மேஷம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 6, 7, 15, 16, 24, 25. பாதக நாட்கள்: 13, 14, 19, 20, 26, 27.
அஸ்வினி: ராகு மிதுனத்தில்; புதன், செவ்வாய் துலாத்தில்; சூரியன் விருச் சிகத்தில். எனவே உங்கள் மனம் ஒரு அற்புதமான இயந்திரம்போல செயல் படவேண்டும். முதல் வாரம் 6, 7 தேதிகளில் வருமானம் தேக்க நிலைய டைந்து நெருக்கடிகளைத் தரும். 8, 10 தேதிகளில் பெண்களுக்கு குடும்ப பாரம் மனம்வருந்தச் செய்யும். இம்மாதம் அடுத்தவர்கள் குடும்ப விவகாரங்களில் தலையிடவேண்டாம். அரசியலில் ஈடுபாடுடையோரும், மற்றவர்களும் யானைத் தந்தத்தினால் உருவாக்கப்பட்ட மோதிரம் அணிவது நல்லது. திங்கட் கிழமை வில்வம், அல்லி, மரிக்கொழுந்து கொண்டு பைரவருக்கு அர்ச்சனை செய்து, பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் பலவிதமான தடைகள் அடியோடு விலகிவிடும்.
பரணி: பிறர் யோசனைகளை திறந்த மனதுடன் கேட்டு செயல்பட வேண்டும். 13, 14 தேதிகளில் கணவன்- மனைவி எடுக்கும் முடிவானது வியாபாரம், கல்வி எல்லாவற்றிலும் வெற்றியைப் பெற்றுத்தரும். சூரியன் ராசிக்கு எட்டில் இருப்பதால், தென்மேற்கு வாசல் கொண்ட கட்டடம் பின்னடைவைத் தரும். எனவே ஞாயிற்றுக்கிழமை சொர்ணாகர்ஷண பைரவ காயத்ரி மந்திரம் சொன்னால் செல்வம் பெருகும். கடன் தொல்லை போக வழிபிறக்கும். "ஓம் பைரவாய வித்மஹே: ஹரி ஹர ப்ரம்ஹாத்மகாய தீமஹி: தந்நோ ஸ்வர்ணாகர்ஷண பைரவ ப்ரசோதயாத்.' இம்மாதம் தென்திசை நோக்கிய பயணம் தவிர்த்தல் நன்று. தவிர்க்கமுடியாதென்றால் விநாயகரை வணங்கிச்செல்வது மிக நன்று. கிருத்திகை 1-ஆம் பாதம்: குரு பகவான் ராசிக்கு ஒன்பதை அடைந்துள் ளார். அவருடன் புளூட்டோ என்ற கிரகத் தையும் இணைத்து அறுவராகிறார்கள். விளையாட்டு வீரர்கள்முதல் யாவரும் சாதனை படைக்கலாம். சுக்கிரனுடன் கேது இணை வதால், திருமண வயதிலுள்ள ஆண்- பெண் இருந்தால், விருப்பமில்லா உறவில் மனதைப் பறிகொடுக்க நேரிடும். சூரியன் எட்டில் இருப்பதால் குடும்பத்தில் நோய் வாய்ப்பட்டவர்கள் நலம்பெறுவார்கள். எந்த புதுவேலைகள் ஆரம்பித்தாலும் சிறிது இனிப்பை வாயில்போட்டு, சற்று தண்ணீர் பருகியபின் ஆரம்பிப்பது நன்று. 800 கிராம் கோதுமை, 800 கிராம் இனிப்பை திருஷ்டிசுற்றி ஓடும் நீரிலோ, குளத்திலோ போடல் நன்று. சூரிய பகவானை நெய் தீபமேற்றி வணங்கவும்.
ரிஷபம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 8, 9, 17, 18, 26, 27. பாதக நாட்கள்: 1, 2, 15, 16, 21, 22, 28, 29.
கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள்: நல்ல செய்தி களைவிட மோசமான செய்திகளையே கிரகநாதர்கள் தரமுயல்வார்கள். இரண்டில் ராகு; பகல் கொள்ளை நடந்தாலும் ஆச்சரியப்படாதீர்கள். ஒரு சிறு மண்சட்டியில் சிறு வெள்ளி உலோக உருண்டை மற்றும் குங்குமப்பூவை வைத்து வீட்டில் வடமேற்கு பாகத்தில் வைத்துக்கொண்டால் கெடுதல்கள் மறையும். முதல் வாரம் 6, 7 தேதிகளில் திடீர் வருமானம் வரும். மாணவர்கள் 13, 14 தேதிகளில் சாதனை புரியலாம். உத்தியோகம் பார்ப்பவர்களும் மற்றவர்களும் 17, 18 தேதிகளில் மௌனம் கடைப்பிடிப்பது நன்று. மனைவியின் ஆரோக்கியம்- குறிப்பாக மூச்சுவிடுதலில் பின்னடைவு வந்தால், காதில்லா பசுவுக்கு, கருப்புநிற நான்குகால் பிராணி களுக்கு உணவூட்டல் மிக நன்று.
ரோகிணி: நெப்டியூன் என்ற கிரகம் தன்னந்தனியாய் கும்பத் தில் இருப்பதால், மாணவர்கள், அரசியல் பிரமுகர்களுக்கு இதுவொரு நல்ல மாதம். திருமண மாகாத அரசு ஊழியர்களுக்குத் திருமணம் கைகூடும். செவ்வாயும் புதனும் துலாத்தில் இருப்பதால், புதுமணத் தம்பதிகள் இம்மாதம் உடலுறவைத் தவிர்த்தல் நன்று. வெளியூர், வெளிநாட்டுப் பயணம் பயன்தரும் விதமாகவே இருக்கும். நீங்கள் மேற்கு திசை தலைவாசல் வீட்டில் குடியிருந்தால், சிவபெருமானை வணங்குவதால் கடன் தொல்லை அகல்வதோடு மனஅமைதி பெறலாம். கேதுவும் சனியும் ராசிக்கு எட்டில் இருப்பதால், நெடுநாட்களாக மரணபயம் இருந்தால் விநாயகப் பெருமானை வணங்குதல் மிக நல்லது. இம்மாதம் உழைப்புதான் மூலதனம்.
மிருகசீரிஷம் 1, 2-ஆம் பாதங்கள்: இம்மாதம் 21-ஆம் தேதிக்குமேல் அற்புதமான சூழ்நிலை கள் மனதைத் தெளிவுறச் செய்யும். குருவும் பேராதரவு தருவதால் பழைய தங்க ஆபரணங்களைப் புதுப் பிக்கலாம். ராகுவால் தந்தையின் கௌரவம் பாதிக்கும். இளம்வய தினர், சுட்டுவிரலின் நேர்கீழ் அமைந் துள்ள குருமேட்டில் கரும்புள்ளி காணப்பட்டால், உங்களால் உங்கள் குடும்பம் அவச்சொல்லை எதிர் கொள்ள நேரிடும். சிவப்பு முள்ளங்கி மூன்றை சனியன்று இரவு தலையணையின் அடியில் வைத்துத் தூங்கி, அடுத்த நாள் அதனை நீர்நிலையில் போடலாம். இம்மாதம் மின்சார உபகரணம், நீலநிற ஆடைகளை இனாமாகப் பெறுவது கூடாது. 26, 27 தேதிகளில் நெருங்கிய உறவினர்களிடம் பகையுணர்வு வேண்டாம். பணவரவு திருப்தி தரும்.
மிதுனம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 1, 2, 11, 12, 19, 20, 28, 29. பாதக நாட்கள்: 3, 4, 5, 17, 18, 24, 25, 31.
மிருகசீரிஷம்: 3, 4-ஆம் பாதங்கள்: ராகு ராசியிலேயே உள்ளார். 5-ல் செவ்வாய், புதன்; சூரியன் விருச்சிகத்தில். கற்பனை மற்றும் கண்மூடித்தனமான நம்பிக்கை இம்மாதம் பின்விளைவைத் தரும். முதல் வாரம் 6, 7 தேதிவரை மனம் வேகமாக செயல்படாது. இரண்டாவது வாரம் கால்வலி, நெஞ்சுவலி என ஆரோக்கியம் கவலை தரும். 15 தேதிக்குமேல் எந்த எதிர்வினையும் உங்களை அண்டாது. ராசிக்கு 9-ல் நெப்டியூன் என்ற கிரகம். அது ஆன்மிக ஈடுபாடு, தெய்வீகச் சுற்றுலா, வெளிநாட்டு உறவுகளை பலப்படுத்தும். பிரதி சனிக்கிழமை அதிகாலை வேங்கடேச சஹஸ்ரநாமம் முழுவதையும் எழுத்துப்பிழையின்றி ஒருமுறை கூறல் நன்று. ஸ்ரீவேங்கடேசர் அருள் கிடைக்கப்பெறும். நீண்டநாள் வளர்ந்த எலுமிச்சை செடியின் வேரை சுத்தம் செய்து, பாலில் ஊறவைத்துப் பருகினால் குரு எல்லா கெடுதலையும் அகற்றுவார்.
திருவாதிரை: வாழ்வின் தன்மைதனை மெருகுறச் செய்ய பல சந்தர்ப்பங்கள் நாடிவரும். நல்ல முடிவுகள் உங்களை வழிநடத்தும். எனினும் பொருளாதார நெருக்கடி தொடரும். மாதர்களுக்கு சில பொறுப்புகள் 17, 18 தேதிகளில் வந்தடையும். வியாபாரிகள் புதுக்கிளைகள் தொடங்கலாம். மாணவர்கட்கு 22, 23 தேதிகள் மதிப்பெண்ணை அதிகரிக்கச் செய்யும். இடக்கையில் வெள்ளி உலோக மோதிரம் அணிவது நன்று. நெடுஞ்சாலையோரம் தெற்கு தலைவாசல் வீடு, கட்டடம் அமைந்திருந்தால், புதன்கிழமை பிறருக்கு சர்க்கரைப் பொங்கல் தானம் கொடுப்பதால் கெடுதல் அகலும். ராகுவுக்கு நேரெதிர் தனுசு ராசியில் கேது- சனி, பிற கிரகக் கெடுதலை அகலச்செய்ய, ஒரு எலுமிச்சைப் பழத்துடன் நான்கு மரக்கரித்துண்டை சிவப்புத்துணியில் முடித்து திருஷ்டிசுற்றி நீர்நிலையில் போடல் நன்று.
புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்: "நான் யார் தெரியுமா? நான் நினைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?' என்பவை போன்ற வேகமான வார்த்தைகளை விரக்தியின் எல்லை யில்போய் பேசுவீர்கள். 24, 25 தேதிக்குள் பல பிரச் சினைகள் கச்சிதமாக முடிந்துவிடும். ராசிக்கு 7-ல் சுக்கிரனும் குருவும் இருக்கிறார்கள். எனவே சில கணவன்- மனைவியின் நல்லுறவில் விரிசல் ஏற்படலாம். வியாபாரத்திலும் மனபேதம். இத்துடன் உங்களுடைய சொந்த ஜாதகத்தில் சனி தசை சுக்கிர புக்தி நடந்துகொண்டிருந்தால் யாவரிடமும் நல்லுறவைப் பெருக்கவேண்டும். பிரிந்த தம்பதிகள் இம்மாதம் சட்டரீதியாக ஒன்றுசேர முயல்வது கூடாது. ஒரு வெண்கலக் கிண்ணத்தில்பாதாம் பருப்பை நிரப்பி விஷ்ணு கோவிலுக்கு சமர்ப்பிப்பது நல்லது.
கடகம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 3, 4, 5, 13, 14, 21, 22, 31, பாதக நாட்கள்: 6, 7, 19, 20, 26, 27.
புனர்பூசம் 4-ஆம் பாதம்: புதனும் செவ்வாயும் ராசிக்கு 4-ல். ராகு, ராசிக்கு 12-ல். புதுமணத்தம்பதிகள் இம்மாதம் 3, 4, 5 தேதிகளில் தேனிலவு தவிர்க்கவும். பயணம் சிக்கலில் முடியும். மாதர்கள் இம்மாதம் அதிகமான பொறுப்பு களை ஏற்பது கூடாது. கடன்பட்டோர் கலங்க நேரிடும். 15 தேதிக்கு மேல்தான் மனம் அமைதியுறும். ராகு, வசதிபடைத்த மாமனாரி டம் தேவைகளை வாங்கித்தர துணை புரிவார். ஆலயங்களுக்கு நேராக சந்து இருந்து, அங்கு வீடு அமைந்து குடியிருந்தால் திருட்டு பயம் இருக்கும். வெளியூர் போக நேர்ந்தால் தென்னந்துடைப்பத்தை வாசலின் ஓரம் செங்குத்தாக- அடிப்பாகம் கீழே உள்ள விதமாக வைத்துவிட்டுப் போதல் நன்று. எக்காரணமுமின்றி கண்ணில் நீர் வடிந்தால் அங்காரகனை சிவப்பு மலரால் வணங் கலாம்.
பூசம்: தனுசு ராசியில் ஐவர் சங்கமம். ராசிக்கு 8-ல் நெப்டியூன் இருப்பதால், இளை ஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், பட்டதாரிகட்கு அற்புதமான மாதம். மேடைப் பேச்சாளர்கள் மூன்றாவது வாரம் அதிக நன்மைகளை எதிர் பார்க்கலாம். வியாபாரம் செய்வோர் 19, 20, 21 தேதிகளில் பதுக்கல் வியாபாரம் கூடாது. சனி பகவான் தனுசில் இருப்பதால் உடம்பில் சிறு காயங்கள் ஏற்பட்டாலும் உதாசீனப் படுத்து வது கூடாது. 3 அல்லது 6 புதன்கிழமை ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பது நன்று. பிரஹஸ்பதி மந்திரம் கூறுவது நன்மைகளை அதிகரிக்கச் செய்யும். "ஓம் பராவசாய வித்மஹே: குருவ்யக் தாம் தீமஹி: தந்நோ குரு ப்ரசோதயாத்.'
ஆயில்யம்: ஏழ்மை சூழ்ந்திருக்கும் உங்கள் மனதை இம்மாதம் உற்சாகப்படுத்தலாம். மாணவர்களுக்கும், கல்வி போதிப்போருக்கும் அற்புத நேரம். 23-ஆம் தேதி தேர்வு இருந்தால் புறப்படும்முன் எல்லா உபகரணங்களும், பிற தேவைகளும் கைவசம் இருக்கிறதா என சோதித்து புறப்படல் நன்று. உத்தியோகத்தில் பளு இருந்தால் 26, 27 தேதிகள் மனம் நிம்மதி பெறும் விதமாக செவ்வாய் பேராதரவு தருவார். செவ்வாய் ராசிக்கு 4-ல் இருப்பதால், ஆண் குழந்தைகட்கு உடல் உபாதை, பிற பின்ன டைவு வராதிருக்க, ஒரு சிறு தேன் புட்டியை வாங்கி, குழந்தையை கிழக்கு நோக்கி நிற்க வைத்து திருஷ்டிசுற்றி ஓடும் நீரில் போட்டால் பல கெடுதல்கள் விடைகொடுக்கும்.
சிம்மம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 6, 7, 15, 16, 24, 25. பாதக நாட்கள்: 1, 2, 8, 9, 17, 18, 26, 28, 29.
மகம்: இம்மாதம் உங்களுடைய நம்பிக்கை யின் அளவுதான் உங்களின் வெற்றியின் அளவைத் தீர்மானிக்கப் போகிறது. மாதத்தின் முதல் வாரம் பணப்பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கப் பாடுபடும். விருந்தினர் வருகையை சமாளிக்கவேண்டும். தடைப்பட்ட வருமானம் புத்துயிர் பெறும். ராசிக்கு 5-ல் குருவுடன் சூரியன் இணைவதால் மூத்த குடிமகன்களுக்கு மனம் போல் நல்லவை நடக்கும். அலுவலகப் பணி யாளர்கள் எல்லா கோணத்திலும் இம்மாதம் தயக்கத்துடன் செயல்படநேரிடும். ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. அதாவது ஒரு செம்புப் பாத்திரத்தில் சிவப்புநிற மலர்களைத் தண்ணீரில் மிதக்க விட்டு, காலையில் சூரிய உதயகாலத்தில் அவரை கீழ்திசை நோக்கி வணங்குதல் நல்லது. கிரக தோஷங்கள் மறையும்.
பூரம்: "ஒரு வாய்ப்பை உதறித்தள்ளுவது ஒருபோதும் பயனளிப்பதில்லை' என்பதை உணர்த்தும்விதமாக, நல்ல வாய்ப்பை எதிர்பார்க்கலாம். 13, 14 தேதிகளில் சுக்கிரன் அதைச் செய்வார். அலுவலகத்தில் இம்மாதம் மாதாந்திர கலந்தாலோசித்தல் நடந்தால் உயரதிகாரிகளிடம் எதுவும் பேசாதிருப்பது நன்று. பெண்களுக்கு 19, 21 தேதிகளில் செலவினம் அதிகரிக்கும். கேது, சனியுடன் தனுசில் இருப்பதால், வயிறு சார்ந்த, ஜீரண உறுப்புகள் தொல்லை வரும். உணவில் கட்டுப்பாடு வேண்டும். 28, 29 தேதிகளில் பழைய நண்பர் பேராதரவால் பல நன்மைகள் வந்தடையும். சனிப் பிரதோஷத்தன்று பைர வருக்கு தயிரன்னம் படைத்து வழிபட்டால், அரசுசார்ந்த மற்றும் பிற வழக்குகள் யாவும் வெற்றி.
உத்திரம் 1-ஆம் பாதம்: நீங்கள் தடுமாறிக் கீழே விழுவதைப் பார்க்க விரும்புவோரின் ஆசை இம்மாதம் நிறைவேறாது. மூன்றாவது வாரம் பல பணப்பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும். பெண்களுக்கு 30, 31 தேதிகளில் குடும்பச்சுமை அதிகமாகும். உடன் பிறந்தோரின் தேவைகளையும் பூர்த்திசெய்ய நேரிடும். பதினொன்றில் ராகு; தந்தையின் சொத்தை அடகுவைத்துப் பணம்பெறுவது கூடாது. உள்ளங்கையின் சந்திரமேட்டில் கரும்புள்ளி காணப்பட்டால் அந்த முயற்சி யைக் கைவிடல் மிக நன்று. தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் (நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்) அகல் விளக்கில் ஏற்றி வழிபட்டால், காலத்தினால் தீர்க்கவியலாத பல தொல்லைகள் அகன்று நல்லருள் கிடைக்கும்.
கன்னி
ராசிக்கு சிறந்த நாட்கள்: 8, 9, 17, 18, 26, 27. பாதக நாட்கள்: 3, 4, 5, 11, 12, 24, 25, 31.
உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: உங்களுடைய தற்போதைய அந்தஸ்து சிதறா வண்ணம் கிரகநாதர்கள் அரண்போல் செயல்படுவார்கள். இளஞ்ஜோடிகளுக்கு புகுந்த இடத்தில் பெருமை ஓங்கும். மணமாகாதோருக்கு திருமணம் கைகூடும். அலுவலகப் பணியாளர்களுக்கு 8, 9, 10 தேதிகள் மனஅமைதி கெடச் செய்யும். புளூட்டோ என்ற கிரகம் 4-ல் இருப்பதால், நீங்கள் நீண்டநாட்களாக எதிர்பார்த்த சிற்றின்பத் தாக்கம் சுக்கிரனின் பேராதரவால் நிறைவேறும். கண் உபாதை வந்தால் உதாசீனம் செய்வது கூடாது. ராகுவின் பாதிப்பால் பொருளாதாரம், மருத்துவத்துறையினருக்கு பின்னடைவு தரும். அதிக கடன் இருப்போர் தனிமையில் இருந்து கவலை கொள்வதைத் தவிர்க்கவேண்டும். வியாழக்கிழமை ராகு காலத்தில் அல்லது மாலையில் பழங்களில் மிளகு தீபமேற்றி வழிபடலாம். கடலைப் பருப்புப்பொடி கலந்த சாதமும் நன்று.
ஹஸ்தம்: "நம்மிடம் ஏராளமான செயல் வேகம் இருக்கிறது' என நிரூபணம் செய்யவேண்டிய மாதம். எதிரியின் வேகத்தை செவ்வாய் அதிகரிக்கத் துணை போவார். 13, 14 தேதிகளில் புது அனுபவத்துடன் செயல்பட்டு எதையும் சமாளிக்கப்போகிறீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்பைவிட அதிக கவனம் செலுத்தல் வேண்டும். மணமகன் வரதட்சணை விவகாரங்களில் தன்னிறைவு பெறலாம். மின்சார இலாகா பணியாளர்கள் ராகு பகவானை கும்பிட்டு ஆசிபெறுவது மிக நல்லது. இம்மாதம் பெண் குழந்தை பிறந்தால் (ஒருமாதம்) முதிர்ந்த குழந்தைகளின் பழைய சிறுவயது ஆடையை உபயோகிப்பதால் மகரத்தில் இருக்கும் சுக்கிரன் கெடுதலைப் போக்குவார்.
சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்: இம்மாதம் சிறப்பாக- டிப்டாப்பாக தோற்றமளிக்க வேண்டும். ஆடவர்கள் தாடியுடன் உலாவருவதைத் தவிர்க்கலாம். தலைவாசலைவிட உள்வாசல் பெரிதாக இருந்தால் செவ்வாய்க்கிழமைகளில் தலைவாசலில் வேப்பிலைத் தோரணம் கட்டுதல் நன்று. இல்லையேல் வரவேண்டிய வருமானம் வராது. 24, 25 தேதிகளில் சுகவாசஸ்தலம் போகலாம். போகுமிடத்தில் உடமைகள்மீது கவனம் வேண்டும். திருமணப் பரிசாக எவருக்கும் எவர்சில்வர் பாத்திரம் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். நீண்டநாட்களாக வருமானத்தடை இருந்தால் கூறவேண்டிய மந்திரம்: "ஊர்த்வரே தஸ்ஸுதஸ் தூர்த்வ கதிதஸ்தூர்வப பாலக:/ ஊர்ஜிதஸ் தூர்த்வ ஊர்த்வ லோகைக நாயக:' 18 நாட்கள் கூறுவது போதுமானது.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 93801 73464