Advertisment

ஒளிமயமான எதிர்காலத்துக்கு எண்ணியல் பரிகாரங்கள்! (5) பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/digital-solutions-bright-future-5-prasanna-astrologer-i-anandhi

பிறவி எண்- 5

புதனின் ஆதிக்கம்பெற்ற 5-ஆம் எண் வசீகரம் நிறைந்தது. அழகு, அறிவு, ராஜதந்திரம், நிபுணத்துவம் என சகல வல்லமையும் நிறைந்த எண். பார்த்த மாத்திரத்தில் ஒருவரை எடைபோடுவதில் வல்லவர்கள். நினைக் கும் காரியங்களை புத்திய சாதுர்யத்தால் சாதிப்பதில் கைதேர்ந்தவர்கள். காதல் மன்னன் ஜெமினிகணேசனுக்கு இணையாக காதல் பாடம் கற்பிப்பவர்கள். அறிவுசார்ந்த ஆலோசனை வழங்கி பலரை வழிநடத்தும் திறமைகொண்டவர்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.

Advertisment

ஜோதிடம், வங்கிப்பணி, ஆசிரியர் பணி, தொழில், வியாபாரத்தில் ஆர்வம் அதிகம். திறமையான பேச்சாளிகள். எழுத்தாளர் பணியில் இவர்கள் நன்கு பிரகாசிப்பார்கள். அரசியல்துறையிலும் அதிர்ஷ்டம் உடையவர்கள். இவர்கள் எந்த வியாபாரமும் செய்யலாம். பொதுஜன ஆதரவுண்டு.

பிறவி எண்- 5, விதி எண்- 1

புதன் மற்றும் சூரியனின் ஆதிக்கம் கலந்த புதாதித்ய யோகம் நிறைந்த எண்.

ஜாதகரீதியாக சூரியனும் புதனும் பலம் பெற்றால் புத்திக்கூர்மை, விவேகம் நிறைந்த வர்கள். முன்னோர்வழி குலத்தொழிலைச் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை, முறையான திட்டமிடுதல்மூலம் அனைத்துவிதமான நன்மைகளையும் அடைவார்கள். தன் சுயமுயற்சியால் வாழ்க்கையில் முன்னேறு வார்கள். அதிகார வர்க்கத்தின் தொடர்பு டையவர்கள். தொட்டது துலங்கும். நல்ல சந்தர்ப்பம், வாய்ப்புகள் தேடிவரும். தொழிலுக்கு அரசு ஆதரவுண்டு. பூர்வீக சொத்தால் மிகுதியான பலனுண்டு. பெரிய அந்தஸ்து, அதிகாரம் நிறைந்த பதவியில் இருப்பார்கள். எந்த படிப்பறிவும் இல்லாத இந்த அமைப்பினர் பலர் பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டு சாதனையாளர் பட்டியலில் இடம்பெறுகிறார் கள். ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் படித்தவர் களுக்குக்கூட முழுமையாக ஆங்கிலம் பேசவோ, எழுதவோ தெரியாது. ஆனால் அரசாங்கப் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத இவர்களில் பலர் இலக்கணப் பிழையில்லாமல் தெளிவாக ஆங்கிலம் எழுதுவார்கள்; பேசுவார்கள். உள்ளுணர்வு நிரம்பியவர்கள்.

புதனும், சூரியனும் சுய ஜாதகத்தில் அசுபத் தன்மையுடன் செயல்பட்டால், கிடைக்கும் சந்தர்ப்பத்தையும், வாய்ப்பையும் பயன்படுத்தத் தெரியாதவர்கள். பிறரால் ஏமாற்றப்படுவார்கள். அடிப்படைக் கல்வி ஞானம்கூட இருக்காது. குழந்தைகளால் மனக்கசப்பு இருக்கும். சுயமாக சிந்திக்கும் திறனும், முடிவெடுக்கும் திறனும் இல்லாதவர்கள்.

பரிகாரம்

தினமும் ஆதித்ய ஹ்ருதயம் கேட்க வேண்டும் அல்லது படிக்கவேண்டும்.

