"லட்சுமி இருந்தால் சரஸ்வதி இருக்க மாட்டாள்; சரஸ்வதி இருக்குமிடத்தில் லட்சுமி தங்கமாட்டாள்' என்று சொல்வழக் குண்டு. அதாவது கல்வியிருந்தால் செல்வமிருக் காது. செல்வமிருந்தால் அறிவு குறைந்திருக் கும் என்பர்.
ஜோதிடத்தில், ஒரு கிரகம் உச்சமடையும் வீட்டில் இன்னொரு கிரகம் நீசமடையும்.
அதேபோல் ஒரு கிரகம் நீசமடையும் வீட்டில் மற்ற கிரகம் உச்சமடையும். ராசிகளில் உச்சம், நீசமடையும் கிரகங்களைப் பார்க்கலாம்.
மேஷத்தில் சூரியன் உச்சமடைவார்; சனி நீசமடைவார்.
கடகத்தில் குரு உச்சமும், செவ்வாய் நீசமும் அடைவார்கள்.
துலாத்தில் சனி உச்சம்; சூரியன் நீசம்.
மகரத்தில் செவ்வாய் உச்சம்; குரு நீசம்.
மீனத்தில் சுக்கிரன் உச்சம்; புதன் நீசம்.
கன்னியில் புதன் உச்சம்; சுக்கிரன் நீசம்.
இப்போது யோசியுங்கள். ஒரு கிரகம் உச்சமாகி அது சார்ந்த நல்ல பலன்களைக் கொடுக்கும்போது, அதே இடத்தில் நீசமாகும் கிரகம் அதன் சுபாவ காரகப் பலன்களைக் கெடச் செய்கிறது.
ஜாதகத்தில் எந்த கிரகம் உச்சமாகியுள் ளதோ, அதன் பலன்கள் எளிதாகக் கை கூடுவதையும், அதே இடத்தில் நீசமாகும் கிரகப் பலன்கள் மிக பாதிப்படைவதையும் நீங்களே உணரலாம். இதற்கு லக்னம், ராசி சம்பந்தம் தேவையில்லை. கிரக உச்ச, நீசப் பலன்கள் மட்டுமே பரிசீ-க்கப்படுகின்றன.
சூரியன்
ஒருவர் ஜாதகத்தில் சூரியன் உச்சமடைந்திருந்தால், ஒரு கம்பீரம், தேஜஸ், ஆளுமைத் தன்மை, அதிகாரம், அரசு, அரசியல் வட்டத் தொடர்பு, அவை சார்ந்த மேன்மை, எல்லாரையும் வேலைவாங்கும் தன்மை, மிடுக்கு, ஆரோக்கியம் பேணுதல், தந்தையின் அனுகூலம், தெய்வபக்தி, பிடிவாதம், தைரியம் என இவற்றில் பல குணங்கள் ஜாதகருக்கு இருக்கும்.
இதே மேஷத்தில், சூரியன் உச்சமாகும் இடத்தில் சனி நீசமடைவார். அதாவது சனி பலமிழந்து இருக்குமிடம். சனியின் காரகங்களில் ஒன்று வேலை செய்ய இயலாத இடம். அதனால் தானோ என்னவோ, சூரியன் உச்சமடைந்த ஜாதகர் களுக்கு வேலை செய்யவே பிடிக்காது; வராது. பிறரை நன்கு வேலைவாங்குவார் கள். தானே இறங்கி ஒரு வேலை செய்ய இயலாது. அது போல் சனியின் இயல்பான அழுக்கு, தூசி, கவலை, கொடூரம், கெட்ட செயல் போன்றவை இவர் களிடம் அண்டாது.
எதையும் மழுப்பிப் பசப்பிப் பேசாமல், சூரியனின் காரகத்துவமான வெளிப் படைத் தன்மையோடு கச்சிதமாகப் பேசுவர். இவர்களின் வாழ்வு நிலை எவ்விதம் இருப்பினும், "எனக்கு இந்த வேலை பிடிக்கலை', "இந்த தொழில் ஒத்து வராது', ரொம்ப வேலை வாங்குகிறார் கள்' என நூறு காரணம் சொல்-, அவர்களுக்குப் பிடிக்காத எதையும் செய்யமாட்டார்கள். இது சூரியன் உச்சம் மட்டுமல்ல; சூரியன் ஆட்சி மற்றும் சுபத்தன்மை வாய்ந்த அமைப்பு கொண்டவர்களும் பொருந்தும், எப்போதும் வாழ்க்கையில ஒரு உறுதிக்கோட்பாடு கொண்டவர்களாகவே இருப்பர். அதி-ருந்து இறங்கி வேலைசெய்ய மாட்டார்கள்.
குரு
கடகத்தில் குரு உச்சமடைவார்; செவ்வாய் நீசமடைவார்.
குரு உச்சமான ஜாதகர்கள் மிகவும் அன்பாக, அணுசரணையாக, அடக்கமாகவே இருப்பர். இவர்களின் செயல்பாடுகள் மிகவும் நேர்மையாக, சட்டத்திற்கு உட்பட்டே அமையும். எதையும் சீர்தூக்கிப் பார்த்து, நியாயமாக நடந்துகொள்வர். இறை நம்பிக்கை மிகுந்தவர்கள். "எல்லாம் இறைவன் செயல்; அவனின்றி அணுவும் அசையாது' என்ற வாழ்வுக் கோட்டைப் பின்பற்றுவர். பிறரைப் பாதுகாப்பதற்காக, தன் கஷ்டத்தையும் பொறுத்துக்கொள்வர். சாந்த குணத்துடன் கண்ணியம் காப்பவர். நீதி நெறி மிகுந்த வாழ்க்கை- நாணயம் உடையவர்.
இதே கடகத்தில் செவ்வாய் நீசமடைவர். எனவே, செவ்வாயின் காரகப் பலன்கள் அங்கு நடக்காதென்பது தெளிவாகிறது. எனவேதான் குரு உச்சமான ஜாதகரை எப்போதும் யாரும் கோபப்படுத்த முடியாது. ஒரு சண்டையெனில் காத தூரம் ஓடிவிடுவர். ரத்தத்தைப் பார்த்தால் மயங்கி விழுந்துவிடுவர். ஆயுதங்களைப் பார்த்தால் அலறி ஓடிவிடுவர். விளையாட்டு மைதானம் அருகேகூட போகமாட்டார்கள். ஏன்- வீட்டில் ஒரு "சுவிட்ச்' போடவோ, "பிளக் பாயின்'டில், "பிளக்'கை மாட்டவோகூட சற்று உதறல் எடுக்கும். தைர்யமிருக்காது. இவர்களை எல்லாரும் "நல்ல மனிதர்தான்; ஆனா ரொம்ப பயந்தாங்கொள்ளி' என்று கே- பேசுவர். குரு உச்சமானவர்கள் நல்லவர் களாக இருப்பார்களேயொழிய, வல்லவர் களாக இருக்கமாட்டார்கள்.
உங்கள் வீட்டில் குரு உச்சமாகி, சற்றே பயப் படும் நிலையில் யாராவது இருந்தால், அவர் களை ஆயுள் முழுவதும் திருச்செந்தூர் முருகனை வழிபடச் சொல்லவும். குரு வழிபட்ட தலமிது.
புதன்
கன்னி ராசியில் புதன் உச்சமடைவார்; சுக்கிரன் நீசமடைவார்.
புதன் ஒரு ஜாதகருக்கு நல்ல புத்தி, அறிவு, கல்வி, பேச்சுத்திறமையைத் தருவார். இவர்கள் வியாபார நுணுக்கம் தெரிந்தவராக இருப்பர். சட்ட விஷயங்களில் மேதையாகத் திகழ்வர். நன்கு கதை, பாடல் எழுதுவர். அருமையாக ஓவியம் வரைவர். கணக்கு சம்பந்த விஷயத்தில் இவர்களை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. ஜோதிட விஷய ஞானம் உள்ளவராக இருப்பர். இவ்விதம் இவர்கள் மிகமிகத் திறமையுடைவர்களாகத் திகழ்வர்.
இதே கன்னி ராசியில், சுக்கிரன் நீசமடை வார். எனவே சுக்கிரனின் காரகப் பலன்கள் அடிபட்டுவிடும். எனவே, புதன் உச்சமான ஜாதகர்கள் "அழகாக தோற்றமளிப்பது எப்படி' என்ற விஷயத்தில் "ஜிரோ மார்க்'தான் வாங்குவர். உடை விஷயத்திலும், அழகுபடுத்திக் கொள்வதிலும், கவர்ச்சியாக கம்பிரமாகத் தோன்றுவதிலும் ஈடுபாடின்றி ஏனோதானோ வென்று இருப்பர். இவருடைய புறத்தோற்ற முதல் ஒப்பீடு, இவரை இத்துணை அறிவு ஜிவியா என நம்பத்தகாதவாறு இருக்கும். பின் இவரின் அறிவு நுட்பத்தை அறிந்தவுடன், "எவ்வளவு புத்திசா-! ஏன் இப்படி இருக்கிறார்' என்று வியக்கச் செய்யும். அறிவுள்ள இடத்தில் அழகுக்கு வேலையில்லை. இவரைச் சுற்றியுள்ள வர்கள் இவரை அழகுபடுத்த முயற்சித்தாலும், இவர் அதற்கெல்லாம் ஒப்புக்கொள்ளாமல், கொஞ்சம் அசமந்தம் மாதிரி தோற்றமளிப்பார்.
எனவே, இவரைச் சுற்றியுள்ள நலம் விரும்பிகள் திருப்பதி பெருமாளையும் தாயாரையும் வணங்கவும்.
துலா ராசியில் சனி உச்சமடைவார்; சூரியன் நீசமடைவார்.
சனி
சனி உச்சமடைந்த ஜாதகர்கள், வேலை வேலை என்று உழைத்துக்கொண்டே இருப்பர். இவர் கள் அனேகமாக தொழிற்சங்கத் தலைவர்கள், வட்டச் செயலாளர்கள், குழுவின் தலைவர் கள், வியாபார முதலாளிகள், மேற்பார்வை செய்பவர்கள், சொந்தமாக டீக்கடை வைத்திருப் போர் என ஓரளவு பெயர் சொல்லுமளவுக்கு வாழ்க்கைத்தரம் உயர்ந்துதான் இருக்கும். இருந்தும் என்ன செய்ய! வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, ஒரு தொழிலாளிபோல் வேலை செய்வர். தலைவர் என்ற "கெத்து' வரவே வராது. யார் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். இதற்குக் காரணம், தலைமைப் பண்புக்குரிய சூரியன் நீசமாகும் இடமேயாகும். அதனால் கௌரவம், கீர்த்தி, புகழ் என இந்த விஷயங்களைப் பற்றி யோசிக்கக்கூட நேரமிருக்காது. யாரையும் அதட்டி வேலை வாங்க மாட்டார்கள். "பிறரை வேலை ஏவும் நேரத்தில், நாமே அந்த வேலையை முடித்து விடலாம்' என்பர். தங்கள் தோற்றத்தில் கம்பீரமோ, சுத்தமோ, அழகோ, கவர்ச்சியோ இல்லாதவாறு வலம்வருவர். ஆயினும் எத்துணைக் கூட்டம், எவ்வளவு ஆட்கள் இருந்தாலும், அவர்களுக்கு இணையாக இறங்கி வேலைசெய்வர். முத-ல் இவரைப் பார்ப்பவர்கள் "இவர் தலைவரா? நம்பவே மாட்டேன்' என்று அடம்பிடிப்பர். பின் அவரது வேலைசெய்யும் திறன், எளிமை, அடக்கம், பணிவு, எதிர்பார்ப்பின்மை, மக்களிடம் வேற்றுமை பாராட்டாதது, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் குணம் என இவற்றைக் கண்டு, அவருக்கு தொண்டனா கவே மாறிவிடுவர்.
பொதுவாக சனிக்கும் சூரியனுக்கும் ஆகாது. எனவே உச்சம்பெற்ற சனி, நீசம்பெற்ற சூரியனின் சிறு நற்குணம்கூட அருகில் வராமல் பார்த்துக்கொள்வார். இதனால், இவர்களுக்கு என்ன பரிகாரம் செய்தாலும், இவர்களுக்கு தலையில் மண்டைக் கனம் ஏறாது. "ஈகோ' இல்லாமல் பழகுவர். பரிகாரம் தேவையில்லை.
செவ்வாய்
செவ்வாய் எனும் முரட்டுக் கிரகம், மகர ராசியில் உச்சமடைவார்; குரு நீசமடைவார்.
செவ்வாய் உச்சம் பெற்றவர்கள், முரட்டுத் தனம், முன்கோபம், வீரம், தலைமைப்பண்பு அடாவடித்தனம், எதையும் எதிர்க்கும் தன்மை, பிடிவாதம், யார் என்ன சொன்னாலும் வாக்கு வாதம் செய்தல், உறுதி, அடிக்கடி காயம் படுதல், ரத்தம் சிந்துதல், பரபரப்பு என இவர்கள் எதிலும், எப்போதும் ஒருவித படபடப்புடன் இருப்பர். இதே மகரத்தில் குரு நீசமடைவதால், குருவின் காரக குணங்கள் அடிப்பட்டுவிடும். எனவே இவர்களால் அமைதியாக இருப்பது, பொறுமையாக யோசிப்பது, பிறர் கூறுவதை கவனமாகக் கேட்பது, ராஜதந்திரமாக பதில் கூறுவது, பதறாமல் விஷயங்களைக் கையாள்வது என எதையும் கடைப்பிடிக்க இயலாது. முக்கியமாக இவர்களால் எந்த விஷயத்தையும் நுணுக்கமாகக் கையாளத் தெரியாது. எதையும் வெளிப்படையாகப் போட்டு உடைத்துவிடுவர். பிறர் மனம் நோகும்படி பேசிவிடுவர். இவரைச் சுற்றியுள்ளவர்கள், "இவருக்கு முரட்டுத்தனம் உள்ள அளவுக்கு மூளை இல்லையே' என நொந்து போய்விடுவர். எப்போதும் அமைதியின்றி, ஆர்ப்பாட்டமாகவே இருப்பர். மகரத்தில் குரு நீசமடைவதால், குரு சார்ந்த பக்தி, ஞானம், ஒழுக்கம், நீதி, நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு என இவையெல்லாம் அடிபட்டுவிடும். எனவே, செவ்வாய் உச்சமாகும் ஜாதகர்கள் முரட்டுத் தனத்தோடு மட்டுமே இருப்பர். அறிவு, புத்தி என்கிற விஷயம் இல்லைதான். இவர்களைச் சுற்றியுள்ளவர்கள்தான் பெரும்பாடு பட்டு விடுவர். அவர்கள் தட்சிணாமூர்த்திக்கு, வியாழக் கிழமை தோறும் இவர்கள் பெயருக்கு அர்ச்சனை செய்ய, இவர்கள் கோபம் தணிந்து சற்றே சாந்தமாவார்கள்.
சுக்கிரன்
சுக்கிரன், மீன ராசியில் உச்சமடைவார்; புதன் நீசமடைவார்.
சுக்கிரன் உச்சமடைந்த ஜாதகர்கள் எப்போ தும் அழகுணர்ச்சியோடு, சற்றே சுருண்ட தலைமுடியுடன் இருப்பர். பெரும் கலாரசிகர்கள். நடிப்புத் துறையில் வல்லவர்கள். இவர்கள் உடை உடுத்தும்போதும் நல்ல பொருத்தமான அணிகலன்களோடு. அதற்குரிய துணை அழகூட்டும் பொருட்களோடுதான் உடுத்துவர். சுகமாக வாழ ஆசைப்படுவர். "நகக் கண்ணில் அழுக்குப்படாம இருக்கறா பார்' என்று இவர் களைப்பற்றி எரிச்சலோடு கூறுவர். அதாவது வேலை செய்வதில் ஆர்வமே இருக்காது. அதுசரி;
அழகுபடுத்திக்கொள்வதற்கே நேரம் சரியாகி விடும். முக்கியமாக கவனிக்கத்தக்க விஷயம், இவர்களுக்கு யாராவது சொல்-க்கொடுத்தால், கிளிப்பிள்ளைபோல அப்படியே திரும்பி ஒப்பித்துவிடுவர். இவர்களாக யோசித்து, தரம் பிரித்து செய்ய இயலாது. ஏனெனில் சுக்கிரன் உச்சமாகும் வீட்டில் புதன் நீசமாவதால் இவ்விதம் இருக்கும். சொந்த மூளை என்பது இருக்காது. எனவே யார் என்ன சொன்னா லும் நம்பிவிடுவார்கள். கணக்குப் போட்டுப் பார்த்து நுணுக்கமாக வாழத்தெரியாது. இவர்களைச் சுற்றி நல்ல மனதும் நேர்மை யுமுடைய சொந்தபந்தம் இருந்தால் இவர்கள் பிழைத்தார்கள். இல்லையெனில் சம்பாதித்த பணத்தையெல்லாம் ஏமாந்துவிட்டு, கடைசி காலத்தில் மிக கஷ்டப்படுவர். உச்ச சுக்கிரன் அனேகமாக கலைத்துறை நடிகர்- நடிகை களைக் குறிப்பார். இதி-ருந்தே நீங்கள் புரிந்து கொள்ளலாம். உச்ச சுக்கிரனும், நீச நிலையடை யும் புதனும் இருக்குமிடம் என்ன பின்விû ளவுளை ஏற்படுத்தும் என புரிந்துகொள்ளலாம். இவர்கள் எப்போதும் பெருமாளும், மகாலட்சுமித் தாயாரும் இணைந்திருக்கும் தலங்களில் வழிபடவேண்டும்.
சந்திரன்
சந்திரன் ரிஷப ராசியில் உச்சமடைவார்; விருச்சிகத்தில் நீசமடைவார். இந்த ரிஷப, விருச்சிக ராசிகளில் மற்ற எந்த கிரகமும் உச்சம், நீச நிலையை அடையாது. இது சந்திரனுக் குரிய தனிச்சிறப்பாகும். உண்மைதானே! சந்திரன் தாயைக் குறிப்பார். தாயின் குணத்தை, இடத்தை யாரால் ஈடுசெய்ய இயலும். சந்திரன் உச்சமடைந்த ஜாதகர்கள் ஆணாக இருப்பினும் தாயுமாகவே இருப்பர். தாய்மைப் பண்பு நிரம்பி வழியும். எனவேதான் சந்திரன் உச்சமாகும் இடத்தில் வேறொரு கிரகமும் நீசமாவதில்லை போலும். ஒரு தாய் நல்ல பண்பில் இருக்கும்போது, அங்கு நீசத்தனத்திற்கு இடமில்லை என்பது தெளிவாகிறது. அதுபோல் விருச்சிகத்தில் சந்திரன் நீசமடை வார். அங்கு வேறெந்த கிரகமும் உச்சமாவ தில்லை. அதுவும் சரிதான். ஒருவருக்கு தாய் போனபிறகு, அந்த இடத்தை வேறு யாரால் நிரப்ப இயலும். தாயின் மேன்மையே அதுதான். ஒரு தாய் எத்தனை கெட்டவளாக இருந்தாலும், அவள் பிள்ளைகளுக்கு அவளே எல்லாமுமாக இருப்பாள்.
"லட்சுமி இருந்தால் சரஸ்வதி இருக்க மாட்டாள்; சரஸ்வதி இருந்தால் லட்சுமி இருக்க மாட்டாள்' எனும் எளிமையான சொலவடை சரிதானே!
செல்: 94449 61845