செவ்வாய்க்கிழமை ஆஞ்ச னேயரை வழிபடவேண்டும்.
அப்படி வழிபட்டால், மனதில் தைரியம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும்.
ஒருவரின் ஜாதகத்தில் செவ் வாய் சரியில்லையென்றால், அவருக்கு கடன் பிரச்சினைகள் இருக்கும். சிலர் தைரியமே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப் பார்கள்.
செவ்வாய் பலவீனமாக லக்னத் தில் இருந்து, அதை பாவகிரகம் பார்த்தால், அவருக்கு தைரியமே இருக்காது. எந்த காரியத்தைச் செய்தாலும் அது நடக்குமா, நடக்காதா என்ற தடுமாற் றத்துடன் காணப்படுவார். சிலர் எதையுமே செய்யாமல் வீட்டில் தூங்கிக்கொண்டிருப்பார்கள். அதனால் கடன் பிரச்சினையில் அகப்பட்டுக்கொள்வார்கள்.
ஒரு ஜாதகத்தில் குரு பகவான் 11-ல் உச்சமாக இருந்தால், அவருடைய வாழ்க்கையின் முற்பகுதியில் தந்தையின் சொத் தினை அழிப்பார். சகோதரர்களின் உதவியால் அவரின் வாழ்க்கை வண்டி ஓடிக்கொண்டிருக்கும். கடனாளியாக வாழநேரும்.
4-ஆவது பாவத்தில் சூரியன் தனித்திருந்தால், அவர் கடுமையாக முயற்சித்தாலும் தந்தையின் சொத்து கிடைக் காது. அவருடைய ஜாதகத்தில் 7-ஆவது பாவத்தில் சனி இருந்து, தன் 10-ஆவது பார்வையால் 4-ல் இருக்கும் சூரி யனைப் பார்த்தால், அவருக்கு அடிக்கடி உடல்நலம் கெடும்.
கடன் ஏறிக்கொண்டே இருக்கும். அந்த ஜாதகத்தில் 6-ல் செவ்வாய் இருந்தால், அவருடைய குடும்பத்தில் இருப் பவர்கள் அவர்மீது சூனியம் வைத்திருப்பார்கள். அதன் காரணமாக கடன் பிரச்சினையில் இருப்பார்.
லக்னத்தில் நீசச்செவ்வாய், 7-ல் சனி இருந்தால், ஜாதகர் கடன் சுமையால் அவதிப்படுவார். ஒரு கடன் தீர்ந்தால் இன்னொரு கடன் உண்டாகும்.
லக்னத்தில் நீசச்செவ்வாய், 4-ல் நீசச் சூரியன், 8-ல் ராகு இருந்தால், அந்த ஜாதகர் பிறக்கும்போதே பிரச்சினைகள் இருக்கும். சரியாகப் படிப்பு வராது. கடன் பிரச்சினைகள் உண்டாகும். உறவினர்கள் உதவமாட்டார்கள்.
லக்னத்தில் நீசச் சுக்கிரன் புதனுடன் இருந்தால், அவர் ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டு கடனாளியாகி விடுவார்.
புதன், சுக்கிரன் லக்னத்தில் இருந்து, 12-ல் செவ்வாயும் சூரியனும் இருந்தால், ஜாதகர் கடன் சுமையால் தத்தளித்துக் கொண்டிருப்பார்.
லக்னாதிபதியான சூரியன், கடகத்தில் விரய ஸ்தானத்தில் இருந்தால், தொழிலில் நஷ்டம் உண்டாகி கடனாளியாக இருப்பார்.
கன்னி லக்னத்தில் செவ்வாய் இருந்து, 12-ல் சுக்கிரன், புதன் இருந்து, அதை சனி பார்த்தால், அவர் வசதி படைத்தவராக இருந் தாலும், எதிர்பாராமல் கடன் பிரச்சினையில் சிக்கிக்கொள்வார்.
ராகு 9-ல் இருந்து, 2-ஆம் அதிபதி 12 அல்லது 8-ல் இருந்தால், அவருக்கு ராகு தசை நடக்கும் போது 2-ஆம் பாவாதிபதியின் அந்தரத்தில் அவர் பெரிய கடனாளியாக இருப்பார்.
8-ல் ராகு, 3, 6, 12-ல் செவ்வாய், சனி இருந்தால், அவர் சிறிதும் எதிர்பாராத சூழலிலில் கடன்காரராகி விடுவார்.
சுக்கிரன் 6-ல் நீசமாக இருந்து, 7-ல் செவ் வாய், 10-ல் சனி இருந்தால், அவர் தன் வாழ்க்கையின் முற்பகுதியில் கடனாளியாக இருப்பார்.
6-ல் சுக்கிரன், புதன், சூரியன் இருந்து, 8-ல் ராகு இருந்தால், அவர் தன் சொத்துகளை இழந்து, கடனாளியாக இருப்பார்.
12-ல் சந்திரன், 4-ல் சூரியன், 7-ல் செவ்வாய் இருந்தால், அவர் தன் தந்தையின் சொத்துகளை அழித்துவிடுவார். எந்த வேலையையும் செய்யாமல், நேரத்தை வீணடித்துக்கொண்டு, பிறரைக் குறைகூறிக்கொண்டிருப்பார்.
லக்னத்தில் சூரியன், 2-ல் செவ்வாய், 6-ல் சனி, 9-ல் ராகு இருந்தால், அவர் இளம்வயதில் கஷ்டங்களை அனுபவிப்பார். 28 வயதுவரை கடன் பிரச்சினைகள் இருக்கும். கடுமையாக உழைத்தாலும், நிறைய சிரமங்களை சந்திக்க வேண்டியதிருக்கும்.
பரிகாரங்கள்
செவ்வாய்க்கிழமை தேங்காய், பூ, பழம், செந்தூரம், எண்ணெய் ஆகியவற்றை வைத்து ஆஞ்சனேயருக்கு அபிஷேகம் செய்யவேண்டும். முடிந்தால்... மல்லிலிகை எண்ணெய்யைப் பயன்படுத் தவும். எண்ணெய்யில் செந்தூரத்தைக் கலந்து பகவானுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். ஆஞ்சனேயரின் காலடியில் இருக்கும் செந்தூ ரத்தை எடுத்து, நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும். சுந்தர காண்டம் அல்லது அனுமன் சாலீசா படிக்கவேண்டும். ராம நாமம் கூறவேண்டும். ஆஞ்சனேயரை 11 முறை சுற்றி வந்து, "ஓம் ஹனு... ஹனுமந்தாய நமஹ' என்ற மந்திரத்தை பத்து மாலைகள் (10ஷ்108) கூறவேண்டும். இதை ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் செய்தால் கடன் பிரச் சினையிலிருந்து விடுபடலாம். மன தைரியத்துடன் வாழலாம்.
செல்: 98401 11534