கள். பிறர் செய்வதை அப்படியே உடனே செய்வார்கள். மற்றவர்கள் போற்றத்தக்க குணங்களைக் கொண்டவர்கள். இவர்களது பேச்சில் கேலியும் கிண்டலும் சிரிப்பும் கலந்திருக்கும். எத்தகைய நபர்களை சந்தித்தாலும், தங்களது தனித்தன்மையை அவர்களுக்கு சீக்கிரம் உணர்த்திவிடுவார்கள். பல வருடகாலம் நண்பர்களாக நீடித்துத் தொடர்புகொள்ளும் தன்மையும், கவர்ச்சியும், நட்பு பலமும் இந்த எண்காரர்களுக்கு உண்டு. மனைவி அல்லது நண்பர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் செய்வார்கள். அனைத்து முயற்சிகளிலும் வெற்றிக்கனியை எட்டிப்பிடித்து விதியை மதியால் வெல்பவர்கள். திடீர்ப் புகழுண்டு. சுய ஜாததத்தில் புதனும் சுக்கிரனும் வலிமை குறைந்தால், நடித்து பிறரை ஏமாற்றி தந்திரமாகப் பணம் சம்பாதிப்பார்கள். காதல் என்ற பெயரில் ஊர்சுற்றி பல பெண்களை அல்லது ஆண்களை ஏமாற்றி பைத்தியமாக சுற்றலில் விடுவார்கள். தம்பதிகள் ஒருவரையொருவர் ஏமாற்றி வாழ்வார்கள்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை புதன் ஓரையில் மகாவிஷ்ணுவை வழிபடவும்.

பிறவி எண்- 6, விதி எண்- 6

தனித்த சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் சுக்கிரன் பலம்பெற்றால் சிறு வயதுமுதலே குறிப்பிட்ட லட்சியத்துடன் வாழ்க்கையை நடத்துவார்கள். சுயமுயற்சி, தன்னம்பிக்கை, பெரும்புகழ் உண்டாகும். அயல்நாட்டுப் பயணங்கள் ஏற்படும். மிகுந்த செல்வச் செழிப்புடன், பொருளாதாரக் கஷ்டமில்லாமல் மிகவும் நிம்மதியான வாழ்க்கை நடத்துவார்கள். விபரீத ராஜயோகத்தை அனுபவிப்பார்கள். பல தொழில் முனைவோர்களுக்கு ரோல்மாடலாக வாழ்வார்கள். வெளிநாட்டு வணிகம் மற்றும் முன்னோர்களின் குலத்தொழில் ஆகியவற்றில் கைதேர்ந்தவர்கள். உள்ளுணர்வு மிகுந்தவர்கள். எதையும் தெளிவாக யோசித்து திறம்படச் செய்யும் ஆற்றலுண்டு. விசுவாசமான, நம்பிக்கையான வேலையாட்கள் நிரம்பப் பெற்றவர்கள். முன்னோர்களின் நல்லாசிகள் நிரம்பியவர்கள். சுய ஜாதகத்தில் சுக்கிரன் பலம்குறைந் தால் இளம்வயதில் கஷ்டம் தெரியாத வாழ்க்கையை வாழ்ந்தால், வாலிப வயதில் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தீராத நோய், கடனில் உழல்கிறார்கள். இளம் வயதில் வறுமையை அனுபவித்தவர்கள் வாலிப வயதில் பொறுப்பான வாழ்க்கையை நோக்கிச் செல்கிறார்கள்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை நெய்தீபமேற்றி மகாலட்சுமியை வழிபடவும்.

பிறவி எண்- 6, விதி எண்- 7

சுக்கிரன் மற்றும் கேதுவின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் சுக்கிரன், கேது பலம்பெற்றால் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள். அறிவு என்கிற அற்புதத்தின் விளக்கம் இவர்கள்தான். புதிதாக எதையும் அறிந்துகொள்ளும் ஆர்வமும், அதை வாழ்வில் உடனடியாகப் பயன்படுத்திக்கொள்ளும் திறமையும் உண்டு. எந்தவகையான சோதனைகளை யும் சிரித்துக்கொண்டே சமாளித்து விடுவார்கள். தன்னம்பிக்கை மிகுந்தவர்கள். சீக்கிரமாக- அதுவும் அதிகமாகச் சம்பாதிக்கவேண்டுமென்ற முயற்சியுடன் ஈடுபட்டு லாபமடைவார்கள். தாங்கள் செய்துகொண்டிருக்கும் தொழில்களில் புதுமையைப் புகுத்தி வெற்றியடைவார்கள். தொழிலுக்கு சகோதர- சகோதரிகளின் ஆதரவிருக்கும். வளர்ச்சிக்கான வாய்ப்புகள் தேடித்தேடி வரும். மற்ற எண்காரர்கள் தங்களது துன்பங்களையும், துயரங்களையும் கண்டு கலங்கும்போது, இவர்கள் மட்டும் அவற்றை சவால்களாக எடுத்துக் கொள்வார்கள்.

சுய ஜாதகத்தில் சுக்கிரன் பலம்குறைந்து கேது பலம்பெற்றால், ஆண்களுக்கு கடுமையான திருமணத் தடையைத் தரும் எண்ணாகும். திருமணத்திற்குமுன்பு திருமணம் நடக்கவில்லையென்ற ஏக்கத்தைத் தந்து, திருமணம் நடந்தபிறகு பிரம்மச் சரியத்தைப் பற்றி சிந்திக்கவைக்கும் அமைப் பாகும். பலருக்கு மனைவி மட்டுமல்ல; தாய், உடன்பிறந்த சகோதரிகள், சித்தி, பெரியம்மா என அனைத்து உறவுகளிடமும் விலகி நிற்கவைத்து விடுகிறது. வெகுசிலர் வாழ்நாள் முழுவதும் பெண் வாசனையே இல்லாமல் வாழும் அவலத்தைத் தருகிறது.

பரிகாரம்

வெள்ளிக்கிழமைகளில் பசுவுக்கு அகத்திக்கீரை, மஞ்சள் வாழைப்பழம் உண்ணத் தரவேண்டும்.

பிறவி எண்- 6, விதி எண்- 8

சுக்கிரன் மற்றும் சனியின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் கக்கிரன், சனி பலம்பெற்றால் பொருளாதாரத்தில் அபரிமிதமான வளர்ச்சியுண்டு. திருமணத் திற்குப்பிறகு வளர்ச்சி இரட்டிப்பாகும். நிரந்தரமான வருமானம் தரக்கூடிய தொழில் அமையும். தொட்டது துலங்கும். கூட்டுத் தொழிலில் ஆதாயம் கிடைக்கும். எதையும் நேர்வழியில் செய்யக்கூடியவர்கள். வசதியான, வேலைபார்க்கும் மனைவியையே தேடுவார்கள். எவ்வளவு பெரிய காரியமானா லும் பயமோ, தயக்கமோ இன்றித் துணிந்து ஈடுபட்டு வெற்றியடைவார்கள். இந்த கிரக சம்பந்தமுள்ள பலருக்கு காதல், கலப்புத் திருமணம் நடக்கிறது. செல்வச் செழிப்பில் வாழ்பவர்கள் வறுமையான வாழ்க்கைத் துணையுடன் இணைகிறார்கள் அல்லது வறுமையில் வாழ்பவர்களுக்கு வசதியான வாழ்க்கைத் துணை அமைகிறது. அல்லது ஊருக் காக ஒரு வாழ்க்கை, சுய இன்பத்திற்காக ஒரு வாழ்க்கை என இரண்டு குடும்பத்துடன் வாழ்கிறார்கள். சனி, சுக்கிரன் சம்பந்தம் பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமண வாழ்க்கை யைத் தருகிறது.

