Advertisment

பயிர் காக்கும் ஜோதிடம்! -அம்சி கோ. விவேகானந்தன்

/idhalgal/balajothidam/crop-protection-astrology-amsi-co-vivekananda

ஜோதிட சாஸ்திரம் ஆறு பெரும் பிரிவுகளைக்கொண்டது. அவை ஜாதகம், கோளம், நிமித்தம், பிரசன்னம், முகூர்த்தம், கணிதம் என்பவையாகும். ஆனால் இன்றைய நவீன பரிணாமத்திற்கேற்று ஜோதிடத்துறை விரிவாக்கம் பெற்றால் விவசாய ஜோதிடம், மருத்துவ ஜோதிடம், சமையல்கலை ஜோதிடம் என பல நிலையில் ஜோதிட சாஸ்திரம் மனித சமூகத்திற்குப் பயனாவதைக் காணலாம்.

Advertisment

விவசாயத் துறையைப் பொருத்த மட்டில் தற்போது தென்னை விவசாயிகள் வண்டு தாக்குதல், வெண் ஈ தாக்குதல் போன்றவற்றால் பெருமளவில் நஷ்டத்தை அடைகின்றனர். ஏன்- தென்னை வ

ஜோதிட சாஸ்திரம் ஆறு பெரும் பிரிவுகளைக்கொண்டது. அவை ஜாதகம், கோளம், நிமித்தம், பிரசன்னம், முகூர்த்தம், கணிதம் என்பவையாகும். ஆனால் இன்றைய நவீன பரிணாமத்திற்கேற்று ஜோதிடத்துறை விரிவாக்கம் பெற்றால் விவசாய ஜோதிடம், மருத்துவ ஜோதிடம், சமையல்கலை ஜோதிடம் என பல நிலையில் ஜோதிட சாஸ்திரம் மனித சமூகத்திற்குப் பயனாவதைக் காணலாம்.

Advertisment

விவசாயத் துறையைப் பொருத்த மட்டில் தற்போது தென்னை விவசாயிகள் வண்டு தாக்குதல், வெண் ஈ தாக்குதல் போன்றவற்றால் பெருமளவில் நஷ்டத்தை அடைகின்றனர். ஏன்- தென்னை விவசாயம்கூட அழியும் நிலையில் உள்ளது. இப்படி பூச்சிகளாலும் விலங்குகளாலும் அழியும் விவசாயத்தைக் காக்க ஜோதிடக் கலையில் பயனாகும் வண்ணம் ஏதேனும் உபாயம் உள்ளதா என்று தேடியபோது, "முகூர்த்த மாதவிதம்' என்னும் அற்புதமான நூல் ஒரு சிறந்த செய்தியை நமக்குத் தருகின்றது. அது என்னவென்றால்-

Advertisment

dd

"ரௌத்ரர் க்ஷே பப கரணே

விஷ் டௌவா சாபஸிம்ஹ

யோருதயே

நிஹிதோ ஹரதிஸ்தாணு-

ஸ்ஸஸ் யாரமாதி கேஷு மிர்க பாதயாம்

திருவாதிரை நட்சத்திரம் சிங்க

கரணமும் அல்லது திருவாதிரை

நட்சத்திரமும் விஸ்டி கரணம்

என்னும் பத்திரை கரணமும்

இணைந்து வரும் நாள்

அன்றைய தினம் சிங்க லக்னம்

அல்லது தனுலக்கின வேளை.'

எந்த விளைநிலத்தில் விலங்குகள் மற்றும் பறவைகளால் தொல்லை ஏற்படாமல் இருக்கவேண்டுமென நினைக்கிறீர்களோ அந்த விளைநிலத்தில் மேற்கூறிய வேளையில் மரத்தாலான குச்சி ஒன்றை ஊன்றிவைத்தால், அந்த நிலத்தில் விலங்குகள், பறவைகளால் தொல்லைகள் ஏற்படுவதில்லை என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த அடிப்படை விதி பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் என்பதனை உணரமுடிகிறது. எனவே இந்த குறிப்பிட்ட நாளில் நிலத்தில் மரக்குச்சி ஒன்றை ஊன்றிவிடுவது பூச்சிகளற்ற விவசாயம் செழிக்கப் பயனாகுமென்று அறியமுடிகிறது.

மேலும் ஆயில்ய நட்சத்திரம், பாம்புக் கரணம், நாகமுர்த்தம் இவற்றில் ஏதேனும் இரண்டு ஒன்றாகக் கூடிவரும் நாளில்- அதாவது ஆயில்ய நட்சத்திரமும் பாம்புக் கரணமும் அல்லது ஆயில்ய நட்சத்திரமும் நாக முகூர்த்தமும் அல்லது நாக மூர்த்தமும் பாம்புக் கரணமும் இவை ஒன்றாக வரும் நாளில், விவசாய நிலத்தில் சங்கு ஸ்தாபனம் செய்தல் மற்றும் ரட்சா எந்திரங்களை ஸ்தாபனம் செய்வதன்மூலமாக புழு மூசிகம் மற்றும் எலி, விலங்குகளால் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் தொல்லைகள் நீங்கி விவசாயம் பாதுகாக்கப்படும் என்றும் முகூர்த்த மாதவீயம் நூல் சொல்கிறது.

இப்படி அந்த நூல் கூறும் அரிய நாள் 22-8-2022 அன்று சிம்ம லக்னத் திலும் தனுசு லக்னத்திலும் அமைகிறது. எனவே பயிரைப் பாதுகாக்க விரும்பும் விவசாயிகளும், விவசாயம் சார்ந்தவர்களும் தங்கள் ஜோதிடர்களை அணுகி இந்த குறிப்பிட்ட அந்தநாளின் முகூர்த்தத்தைக் கேட்டறிந்து அந்த நாளில் சங்கு ஸ்தாபனம் அல்லது குச்சியை ஊன்றிவிட, விவசாயம் செழிக்கும்; பயிர்களைப் பாதுகாக்கவும் இது சிறந்த உபாயமாகும்.

செல்: 94438 08596

bala260822
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe