சென்ற இதழ் தொடர்ச்சி...
துலாம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 1, 2, 11, 12, 19, 20, 28, 29. பாதக நாட்கள்: 6, 7, 13, 14, 26, 27.
சித்திரை 3, 4-ஆம் பாதங்கள்: தனக்குத்தானே துன்பம் உண்டாக்கிக் கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது. அரசு சார்ந்த விவகாரத்தில் முதல் வாரமே பகை வரலாம். தீயவர்களோடு நெருக்கம் வேண்டாம். 6, 7 தேதிக்குமேல் நிலைமை சீரடையும். 10, 12 தேதிகளில் மாதர்களும் மாணவர் களும் முரண்பட்ட செய்கையால் வேதனையுற நேரிடும். ராகு 9-ல் புதன் வீட்டில் இருக்கிறார். கருவுற்ற சிசுவையும் அல்லல்படுத்துவார். நாய் களுக்கு அதிகளவு உணவுக்கு வழி செய்வது தக்க பலன் தரும். கூட்டுக் குடும்பத்தில் இருப்போர் இம்மாதம் தனிக்குடித்தனம் போதல் கூடாது. உங்கள் இருப்பிடத்திற்கு வெகு அருகில் ஆலயம் இருந்தால், அந்த திசை நோக்கித் தலைவைத்துத் தூங்கவும்.
சுவாதி: நீங்கள் உரையாடல்களில் ஈடுபடும்போது பிறரை அதிகம் பேசவிடு வது மிக நல்லது. அதன்மூலம் பல நன்மை களை இம்மாதம் பெற இயலும். 17, 18 தேதிகளில் வியாபாரத்தில் முழு கவனம் வேண்டும். இம்மாதம் ஆண்குழந்தை பிறந்தால் ஆரம்பத்தில் கவனம் செலுத்தல் வேண்டும். சுக்கிரன் மகரத்தில் தனித்திருப்பதால், திருமணநாள் வந்தால் வாழ்க்கைத் துணைவியின் பெயரில் புது முதலீடு செய்வது நன்மை தரும். ஆடவர்கள் மைத்துனி விஷயத்தில் கவனமுடன் செயல்படவேண்டும்; அவப்பெயர் வரும் வாய்ப்புள்ளது. செவ்வாய் ராசியிலேயே இருப்பதால், எந்த இலவசப்பொருளும் பெறுவது கூடாது. யானைத் தந்தத்தினாலான பொருளை யும் விலைகொடுத்து வாங்குதல் வேண்டாம். கஜேந்திரனை வணங்கு வது நன்று.
விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்: இம்மாதம் பயணம் ஒரு புது அனுபவத் தைப் பெற்றுத்தரும். குறிப்பாக 19, 21 தேதிகளில் எச்சரிக்கையாகச் செயல்படவும். மாதக்கடைசியில் உழைப்பிற்கேற்ற ஊதியம் மகிழ்ச்சி தரும். சனி பகவான் தனுசில் இருப்பதால், வீட்டின் கடைசியில் இருட்டான அறை இருந்தால், அதில் பளிச்சென விளக்கெரிய வைப்பது மிக நன்று. கிழக்கு அல்லது தெற்கு நோக்கிய தலைவாசல் இருந்தால், சனிக்கிழமை வாசலில் உப்பு கலந்த நீரைத் தெளிக்கவும். ஒன்பது வயதுக்குட்பட்ட பெண் குழந்தைக்கு உதவிபுரிந்தால் கேது பகவான் வெற்றிக்கு வழிவகுப்பார். இம்மாதம் துர்க்கையை வணங்குவதால் பல முட்டுக்கட்டைகள் கூண்டோடு மறைந்துவிடும்.
விருச்சிகம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 3, 4, 5, 13, 14, 21, 22,
31. பாதக நாட்கள்: 1, 2, 8, 9, 15, 16, 28, 29.
விசாகம் 4-ஆம் பாதம்: இப்போது நடந்த குருப்பெயர்ச்சி உங்களை ஊக்குவிக்கும் 27-3-2022-ல் மகர ராசிக்குப் போவார். அதுவரை நல்லவற்றை விரைவாகச் செய்துமுடிக்கலாம். நஞ்சை புஞ்சை விவசாயிகளுக்கு அறுவடை லாபகரமாகிவிடும். வெளிநாட்டில் இருப் பவர்கள் பிறந்த ஊர் திரும்ப நேரிடும். சிலருக்கு உத்தியோகத்தில் இடமாற்றம், தொழில்மாற்றம் நிகழும். கலைஞர்கள் போட்டி, பந்தயங்களில் சாதனை படைக்கலாம். 8-ல் ராகு தன்னந் தனியாக மீனத்தில் இருப்பதால், எட்டு மரக் கரித்துண்டுகளையும், எட்டு செல்லாத நாணயங்களையும் மண்சட்டியில் வைத்து, மேற்கு நோக்கி நின்றவாறு திருஷ்டிசுற்றி நீர்நிலையில் வீசிவிட்டால், பொருளாதாரப் பின்னடைவுகள் மறைந்துவிடும்.
அனுஷம்: சூரிய பகவான் இரண்டாவது வாரம் கௌரவம் நிறைந்த பொறுப்பான மாற்றத்தைத் தரப்போகிறார். 17, 18-ஆம் தேதிகளில் மாணவர்களும், மாதர்களும் மன நிறைவுடன் செயல்படலாம். 13, 14 தேதிகளில் வாகனத்தில் பயணம் செய்யும்போது கவனம் வேண்டும். இம்மாதம் 8, 17, 24, 25, 26 தேதி களில் பணவரவை எதிர்பார்க்கலாம். சக ஊழியர்களிடம் கைமாற்று வேண்டாம். வில்லங்கத்திற்கு வித்திட்டதுபோலாகிவிடும். சுக்கிர பகவானை வெள்ளிக்கிழமைகளில் தவறாது வணங்கிவருவது போதுமானது. பெண்கள் சமையல் கூடத்தில் ஆடிக் கொண்டோ, பாடிக்கொண்டோ சமைப் பது கூடாது. அன்னபூரணி ஸ்தோத்திரம், மோகினிக் கவசம் படிக்கலாம். வெண்மை நிறப் பூக்களை சூடிக் கொள்வது நல்லது.
கேட்டை: உங்கள் ஜாத கத்தில் எந்த கிரகநாதர்களும் அவர்களுக் குரிய வீட்டில் காணப்படவில்லையெனில், எந்த காரியமும் சட்டென்று முடிவது கடினம். புதிய கடன் பெற்று பழைய கடனை அடைக்க முயலலாம். அதற்கு சனி பகவான் போதிய ஆதரவு தருவார். வியாபாரத்தில் மந்தநிலை மாறும். மாமியார் வீட்டில் வயதானவர்கள் இருந்தால் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படும். திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவனை வணங்குதல் மிக நன்று. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ் வரருக்கு அர்ச்சனை செய்வது மிக நன்று. தினமும் ஆஞ்சனேயரை நமஸ்கரிப்பதும் மிக நல்ல செயல்.
தனுசு
ராசிக்கு சிறந்த நாட்கள்: 6, 7, 15, 16, 24, 25. பாதக நாட்கள்: 3, 5, 11, 12, 17, 18, 31.
மூலம்: உங்களுடைய மனதில் உறுத்திக்கொண்டிருந்த பல எண்ணங்கள் நிறைவேறும். புதனும் செவ்வாயும் நல்லதையே செய்வார்கள். குரு ஜென்ம ஸ்தானத்தில் இருக்கிறார். சுற்றுலா செல்பவர்கள் வனவிலங்கு களிடம் நெருக்கம் வேண்டாம். அரசுக்கு செலுத்தவேண்டிய வரி விவகாரங்களில் மெத்தனம் வேண்டாம். விளையாட்டு வீரர்கள் தம் திறமையை வெளிப்படுத்தலாம். இம்மாத பணவரவு தேதிகள் 8, 9, 17, 18, 26, 27. கொடுக்கல்- வாங்கலில் இந்த தேதிகளில் ஈடுபடலாம். நெருக்கடி நாட்களில் சனி பகவானை மனதார வேண்ட வேண்டும். கருங்குவளை மலரால் அவரை தியானித்தால் உடனடி பலன் தருவார். குலதெய்வ வணக்கம் இம்மாதம் இன்றியமை யாதது.
பூராடம்: உங்களை வாட்டிக்கொண்டி ருக்கும் குற்றவுணர்வு சந்திரனால் சரிசெய்யப் படும். 17, 18 தேதிகளில் எந்தவிதமான குற்றச்செயல்களிலும் மனதைச் செலுத்தாமல் இருப்பது நன்று. இளம் காதலர்க்கு ஏமாற்றம் சூழ்ந்த மாதம். முன்பு எப்போதோ செய்த தவறுக்கு இம்மாதம் தண்டனை அனுபவிக்க நேரிடும். ராசிக்கு 7-ல் இருக்கும் ராகு சில பின்னடைவுகளைத் தருவார். நான்கு எலுமிச்சம் பழம், நான்கு மரக்கரித்துண்டு அல்லது நான்கு மை டப்பி (காஜல்) ஆகிய வற்றை மண்சட்டியில் வைத்து, மேற்கு நோக்கி நின்று திருஷ்டி சுற்றியபின், மை டப்பியை நான்கு திசைகளில் வீசிவிடவும். மீதியிருப்பதை ஓடும் நீரில் போடவும். ராகுவின் தடை போகும்.
உத்திராடம்: 1-ஆம் பாதம்: நெருப்பு, கடன், பகைவன் இம்மூன்றிலும் மிச்சம் வைத்தால் மீண்டும் நம்மை அழித்துவிடும். கிரகநாதர்கள் நன்மைகளை அதிகம் தந்தாலும், சிறு தடை நம்மை நிலைகுலையச் செய்துவிடும். உங்களின் ஜென்மச்சனி என்ன செய்யு மென்றால், எப்போதோ செய்த குற்றங்களுக்கு தண்டனை, வழக்குகளில் பாதகமான தீர்ப்பு கிடைக்க வழிவகுத்துவிடும். சனியுடன் புளூட்டோ கிரகமும் இணைவதால் தன்னம் பிக்கை மிகையாகும். உற்றார்- உறவினர்களிட மிருந்து அபச்செய்தி வரும். குடியிருக்கும் வீட்டிற்கு எதிரே செல்வந்தர்கள் இருந்தால் பகையுணர்வு கூடாது. குருவாயூரப்பனை ரோகிணி நட்சத்திரம் அல்லது சுவாதி நட்சத் திரம், அஷ்டமி திதியன்று தரிசனம் செய்தால் எல்லா குறைகளும் அகன்றுவிடும்.
மகரம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 8, 9, 17, 18, 26, 27. பாதக நாட்கள்: 6, 7, 13, 14, 19, 20.
உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: அடிமைபோல் உழைத்து அரசனைப்போல் உண்ணவேண்டிய மாதம். விரய குரு காலமாகும். இடமாற்றம், இலாகா மாற்றம் ஏற்படும். இரவு நேர வியாபாரம் செய்வோர் எச்சரிக்கையாகச் செயல்படவேண்டும். அண்ணன்- தம்பி, சகோதரிகள்மூலமாக திருமணம் நிச்சயமாகும். 17, 18 தேதிகளில் கொடுக்கல்- வாங்கலில் தவறு நேர வாய்ப்புள்ளது. மத போதகர்கள், உபன் யாசம் செய்வோர்கட்கு புது சந்தர்ப்பம் உயர்வைத் தரும். அரசியல்வாதிகள், அறங் காவலர் பதவியை எதிர்பார்க்கலாம். மூல நட்சத் திரத்தன்று ஆஞ்சனேயருக்கு துளசியால் அர்ச் சனை செய்து வணங்கவும். சூரிய அஸ்தமனத் திற்குப்பின் சனி பகவானை ஆலயம் சென்று வணங்கவும். மதுபோதையில் வாகனம் ஓட்டுவது கூடாது.
திருவோணம்: கவலையைவிட கொடியது சந்தேகமே. அதைத் தவிர்க்க வேண்டிய மாதம். ராசியில் சுக்கிரன், 6-ல் ராகு. மனைவி அல்லது கணவர் அரசு வேலை பார்ப்பவர் எனில், நடத் தையில் சந்தேகம் வரும்விதமாக சூழ்நிலை அமையும் வாய்ப்புள்ளது. இளமையில் தந்தையை இழந்த மகனுக்கு இப்போது வயது 28 எனில் நல்லவை நடக்கும். சுக்கிரன் சனியின் வீட்டில் இருப்பதால் பால்வினை நோயுடையவர்கள் மறைவிடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மாலை ஐந்து மணிக்குமேல் ஆறு மணிக்குள் சிவபெருமான் ஆலயத்தில் நல்லெண்ணெய் தீபமேற்றி வணங்குவது கெடுதலைப் போக்கும். சுக்கிர ஹோரையில் பால்கலந்த உணவுகள் உட்கொள்ளல் நன்று. 1, 2, 8, 17, 26, 28, 29 தேதிகள் பணவரவைத் தரும்.
அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்: "மலருக்கும் அழகுக்கும் அற்ப வாழ்வுதான்' என உணர்ந்து செயல்பட வேண்டும். தனுசில் ஐவர் இருந்தாலும், மிதுனத்தில் ராகு இருப்பதால், அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். இம்மாதம் திருமணம் நடந்தால், மணப்பெண் சிறு வெள்ளி உலோகம், சிறிது பச்சரிசியை முந்தானையில் முடிந்து மணமகன் வீடு செல்வதால் பல தொல்லைகள் மறையும். இம்மாதம் 17, 18 தேதிகளில் முதலீடுகள் செய்வதைத் தவிர்த்தல் நன்று. 22, 23 தேதிகள் லாபகரமாக அமைந்துவிடும். மாதக்கடைசியில் ரகசிய ஒப்பந்தம் மனமகிழ்வைத் தரும். தெற்கு நோக்கிய தலைவாசல் வீடு இருக்கப் பெற்றால், சனி, ஞாயிறு நாட்களில் தென்மேற்கு பாகத்தில் காய்ச்சாத பாலை ஒரு பாத்திரத்தில் சிறிது நேரம் வைத்து, பின் நாய்க்குத் தருவதால் திருஷ்டிகள் அகலும்.
கும்பம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 1, 2, 11, 12, 19, 20, 28, 29. பாதக நாட்கள்: 8, 9, 15, 16, 21, 22.
அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள்: லாப குரு ஸ்தான காலம். அதிர்ஷ்டத்திற்கு இன்னொரு பெயர் நம்பிக்கை என செயல்பட வேண்டிய மாதம். முதல் வாரம் எவரையும் திடமாக நம்பி செயல்படக்கூடாது, எதிரிகளின் சதி வலையில் சிக்கும் வாய்ப்புள்ளது. கேது தனுசில் இருப்பதால் பெரிய கெடுதல்களை சமநிலைப்படுத்துவார். நான்கு சிவப்பு முள்ளங்கியை சனி இரவு தலையணையின் அடியில் வைத்துத் தூங்கியபின், அடுத்த நாள் கால்நடைக்குக் கொடுக்கலாம். நல்லவை நடக்கும். அசையா சொத்துகளை குறைவான விலைக்குக் கொடுக்க நேரிடும். இராணுவம், பாதுகாப்புத்துறையில் பணிபுரிவோருக்கு பதவி உயர்வு கிடைக்கப்பெறும். செவ்வாய்க்கிழமை துர்க்கையை வணங்குதல் மிகச்சிறப்பானது.
சதயம்: பெண்கள் ஆத்மபலத்தை அதிகரிக்க வேண்டிய காலம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓங்கும். பசுமாட்டுப் பண்ணை வைத் திருப்போர் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். குடும்ப கௌரவத்தை நிலைநாட்ட வேண்டும். கூட்டு வியாபாரம் அபரிமிதமான ஆதாயத்தை அதிகரிக்கும். கலைஞர்களுக்கு லாபம்பெறும் விதமாக புதுப்புது ஒப்பந்தங்கள் வரும். செவ் வாய்க்கிழமைகளில் துர்க்கைக்கு எலுமிச்சை மாலை சாற்றி, தீபமேற்றி வந்தால் வினைகள் மறையும். விநாயகப் பெருமானை செந்தா மரைப் பூவால் அர்ச்சனை செய்வது மிகச்சிறப் பானது. 3, 4, 5, 8, 13, 14, 17, 21, 22, 26, 31 தேதிகளில் பணவரவு செலவினங்களை சமநிலைப் படுத்திவிடும்.
பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்: எதற்கும் தயாராக இருப்பவனை வாய்ப்புகள் தவறவிடுவதில்லையாம். நல்ல வாய்ப்புகள் வருமெனினும் ஏற்ற- இறக்கம் கலந்த மாதமாகவே அமையும். 11-ஆம் இடத்தில் இருக்கும் கிரகநாதர்கள் நல்வழி காட்டுவார்கள். உங்களுடைய சொந்த ஜாதகத்தில் புதன் 11-ல் காணப்பட்டால் 11, 23, 36, 48, 57, 72, 84 ஆகிய வயதுகளில் நல்ல திருப்பங்கள் நிகழுமாம். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந் தோருக்கான விருட்சம் குங்கிலி. இம்மரத் திலிருந்து வெளியாகும் பிசின் மிகவும் ரம்மிய மான வாசம் வரும். புத்திக்கூர்மையில்லா குழந் தைகள் இருந்தால் இம்மரத்தை வளர்ப்பது நல்ல பரிகாரம். புதன் மீன ராசியில் நீசபலம் பெறும். எனவே ஐந்து புதன்கிழமைகள் ஐந்து ரூபாயை விஷ்ணு சந்நிதியில் செலுத்தி வணங்கவும்.
மீனம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 3, 4, 5, 13, 14, 21, 22, 31. பாதக நாட்கள்: 11, 12, 17, 18, 24, 25.
பூரட்டாதி 4-ஆம் பாதம்: ராகு மிதுனத்தில் உள்ளார். புதனும் செவ்வாயும் எட்டில். "எண்ணித்துணிக கருமம்' என்ற சொல் இம்மாதம் பொருத்தமானது. முதல் வாரம் 6, 7 தேதிகளில் உற்சாகம் பெருகும். இரண்டாவது வாரமும் நல்லதே நடக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு வலுக்கும். பில்டிங் கான்டிராக்டர்கள் தேசிய நெடுஞ்சாலையில் பணிபுரியும்போது கவனம் வேண்டும். அமாவாசையை அடுத்துவரும் அஷ்டமி திதியில் காலபைரவருக்கு மிளகுப் பொட்டலம் கட்டி, நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடல் நல்லது. எட்டில் செவ்வாய் இருப்பதால், கணவரை இழந்த பெண்களுக்கு உதவிபுரிதல் மிகச்சிறந்த பரிகாரம். இம்மாதம் எட்டு இனிப்பு கேக் வாங்கி நாய்களுக்குக் கொடுப்பதும் போதுமானது. 17, 18 தேதிக்கு மேல் மனம்போல் யாவும் வெற்றியைப் பெற்றுத்தரும்.
உத்திரட்டாதி: 27-3-2020-ல் குரு பகவான் மகர ராசிக்கு இடம்பெயர்வார். அதன்பின் வீட்டை, நிலத்தை, அசையா சொத்தை வாங்கும் சூழ்நிலை மகிழ்வைத் தரும். இப்போதிருந்தே முயற்சிக்கலாம். உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் நிகழும். அதுவரை பொறுமையாகக் காத்திருக்கவும். உடல்நலம் பின்னடைவைத் தரலாம். 22 தேதிக்குமேல் தொல்லைகள் அகன்றுவிடும். ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், எழுத் தாளர்கள் புதுப்புது யுக்தியால் குருவருளைப் பெறலாம். குலதெய்வ வழிபாடு உத்தமமாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் சரபேஸ்வரருக்கு தீபமேற்றி வழிபடுவதுவும் நன்று. நீங்கள் தலையிட்டு நடத்திவைக்கும் பல செய்கைகள் மனநிறைவைத் தரும்.
ரேவதி: அனுபவ விளக்கை இம்மாதம் பிரகாசமாக எரியச் செய்யவேண்டும். மூன்றா வது வாரம் எண்ணங்கள் நிறைவேறும். 22, 23 தேதிகளில் ஆன்மிக சுற்றுலா போகலாம். 26, 27 தேதிகள் படிப்பினை நிறைந்தவையாக இருக்கும். அலுவலகப் பணியில் மெத்தனம் கூடாது. 30-ஆம் தேதியில் உங்களுடைய செய்கையால் பிறர் மதிப்படையப் போகி றார்கள். பார்வையற்றோருக்கு உதவிபுரிதல் நல்லபலன் தரும். பங்குச்சந்தை, ரசாயனத் தொழிற்கூடம் ஆரம்பித்தால் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். பணம் வரும் நாட்களாக 3, 4, 5, 6, 7, 8, 13, 14, 17, 21, 22, 26, 31 தேதிகள் அமையப்பெறும். சிவப்புநிற முகமுடைய ஆஞ்சனேயரை வணங்கவும்.
செல்: 93801 73464