வாழ்வை பாதிக்கும் பெண் சாபம்!

/idhalgal/balajothidam/curse-woman-who-affects-life

சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

ஜீவநாடியில் பலன்கேட்க சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒருவரும், சுமார் 30 வயதுடைய அவரது மகனும் வந்திருந் தனர்.

"ஐயா, என் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. அதில் இவன் மூத்தமகன். இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைத்தேன். இருவருக்கும் குழந்தைகள் உண்டு. இப்போது இவன் வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டு, இவனுடைய மனைவி தன் குழந்தையையும் அழைத்துக்கொண்டு தாய்வீட்டுக்குச் சென்று விட்டாள். கணவன்- மனைவி பிரிவுநீங்கி ஒற்றுமையாக வாழ வழிகேட்டு அகத்தி யரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.

saba

அகத்தியரை வணங்கி ஜீவநாடியைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். அதில் அகத்தியர் தோன்றி விளக்கம் கூறினார்.

"தன் மகன் வாழ்க்கை நிம்மதியாக இருக்க வழிகேட்கிறானே, இவன் தந்தை செய்த பாவம் இவனுக்குத் தெரியுமா? இவனுடைய மகன் தன் மனைவி, குழந்தையைப் பிரிந்து வாழ்வதற்கு மூலகாரணத்தைக் கூறுகிறேன். இவனுடை

சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

ஜீவநாடியில் பலன்கேட்க சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒருவரும், சுமார் 30 வயதுடைய அவரது மகனும் வந்திருந் தனர்.

"ஐயா, என் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. அதில் இவன் மூத்தமகன். இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைத்தேன். இருவருக்கும் குழந்தைகள் உண்டு. இப்போது இவன் வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டு, இவனுடைய மனைவி தன் குழந்தையையும் அழைத்துக்கொண்டு தாய்வீட்டுக்குச் சென்று விட்டாள். கணவன்- மனைவி பிரிவுநீங்கி ஒற்றுமையாக வாழ வழிகேட்டு அகத்தி யரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.

saba

அகத்தியரை வணங்கி ஜீவநாடியைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். அதில் அகத்தியர் தோன்றி விளக்கம் கூறினார்.

"தன் மகன் வாழ்க்கை நிம்மதியாக இருக்க வழிகேட்கிறானே, இவன் தந்தை செய்த பாவம் இவனுக்குத் தெரியுமா? இவனுடைய மகன் தன் மனைவி, குழந்தையைப் பிரிந்து வாழ்வதற்கு மூலகாரணத்தைக் கூறுகிறேன். இவனுடைய தந்தை ஒரு பெண்ணை மணந்து, அவளுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்த ஒரு வருடகாலத்தில் வேறொரு பெண்ணிடம் பழகி அவளைத் திருமணம் செய்துகொண்டான். இதனால் இவனது முதல் மனைவி தன் ஒரு வயது குழந்தையுடன் பிறந்தவீடு சென்றுவிட்டாள். இவன் இரண்டாம் தாரத்து மகன். இவனது தந்தை தன் முதல் மனைவியையும் குழந்தையை யும் திரும்பச் சென்று அழைத்த போது அவர்கள் இவனுடன் வர சம்மதிக்கவில்லை. தாய் வீட்டி லேயே இருந்துவிட்டனர்.

இவனது தந்தை மட்டுமல்ல; இவனும் தன் திருமணத்திற்குமுன்பு ஒரு பெண் ணிடம் பழக்கம்கொண்டு, அவளையே திருமணம் செய்துகொள்வதாக சத்தியம் செய்து, அவளிடம் சுகம் அனுபவித்தான். ஆனால் அந்தப் பெண்ணையே மணம் புரிந்தானா?

இப்போது இவனுக்கு மனைவியாக இருப்பவள் இவனைவிட வசதிபடைத்த பணக்காரவீட்டுப் பெண். பணம், வசதிக்கு ஆசைப்பட்டு தன்னை விரும்பியவளை ஒதுக்கிவிட்டு இப்போதுள்ள மனைவியை மணந்தான். இவனை நம்பித் தன்னை இழந்த அந்தப்பெண், இவன் தந்த குழந்தையைத் தன் கருவில் சுமந்துகொண்டு கர்ப்பத்துடன் தன்னை மாய்த்துக்கொண்டாள். இவன் தன்னை நம்பிய பெண்ணையும் தன் சிசுவையும் கொன்றவன்.

இவன் வம்சத்தின் ஆண்களுக்கு பெண்கள் போகப்பொருள்தான். இவனும், இவன் தந்தையும் தன் வம்ச வாரிசுகளுக்கு சேர்த்துவைத்த களத்திர சாபமும் புத்திர சாபமும் இப்போது இவன் மூத்த மகன் வாழ்க்கையில் வேதனையைத் தந்துகொண்டிருக்கிறது. இவன் மகனின் குழந்தை கருவில் வளரும்போதே, அவனுக்கும் அவன் மனைவிக்கும் கருத்து வேறுபாடு தோன்றத் தொடங்கிவிட்டது'' என்று அகத்தியர் கூறிமுடித்தார்.

"ஐயா, எனது இரண்டு மகன்களும் ஒரே நேரத்தில்தான் பிறந்தனர். ஆனால் இளைய மகன் தன் மனைவி, குழந்தையுடன் மகிழ்ச்சியாக- ஒற்றுமையாக வாழ்கிறான். இவனுக்கு மட்டும்தான் அந்த பாதிப்பு உண்டா? இதற்குக் காரணம் புரியவில்லை'' என்றார் நாடி படிக்கவந்தவர்.

மீண்டும் நாடி பார்த்தேன். நாடி ஓலையில் அகத்தியர், "ஒரு தாய்- தந்தைக்கு எத்தனை குழந்தைகள் பிறந்தாலும், இவர்களைப்போல இரட்டையராகப் பிறந்தாலும், முற்பிறவியில் செய்த பாவத்தையும் புண்ணியத்தையும் யார் அனுபவிக்கவேண்டுமென்ற கர்மவினைலி ஊழ்வினைப் பதிவுள்ளதோ அவர்கள்தான் அனுபவிக்கவேண்டும். இவனும் இவன் தந்தையும் செய்த பாவத்தையும், அதனால் உண்டான சாபத்தையும் இந்த மூத்தமகன் அனுபவிக்கும் வினைப்பதிவுடன் பிறந்து விட்டான்.

இராமாயண காவிய நாயகன் இராமன், தன் மனைவி சீதை கருவுற்றபிறகுதான் கர்ப்பிணியான மனைவியை காட்டிற்கு அனுப்பிவைத்தான். சீதையின் கர்ப்பத்தில் வளர்ந்த லவனும் குசனும் தன் தாய்- தந்தையைப் பிரித்தார்கள். இந்த மூத்தமகன் தன் மனைவியைப் பிரிந்துவாழ இவனது தாயும் ஒரு காரணம். இவன் தம்பிக்கு மணம் முடித்து வைக்கப்பட்டவள் இவனது தாயின் உறவுப்பெண். ஆனால் இந்த மூத்தமகனது மனைவி அன்னியப் பெண். இவன் தாய், இவன் மனைவி எதைச்செய்தாலும் குற்றமா கவே எண்ணினாள். இவனது தாய் கைகேயி போல் செயல்பட்டு இந்த மகனது குடும்ப வாழ்வைக் கெடுத்தாள். இவன் நிம்மதியைக் கெடுத்தாள். தசரதனிடமிருந்த இராமனைப் பிரித்ததுபோல இவனிடமிருந்து இவன் மகனைப் பிரித்துவிட்டாள்'' என்றார்.

வந்தவர், "ஐயா, இந்தப் பிரச்சினைகள் தீர்ந்து என் மகன் நிம்மதியாக வாழ ஏதாவது பரிகாரம் இருந்தால் கூறுங்கள். எந்த கோவிலுக்கு வேண்டுமானாலும் செல்கிறேன்'' என்றார்.

"ஐயா, அவதார புருஷரான இராமபிரானே பரிகாரம், பூஜை செய்து பிரச்சினையைத் தீர்த்திருந்தால் தன் மனைவி, சீதையையும் மகனையும் பிரிந்திருக்கமாட்டார். பரிகாரம் செய்து அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்திருப்பார்கள். பூஜை, யாகம், பரிகாரம் போன்ற நம்பிக்கை சார்ந்த செயல்களாலோ பணத்தாலோ ஒருவரது கர்மவினையை- முற்பிறவி பாவ- சாபப் பதிவுகளைத் தீர்த்து விடமுடியாது. அதற்கேற்ற பிராயச்சித்தங் களை நடைமுறை வாழ்வில் செயல்படுத்த வேண்டும்'' என்றுசொல்லிலி, நாடியைப் படித் துப் பார்த்தேன். அதில் அகத்தியர் தோன்றி, இவர் வம்சத்தில் உண்டான பெண்சாபம் நிவர்த்தியாக சில வழிமுறைகளைக் கூறினார்.

அகத்தியர் கூறிய நிவர்த்தி முறைகளை அவருக்குக் கூறி அனுப்பிவைத்தேன்.

செல்: 99441 13267

bala070521
இதையும் படியுங்கள்
Subscribe