Advertisment

ஜாதகம் பலன்களைப் பெரிதும் நிர்ணமிப்பது தசாபுத்தியா? கோட்சாரமா? -ஏ.ஆர்.ஆர். சுதர்சனன்

/idhalgal/balajothidam/dasaputhi-largely-determining-horoscope-benefits-kaotacaaramaa-arr-sudarshan

ஜாதகத்தில் ஒரு மனிதனின் நல்லநேரம்- கெட்டநேரம், வெற்றி- தோல்வி போன்றவற்றை நிர்ணயிப்பது நவகிரகங்கள். அவற்றின் வலுவைப் பொருத்து தசாபுக்தி, கோட்சாரம் செயல்படும்.

Advertisment

ஜாதகர் பிறந்த ராசியை அடிப்படை யாகக்கொண்டு, தற்பொழுது ஜாதகருக்கு குரு, சனி, ராகு- கேது, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியவை சாதகமான இடத்தில் உள்ளதா அல்லது சாதகமற்ற இடத்தில் உள்ளதா என்பதை ஆராய்ச்சிசெய்து முடிவெடுப்பதுதான் கோட்சாரம். கோட்சாரப் பலனில் தினப்பலன், வருடப்பலன், மாதப்பலன், வாரப்பலன்கள் எல்லாம் அடங்கும்.

தசாபுக்தி என்பது ஜாதகர் பிறக் கும்

ஜாதகத்தில் ஒரு மனிதனின் நல்லநேரம்- கெட்டநேரம், வெற்றி- தோல்வி போன்றவற்றை நிர்ணயிப்பது நவகிரகங்கள். அவற்றின் வலுவைப் பொருத்து தசாபுக்தி, கோட்சாரம் செயல்படும்.

Advertisment

ஜாதகர் பிறந்த ராசியை அடிப்படை யாகக்கொண்டு, தற்பொழுது ஜாதகருக்கு குரு, சனி, ராகு- கேது, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியவை சாதகமான இடத்தில் உள்ளதா அல்லது சாதகமற்ற இடத்தில் உள்ளதா என்பதை ஆராய்ச்சிசெய்து முடிவெடுப்பதுதான் கோட்சாரம். கோட்சாரப் பலனில் தினப்பலன், வருடப்பலன், மாதப்பலன், வாரப்பலன்கள் எல்லாம் அடங்கும்.

தசாபுக்தி என்பது ஜாதகர் பிறக் கும்பொழுது ஜென்ம நட்சத்திர இருப்பு தசை அடிப்படையில் நிர்ணயிக்கும். உதாரணமாக, ஒருவர் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந் திருந்தால் முதல்தசை குருதசையாக அமையும். இந்த இருப்பு தசையை ஆரம்ப தசையாகக்கொண்டு ஒவ்வொரு தசை வரிசையின் அடிப்படையில் வரும். லக்னத் திற்கு ஆதிபத்திய அடிப்படையில் சாதகமாக உள்ளதா- சாதகமற்ற நிலையில் உள்ளதா என்பதைப் பார்ப்பது தசாபுக்தி. ஒரு மனிதனின் வெற்றி- தோல்வியை தசாபுக்திதான் நிர்ணயிக்கும்.

ff

Advertisment

உதாரணமாக, கோட்சாரத்தில் ஒரு ராசிக்கு ஏழரைச்சனி நடப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த ராசியில் பிறந்த அனைவருக்கும் ஏழரைச்சனி பாதிக்குமா என்றால் பாதிபேருக்கு பாதிக்காது. பாதிபேருக்கு பாதிக்கும். இங்குதான் தசாபுக்தி என்னும் ஜோதிட ரகசியம் செயல்படுகிறது.

உதாரணமாக இந்தியாவிலுள்ள சுமார் 130 கோடி மக்கள் தொகையில் 13 கோடி பேர் மகர ராசியில் இருப்பார்கள். இவர்கள் அனைவருக்கும் தற்பொழுது நடைபெறும் ஏழரைச்சனி பாதிப்பிருக்குமா என்றால், இல்லையென்று உறுதியாகச் சொல்ல முடியும்.

கோட்சாரத்தில் சனி 3, 6, 11-ல் இருக்கும்பொழுது, குரு 2, 5, 7, 9, 11-ல் இருக்கும்பொழுதும், ராகு- கேது 3, 6 11-ல் இருக்கும்பொழுதும் எத்தனைப் பேருக்கு சுபநிகழ்ச்சிகள்- திருமணம் நடைபெறுகிறது!

கோட்சாரம் என்பது தற்கா-கப் பலன்கள். தசாபுக்தி என்பது ஆயுட் காலப் பலன்களை நிர்ணயிக்கும். ஒருவருக்கு அஷ்டமச்சனியில், ஏழரைச்சனியில் பதவி, வேலை கிடைக்கிறதென்றால், அதற்குக் காரணம் மறைமுகமாக தசாபுக்தி உதவியுடன் கிடைத்திருக்கும் என்பதே.

ஒரு ஜாதகத்தில் தசாபுக்தி என்பது அஸ்திவாரம். அஸ்திவாரம் நன்றாக இருந்தால்தான் வீடு நிலையாக இருக்கும். வீட்டில் சிலநேரங்களில் விரிசல்கள் ஏற்பட்டால் அதை சரிசெய்துவிடலாம். ஆனால் அஸ்திவாரம் சரியில்லையென்றால் வீடு கீழே விழுந்து விடும். அதுபோல தசாபுக்தி என்னும் அஸ்திவாரம் நன்றாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை ஆட்டம் காணும். வாழ்க்கை போரட்டமாக அமையும்.

ஒரு மனிதனுக்கு தாயின் வயிற்றில் இருக்கும்பொழுது இன்ன வருடம், நாள், நேரத்தில் நல்லது- கெட்டது நடைபெறும் என்று இறைவன் முன்கூட்டியே விதி, தசாபுக்தி வாயிலாக நிர்ணயித்தபிறகு, நாம் பிறந்தபின் இடையில் வரும் சனி, ராகு- கேது, குருப்பெயர்ச்சி என்னும் கோட்சாரம் பெரிதும் நம்மை பாதிக்காது.

அதனால் தான் 21 வயதுமுதல் 50 வயதுவரை என பல்வேறு வயது வித்தியாசத்தில் திருமணம் நடைபெறு கிறது. இதற்குக் காரணம் தசாபுக்தி.

கோட்சாரமல்ல. எனவே ஜாதகப் பலன் களைப் பெரிதும் நிர்ணயிப்பவை தசாபுக்தியே! கோட்சாரமல்ல.

செல்: 98403 69513

bala240622
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe