வங்கக்கடலில் உருவாகி புதுச்சேரி அருகே கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. இந்த புயலினால் பெய்த பெரு மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளபெருக்கிலும், வீடுகள் இடித்தும் 33 பேர் உயிரிழந்தனர். ஏராளமான பொருட்சேதமும், பயிர் சேதங்களும் ஏற்பட்டன.
புயல் கரையைக் கடந்த பிறகும் புதுச்சேரி நிலப்பகுதியில் நீண்ட நேரம் வலுவிழக்காமல் இருந்ததால், பெரும் மழைப் பொழிவைப் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் ப
வங்கக்கடலில் உருவாகி புதுச்சேரி அருகே கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. இந்த புயலினால் பெய்த பெரு மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளபெருக்கிலும், வீடுகள் இடித்தும் 33 பேர் உயிரிழந்தனர். ஏராளமான பொருட்சேதமும், பயிர் சேதங்களும் ஏற்பட்டன.
புயல் கரையைக் கடந்த பிறகும் புதுச்சேரி நிலப்பகுதியில் நீண்ட நேரம் வலுவிழக்காமல் இருந்ததால், பெரும் மழைப் பொழிவைப் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் பெற்றன. குறிப்பாக, இதுவரை இல்லாத அளவுக்கு விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ. புதுச்சேரியில் 47 செ.மீ. மழை பதிவானது. இதனால், இப்பகுதிகள் வெள்ளக் காடானது.. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த மாவட்டங்கள் மட்டுமல்லாது திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களும் பெரும் மழைப் பொழிவைப் பெற்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது.
பெரு மழையால் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மலையின் கிழக்கு பக்கத்தில், வ.உ.சி., நகர் பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. மண் சரிவு, வெள்ளம் காரணமாக வீடுகள் புதைந்ததில், ஐந்து குழந்தைகள் உள்ளிட்ட, ஏழு பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். தமிழகத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் காரணமாக 2,86,069 ஹெக்டேரில் வேளாண் பயிர்களும், 73,263 ஹெக்டேரில் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந் துள்ளன.
தமிழக புயல் வரலாற்றில் 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் 500 கி.மீ., தொலைவை ஃபெஞ்சல் மிக மெதுவாக கடந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவல்கள் படி பொதுவாக புயல்கள் எப்போதும் 250 கி.மீ. முதல் 300 கி.மீ., வரை 10 முதல் 12 கி.மீ., வேகத்தில் பயணிக்கும். ஆனால் ஃபெஞ்சல் புயல் 3 கி.மீ., வேகத்தில் தான் பயணித்தது. 500 கி.மீ., தூரத்தை கடக்க 5 நாட்கள் எடுத்துக் கொண்டுள்ளது.
இதனிடையே, ஃபெஞ்சல் புயல், கனமழை, வெள்ள பாதிப்புகளை சீரமமைக்க உடனடி நிவாரணமாக தமிழக அரசுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை சீரமைக்க தமிழகத்திற்கு ரூ. 944.80 கோடியை மத்திய அரசு நிவாரண நிதியாக விடுவித்துள்ளது.
அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்த விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரண மாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டது.