பிறவி எண்- 5, விதி எண்- 2

Advertisment

புதன் மற்றும் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் புதனும் சந்தரனும் பலம்பெற்றால் வாழ்க்கை தெளிந்த நீரோடைபோல் இருக்கும். பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை உணரும் வலிமையுண்டு. கடினமான விடாமுயற்சி உள்ளவராக இருப்பார்கள். பகலிரவு பாராமல் உழைத்து அனைத்து வசதி களையும் தேடிக்கொள்பவர்கள். வாய் ஜாலம் நிறைந்தவர்கள். தன் பேச்சுத் திறமையால் அனைவரையும் கவர்ந்து பொருளீட்டுவார்கள். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும்

பிறவி எண்- 5

புதனின் ஆதிக்கம்பெற்ற 5-ஆம் எண் வசீகரம் நிறைந்தது. அழகு, அறிவு, ராஜதந்திரம், நிபுணத்துவம் என சகல வல்லமையும் நிறைந்த எண். பார்த்த மாத்திரத்தில் ஒருவரை எடைபோடுவதில் வல்லவர்கள். நினைக் கும் காரியங்களை புத்திய சாதுர்யத்தால் சாதிப்பதில் கைதேர்ந்தவர்கள். காதல் மன்னன் ஜெமினிகணேசனுக்கு இணையாக காதல் பாடம் கற்பிப்பவர்கள். அறிவுசார்ந்த ஆலோசனை வழங்கி பலரை வழிநடத்தும் திறமைகொண்டவர்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.

Advertisment

ஜோதிடம், வங்கிப்பணி, ஆசிரியர் பணி, தொழில், வியாபாரத்தில் ஆர்வம் அதிகம். திறமையான பேச்சாளிகள். எழுத்தாளர் பணியில் இவர்கள் நன்கு பிரகாசிப்பார்கள். அரசியல்துறையிலும் அதிர்ஷ்டம் உடையவர்கள். இவர்கள் எந்த வியாபாரமும் செய்யலாம். பொதுஜன ஆதரவுண்டு.

பிறவி எண்- 5, விதி எண்- 1

புதன் மற்றும் சூரியனின் ஆதிக்கம் கலந்த புதாதித்ய யோகம் நிறைந்த எண்.

ஜாதகரீதியாக சூரியனும் புதனும் பலம் பெற்றால் புத்திக்கூர்மை, விவேகம் நிறைந்த வர்கள். முன்னோர்வழி குலத்தொழிலைச் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை, முறையான திட்டமிடுதல்மூலம் அனைத்துவிதமான நன்மைகளையும் அடைவார்கள். தன் சுயமுயற்சியால் வாழ்க்கையில் முன்னேறு வார்கள். அதிகார வர்க்கத்தின் தொடர்பு டையவர்கள். தொட்டது துலங்கும். நல்ல சந்தர்ப்பம், வாய்ப்புகள் தேடிவரும். தொழிலுக்கு அரசு ஆதரவுண்டு. பூர்வீக சொத்தால் மிகுதியான பலனுண்டு. பெரிய அந்தஸ்து, அதிகாரம் நிறைந்த பதவியில் இருப்பார்கள். எந்த படிப்பறிவும் இல்லாத இந்த அமைப்பினர் பலர் பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டு சாதனையாளர் பட்டியலில் இடம்பெறுகிறார் கள். ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் படித்தவர் களுக்குக்கூட முழுமையாக ஆங்கிலம் பேசவோ, எழுதவோ தெரியாது. ஆனால் அரசாங்கப் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத இவர்களில் பலர் இலக்கணப் பிழையில்லாமல் தெளிவாக ஆங்கிலம் எழுதுவார்கள்; பேசுவார்கள். உள்ளுணர்வு நிரம்பியவர்கள்.

புதனும், சூரியனும் சுய ஜாதகத்தில் அசுபத் தன்மையுடன் செயல்பட்டால், கிடைக்கும் சந்தர்ப்பத்தையும், வாய்ப்பையும் பயன்படுத்தத் தெரியாதவர்கள். பிறரால் ஏமாற்றப்படுவார்கள். அடிப்படைக் கல்வி ஞானம்கூட இருக்காது. குழந்தைகளால் மனக்கசப்பு இருக்கும். சுயமாக சிந்திக்கும் திறனும், முடிவெடுக்கும் திறனும் இல்லாதவர்கள்.

பரிகாரம்

தினமும் ஆதித்ய ஹ்ருதயம் கேட்க வேண்டும் அல்லது படிக்கவேண்டும்.

பிறவி எண்- 5, விதி எண்- 2

Advertisment

புதன் மற்றும் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் புதனும் சந்தரனும் பலம்பெற்றால் வாழ்க்கை தெளிந்த நீரோடைபோல் இருக்கும். பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை உணரும் வலிமையுண்டு. கடினமான விடாமுயற்சி உள்ளவராக இருப்பார்கள். பகலிரவு பாராமல் உழைத்து அனைத்து வசதி களையும் தேடிக்கொள்பவர்கள். வாய் ஜாலம் நிறைந்தவர்கள். தன் பேச்சுத் திறமையால் அனைவரையும் கவர்ந்து பொருளீட்டுவார்கள். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் பேசியே சரிசெய்துவிடும் திறமையுண்டு. சந்திரனைப் போல வருமானம் நிலையற்றதாக இருந்தாலும், கிடைக்கும் பொருளை கவனமாகப் பாதுகாத்துப் பயன்படுத்துவார்கள். கூட்டுக் குடும்பமாக இருந்து தொழில் முயற்சியில் வெற்றி பெற்றவர்களுடைய ஜாதகத்தில் இந்த அமைப்பிருக்கும். உற்றார்- உறவினர் களின் பாராட்டும் ஆதரவுமுண்டு.

சுய ஜாதகத்தில் புதனும் சந்திரனும் பலம்குறைந்தால் மன சஞ்சலம் மிகுந்தவர்கள். வெளித் தோற்றத்திற்கு நிம்மதியாக வாழ்பவர்கள்போல் இருந்தாலும் மனதில் துக்கம், துயரம் நிறைந்தவர்கள். வாழ்க்கை போராட்டமானதாக இருக்கும். சிலருக்கு முறையற்ற காதல் விவகாரங்களால் வம்பு, வழக்குண்டு. தோல் வியாதி, அலர்ஜி தொல்லை யுண்டு. வாழ்க்கையின் பிற்பகுதியில் செல்வம் சேரும்.

பரிகாரம்

திங்கட்கிழமை சிவனுக்குப் பாலா பிஷேகம் செய்து வழிபடவேண்டும்.

பிறவி எண்- 5, விதி எண்- 3

புதன் மற்றும் குருவின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் புதன், குரு பலம்பெற்றால் நல்ல கல்வி கற்று உயர்ந்த உத்தியோகம், பதவியில் இருப்பார்கள். இவர்களைவிட இவர்களின் குழந்தைகள் கல்வியில் படு சுட்டியாக- கெட்டியாக இருப் பார்கள். குழந்தையின் கல்வி ஞானத் திற்கும் தாய்- தந்தையின் கல்வி ஞானத்திற்கும் சம்பந்தமிருக்காது. இன்சூரன்ஸ், உயில் சொத்து, போட்டி, பந்தய வெற்றி போன்ற அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். அனைவரையும் கவரும் நல்ல குணமுண்டு. பெரிய பதவிகளைப் பெறுவார்கள். சிறிய முயற்சி செய்தால்கூட எல்லாம் தானாகவே சுபமாக நடந்துமுடியும். ஆழ்ந்த புலமையும், தொழில் ஞானமும், தெளிவான உள்ளுணர்வும், மனநிறைவும் நிரம்பியவர்கள். வாழ்வின் முன்னேற்றம், தொழில் தொடர்பான சிந்தனை, சுயமுயற்சி எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும். பிறரின் எப்படிப்பட்ட கடுமையான பிரச்சினைக்கும் முடிவு கூறுவார்கள். அரசியல் ஆதாய முண்டு. சமுதாயத்தில் நன்மதிப்பைப் பெறுவார்கள்.

ss

சுய ஜாதகத்தில் புதனும் குருவும் பலம்குறைந்தால், பலருக்கு நல்ல உயர்கல்வி அமைந்தாலும் திறமைக்கேற்ற ஊதியம் கிடைக்காது. இதனை நினைத்து வாழ்க்கையில் விரக்தியும் வேதனையும் அடைகின்றனர். எதிர்காலம் பற்றிய கவலை, பயம் இருந்துகொண்டே இருக்கும். இளம்பருவத்தில் மிகுதியான கஷ்டத்தை அனுபவித்திருந்தால் வாலிப வயதில் சுதாரித்துக்கொண்டு வாழ்வார்கள். ராஜயோகம், தியானம் ஆகியவற்றில் மிகுந்த நம்பிக்கையுண்டு.

பரிகாரம்

முறையான குலதெய்வ வழிபாடு வளர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

பிறவி எண்- 5, விதி எண்- 4

புதன் மற்றும் ராகுவின் ஆதிக்கம் நிறைந்த எண். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற பழமொழி இவர்களுக்கு மிகப் பொருந்தும். துரும்பையும், தூணாக்க வேண்டுமென்ற ஆர்வமுண்டு. முத்தாய்ப்பான முயற்சியுடைய வர்கள். காலில் சக்கரம் கட்டிக்கொண்டு உழைப்பவர்கள். துணிவு மிகுந்தவர்கள். எதிரிகளை வெல்லும் தைரியமுண்டு. தொழில் ஆர்வம் நிறைந்தவர்கள். ஆர்வமிகுதியால் உலகிற்கு ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொழிலை அறிமுகப்படுத்துபவர்கள். எல்லாவிதமான தொழில் ஞானம் இருந்தாலும், நிலையற்ற எண்ணத்தால் எதையும் சாதிக்கமுடியாத சூழ்நிலைக்குத் தள்ளப் படுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் செய்து வாழ்க்கையைத் தொலைத்தவர்களாக இருப்பார்கள். தொழில் ஞானம் நிறைந்தவர்களாக இருந்தாலும் பல தொழில் செய்து நட்டப்பட்டவர் என்பதால், பலரின் ஏளனத்தால் தனிமையை விரும்புவார்கள் அல்லது கடன், எதிரி தொல்லைக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்வார்கள். இந்த அமைப்புள்ள பலர் கணிதப் பாடத்திற்கு பயந்து பள்ளி, கல்லூரி வாழ்க்கையை வெறுப்பார்கள். சிலர் பலமுறை பெயரில் திருத்தம் செய்வார்கள். சிலருக்கு ஜாமின், காசோலை வழக்கு இருக்கும். சிலருக்கு பாகப்பிரிவினை வம்பு அல்லது முறையான ஆவணங்கள் இல்லாத சொத்து வழக்கு, அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு உண்டு. மனக்கவலை, மனச்சோர்வு, பய உணர்வு, அரிப்பு நோய் உண்டு.

பரிகாரம்

புதன்கிழமை ராகு வேளையில் காளியை வழிபடவேண்டும்.