சுய ஜாதகத்தில் சுக்கிரன், சனி பலம்குறைந்தால் திடீரென தனலாபக் குறைவேற்படும். பேராசை இவர் களது வாழ்க்கையைக் கெடுக்கும். நடுத்தர மான வாழ்க்கை நிலையை மட்டுமே ஏற்படுத் தும். சிலருக்கு வறுமை மிகுதியாகும். ஒரு தொழிலை நன்கு செய்துகொண்டிருக்கிறபோது, இன்னொரு தொழில் செய்தால் இதைவிட நன்றாக இருக்குமே என்று யோசிப் பார்கள். பின்பு இதை நடுவில் விட்டு விட்டு, புதிய தொழிலில் துணிந்து இறங்கி விடுவார்கள். நஷ்டம் வந்தபோதும் இவர்கள் கலங்கமாட்டார்கள். மிகுந்த சிந்தனை செய்பவர்களாதலால் நரம்பு பலவீன மடையும். எனவே எளிதில் எரிச்சலும் கோபமும் கொள்வார்கள்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை சனி ஓரையில் உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவுதானம் வழங்கவும்.

பிறவி எண்- 6, விதி எண், 9

சுக்கிரன் மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் கலந்த எண். சுய ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய் பலம்பெற்றால் சுகமான வாழ்க்கை, புகழ், உயர்ந்த அந்தஸ்து, விடாமுயற்சி, மனவுறுதி கொண்டவர்கள். ஊரில் பெரிய மனிதர்களாக விளங்குவார்கள். காவல்துறை, இராணுவம், பாதுகாப்புத் துறை போன்றவற்றில் பணியிருக்கும். சூழ்நிலைக்குத் தகுந்தபடி தன்னை மாற்றிக்கொள்ளும் குணம் கொண்டவர்கள். அறிவுத் திறனும், திறமையுமுண்டு. தொழில் நெளிவு சுளிவு கள் தெரிந்தவர்கள். மற்றவர்களோடு இணைந்து செயல்படுவதில் அதிக விருப்ப மில்லாதவர்கள். எதிர்பாராத பல சம்பவங் கள் இவர்களின் வாழ்க்கை யில் நடைபெறும். பிறரை அடக்கி யாளும் எண்ணமுள்ளவர். வெற்றி வீரர். லட்சியவாதி. முன்னேற்றத்தில் தீவிர ஆர்வமுள்ளவர்கள். சக்திக்கு மிஞ்சிய காரியங்களில் ஈடு பட்டு வெற்றியடைவார்கள். எந்தத் துறையில் ஈடுபட் டாலும் ஒரு சர்வாதிகாரி யைப்போல் செயல்படுவார் கள். துணிச்சலும் தன்னம்பிக் கையும் அதிகம் காணப் படும். ஸ்திரமான சுகவாழ்வு வாழ்வார்கள். ஸ்திர சொத்துகளின் சேர்க்கை அதிகமிருக்கும். ஆடம்பரமான வீடு, வாகன யோகமுண்டு. சம யோசிதபுத்தி, கட்டளையிட்டுப் பேசும் திறன், மேதாவித்தனம் நிரம்பியவர்கள். முதுமையி லும் கம்பீரமான இளமையுடன் இருப்பார்கள். சுய ஜாதகத்தில் செவ்வாயும் சுக்கிரனும் பலம்குறைந்தால் எதிர்காலம் பற்றி பய மில்லாதவர்கள். சுய இன்பத்திற்காக சொத்து சுகங்களை இழப்பார்கள். காதல், காமத்திற்கு காரக கிரகமான சுக்கிரன் அதற்கு தைரியத் தைத் தரும். செவ்வாயின் சம்பந்தம் பெற்றால் நெறியில்லாத வாழ்க்கை வாழ்வார்கள். பலதார யோகமுண்டு. பாலியல் நோயுண்டு. வாழ்க்கை முழுவதும் குடியும், குடித்தனமுமாக இருப்பார்கள்.

பரிகாரம்

வெள்ளிக்கிழமை செவ்வாய் ஓரையில் சர பேஸ்வரரை வழிபடவேண்டும்.

(தொடரும்)

செல்: 98652 20406

bala161222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe