Advertisment

அன்றாட செயல்களும் நட்சத்திரத் தொடர்பும் -ஆர். சுப்பிரமணியன்

/idhalgal/balajothidam/daily-activities-and-star-communication-r-subramanian

விண்ணில் எண்ணற்ற நட்சத்திரங்கள் நிலையாக நின்று பிரகாசிக்கின்றன.

ஜோதிட சாஸ்திரப்படி 27 நட்சத்திரங்களே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. குறிப்பிட்ட வடிவினைக்கொண்ட ஒவ்வொரு நட்சத்திரமும் பல நட்சத்திரக் கூட்டம் என்றும் கூறப்படுகிறது.

Advertisment

ஒரு மாதத்தில் வரும் தொடர்ச்சியான 27 நாட்களை, இந்த 27 நட்சத்திரங்களும் வரிசைக்கிரமமாக அஸ்வினிமுதல் ரேவதிவரை என்றபடி பிரதிப-க்கின்றன. அதாவது சந்திரன் சுழலும் நட்சத்திரமே அன்றைய நட்சத்திர தினமாக அமையும்.

விண்ணில் எண்ணற்ற நட்சத்திரங்கள் நிலையாக நின்று பிரகாசிக்கின்றன.

ஜோதிட சாஸ்திரப்படி 27 நட்சத்திரங்களே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. குறிப்பிட்ட வடிவினைக்கொண்ட ஒவ்வொரு நட்சத்திரமும் பல நட்சத்திரக் கூட்டம் என்றும் கூறப்படுகிறது.

Advertisment

ஒரு மாதத்தில் வரும் தொடர்ச்சியான 27 நாட்களை, இந்த 27 நட்சத்திரங்களும் வரிசைக்கிரமமாக அஸ்வினிமுதல் ரேவதிவரை என்றபடி பிரதிப-க்கின்றன. அதாவது சந்திரன் சுழலும் நட்சத்திரமே அன்றைய நட்சத்திர தினமாக அமையும். மேலும் ஒருவர் பிறந்த தினத்தில் அமையும் நட்சத்திரமே அவரது ஜென்ம நட்சத்திர மாகவும் அறியப்படும்.

Advertisment

இதன் தொடர்ச்சியாக மனிதனுடைய அன்றாட செயல்பாடுகளும் குறிப்பிட்ட நட்சத்திர தினங்களை ஒட்டி அமைவதே சிறந்தது. மேற்கூறிய 27 நட்சத்திரங்களும், ஒன்பது நட்சத்திரங்களுக்கு ஒன்று என்றபடி, மூன்றுவகைகளாகப் பிரித்து அறியப் படுகின்றன.

கீழ்நோக்கு நட்சத்திர நாள் (அதோ முகம்): பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி.

சமநோக்கு நட்சத்திர நாள் (திரியக்முகம்): அஸ்வினி, மிருகசீரிடம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி அனுஷம், கேட்டை, ரேவதி.

மேல்நோக்கு நட்சத்திர நாள் (ஊர்த்துவ முகம்): ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி.

கீழ்நோக்கு நட்சத்திர நாள்: கிணறு, குளம், வாய்க்கால் வெட்டுதல், தூர் வாருதல், அகழ்வாராய்ச்சி செய்தல், புதையல் தோண்டுதல், கிழங்கு வகைகள் நடவு செய்தல் போன்றவற்றுக்கு ஏற்றது.

சமநோக்கு நட்சத்திர நாள்: நிலம் வாங்குதல், பொன்னேர்கட்டி முதல் விதை விதைத்தல், நாற்கால் ஜீவன்கள் வாங்குதல் (பசு, எருமை, எருது, ஆடு, குதிரை), குளம், ஏரி வரப்பு அமைத்தல், வீட்டு வாசற்கால் வைத்தல், புனித யாத்திரை மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்கு ஏற்றது.

மேல்நோக்கு நட்சத்திர நாள்: புதுவியாபாரம் தொடங்குதல், புதுவாகனம் வாங்குதல், ஆடை, ஆபரணம், மெத்தை வாங்குதல்; மதில், தூண் அமைத்தல், பந்தல், உப்பரிகை போடுதல், உத்தியோகத்தில் சேருதல், உயர்பதவி ஏற்றல் (பட்டாபிஷேகம்), பெரியோரைக் காணுதல் (ராஜதரிசனம்).

பிற நட்சத்திரங்களில் செய்யத் தக்கவை: நிலம், சொத்து வாங்குதல், கிரக (வீடு) ஆரம்பம், கிரகப் பிரவேசம், யாகம், ஹோமம் செய்தல், உயர்பதவி ஏற்றல், கல்வி கற்றல், அன்னதானம் செய்தல்.

பிற நட்சத்திரங்களில் செய்யத் தகாதவை: திருமணம், சீமந்தம், வளைகாப்பு, சாந்திமுகூர்த்தம்.

மேற்கூறியவற்றை புரிந்துகொண்டு, சாஸ்திர அறிவுரைப்படி, அன்றாட செயல்பாடுகளில் முழு மனதுடன் ஈடுபட வெற்றிகரமான- வளமான வாழ்க்கை என்றே உறுதியாக நம்பலாம்.

செல்: 74485 89113

bala220422
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe