அதர்மத்தை அழிக்க பகவான் அவதார மெடுப்பார் என்பது நமது நம்பிக்கை. 26-12-2019 அன்று தனுசு ராசியில் சம்பவிக் கப்போகும் ஆறு கிரகங்களின் சேர்க்கை யும், சூரிய கிரகணமும் கடவுள் மறு அவதார மெடுத்து உலக மக்களை அழிக்க வந்து விட்டாரோ என்ற பீதியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
காலை எழுந்தவுடன் செய்தித்தொலைக் காட்சிகள், நாளிதழ்கள் என அனைத்து மீடியாக்களிலும் ராசிபலனுடன் சூரிய கிரகணம், ஆறுகிரக இணைவுகள் பற்றிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின் றன. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், ‘கிரகங்களின் நகர்வு இயற்கை. இதை நம்பாமல், பிழைக்கும் வழியைப் பாருங்கள்'’ என்று எளிதாகக் கூறிவிடுவார்கள். ஜோதிடத் தில் நம்பிக்கை உள்ளவர்கள், எதையும் தாங்கும் மனப்பக்குவமுள்ளவர்கள் கிரகப் பெயர்ச்சி பற்றிய பலனைப் படித்து விட்டு,‘"எல்லாம் படைத்தவன் பார்த்துக் கொள்வான். கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!'’ என்று, அடுத்த வேலையில் கவனம் செலுத்துவார்கள். பலவீனமான மனமுடையவர்கள் பார்த்தது, படித்தது அனைத் தையும் நினைத்துக் குழப்பமடைகிறார்கள்.
சூரிய கிரகணமும், ஆறு கிரகங்களின் சேர்க்கையும் நாட்டிற்கும், நாட்டு மக்களுக் கும் பாதிப்பைத் தருமா என்பதன் ஆய்வே இந்தக் கட்டுரை. சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டிற்கு வரும் அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணம் ஏற்படும்.
அந்தத் தருணத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சந்திரனின் நிழலால் மறைக்கப்படுகிறது. ஒவ்வோராண்டும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் வருவது வழக்கம். அந்த நிகழ்வின் ஒருபகுதியாக, இவ்வாண்டு இரண்டாவது சூரிய கிரகணம் டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி நடக்கவுள்ளது.
ஸ்வஸ்திஸ்ரீ மங்களகரமான விகாரி வருடம், மார்கழி மாதம் 10-ஆம் தேதி, (26-12-2019), வியாழக்கிழமை காலை 8.00 மணிமுதல் பகல் 1.35 மணிவரை மூல நட்சத்திரத்தில் நிகழும் கேது கிரஹஸ்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, சென்னை சூரிய உதயப்படி, (26-12-2019) வியாழக்கிழமை, காலை 8.08 மணிக்கு ஆரம் பித்து, பகல் 11.19 மணிக்கு முடிவடைகிறது.
ஆறு கிரகங்களின் சேர்க்கை விகாரி வருடம், மார்கழி மாதம் 9-ஆம்தேதி (25-12-2019), புதன்கிழமை மாலை 5.10 மணி யளவில் ஆரம்பித்து, 27-12-2019, வெள்ளிக் கிழமை இரவு சுமார் 12.30 மணிவரை நீடிக்கிறது.
தனுசு ராசியில் சூரியன், சந்திரன், புதன், குரு, சனி, கேது ஆகியவை சஞ்சாரம் செய்யும் காலத்தில், மிதுனத்திலுள்ள ராகுவின் பார்வை ஆறு கிரகங்களுக்கும் ஏற்படுவது அபூர்வ நிகழ்வு. தனுசு நெருப்பு ராசி. மிதுனம் காற்று ராசி. காற்றுக்கு நெருப்பைப் பெருக்கும் சக்தி உண்டு. தான் நின்ற பாவகத்
அதர்மத்தை அழிக்க பகவான் அவதார மெடுப்பார் என்பது நமது நம்பிக்கை. 26-12-2019 அன்று தனுசு ராசியில் சம்பவிக் கப்போகும் ஆறு கிரகங்களின் சேர்க்கை யும், சூரிய கிரகணமும் கடவுள் மறு அவதார மெடுத்து உலக மக்களை அழிக்க வந்து விட்டாரோ என்ற பீதியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
காலை எழுந்தவுடன் செய்தித்தொலைக் காட்சிகள், நாளிதழ்கள் என அனைத்து மீடியாக்களிலும் ராசிபலனுடன் சூரிய கிரகணம், ஆறுகிரக இணைவுகள் பற்றிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின் றன. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், ‘கிரகங்களின் நகர்வு இயற்கை. இதை நம்பாமல், பிழைக்கும் வழியைப் பாருங்கள்'’ என்று எளிதாகக் கூறிவிடுவார்கள். ஜோதிடத் தில் நம்பிக்கை உள்ளவர்கள், எதையும் தாங்கும் மனப்பக்குவமுள்ளவர்கள் கிரகப் பெயர்ச்சி பற்றிய பலனைப் படித்து விட்டு,‘"எல்லாம் படைத்தவன் பார்த்துக் கொள்வான். கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!'’ என்று, அடுத்த வேலையில் கவனம் செலுத்துவார்கள். பலவீனமான மனமுடையவர்கள் பார்த்தது, படித்தது அனைத் தையும் நினைத்துக் குழப்பமடைகிறார்கள்.
சூரிய கிரகணமும், ஆறு கிரகங்களின் சேர்க்கையும் நாட்டிற்கும், நாட்டு மக்களுக் கும் பாதிப்பைத் தருமா என்பதன் ஆய்வே இந்தக் கட்டுரை. சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டிற்கு வரும் அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணம் ஏற்படும்.
அந்தத் தருணத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சந்திரனின் நிழலால் மறைக்கப்படுகிறது. ஒவ்வோராண்டும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் வருவது வழக்கம். அந்த நிகழ்வின் ஒருபகுதியாக, இவ்வாண்டு இரண்டாவது சூரிய கிரகணம் டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி நடக்கவுள்ளது.
ஸ்வஸ்திஸ்ரீ மங்களகரமான விகாரி வருடம், மார்கழி மாதம் 10-ஆம் தேதி, (26-12-2019), வியாழக்கிழமை காலை 8.00 மணிமுதல் பகல் 1.35 மணிவரை மூல நட்சத்திரத்தில் நிகழும் கேது கிரஹஸ்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, சென்னை சூரிய உதயப்படி, (26-12-2019) வியாழக்கிழமை, காலை 8.08 மணிக்கு ஆரம் பித்து, பகல் 11.19 மணிக்கு முடிவடைகிறது.
ஆறு கிரகங்களின் சேர்க்கை விகாரி வருடம், மார்கழி மாதம் 9-ஆம்தேதி (25-12-2019), புதன்கிழமை மாலை 5.10 மணி யளவில் ஆரம்பித்து, 27-12-2019, வெள்ளிக் கிழமை இரவு சுமார் 12.30 மணிவரை நீடிக்கிறது.
தனுசு ராசியில் சூரியன், சந்திரன், புதன், குரு, சனி, கேது ஆகியவை சஞ்சாரம் செய்யும் காலத்தில், மிதுனத்திலுள்ள ராகுவின் பார்வை ஆறு கிரகங்களுக்கும் ஏற்படுவது அபூர்வ நிகழ்வு. தனுசு நெருப்பு ராசி. மிதுனம் காற்று ராசி. காற்றுக்கு நெருப்பைப் பெருக்கும் சக்தி உண்டு. தான் நின்ற பாவகத்தின் பலனைப் பெருக்குவதே ராகுவின் தன்மை. இந்த நிலையில், காற்று ராசியில்- சுயசாரத்தில் எந்த "ஸ்பீடு பிரேக்'குமில்லாமல் ராகு தனியாக உலவிக்கொண்டிருக்கிறார். இந்த அமைப்பு நெருப்புக்கும் காற்றுக்குமான மிகப்பெரும் போராட்டமான அமைப்பாக வரும். கிரகணம் சம்பவிக்கும் தனுசு நெருப்பு ராசி, ராகு நிற்கும் மிதுனம் காற்று ராசி என்பதால்ஏற்படும் புவியியல் மாற்றத்தால் மூன்று நாட்களுக்கு முன்பே அடைமழை பெய்யும் அபாயமுள்ளது.
புதன் வீட்டில் ராகு இருப்பதால், தகவல் தொடர்பில் பிரச்சினை வரலாம். பலருக்கு உஷ்ண நோய்த் தாக்கமும் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த மூன்று நாட்களும் அனைவருக்கும் சனி + சந்திரன், சந்திரன் + கேது சேர்க்கையால் மன சஞ்சலம், மனச் சோர்வு, மறதி, காரியத்தடை, பதட்டம், கோபம், ரத்த அழுத்தம், சோம்பல், இனம் புரியாத உடல் வலி இருக்கும். மனிதர்களின் மனநிலையும், புத்தியும் சற்று பாதிக்கும்.
இந்த கிரகங்களின் சேர்க்கையில் குருவின் பார்வை ராகுவுக்கு இருப்பதால், பெரும் அபாயம் நிச்சயமாகத் தடுக்கப்படும். தனுசு ராசியில் மட்டுமே எந்த ஒரு கிரகமும் உச்சமோ, நீசமோ, பகையோ கிடையாது. இதனால் எந்த தீய பாதிப்பையும் தரவியலாது. திடீர் விபரீதவிளைவை ஏற்படுத்த சனி- செவ்வாய் சம்பந்தமிருக்க வேண்டும். இந்த ஆறு கிரகங்களின் இணைவில் சனிக்கு செவ்வாய் சம்பந்தமில்லை என்பதால், கிரக யுத்தம் ஏற்படும் வாய்ப்பில்லை. தனுசு ராசியின் அதிபதி குரு பகவான் ஆட்சி பலம்பெற்று, மூலத்திரிகோணம் அடைந்திருக்கிறார். மேலும், கெட்ட செயல்களை வளர்ப்பது ராகுவே; கேது அல்ல. கெட்ட விஷயங்களைக் கேது வடிகட்டிவிடுவார் என்பதால் கவலைப்பட வேண்டாம்.
அமாவாசை 25-12-2019 (மார்கழி 9) அன்று காலை 11.59 மணிக்கு ஆரம்பித்து, 26-12-2019 வியாழன் காலை 10.27 மணிவரை உள்ளது. 25-12-2019 புதன்கிழமை, மார்கழி மாத மூல நட்சத்திரம் என்பதால், அன்று அனுமன் ஜெயந்தி. அனுமன் வழிபாடு எந்த ஆபத்து மில்லாமல் அனைவரையும் காக்கும் என்பதால், புதன், வியாழன் ஆகிய இரண்டு நாட்களும் ஸ்ரீராமஜெயம் எழுதவேண்டும் அல்லது பாராயணம் செய்யவேண்டும். இதனால் நாட்டிற்கும் வீட்டிற்கும் நலம் உண்டாகும்.
பலவகையான தோஷமிருந் தாலும், கிரகண தோஷம் பலவிதமான நெருடலை மனிதர் களுக்குத் தந்துகொண்டேதான் இருக்கிறது. கிரகண தோஷத் திற்குப் பல தீர்வுகள் உண்டு. விண்வெளியிலுள்ள அனைத்துக் கோள்களும் சூரியனின் ஒளியைப்பெற்று இயங்குவதால், சூரிய ஒளியிலிருந்துவரும் புற ஊதாக்கதிர்கள் மற்றும் அகச்சிவப்புக் கதிர்களே பூமிக்குப் பரிபூரண இயக்கத்தைத் தருகின்றன. இந்த சூரிய ஒளியை நிழல் கிரகங்களான ராகு- கேதுக்கள் மறைக்கும்போது பூமிக்குக் கிடைக்கும் ஒளிசக்தித் திறன் குறைகிறது. அதனால் கிரகண காலத்திற்கு முன்- பின் ஏழு நாட்கள் பூமிக்கு தோஷ காலமாகும்.
கிரகணம் சம்பவிக்கும்போது சூரியன் + கேது சேர்க்கையை குரு பார்த்தாலோ சேர்ந்திருந் தாலோ சுபத்தன்மை மிகுதியாக இருக்கும். குரு சம்பந்தம் பெறும் கிரகணத்தில் பிறந்த குழந்தைகள் எதையும் சாதிக்கும் வல்லமை பெற்றவர்கள். அவர்களுக்கு சூட்சும சக்திகள் மிகுதியாக இருக்கும். தீயசக்திகள், பில்லி சூனியம், மாந்த்ரீகம், செய்வினை எளிதில் தாக்காது. கிரகணத்திற்கு சனி, செவ்வாய் சம்பந்தம் இல்லாததால், அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
மனிதனை லௌகீக வாழ்விற்கு அழைத்து, துன்பத்தை வழங்குபவர் ராகு பகவான் என்றால், துன்பத்திலிருந்து விடுபடும் ஞானத்தை அள்ளிவழங்குபவர் கேது பகவான் ஆவார். தவறான எண்ணங்கள், தர்மமில்லாத- தீங்கான செயல்களைச் செய்தால் ராகு- கேது ஜாதகத்தில் தோஷமாக அமர்ந்து மனவேதனையைத் தருகின்றன. நேர்மை, நாணயத்துடன் இருப்பவர்களுக்கு யோகம் தரும் இடத்தில் அமர்ந்து சுபப் பலன்களை வாரிவழங்குவார்கள்.
நியாயமான, நீண்டநாட்களாக நிறை வேறாத கோரிக்கை உடையவர்கள், ஜனனகால ஜாதகத்தில் கிரகண தோஷத்தால் பாதிக்கப் பட்டவர்கள் கிரகண நேரத்தில் நீராடி தியானம், ஜபம் செய்தால் ஆன்ம பலம் கிடைக்கும். ஆன்மா சுத்தியடையும்போது அடையமுடியாத வெற்றியே கிடையாது.
ஒருவருக்கு கிரகண தோஷம் வராமலிருக்க கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகள்:
குலதெய்வம் மற்றும் ஊரின் எல்லை, காவல்தெய்வ வழிபாட்டை முறையாகச் செய்யவேண்டும்.
வட்டித்தொழில் செய்பவர், மீட்டர் வட்டி, கந்து வட்டி வசூலித்து, இயலாதவரைத் துன்புறுத்தக்கூடாது.
முன்னோர்களுக்கு முறையான திதி, தர்ப்பணம் செய்யவேண்டும்.
முன்னோர்களின் சொத்துகளையோ, அவர் கள் வாழ்ந்த வீடுகளையோ நியாயமில்லாத காரணத்திற்கு விற்கவோ அழிக்கவோ கூடாது.
பொய் சாட்சி சொல்லக்கூடாது.
குருவிக்கூடு, பாம்புப் புற்றிருந்தால், அவற் றால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லை யெனில் அதை அகற்றக்கூடாது.
நிழல் தரும் மரங்களை வெட்டக்கூடாது.
அரசுக்குச் சொந்தமான இடம், கோவில் சொத்துகளைத் தந்திரமாகக் கையகப்படுத்தக் கூடாது.
புனித தீர்த்தங்களை மாசுபடுத்தக்கூடாது.
பரிகாரம்
25-12-2019 அன்றிரவு 10.00 மணிக்குமேல் உணவு சாப்பிடக்கூடாது.
தர்ப்பை இட்ட நீரே அருந்தவேண்டும்.
கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது.
கர்ப்பிணிப் பெண்கள் வெளியே செல்லக்கூடாது.
உயிர்காக்கத் தேவையான நிலையில் அறுவை சிகிச்சை செய்யலாம். மற்றவர்கள் இரண்டு நாள் கழித்து அறுவை சிகிச்சை செய்யலாம்.
வெளியூர்ப் பயணத்தைத் தவிர்த்தல் நலம்.
கிரகணம் முடிந்தபிறகு நீராடிவிட்டு, வீட்டை சுத்தம்செய்து, அருகிலுள்ள கோவிலுக் குச் சென்று வழிபாடுசெய்து, புதியதாக சமைத்த உணவை உண்ணலாம்.
கிரகணம் நடந்துகொண்டிருக்கும்போது காயத்ரி மந்திரம், ராம நாமம், திருக்கோளறு பதிகம் ஆகியவற்றைப் பாராயணம் செய்ய லாம்.
காற்று ராசியான மிதுனத்தில் ராகு சஞ்சாரம் செய்வதால், பரிகாரங்கள்- பாராயணம் செய்யும் மந்திர ஜபமாக இருப்பது மிகவும் நன்மை தரும். நாட்டு நலனுக்கு எல்லாரும் கூட்டுப் பிரார்த்தனையாக, அவரவர் பகுதியிலுள்ள கோவில்களில் கூட்டாக இணைந்து சாந்தி மந்திரத்தை ஆத்மார்த் தமாக ஜெபித்துவர, அளவிடமுடியாத நன்மை உண்டாகும்.
"ஓம் ஸஹநா வவது ஸஹநௌ புனஸ்து
ஸஹ வீர்யம் கரவா வஹை தேஜஸ்
விநாவதீ தமஸ்து மாவித் விஷாவஹை
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:'
தோஷம் பெற்ற நட்சத்திரங்கள்:
கேட்டை, மூலம், பூராடம், அஸ்வினி, மக நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் குளித்துவிட்டு, அருகிலுள்ள கோவிலுக்குச் சென்று அவரவர் பெயருக்கு அர்ச்சனை செய்யவேண்டும்.
மேஷம்
அஸ்வினி நட்சத்திரத்தைச் சேர்ந்தவர் களுக்கு மட்டும் பாதிப்பிருக்கும். தந்தைக்கு ஆரோக்கியக் குறைபாடிருக்கும். தந்தை மற்றும் தந்தைவழி உறவினர்களிடம் சர்ச்சைக் குரிய விஷயங்களை இரண்டு நாட்களுக்குப் பேசக்கூடாது. ஆன்மிகச் சுற்றுலா சென்றுவரும் எண்ணம் மிகும். ஒத்திப்போடுவது நலம்.
அஸ்வினி நட்சத்திரத்தைச் சேர்தவர்கள் குலதெய்வ வழிபாடு செய்யவேண்டும். பொதுவாக, மேஷ ராசியினர் தாய்- தந்தை, ஆசிரியர்கள், ஜோதிட ஆசான்கள், குருவாகக் கருதப்படும் முன்னோர்களை வணங்கி, முதியவர்களுக்கு உணவு, உடை கொடுத்து அவர்களின் ஆசிர்வாதம் பெறலாம்.
ரிஷபம்
8-ஆமிடத்தில் ஆறு கிரகங்களின் சேர்க்கை. அஷ்டமாதிபதி குரு அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சிபலம் பெறுகிறார். இரண்டு நாட்கள் வெளியூர்ப் பயணத்தைத் தவிர்க்கவேண்டும். சந்திராஷ்டம் என்பதால் பணப் பரிவர்த்தனை கூடாது. மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
ஒரு வருடத்திற்கு ராம நாமம் ஜெபித்து வர பல நன்மைகளை அடையலாம்.
மிதுனம்
இரண்டு நாட்கள் கணவன்- மனைவி கருத்து வேறுபாடு மிகுதியாக இருக்கும். அதனால் வருந்தவேண்டாம். இரண்டு நாட்கள் புதிய தொழில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடாது. தொழில் கூட்டாளி களிடம் வம்பு, வழக்கு எதுவாக இருந்தாலும் இரண்டு நாட்கள் கழித்துப் பேசலாம்.
சக்கரத்தாழ்வார் வழிபாடு உங்களை நன்முறையில் வழிநடத்தும்.
கடகம்
6-ஆமிடத்தில் ஆறு கிரகங்களின் சேர்க்கை. 6-ஆம் அதிபதி 6-ல் ஆட்சி. ஒரு வருடத்திற்கு கடன் வாங்குவதைத் தவிர்க்கவேண்டும். எதிரிகள் தொல்லை, நோய்த் தாக்கம் மிகும். இரண்டு நாட்களும் வீட்டுணவைச் சாப்பிட்டு ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும்.
ஒரு வருடம் தொடர்ந்து சிவ வழிபாடு செய்யவும்.
சிம்மம்
குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்படலாம். எந்த விவாதத்திலும் ஈடுபடக் கூடாது. வெளியூர்ப் பயணத்தைத் தவிர்க்க வேண்டும். பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சைகளை ஒரு மாதத்திற்குப் பேசக்கூடாது.
மக நட்சத்திரத்தினர் குலதெய்வ வழிபாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் ஊரின் காவல் தெய்வத்தை வழிபட, பாதிப்பு நேராது.
கன்னி
உற்றார்- உறவினரிடம் வம்பு, வழக்கில் ஈடுபடக்கூடாது. தாயின் ஆரோக்கியத்திற்கு வைத்தியம் செய்யநேரும். வீடு, வாகனம் தொடர்பான முயற்சியை 15 நாட்கள் ஒத்திப்போடவும்.
பெருமாள் வழிபாட்டைக் கடைப் பிடிக்கவும்.
துலாம்
வெளியூர்ப் பயணம் செய்யநேரும். புதிய முயற்சிகள் வெற்றிதரும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம். உடன்பிறந்தவர்களைப் பகைக்கவேண்டாம். காது, மூக்கு, தொண்டை பிரச்சினை தரும். சகோதரர் அல்லது மாமனாருக்கு உடல்நலம் குறையும்.
உச்சிஷ்ட மகா கணபதி வழிபாடு நன்மை தரும்.
விருச்சிகம்
பணவரவு மிகும். யாருக்கும் கடன் கொடுக்கக்கூடாது. ஜாமின் போடக்கூடாது. கேட்டை நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆரோக்கியக் குறைபாடு இருக்கும். வெளியூர்ப் பயணத்தை ஒரு வாரத்திற்கு ஒத்திப்போடவும்.
முருகன் வழிபாடு நன்மை தரும்.
தனுசு
குழப்பம், மனசஞ்சலம் மிகும். "ஃபுட் பாய்ஸன்' ஏற்படலாம். வீட்டுச் சாப்பாட்டை சாப்பிடவேண்டும். அரசியல்வாதிகள் இரண்டு மாதங்களுக்குப் புதிய முயற்சி எடுக்கக் கூடாது. நீண்டநாட்களாகத் தீராத பல பிரச்சிகளுக்குத் தீர்வு கிடைக்கும். பெரிய பாதிப்பு எதுவும் நேராது.
மூல நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் குலதெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு வாரத்திற்கு ஸ்ரீராமஜெயம் எழுதவும். ஆஞ்சனேயர் வழிபாடு உங்களைக் காப்பாற்றும்.
மகரம்
சுபவிரயம் மிகும். செலவு அதிகமாகும். வீட்டில் பொருட்களைபத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். தூக்கம் குறையும். பயவுணர்வு இருக்கும். சிந்தனைகள் மாறுபடும். எதையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல், அனைத்திலும் சந்தேகங்களுக்கும், கருத்து வேறுபாடுகளுக்கும் ஆளாகி, சண்டை சச்சரவுகளில் சிக்கித்தவிக்கும் நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது.
விநாயகர் வழிபாடு வினைகளை நீக்கும்.
கும்பம்
வராத பணத்திற்கு முயற்சித்தால் வந்துசேரும். 10-ல் செவ்வாய் ஆட்சி. சிறப் பான பலன் தேடிவரும். கைவிட்டுப்போன தொழில் ஒப்பந்தம் சாதகமாகும்.
அன்னதானத்தால் அளப்பரிய நன்மை தேடிவரும்.
மீனம்
தொழில் விருத்தியாகும். புதிய தொழில் ஒப்பந்தம் செய்யலாம். நன்மை மிகும். தொலைதூரப் பயணம், யாத்திரைகளைத் தவிர்க்கவேண்டும். அலைச்சல் மிகும். வெற்றி, லாபம் உண்டு.
சித்தர்கள் ஜீவசமாதி வழிபாட்டால் நற்பலன்களை மிகுதிப்படுத்த முடியும்.
செல்: 98652 20406