Advertisment

மகளின் வாழ்க்கை மலர...

/idhalgal/balajothidam/daughters-life-boo-mahesh-verma

ழகான தோற்றமோ, தனிப்பட்ட திறமைகளோ இல்லாத பல ஆண்கள், அழகான பெண்களை ஈர்த்துவிடுகிறார்கள். எந்தவிதத் தகுதியும் இல்லாத பல ஆண்களுக்கு அப்படிப்பட்ட வாய்ப்புகள் பெரும்பாலும் அமைகின்றன. அதற்கும் ஜோதிடத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா?

Advertisment

kaliஒரு பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் நீசமாக அல்லது 2-ஆம் பாவம் கெட்டுப் போயிருந்தால், அந்தப் பெண் பெயர், புகழ், அழகு அனைத்துக்கும் எதிராக, எந்தவிதத் தகுதியுமே இல்லாத ஆணுடன் பழகுவாள். சில நேரங்களில் தவறுகளையும் செய்வாள். அதன்மூலம் தன் குடும்பத்திற்கு அவப்பெயரை வாங்கித் தருவாள். சிலர் அத்தகைய செயல்களின்மூலம் தங்களின் வாழ்க்கையையே நாசமாக்கிக் கொள்வார்கள்.

ஒரு பெண்ணின் ஜாதகம் சரியில்லாமலிருந்தால், அவள் படிக்கும் காலத்தில் காதல் வலையில் சிக்கிக்கொள்வாள்.

காதலின் உண்மையான அர்த்

காதலின் உண்மையான அர்த்தம் தெரியாமல், அர்த்தமில்லாத ஈர்ப்பில் சிக்கி, வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்திப்பாள்.

Advertisment

படிக்கும் காலத்தில் பெண்களுக்கு ராகு தசை நடந்தால், ஜாதகத்தில் ராகு சரியான இடத்தில் இல்லாமலிருந்தால் அல்லது ராகு 2-ஆம் பாவத்தைப் பார்த்தால், அவள் தகுதியற்ற ஆணுடன் பழகி, தன் குடும்பத்தின் பெயரைக் கெடுப்பாள்.

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி நீசமாக இருந்து 5-ல் சனி இருந்தால், அந்தப் பெண் படிக்கும் காலத்தில், தன் தகுதிக்குக் கீழுள்ள ஆணுடன் பழகி பல கஷ்டங்களைச் சந்திப்பாள்.

2-ஆம் பாவத்தில் சுக்கிரனுடன் சந்திரன், 3-ல் சூரியன், 5-ல் சனி இருந்தால், அந்தப் பெண் தகுதியற்ற ஆணுடன் பழகி பெயரைக் கெடுத்துக்கொள்வாள்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னாதிபதி 3-ல் இருந்து அதை சனி பார்க்க, 7-க்கு அதிபதி 6 அல்லது 8-ல் இருந்தால், அந்தப் பெண் பெரும்பாலும் தவறான முடிவையே எடுப்பாள். அவள் தவறான ஆணுடன் பழகி, வாழ்க்கையை அழித்துக்கொள்வாள்.

லக்னாதிபதியும், 7-க்கு அதிபதியும் 6, 8, 12-ல் இருந்து, ராகுவின் பார்வை அல்லது சேர்க்கை இருந்தால், அவள் தன் தகுதிக்கும் கீழுள்ள ஆணுடன் பழகி, பல சிரமங்களையும் அனுபவிப்பாள்.

5-ல் சுக்கிரன், செவ்வாய் இருந்தாலும் அல்லது அதை ராகு பார்த்தாலும் அந்தப் பெண் வாழ்க்கையில் பல தவறுகளைச் செய்வாள். தகுதியற்ற ஆணுடன் பழகி வாழ்க்கையை வீணாக்கிக் கொள்வாள்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 8-ல் சுக்கிரன், செவ்வாய், புதன், ராகு இருந்தால் அவள் தரமற்ற ஆணுடன் பழகி பல ஏமாற்றங்களைச் சந்திப்பாள்.

லக்னத்தில் ராகு, சனி, 7-ல் கேது, செவ்வாய் இருந்து சுக்கிரன் நீசமாக இருந்தால், அந்தப் பெண் ஆணிடம் ஏமாறுவாள்.

லக்னத்தில் நீசச்செவ்வாய், 5-ல் ராகு, 7-ல் சனி இருந்தால், அவள் தன் தகுதிக்கும் கீழே உள்ள ஆணுடன் பழகி, கஷ்டங்களை அனுபவிப்பாள்.

லக்னத்தில் நீச சூரியன், 4-ல் செவ்வாய், 7-ல் சுக்கிரன், சனி இருந்தால், அந்தப் பெண் தவறான முடிவுகளை எடுத்து சிரமங்களைச் சந்திப்பாள்.

5-ல் சுக்கிரன், செவ்வாய் இருந்து, பெண்ணுக்கு சுக்கிர தசை நடந்தால், அவள் தவறான முடிவெடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

லக்னத்தில் சூரியன், சனி, புதன் அல்லது சூரியன், சனி, செவ்வாய் இருந்து, 5-ல் ராகு இருந்தால், அவள் வாழ்க்கையில் சரியான ஆணைத் தேர்ந்தெடுக்கமாட்டாள். தவறான ஆணையே தேர்ந்தெடுப்பாள்.

பரிகாரங்கள்

மகளின் வாழ்க்கை கெட்டுவிடக்கூடாது; மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர் செய்யவேண்டிய பரிகாரங்கள்...

பெண்ணின் தாய் தினமும் துர்க்கை ஆலயத்திற்குச் சென்று சிவப்பு மலர் வைத்து, விளக்கேற்றி வழிபடவேண்டும்.

பெண்ணின் வயது என்ன என்பதைப் பார்த்து, அதே எண்ணிக்கை எலுமிச்சம்பழங்களை மஞ்சள் நூலில் கோர்த்து, துர்க்கைக்கு அணிவிக்க வேண்டும். (வெள்ளிக்கிழமை).

பெண்ணின் தந்தை தினமும் நாய்களுக்கு பிஸ்கட் தர வேண்டும். அவர் ஞாயிற்றுக்கிழமை பைரவர் ஆலயத்திற்குச் சென்று ஐந்து திரிகள் கொண்ட தீபத்தை ஏற்ற வேண்டும்.

வீட்டின் வடக்கு திசையில் அவசியமற்ற பொருட்களை நீக்கிவிட வேண்டும். பெண் தவறு செய்வதாகத் தெரிந்தால், அவளை வடமேற்கில் படுக்க வைக்கக்கூடாது. தென்கிழக்கு அல்லது தென்மேற்கு அறையில் படுக்கச் செய்யவேண்டும்.

தெற்கில் தலைவைத்துப் படுக்க வேண்டும்.

பெண் தன் லக்னத்திற்குரிய ரத்தினத்தை அணியலாம்.

சனிக்கிழமை சூரியன் மறையும் நேரத்தில் அரச மரத்திற்கு அல்லது ஆல மரத்திற்கு தீபமேற்ற வேண்டும்.

செல்: 98401 11534

bala240818
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe