Advertisment
/idhalgal/balajothidam/digbalam

வகிரகங்கள் தங்களது சுற்றுப் பாதையில் சுற்றிக்கொண்டே இருக்கும். ஒருவர் பிறக்கின்றபொழுது ராசி மண்டலத் தில் கிரகங்கள அமைவதை விளக்குவது ஜனன ஜாதகமாகும். ஒருவர் பிறந்த நேரத்தில் கிரகங்கள் பலம்பெற்று இருந் தால் மிகவும் விசேஷமான பலன்களை அடையமுடியும்.

Advertisment

கிரகங்கள் ஆட்சி, உச்சம் என இருந்தா லும், இதைவிட ஒரு சிறப்பான அமைப் பென்பது திக்பலம் பெறக்கூடிய அமைப் பாகும். திக்பலமென்பது அந்த கிரகம் அமையக்கூடிய அமைப்பை பொருத் திருக்கிறது. திக்பலத்தை ஒரு குறிப்பிட்ட ஸ்தானத்தில் ஒரு குறிப்பிட்ட கிரகம் இருப்பதால் ஏற்படக்கூடிய பலன் என கூறலாம்.

dd

நவகிரகங்களில் சூரியன், செவ்வாய், லக்னத்திற்கு பத்தாம் வீட்டில் இருந்தால் திக்பலம் பெறுகின்றனர். ஜென்ம லக்னத்தில் 4-ல் சந்திரன் சுக்கிரன் அமையப்பெற்றால் திக்பலம் பெறுகிறது. ஜென்ம லக்னத்தில் குரு, புதன் அமையப் பெற்றால் திக்பலம் பெறுகிறது. சனி ஜென்ம லக்னத்திற்கு ஏழாம் வீட

வகிரகங்கள் தங்களது சுற்றுப் பாதையில் சுற்றிக்கொண்டே இருக்கும். ஒருவர் பிறக்கின்றபொழுது ராசி மண்டலத் தில் கிரகங்கள அமைவதை விளக்குவது ஜனன ஜாதகமாகும். ஒருவர் பிறந்த நேரத்தில் கிரகங்கள் பலம்பெற்று இருந் தால் மிகவும் விசேஷமான பலன்களை அடையமுடியும்.

Advertisment

கிரகங்கள் ஆட்சி, உச்சம் என இருந்தா லும், இதைவிட ஒரு சிறப்பான அமைப் பென்பது திக்பலம் பெறக்கூடிய அமைப் பாகும். திக்பலமென்பது அந்த கிரகம் அமையக்கூடிய அமைப்பை பொருத் திருக்கிறது. திக்பலத்தை ஒரு குறிப்பிட்ட ஸ்தானத்தில் ஒரு குறிப்பிட்ட கிரகம் இருப்பதால் ஏற்படக்கூடிய பலன் என கூறலாம்.

dd

நவகிரகங்களில் சூரியன், செவ்வாய், லக்னத்திற்கு பத்தாம் வீட்டில் இருந்தால் திக்பலம் பெறுகின்றனர். ஜென்ம லக்னத்தில் 4-ல் சந்திரன் சுக்கிரன் அமையப்பெற்றால் திக்பலம் பெறுகிறது. ஜென்ம லக்னத்தில் குரு, புதன் அமையப் பெற்றால் திக்பலம் பெறுகிறது. சனி ஜென்ம லக்னத்திற்கு ஏழாம் வீட்டில் அமையப்பெற்றால் திக்பலம் அடைகிறது.

Advertisment

ஒரு கிரகம் திக்பலம் பெறக்கூடிய ஸ்தானத்தில் ஆட்சி, உச்சம் பெற்றிருந் தால் அந்த கிரகமானது மிகவும் அனுகூல மான பலன்களைத் தருகிறது. பொதுவாக ஒரு கிரகம் திக்பலம் பெற்றாலே அந்த கிரகம் ஆட்சி, உச்சம் பெற்றதைவிட ஒரு சிறப்பான பலனைத் தரும், அதிலும் திக்பலம் பெற்ற ஸ்தானத்தில் ஆட்சியோ- உச்சமோ பெற்றிருந்தால் மேலும் வலிமையான பலன்களை தருகிறது.

குறிப்பாக மேஷ லக்னத்தில் பிறந்த வர்களுக்கு செவ்வாய் பத்தில்- அதாவது மகர ராசியில் அமையப்பெற்றால் அந்த கிரகம் உச்சம் பெறுவதால் உச்ச பலத்துடன் திக்பலமும் பெறுவதால் மிகப்பெரிய ஒரு உயர் வினை அடையக்கூடிய யோகம் உண்டாகிறது. செவ்வாய் அதிகாரத்தைக் குறிக்கக்கூடிய கிரகம் என்பதால் மேற்குறிப்பிட்ட அமைப்பில் அமையப்பெற்றவர்களுக்கு ஒரு மிகப்பெரிய உயர் பதவியை வைக்கக்கூடிய யோகம்- அதிலும் குறிப்பாக அரசுத் துறையில் உயர் பதவியில் வைக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டாகிறது.

செவ்வாய் பத்தில் அமையப்பெற்றாலே பதவி யோகம், அந்தஸ்து யோகம், உயர்பதவி வகிக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும், அதிலும் குறிப்பாக மேஷ லக்னத்திற்கு பத்தில் செவ்வாய் அமைவதும், கடக லக்னத் திற்கு செவ்வாய் பத்தில் அமைவதும், கும்ப லக்னத்திற்கு செவ்வாய் பத்தில் அமைவதும் மிகவும் அற்புதமான அமைப்பாகும். குறிப்பாக 10-ல் செவ்வாய் அமையப்பெறுவது அந்த செவ்வாய் தசை நடைபெறுகின்றபொழுது மிக உயரிய பதவியை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டாகிறது.

அதுபோல சூரியன் பத்தில் அமைவது மிகவும் சிறப்பான அமைப்பாகும். பத்தில் சூரியன் திக்பலம் ஆகும். சூரியன் அரச கிரகம் என்பதால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் அனுகூலங்கள் அடையக்கூடிய வாய்ப்பை உண்டாக்கும். அதிலும் குறிப்பாக கடக லக்னத்திற்கு பத்தில் சூரியன் உச்சம்பெற்றா லும், விருச்சிக லக்னத்திற்கு பத்தில் சூரியன் ஆட்சிபெற்றாலும் அந்த ஜாதகர் ஒரு மிக உயரிய பதவியை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டாகிறது. மேற்கூரிய நிலையில் சூரியன் அமையப்பெற்றவர்கள் மிக உயரிய பதவிகளை அரசு, அரசு சார்ந்த துறைகளில் வகிக்கும் யோகம் உண்டாகிறது.

புதன் குரு ஜென்ம லக்னத்தில் அமைவது மிகவும் அற்புதமான அமைப்பாகும். புதன் குரு ஆட்சியோ உச்சமோ பெற்றிருந்தால் அந்த ஜாதகர் சமுதாயத்தில் ஒரு உயரிய அந்தஸ்தை அடையக்கூடிய யோகம் உண்டாகும், மிதுனம், கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ஜென்ம லக்னத் தில் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் கற்ற கல்வியால் ஒரு சமுதாயத்தில் மிகப்பெரிய ஒரு உயர்வினை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகிறது.

அதுபோல கடகம், தனுசு, மீன லக்னத் தில் பிறந்தவர்களுக்கு லக்னத்தில் குரு அமையப்பெற்றால் ஒரு கௌரவமான நிலை, பலருக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடிய அமைப்பு உண்டாகிறது.

அதுபோல ஜென்ம லக்னத்திற்கு நான்காம் வீட்டில் சந்திரன், சுக்கிரன் அமைவது திக்பலம் அமைப்பென்பதால் நான்கில் சுக்கிரன, சந்திரன் அமையப்பெற்று ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகருக்கு செல்வம், செல்வாக்கு, சுகவாழ்வு, சொகுசு வாழ்வு, நவீனகரமான பொருட்களை அனுபவிக்ககூடிய யோகங்கள் உண்டாகிறது.

குறிப்பாக திக்பலம் பெற்ற கிரகங் களுடைய தசா புக்தி நடைபெறுகின்றபொழுது அந்த கிரகத்துடைய பலனை முழுமையாக அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகிறது.

குறிப்பாக ஏழில் சனி அமைவது திருமணத்தை தாமதப்படுத்தினாலும், நீண்ட ஆயுளை உண்டாக்கும். ஏழில் சனி அமைவது திக்பலம் என்பதால் திடகாத்திரமான உடல் அமைப்பை உண்டாக்கும். மேஷம் கடகம் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஏழில் சனி அமையப்பெற்றிருந்தால் ஆட்சி, உச்சம் பெறுமென்பதால் மிகச் சிறப்பான பலனை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும்.

சனி திக்பலம் பெற்றவர்களுக்கு நீண்ட ஆயுள், செல்வம், செல்வாக்கு, வேலை யாட்களை சிறப்பாகக் கையாளக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். திக்பலம் பெற்ற கிரகங்கள் வக்ரம் பெறாமல் இருப்பது மிகவும் சிறப்பு.

bala020623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe