Advertisment

பதவி பறிபோகும் காலம்! - மகேஷ் வர்மா

/idhalgal/balajothidam/depreciation-period-mahesh-verma

ரசியல்வாதிகளும், அரசுப் பதவிகளில் இருப்பவர்களும், தனியார்துறையில் உயர்பதவிகளில் இருப்பவர்களும் திடீரென தாங்கள் வகிக்கும் பதவிகளை இழக்கவேண்டிய நிலை உண்டாகிறது. இதற்கு ஜோதிட ரீதியான காரணமென்ன?

Advertisment

ஒருவர் தன் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனில், அவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதியும், 10-ஆம் அதிபதியும் நல்ல நிலையில் இருக்கவேண்டும்.

ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி பலவீனமாக இருந்து, 10-ஆம் அதிபதி 6-ல் இருந்தால், அவர் பதவியில் இருக்கும் காலத்தில், ராகு தசையில் சனி புக்தி அல்லது சனி தசையில் ராகு புக்தி நடந்தால், அவர் தன் பதவியை இழக்கவேண்டியதிருக்கும்.

ஒரு ஜாதகத்தில் 12-ல் செவ்வாய், சனி இருந்து, 5-ல் ராகு இருந்தால், அவருக்கு அஷ்டமச்சனி நடக்கும்போது பதவியை விடவேண்டியதிருக்கும்.

Advertisment

r

12-ல் சனி, செவ்வாய், ராகு இருந்து, குரு தசையில் சனி புக்த

ரசியல்வாதிகளும், அரசுப் பதவிகளில் இருப்பவர்களும், தனியார்துறையில் உயர்பதவிகளில் இருப்பவர்களும் திடீரென தாங்கள் வகிக்கும் பதவிகளை இழக்கவேண்டிய நிலை உண்டாகிறது. இதற்கு ஜோதிட ரீதியான காரணமென்ன?

Advertisment

ஒருவர் தன் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனில், அவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதியும், 10-ஆம் அதிபதியும் நல்ல நிலையில் இருக்கவேண்டும்.

ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி பலவீனமாக இருந்து, 10-ஆம் அதிபதி 6-ல் இருந்தால், அவர் பதவியில் இருக்கும் காலத்தில், ராகு தசையில் சனி புக்தி அல்லது சனி தசையில் ராகு புக்தி நடந்தால், அவர் தன் பதவியை இழக்கவேண்டியதிருக்கும்.

ஒரு ஜாதகத்தில் 12-ல் செவ்வாய், சனி இருந்து, 5-ல் ராகு இருந்தால், அவருக்கு அஷ்டமச்சனி நடக்கும்போது பதவியை விடவேண்டியதிருக்கும்.

Advertisment

r

12-ல் சனி, செவ்வாய், ராகு இருந்து, குரு தசையில் சனி புக்தி நடந்தால், அவருக்கு வாழ்க்கையில் பெரிய ஏமாற்றம் உண்டாகும். தான் வகித்த பதவியை அவர் இழப்பார்.

லக்னத்தில் சூரியன், புதன், 3-ல் கேது, 6-ல் சனி இருந்து, அவருக்கு அஷ்டமச்சனி வரும் காலத்தில் சுக்கிர தசையில் சனி புக்தி நடந்தால், அவர் தான் வகித்த பதவியை இழக்கும் நிலை உண்டாகும்.

11-ல் சந்திரன், 6-ல் சனி இருந்து, அந்த ஜாதகருக்கு அஷ்டமச்சனி நடக்கும்போது கோட்சாரத்தில் குரு பகவான் 3-ல் வந்தால், அவர் தான் வகித்த பதவியை இழப்பார்.

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன், ராகு, சுக்கிரன், புதன் இருந்து, அவருக்கு குரு தசையில் சனி அந்தரம் வரும்போது உடல்நலம் கெடும். தன் பதவியை இழக்கும் நிலை உண்டாகும்.

சந்திரன் நீசமாக இருந்து, லக்னத்தில் சனி, 7-ல் செவ்வாய், 8-ல் ராகு இருந்தால், அந்த ஜாதகர் எந்த பதவியில் இருந்தாலும் அது அவருக்கு நிலைக்காது.

ஒரு ஜாதகத்தில் 10-ஆம் அதிபதிக்கு கேந்திராதிபத்திய தோஷம் இருந்து, அந்த கேந்திராதிபதியின் தசையில் 6-ஆம் அதிபதி யின் அந்தரம் நடந்தால், அவர் தான் இருக்கும் பதவியை திடீரென விடவேண்டியதிருக்கும்.

லக்னத்தில் செவ்வாய், 4-ல் சூரியன், 7-ல் சனி இருந்தால், தேவையற்ற பேச்சு காரணமாக அந்த ஜாதகர் தன் பதவியை இழப்பார்.

4-ல் சூரியன், 7-ல் சனி, 11-ல் சந்திரன் இருந்து, 10-ஆம் அதிபதி பலவீனமாக இருந்தால், கடுமையாக உழைத்து அவர் பெற்ற பதவி, அவரின் விரோதிகள் செய்த சதியால் பறிபோய்விடும். அவ ருடைய உடல்நலம் கெடும்.

6-ல் செவ்வாய், 10-ல் சனி இருந்தால், அந்த ஜாதகர் நல்ல பதவியில் இருக்கும் போது, அவருடைய பகைவர் கள் செய்யும் சில காரியங் களால், அவருடைய உடல் நலம் கெடும். அதனால் அவர் பதவியை இழக்கநேரும்.

5-ல் செவ்வாய், ராகு இருந்து, 8-ல் சனி, 9-ல் சந்திரன் இருந்தால், அவர் பதவியில் இருக்கும் காலத்தில், அவருடைய குடும்பத்தில் பிரச்சினை உண்டாகும். அதனால் அவர் பதவியை இழப்பார்.

ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் உச்சமாக அல்லது சுய வீட்டில் இருந்து, சனி சுய வீட்டில் இருந்தால், சுக்கிர தசையில் சனி புக்தி வரும்போது- அவர் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும், யாசிக்க வேண்டிய நிலை உண்டாகும். வகிக்கும் பதவி இல்லாமல் போகும்.

லக்னாதிபதி சந்திரனாக இருந்து, 4-ல் சனி, 6-ல் சுக்கிரன், 10-ல் குரு இருந்தால், அவருக்கு உயர்ந்த பதவி கிடைக்கும். ஆனால், அது நிரந்தரமானதாக இருக்காது.

6-ல் செவ்வாய், ராகு, 7-ல் சனி, 8-ல் சூரியன் இருந்து, அவருக்கு சந்திர தசை அல்லது புதன் தசை நடக்கும் போது, அந்த ஜாதகர் திடீரென தான் வகிக்கும் பதவியை இழப்பார்.

லக்னத்தில் சூரியன், சுக்கிரன், ராகு, 6-ல் சனி, 10-ல் குரு இருந்தால், அவருக்கு செவ்வாய் தசை அல்லது சந்திர தசை நடக்கும்போது ஒருவர் ஜாதகத்தில் 5-ல் குரு, செவ்வாய், சூரியன் இருந்தால், அவர் பெரிய பதவியில் இருப்பார். ஆனால், அஷ்டமச்சனிக் காலத்தில் சனி தசை நடந்தால், அவர் தனது பதவியை இழக்கவேண்டிய நிலை உண்டாகும்.

பரிகாரங்கள்

லக்னாதிபதி, 9-க்கு அதிபதியின் ரத்தினத்தை அணியவேண்டும். தினமும் சூரியனை வழிபடவேண்டும். ஞாயிற்றுக்கிழமை ஆதித்திய ஹிருதய ஸ்தோத்திரத்தைப் படிக்கவேண்டும்.

வீட்டில் வடமேற்கில் படுக்கக்கூடாது. கருப்பு, அடர்த்தியான நீலவண்ண ஆடைகளைத் தவிர்க்கவும்.

வெள்ளிக்கிழமை இரவு துர்க்கை ஆலயத்திற்குச் சென்று தீபமேற்றி, சிவப்புநிற மலரை வைத்துப் பூஜை செய்யவேண்டும்.

வீட்டின் தெற்கு அல்லது தென்மேற்கில் கிணறு இருப்பது நல்லதல்ல. வீட்டின் வட கிழக்கில் அதிகமாக மரங்கள் இருக்கக் கூடாது.

தெற்கில் தலைவைத்துப் படுக்கவேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை மாலையில் பைரவர் ஆலயத்திற்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும்.

செல்: 98401 11534

bala231020
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe