Advertisment

தரணியாளூம் பரணி! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி (2)

/idhalgal/balajothidam/dharaniyalum-pharani-melmaruvathur-s-kalaivani-2

ரணி என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசி சக்கரத்திலும் பேசப்படும் 27 நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரமாகும். இது மேஷ ராசியில் அமையப்பெற்ற முழு நட்சத்திரமாகும்.

Advertisment

இது ஒரு பாகை வித்தியாசத்தில் விளங்கும் இரண்டு நட்சத்திரங்கள் கொண்டது. முதலாவது 462 ஒளியாண்டு தூரத்திலும், இரண்டாவது 319 ஒளியாண்டு தூரத்திலும் இருக்கின்றது. இதிலொன்று இரட்டை நட்சத்திரம். ஆக, மூன்று நட்சத்திரங்களின் தொகுப்பே பரணி நட்சத்திரம்.

பரணியில் சந்திரன் தெற்குப் பக்கமாகப் புகுந்து கிழக்குப் பக்கமாகப் பயணிப்பார். பரணி நட்சத்திரத்திற்கு தாழி, பூதம், அடுப்பு, தராசு, கங்குல், கிழவன், சோறு என்று வேறு பெயர்களும் உண்டு. பரணி ஒரு மங்கலான நட்சத்திரமாகும். இதன் சின்னம் படகு மற்றும் யோனியாக அமையப்பெற்றுள்ளது.

பரணி மனுஷ கண நட்சத்திரமாகும். இதன் அதிதேவதை எமதர்மன் ஆவார்.

ஜோதிடத்தில் பரணியை சுக்கிரன் ஆள்கிறது. இந்த நட்சத்திரம் சுக்கிரனின் நட்சத்திரமாக ஜோதிடத்தில் அறியப் படுகிறது. மேஷ ராசியில் அமையப் பெற்ற இந்த நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்கும்பொழுது ஜனித்தவர்கள் மேஷ ராசி, பரணி நட்சத்திரம் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

Advertisment

இங்கு ராசிநாதன் செவ்வாயாகவும், நட்சத்திரநாதன் சுக்கிரனாகவும், நவாம்ச நாதர்களாக- பரணி ஒன்று என்றால் சூரியனாக வும், பரணி

ரணி என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசி சக்கரத்திலும் பேசப்படும் 27 நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரமாகும். இது மேஷ ராசியில் அமையப்பெற்ற முழு நட்சத்திரமாகும்.

Advertisment

இது ஒரு பாகை வித்தியாசத்தில் விளங்கும் இரண்டு நட்சத்திரங்கள் கொண்டது. முதலாவது 462 ஒளியாண்டு தூரத்திலும், இரண்டாவது 319 ஒளியாண்டு தூரத்திலும் இருக்கின்றது. இதிலொன்று இரட்டை நட்சத்திரம். ஆக, மூன்று நட்சத்திரங்களின் தொகுப்பே பரணி நட்சத்திரம்.

பரணியில் சந்திரன் தெற்குப் பக்கமாகப் புகுந்து கிழக்குப் பக்கமாகப் பயணிப்பார். பரணி நட்சத்திரத்திற்கு தாழி, பூதம், அடுப்பு, தராசு, கங்குல், கிழவன், சோறு என்று வேறு பெயர்களும் உண்டு. பரணி ஒரு மங்கலான நட்சத்திரமாகும். இதன் சின்னம் படகு மற்றும் யோனியாக அமையப்பெற்றுள்ளது.

பரணி மனுஷ கண நட்சத்திரமாகும். இதன் அதிதேவதை எமதர்மன் ஆவார்.

ஜோதிடத்தில் பரணியை சுக்கிரன் ஆள்கிறது. இந்த நட்சத்திரம் சுக்கிரனின் நட்சத்திரமாக ஜோதிடத்தில் அறியப் படுகிறது. மேஷ ராசியில் அமையப் பெற்ற இந்த நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்கும்பொழுது ஜனித்தவர்கள் மேஷ ராசி, பரணி நட்சத்திரம் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

Advertisment

இங்கு ராசிநாதன் செவ்வாயாகவும், நட்சத்திரநாதன் சுக்கிரனாகவும், நவாம்ச நாதர்களாக- பரணி ஒன்று என்றால் சூரியனாக வும், பரணி இரண்டாம் பாதமென்றால் புதனாகவும், பரணி மூன்றாம் பாதமென்றால் சுக்கிரனாகவும், பரணி நான்காம் பாதத்தில் விழும்போது செவ்வாயாகவும் அமையப் பெறுகிறார்கள்.

ஒரு நட்சத்திரத்திற்காக பொதுவான பண்புகளும் குணங்களும் கூறப்பட்டிருந் தாலும், பாதசாரம் மற்றும் பாதங்களின் துணை மாற்றம் அடையும்பொழுது அதன் பண்புகளும் குணங்களும் மாறு பட்ட பலனையளிக்கும் என்பது நிதர்சனமான உண்மை. மேஷ ராசி, பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மட்டுமல்ல; அந்த நட்சத்திரத்தில் ஏறி நின்ற கிரகங்களும் சில நுட்பமான பலன்களை நிகழ்த்தும்.

"நான் உங்கள் விரும்பிக் கற்கும்

நற்றமிழ் விரும்பிக் கேட்கும்

தானங்கள் விரும்பிச் செய்யும்

தந்தை- தாய் மிகவும் பேணும்

மானமது உடைய நாகம்

அருள்நிதி பொருந்தி வாழும்

போனகம் செல்வம் உண்டாம்

புகழ்பெறும் பரணி யானே'

என்கிறது பரணியைப் பற்றிய ஜோதிடப் பாடல். அதாவது பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நாமம் என்னும் அறிவுச் செல்வத்தைத் தேடியடைவார்கள். எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளும் தாய்வழிப் புலமை, மற்றவர்களுக்குக் கொடுக்கும் கொடை குணம், தாய்- தந்தை பராமரிப்பு, செல்வத்தைத் தேடும் விருப்பம், சேமிப்பு, செல்வச் செழிப்பு போன்றவை அமையப் பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு உணவுப் பஞ்சமே இருக்காது என்று மேற்கூறிய ஜோதிடப் பாடல் உரைக்கிறது.

yy

இந்த பரணி நட்சத்திரக்காரர்கள் பின்யோகக்காரர்கள். முற்பகுதி வாழ்க்கை சற்று தடுமாற்றங்களுடன் இருக்கும். இவர்கள் பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்ட வாழ்க்கையில்தான் தாங்கள் நினைத்த வழியில் பயணிக்கமுடியும். பரணி நட்சத்திர அதிபதியாக சுக்கிரன் வருகிறார்.

சுக்கிரன் என்றால் மகாலட்சுமியைக் குறிக்கும்.

பரணியில் பிறந்தவர்களின் லக்னாதி பதி, ராசியாதிபதி மட்டுமல்லாமல், நட்சத்திர அதிபதியான சுக்கிரனும் பலம்பெற்றிருப்பது பல சிறப்பினை இவர்களுக்கு வழங்கும். 3, 8, 12-ல் இருந்தால்கூட பெரிதாக பாதிப்பதில்லை. ஆனால் சுக்கிரன் ஆறாமிடத்தில் இருப்பது பெண் தோஷத்தை சுட்டிக்காட்டும். பரணியில் பிறந்தவர்கள் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், வளர்ந்து வரும்பொழுது சொகுசு குறையாத வாழ்க்கையை அனுபவிக்கும் யோகம் இவர்களுக்குண்டு.

இவர்கள் ஆடை, ஆபரணம், வாசனை திரவியம், போஜனம், போகப் பிரியர்களாக இருப்பார்கள்.

இவர்கள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றலுடையவர்கள். சாஸ்திர ஞானமுடையவர்கள். இவர்களுக்கு தன் குடும்பத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியுண்டு. துரியோதனன் பிறந்த நட்சத்திரம் பரணி நட்சத்திரமே ஆகும். "பரணியில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள்' என்று துரியோதனனின் பிறப்பை வைத்துதான் சொல்லப்பட்டது.

இந்த நட்சத்திரம் சுப காரியத்திற்குப் பொருந்தாது. ஆனால் பால் காய்ச்சலாம். திருமணத்திற்கு ஆகாது; ஆனால் முதலிரவு வைக்கலாம். பரணியின் பஞ்சபூத தத்துவம் பூமியாகும்.

இவர்கள் வம்சத்தில் மனநிலை சரியில்லாதவர்கள் இருப்பார்கள் அல்லது இருந்திருப்பார்கள் என்று ஜோதிட நிகண்டுகள் எடுத்துரைக்கின்றன. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இடது பாகம் அல்லது தொப்புள் போன்ற இடங்களில் மச்சம், மரு, தீக்காயம் போன்றவை அமைந்திருக்கும்.

பரணி முதல் பாதத்தில் பிறந்தவர்கள்

எல்லாவற்றையும் ஆய்ந்து ஆராய்ந்து அனுபவித்து முடித்துவிட வேண்டுமென்ற விதியுடைய நட்சத்திரமாகும். இதில் பெரும்பான்மையினரின் மணவாழக்கையில் சிறிது இடர்ப்பாடுகள் அமையப்பெறுகின்றன. மேஷத்தில் உச்சம் பெறும் சூரியன், நவாம்சத்தில் சிம்ம வீட்டில் சந்திரன் இடம்பெறும்போது அதீத பலம்பெறுகிறது. அதனால் சுக்கிரனின் இயல்பை அதிகமாக வெளிப்படுத்தும். இவர்கள் சுகபோகவாதிகளாகவும், நல்ல மனம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள். மேலும் தனது கருத்திற்கு எதிர்கருத்தை ஏற்கமாட்டார்கள். இவர்களுக்கான தொழில் என்று வரும்பொழுது மருந்து, மருத்துவக் கடை, கண்ணாடி, நகை சம்பந்தப்பட்ட வியாபாரம், மருத்துவர் போன்றவை அமையப்பெறும்.

பரணி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களுக்கு நவாம்சத்தில் கன்னியில்- அதாவது புதன் வீட்டில் சந்திரன் அமையப் பெறுகிறது. இது மேஷத்திற்கு நேரடி ஆறாமிட மாக வருவதாலும், செவ்வாய், புதன் ஆகிய பகைவர்களின் இணைவினாலும் சற்று மனக்குழப்பம், சந்தேகப்படுதல், தன்னைத் தானே நம்பாத ஒரு சூழல், எதிலும் ஒரு உறுதிப்பாடற்ற நிலை, கடின உழைப்பு, கவனமின்மை போன்றவை இருக்கும். அடிமை ஜீவனம், அடிமைத்தனமான தொழில், சற்று நீசத் தொழில்கள், மறைமுகமான தொழில்கள் போன்றவை அமையப்பெறும்.

பரணி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இங்கே சந்திரன்- சுக்கிரனுக்கு சொந்தவீடான துலாம் வீட்டில் அமையப் பெறுகிறார். இது ஒரு சுகபோகமான அமைப்பு. விளையாட்டு, உல்லாசம், சந்தோஷம் போன்றவை அமையும். எதையும் அனுபவித்து சுகித்துவிட வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியிருக்கும். விளையாட்டு, விளையாட்டு சம்பந்தப்பட்ட பொருட்கள், மரத்தாலான பொருட்கள் வியாபாரம், மரப் பொருட்களை அடுக்கிவைக்கும் கடைகள் போன்ற தொழில்கள் அமையப்பெறும்.

பரணி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களுக்கு சந்திரன் விருச்சிக வீட்டில்- அதாவது மேஷத்திற்கு எட்டாம் வீட்டில் நீசமடைவார். நான்காமதிபதி எட்டாம் வீட்டில் நீசம்பெறுவதால் இவர்களுக்கு உயர்கல்வி பெரும்பாலும் மறுக்கப்படுகின்றது. தாயார், தாயார்வழி உறவுகளில் விரிசல் அமையும். இவர்கள் கடுமையான உழைப்பின்மூலமே தொழிலில் சம்பாதிக்கமுடியும் என்று ஜோதிட நூல்கள் எடுத்துரைக்கின்றன. வழிபடவேண்டிய தெய்வம்: துர்க்கையம்மன்.

அணியவேண்டிய ரத்தினம்: வைரம்.

வழிபடவேண்டிய தலம்: ஸ்ரீரங்கம்.

வணங்கவேண்டிய விருட்சம்: பாலில் லாத நெல்லி மரம்.

(அடுத்த இதழில் கார்த்திகை)

செல்: 80563 79988

bala161222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe