பாரம்பரியம்மிக்க நம் நாட்டின் கலாச்சார முறைப்படி, சில பழக்கவழக் கங்கள் தொன்றுதொட்டு இன்றும் கடைப் பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் ஒரு குறிப்பிட்ட நாள், நேரத்தில் பிறந்த குழந்தைக்கு, அந்த தருணத்தில் அமையும் கிரகங்களின் நிலைகளை ஒட்டி ஜாதகம் கணிப்பதாகும். ஒவ்வொரு குழந்தை யின் ஜாதகம் கணித்து எழுதப்படும் போதும், முதன்முதலில் கீழ்க்காணும் சுலோகம் எழுதப்படுகிறது.

Advertisment

"ஜனனீ ஜன்ம சௌக்யானாம்

வர்த்தனி குல ஸம்பதாம்

பதவீ பூர்வ புண்யானாம்

லிக்தயே ஜன்ம பத்திரிகா.'

இதன் பொருள்:

தன் முற்பிறப்பில் செய்த பாவம், புண்ணியம் ஆகிய கர்ம வினைப்பயன்களைத் தழுவியே, அவற்றின் பலன்களை அனுபவிக்க குழந்தை இப்பிறவி எடுக்கிறது. அதாவது பிறப்பு - இறப்பு- பிறப்பு என்ற சங்கிலித் தொடர் போல முற்பிறவி, இப்பிறவி, அடுத்த பிறவி அமையப் பெறும் என்று கருதப்படு கிறது. முற்பிறவியின் கர்ம வினைப் பயன்களே இந்தப் பிறவியில் தொடரும் என்றாலும், முற்பிறவியைப் பற்றிய எந்தவித நினைவும் இப்பிறவிக்குக் கிடையாது என்பதே பிறவியின் ரகசியம் எனலாம்.

Advertisment

kuberer

இதையே ஆதிசங்கரரும் தனது நூலில் "புனரபி ஜனனம், புனரபி மரணம்'-

அதாவது மறுபடி மறுபடி பிறப்பு- இறப்பு என்று சங்கிலித்தொடர்போல மனிதப்பிறவி அமையும் என்று சுட்டிக்காட்டுகிறார். ஸ்ரீகிருஷ்ண பகவான் பகவத் கீதையில், "மனிதனுடைய உடலுக்குத்தான் அழிவு.

அவனுடைய ஆத்மா என்றும் நிலையானது;

அழிக்க முடியாதது. அது மறுபிறவி எடுக்கிறது'

என்கிறார். அதேசமயம் கடவுள் தாமாகவே

முன்வந்து பிறவி எடுப்பதை அவதாரம் என்பர்.

ஞானப்பேரறிவை(ரண்ள்க்ர்ம்) இறைவனிடமிருந்து வரமாகப் பெற்ற பேரரசர் சாலமன் அவர்கள் (ஙஹய் ர்ச் ரண்ள்க்ர்ம்) இறைவனுக்கு நன்றி தெரிவித்துக்கூறும் புராதன வாக்கியங் கள் இதோ: "ஓ, இறைப்பரம்பொருளே! எல்லாவற்றிற்கும் ஆதியாக இருப்பவனே. உமக்கு எமது நமஸ்காரங்கள். தாங்கள் அடி யேனுக்கு கிரகங்களைப் பற்றிய ரகசியங்களைக் கற்பித் தீர்கள்; காலச்சுழற்சியையும், பருவ மாறுதல்களையும், மனிதகுல இயல்புகளையும், சிந்தனைகளையும் அறிய வைத்தீர்கள். தெரிந்து கொள்ளும் அறிவு ஞானத்தை அளித்தீர்கள். இந்த பாக் கியமே எனது ஞானத்திற்கு அடிப்படை ஆதாரம் என்று கருதுகிறேன். மீண்டும் நன்றிகள் இறைவா' என்பதாகும். மேலும், ஏழு கிரகங்களின் சுழற்சியை மைய மாகக்கொண்டே தனது ராஜமுத்திரையை சின்னமாகக் கொண்டார் என்பதும் உண்மை.

Advertisment

சமீபகாலத்தில் மறுபிறவி பற்றி பிரபல அமெரிக்கத் தொழிலதிபரான ஹென்றி போர்டு (ஐங்ய்ழ்ஹ் எர்ழ்க்) கூறிய கருத்துகளையும் கவனிப்போம். "நினைவாற்றல் என்பது உண்மையின் உரைகல்லுக்கு அப்பாற் பட்டது. மனிதனுக்கு தன் முற்பிறவியைப் பற்றிய நினைவு எதுவும் இல்லாததாலயே முற்பிறவி என்ற ஒன்று கிடையாது என்ற முடிவுக்கு வரக்கூடாது. தாயின் கருவிலே இருந்த காலம் மற்றும் சிறுகுழந்தையாக இருந்த கால நினைவுகளை பெரியவனாகி வளர்ந்தபின் முற்றிலும் மறந்து போகிறான்.

எனினும் தாயின் கருவில் இருந்ததும் உண்மை.

சிறுகுழந்தையாக இருந்ததும் உண்மைதான். இவற்றைப் பற்றிய நினைவு இல்லாததும் உண்மை. எனவே சாஸ்திரங்கள் கூறும் மறுபிறவி (புனர்ஜென்மம்) என்ற கோட் பாட்டில் நம்பிக்கை கொண்டுள்ளேன்.'

இனி, ஜோதிட சாஸ்திரம் கூறும் சனி பகவான் தொடர்பான விளக்கங்களைப் பரிசீலிப்போம். நவகிரகங்களில் மிகவும் மெதுவாகச் சுழல்வதால் மந்தன் என்று அழைப்படுவதுடன் அசுபகிரகங்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். சனி பகவான் என்றாலே ஒருவித கலக்கமும் பயமும், குரு பகவான் என்றாலே குதூகலமும் தோன்றுவது இயற்கை. இத்துடன் சனி தசை, கோட்சார ஏழரைச்சனி, அஷ்டமச்சனி துன்பங்களைத் தரவல்லது என்றும் நம்பப் படுகிறது. உண்மையில் சனி பகவான் தராசுக் கோல் தாங்கும் நீதிதேவதைபோல் நின்று நடு நிலையாக செயல்படுகிறார். தீய செயல் களுக்குரிய தண்டனைகளையும், நற்செயல் களுக்கேற்ற வெகுமதிகளையும் அளிப்பவர் எனலாம்.

ஜோதிட சாஸ்திரப்படி மொத்தமுள்ள 12 வீடுகளில் கீழ்க்காணும் வீடுகளுக்குக் காரகர் என்று அறியப்படுகிறார்.

ஆறாம் வீடு: எதிரிகள், நோய், கடன், வழக்கு, தண்டனை, பயம்.

எட்டாம் வீடு: ஆயுள், நீண்ட வியாதி, மரணபயம், சிறைவாசம், பூர்வீகச் சொத்து, ஆராய்ச்சி மேற்படிப்பு.

பன்னிரண்டாம் வீடு: கஷ்ட- நஷ்டம், விரயம், சயன சுகம், தூக்கம், தண்டனை, அயல்நாட்டு வாசம், மோட்சம்.

ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலைகளில் யோகமும் அடைந்திருந் தால், அந்த நபருக்கு நீண்ட ஆயுள், தலைமைப்பொறுப்பு, வியாபார முன் னேற்றம், கடின உழைப்பு, சிந்தனா விதி, தீர்க்கதரிசி, மத ஈடுபாடு போன்ற தகுதிகள் கிடைத்துவிடும். அதேசமயம் சனி பகவான் அவரது ஜாதகத்தில் பாதிப்பு பெற்றிருந் தால் பலவித கஷ்ட, நஷ்டங்கள், சங்கடங்கள் நிறைந்த வாழ்க்கை அமைந்து விடும். இதற்குப் பரிகாரமாக விதிமுறைகள் ஜோதிட சாஸ்திரத்தில் கூறப் பட்டுள்ளன.

அவையாவன:

● சனி பகவான் கோவில்களுக்குச் சென்று வழிபாடு செய்தல். (திருநள்ளாறு ஸ்தலம்).

● நவகிரகங்கள் உள்ள சனி பகவான் சந்நிதியில் சனிக்கிழமைகளில் பூஜை, அர்ச்சனை, எள்தீபம் ஏற்றி வழிபடுதல்.

● வேங்கடேசப் பெருமாள் மற்றும் ஆஞ்சனேய ஸ்வாமியை வழிபடுதல். வெள்ளியில் மோதிரம் செய்து நீலக்கல் பதித்து அணிதல்.

இவற்றையும் தவிர, சனி பகவான் எந்திர வடிவத்தினை சிறிய அளவில் தூய வெள்ளி யில் செய்து நல்ல நாள், நேரத்தில் மார்பில் அணிந்துகொள்ளலாம்.

கீழ்க்காணும் சனி பகவான் துதியை தினமும் எட்டு முறை பாராயணம் செய்து வரலாம்.

நீலாஞ்ஜந ஸமாபாஸம்

ரவிபுத்ரம் யமாக்ரஜம்/

ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்

தம் நமாமி சநைஸ்சரம்//

மேற்கூறியவற்றை நம்பிக்கையுடன், தூயசிந்தனையுடன் மேற்கொண் டால் கடன் தொல்லைகள் நீங்கும்; நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்; வியாபார அபிவிருத்தி பெற இயலும். மக்கள் ஆதரவு பெற்ற தலைமைப் பொறுப்பும் வந்துசேரும். சனி பகவான் நல்ல சுபகாரியங்களையும் நிறைவேற்றித் தருவார் என்றே நிச்சயம் நம்பலாம்.

செல்: 95510 64188