பிறவி எண்- 5, விதி எண்- 5

தனித்த புதனின் ஆதிக்கம் நிறைந்த எண். ஜாதகத்தில் புதன் வலிமை பெற்றவர்கள் அழகான தோற்றமுடையவர்கள். இவர்களின் பேச்சிலும் நடத்தையிலும் ஒருவித ஈர்ப்புச்சத்தி உண்டு. மிதமிஞ்சிய புத்திசாலிகள். நல்ல கல்வி ஞானமுண்டு. மற்றவர்களை நம்புவதைக் காட்டிலும் தன் கையே தனக்குதவும் என்ற எண்ணமுண்டு. எல்லா துறையிலும் வேகம் மற்றும் விவேகத்துடன் செயலாற்றுபவர்கள். பிறரைத் தூண்டிவிட்டு வேகமாக எந்த வேலை யையும் வாங்கிவிடுவார்கள். உடலுழைப்பைவிட மூளை உழைப்பில் சிறந்து விளங்குவார்கள். நயமாக வும், நகைச்சுவையோடும் பேசி அனைவரையும் ஈர்க்கும் தன்மை கொண்ட வர்கள். தன் காரியம் நடக்க எதையும் செய்வார் கள். பொய்பேச அஞ்சாத வர்கள். தனிமை விரும்பிகள். பழமையை வெறுப்பவர்கள். புதுமையை விரும்புபவர் கள். திருமண விஷயத்தில் அவசரப்படக் கூடியவர்கள். பெரும்பாலும் காதல் திருமணம் செய்து பிரச்சினையில் உழல்பவர்கள்.

சுய ஜாதகத்தில் புதன் வலிமை யிழந்தவர்கள் இளகிய மனதால் எல்லாரையும் எளிதில் நம்பிக் கொடுத்துவிட்டு பின் யோசிப்பார்கள். நிறைய நண்பர்கள் இருப்பார்கள். புதுப்புது நண்பர்கள் கிடைத்துக்கொண்டே இருப்பார்கள். நல்லவர்களையும், கெட்டவர்களையும் எளிதில் இனம் காணத் தெரியாது. சுயமாக சிந்திக்கும் திறனிருக்காது. நண்பர்களை சார்ந்தே வாழ விரும்புவார்கள். நண்பர்களால் இவர்களுக்குப் பாதகமே மிகுதி.

பரிகாரம்

புதன்கிழமை மகாவிஷ்ணுவை வழிபடவேண்டும்.

பிறவி எண்- 5, விதி எண்- 6

புதன் மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த எண். ஜாதகத்தில் புதனும் சுக்கிரனும் வலிமைபெற்றால் அழகும் இளமையும் கவர்ச்சியும் நிரம்பப் பெற்றவர்கள். தாங்கள் உடுத்தும் உடைகள் மற்றும் அணியும் ஆபரணங்கள் மிகவும் மதிப்பாகத் தெரியவேண்டுமென்று விரும்புவார்கள். இவர்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட எந்தத் துறையிலும், தங்களது திறமையின்மூலம் விரைந்து உச்சியை அடைந்துவிடவேண்டுமென்று துடிப்பார்கள். கடும் உழைப்பால் புகழையும், பெருஞ்செல்வத்தையும் மிகச் சிறப்பாகத் தேடிக்கொள்வார்கள். மகிழ்ச்சிகாக தாராளமாக செலவு செய்யத் தயங்காதவர்கள். ஜோதிடம், வைத்தியம், நடிப்பு போன்ற கலைகளில் ஈடுபாடு உண்டாகும். பல துறைகளில் தேர்ச்சிபெற்றவர்கள். ஒவ்வொரு நிமிடமும் புதுப்புது யோசனைகள் இவர்களுக்குத் வந்துகொண்டே இருக்கும். பெரும்பாலும் பூர்வீக குலத்தொழிலை மட்டுமே செய்ய விரும்புவார்கள். தரம் நிரந்தரமாக இருக்கும். எதிலும் வேகம் கலந்த விவேகத்துடன் செயல்படுவார்கள். அதிர்ஷ்டமும் பேரதிர்ஷடமும் ஒருங்கே இணையப் பெற்றவர்கள். எதிர்பாராத திடீர் திருப்பமுண்டு. ஜாதகருக்கு முயற்சியால் வளமான வாழ்வு நிச்சயம். எந்தவிதமான லாபம் வந்தாலும் அதனை சேமித்து வைத்துக்கொள்ளவார்கள். சிறிய முதலீட்டில் பெரிய லாபம் கிடைக்கும். காதல் திருமணம் அல்லது நெருங்கிய ரத்த பந்த உறவில் திருமணம் நடக்கும்.

சுய ஜாதகத்தில் புதனும் சுக்கிரனும் பலம்குறைந்தால் தவறான நட்பால், காதல் திருமணத்தால் மனஸ்தாபம் உண்டு. திருமணமான தம்பதிகளுக்கு கருத்து வேறுபாடு, பிரிவினை இருக்கும். மன நிறைவான மண வாழ்க்கை அமையாது. சில தம்பதிகள் தொழில், உத்தியோகம் நிமித்தமாக ஆளுக்கொரு ஊரில் அல்லது நாட்டில் வாழ்வார்கள். ஒருசிலருக்குத் திருமணமே நடக்காது. சதா எதையாவது நினைத்துக் கவலைப்பட்டு நோயை வளர்ப்பவர்கள். நோய்க்கு வைத்தியம் செய்து கடன் உருவாகும். மனக் கட்டுப்பாடு இல்லாதவர்கள். அதிக முதலீட்டில் சொந்தத் தொழில் செய்யக்கூடாது. அடிமைத் தொழிலே சிறப்பு.

பரிகாரம்

புதன்கிழமை லட்சுமி நரசிம்மரை வழிபடுவது சிறப்பு.

பிறவி எண்- 5, விதி எண்- 7

புதன் மற்றும் கேதுவின் ஆதிக்கம் கலந்த எண். சுய ஜாதகத்தில் புதன், கேது சம்பந்தமில்லாமல் இருப்பது சிறப்பு.

புகழ், அந்தஸ்து, சுயகௌரவம் இவர்களது தாரக மந்திரம். அறநெறியில் விருப்பமுடையவர்கள். உண்மை விளம்பிகள். கடமை, கண்ணியம், கட்டுபாடு மிக்கவர்கள். பழைய சாஸ்திரங்கள், பழக்கங்கள் ஆகியவற்றின்மீது மிகவும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள். எனவே, கட்டுப்பாடுகளை மீறமாட்டார்கள். இவர்கள் பேசும்போது இறைவன், விதி, நியாயம், மனசாட்சி, நேர்மை போன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவார்கள். அன்புக்கு அடிபணிவார்கள். அதிகாரத்திற்கும், ஆணவத்திற்கும் அடிபணிய மறுப்பார்கள். பிறரிடம் யாசகம்பெற விரும்பாதவர்கள். பிறருக்கு உபதேசம் செய்யக்கூடிய ஆற்றலை மிகைப்படுத்தும் எண். புதிய நாகரிக முன்னேற்றங்களைக் குறைகூறுவார்கள். குறுக்குவழியில் வாழ்க்கையை உயர்த்திக்கொள்ளத் தயங்குவார்கள். இவர்கள் அதிகமாகச் சிந்தனைகளில் ஈடுபடுவதால் மன அமைதிக் குறைவு, மன இறுக்கம் (டென்ஷன்) மனச்சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள். நரம்பு பலவீனம், பக்கவாதம், கால்- கை வலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே இவர்கள் நல்ல தூக்கம், நல்ல உணவு ஆகியவற்றைக் கடைப்பிடித்தால், பல நோய்களைத் தவிர்த்துவிடலாம்.

பரிகாரம்

புதன்கிழமை எமகண்ட நேரத்தில் விநாயகரை வழிபடுவது நல்லது.

பிறவி எண்- 5, விதி எண்- 8

புதன் மற்றும் சனியின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் புதனும் சனியும் பலம்பெற்றால் முன்னோர்களைப் பின்பற்றி நடப்பவர்கள். முன்னோர்களின் நல்லாசி பெற்றவர்கள். முறையாக பித்ரு வழிபாடு செய்பவர்கள். ஆழ்ந்த மதப்பற்றுடையவர்கள். தேசபக்தி நிறைந்த வர்கள். தன்னை நம்பி வருவோர்க்கு நிச்சயம் உதவிசெய்வார்கள். அறிவைத் தூண்டும் தொழில்களான ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், தத்துவப் பேராசிரியர்களாக இருப்பார்கள். மேலாளர்கள், மந்திரி, கௌரவமான தொழில், நீதிபதிகள், அரசுத் துறை, நீதித்துறை, வங்கி அதிகாரிகள், ஆலோசகர் பதவி, எழுத்துத் துறை, தர்ம ஸ்தாபனங்கள், ஊர்த்தலைமை போன்றவற்றில் கௌரவப் பதவி வகிப்பார்கள். அரசியல் ஈடுபாடும் உண்டு. அதில் நன்கு பிரகாசிப்பார்கள். நல்ல அரசு உத்தியோகங்கள் கிடைக்கும். இவர்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முன்னேற்ற மடைவார்கள்.

புதனும், சனியும் பலம்குறைந்தால் சொல்புத்தியும் இருக்காது; சுயபுத்தியும் இருக்காது. கடுமையான உழைப்பாளிகளான இவர்களின் உழைப்பை மற்றவர்கள் எளிதாகப் பயன்படுத்திக்கொண்டு, அவர்கள் நல்ல பெயர் பெறுவார்கள். இந்த எண்ணின் வலிமை குறைந்தால் தன்னம்பிக்கை குறையும். தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி முன்னேறத் தெரியாது முடங்கிக் கிடப்பார்கள் அல்லது திறமையை வெளிப்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் அமையாது. இந்த எண்களில் பிறந்த பல திறமைசாலிகள் வாழ்க்கையில் முன்னேறாத தற்கு இதுதான் காரணம். கடன்கள், எதிரிகளால் பாதிப்பு நிச்சயம் ஏற்படும்.

பரிகாரம்

புதன்கிழமை சனி ஓரையில் சக்கரத் தாழ்வாரை வழிபடவும்.

பிறவி எண்- 5, விதி எண்- 9

புதன் மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் கலந்த எண். சுய ஜாதத்தில் புதன், செவ்வாய் சம்பந்தமில்லாமல் இருப்பது சிறப்பு. முயற்சியால், உழைப்பால் உயரவிரும்பும் உத்தமர்கள். ஜாதகர் தைரியமானவர். பலசாலி. வீரியமுடையவர். எண்ணியதை ஈடேற்றும் திறமைசாலிகள். மற்றவர்களைவிடத் தாங்கள்தான் அறிவிலும், அதிகாரத்திலும் உயர்ந்து விளங்கவேண்டுமென்ற எண்ணமும், அதற்கேற்ற உழைப்புமுண்டு. பிறரைக் கட்டுப்படுத்தி, தனது ஆதிக்கத் தைச் செலுத்தவேண்டும் என்னும் தீவிர எண்ணங்களும் உண்டு. இவர்கள் சுதந்திரமாக வாழ விரும்புவார்கள். சொத்துகள் விஷயத்தில் உடன்பிறந்த வர்களுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு எதார்த்தமாக இருப்பார்கள். பார்ப்பதற்குக் கடுமையானவர்களாகத் தோன்றினாலும், வெள்ளை மனதுடன் அன்பாக மற்றவர்களிடம் பழகுவார்கள். இவர்களுக்கு விவசாயமும், ரியல் எஸ்டேட்டும் ஏற்ற தொழில்கள். சிலருக்கு கடன்தொகை தள்ளுபடியாகும்.

புதன்- புத்தி, விவேகம் நிறைந்த கிரகம். செவ்வாய் முரட்டுத்தனம் நிறைந்த விவேகமற்ற கிரகம். இந்த கிரக எண்கள் நிதானமற்ற, விவேகமற்ற சிந்தனைகளை மிகைப்படுத்துவதால் பலர் தாளமுடியாத பின்விளைவுகளை சந்திக்கிறார்கள். காதல் திருமணம் செய்துகொண்ட பலர் விவகாரத்தை சந்திக்கிறார்கள் அல்லது மன ஆறுதலுக்காக தவறான நட்பில் ஈடுபடுகிறார் கள்.

பரிகாரம்

புதன்கிழமை வீரபத்திரரை வழிபடவும்.

(தொடரும்)

செல்: 98652 20406

bala091222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe