கருப்பு மந்திரம்
(சம்பவம் உண்மை. பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன.)
இருண்ட கண்டமான ஆப்பிரிக்காவின் "டோகோ' நாட்டுக் கடலோரத்து கிராமம். கருப்பு மையைக் கொட்டியதுபோல் வானத்தை இருள் கவ்வியிருந்தது. தூரத்தில் எரியும் நெருப்பின் புகை இருளில் கலந்தது. மரண கானாவின் சோகம் காற்றில் இழையோடியது. "வூடு' இனத்துப் பழங்குடிகள் கலவரமான முகத்துடன் கூடியிருந்தார்கள். அவர்களுக்கு நடுவில், மிருகப் பற்களையும் எலும்புகளையும் கோர்த்த மாலையுடன் இராட்சத உருவில் ஒரு மந்திரவாதி. அவனருகில் "அகுச்சி' என்ற ஆப்பிரிக்க தேசத்துப் பெண். அந்த மந்திரவாதியிடம் சன்னமான குரலில் எதையோ முணுமுணுத்தாள். அவள் பையில் சேகரித்து வைத்திருந்த ஒரு பெண்ணின் தலைமுடியும், காலடி மண்ணும் மந்திரவாதியின் கைகளுக்கு மாறின. தன் முன்னாலிருந்த களிமண்ணில் ஒரு பெண்ணின் உருவத்தை உருவாக்கத் தொடங்கினான். தன் இஷ்டதேவதையை அழைக்க மந்திரங்களைக் காற்றில் தூதுவிட்டான்.கண்ணுக்குத் தெரியாத ஏதோவொன்றை காற்றில் கைகளை அசைத்துப் பிடிக்க முயற்சித்தான். ஒரு விபரீதமான நிகழ்வுக்கான துவக்கம் என்பது மட்டும் புரிந்தது. சட்டத்தால் தண்டிக்கமுடியாத ஒரு குற்றம் அரங்கேறியது.
திருவல்லிக்கேணியின் இடுக்குச் சந்தில் ஒரு நெருக்கமான குடியிருப்பில் வளர்ந்து, பொறுப்புடன் கணிப் பொறி பழகி, அமெரிக்காவுக் குப் பயணமானாள். நிர்மலாவை சுதந்திர தேவி சிலை வரவேற்றது. உலக வணிக மையத்தில் உத்தியோகம். தூங்காத நகரத்தில் அவள் தூக்கத்தைக் கலைத்தன, மூன்றாண்டுகளுக்குமுன் நிகழ்ந்த அந்த சம்பவத்தின் நினைவுகள். தான் வேலைசெய்த வங்கியில் மோசடிசெய்த "அகுச்சி' என்ற ஆப்பி
கருப்பு மந்திரம்
(சம்பவம் உண்மை. பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன.)
இருண்ட கண்டமான ஆப்பிரிக்காவின் "டோகோ' நாட்டுக் கடலோரத்து கிராமம். கருப்பு மையைக் கொட்டியதுபோல் வானத்தை இருள் கவ்வியிருந்தது. தூரத்தில் எரியும் நெருப்பின் புகை இருளில் கலந்தது. மரண கானாவின் சோகம் காற்றில் இழையோடியது. "வூடு' இனத்துப் பழங்குடிகள் கலவரமான முகத்துடன் கூடியிருந்தார்கள். அவர்களுக்கு நடுவில், மிருகப் பற்களையும் எலும்புகளையும் கோர்த்த மாலையுடன் இராட்சத உருவில் ஒரு மந்திரவாதி. அவனருகில் "அகுச்சி' என்ற ஆப்பிரிக்க தேசத்துப் பெண். அந்த மந்திரவாதியிடம் சன்னமான குரலில் எதையோ முணுமுணுத்தாள். அவள் பையில் சேகரித்து வைத்திருந்த ஒரு பெண்ணின் தலைமுடியும், காலடி மண்ணும் மந்திரவாதியின் கைகளுக்கு மாறின. தன் முன்னாலிருந்த களிமண்ணில் ஒரு பெண்ணின் உருவத்தை உருவாக்கத் தொடங்கினான். தன் இஷ்டதேவதையை அழைக்க மந்திரங்களைக் காற்றில் தூதுவிட்டான்.கண்ணுக்குத் தெரியாத ஏதோவொன்றை காற்றில் கைகளை அசைத்துப் பிடிக்க முயற்சித்தான். ஒரு விபரீதமான நிகழ்வுக்கான துவக்கம் என்பது மட்டும் புரிந்தது. சட்டத்தால் தண்டிக்கமுடியாத ஒரு குற்றம் அரங்கேறியது.
திருவல்லிக்கேணியின் இடுக்குச் சந்தில் ஒரு நெருக்கமான குடியிருப்பில் வளர்ந்து, பொறுப்புடன் கணிப் பொறி பழகி, அமெரிக்காவுக் குப் பயணமானாள். நிர்மலாவை சுதந்திர தேவி சிலை வரவேற்றது. உலக வணிக மையத்தில் உத்தியோகம். தூங்காத நகரத்தில் அவள் தூக்கத்தைக் கலைத்தன, மூன்றாண்டுகளுக்குமுன் நிகழ்ந்த அந்த சம்பவத்தின் நினைவுகள். தான் வேலைசெய்த வங்கியில் மோசடிசெய்த "அகுச்சி' என்ற ஆப்பிரிக்கப் பெண்ணைக் காட்டிக்கொடுத்ததும், அவள் கைதாகியபோது தன்னைக் கொலை வெறியோடு பார்த்ததும், சக தோழியிடம் சன்னமான குரலில் ஏதோ முணுமுணுத்ததும் அவள் நினைவில் நிழலாடின. நினைக்கும்போதே ஆயிரம் கம்பளிப்பூச்சிகள் அவளுடலில் ஊர்ந்ததைப்போல சிலிர்த்துக் கொண்டாள்.
தன் மகள் நிர்மலா மனநோயாளியாக தாய்நாட்டுக்குத் திரும்புகிறாள் என்ற செய்தியைக்கேட்ட நீலகண்டன், நிலைகொள்ளாமல் தடுமாறினார். தாய்நாடு திரும்பிய தன் மகளிடம் வழக்கமான நலம் விசாரித்தல், விருந்து என்ற நிகழ்வுகளுடன் அந்த காலைப்பொழுதைக் கடந்துகொண்டிருந்தாலும், வயிற்றில் இனம்புரியாத பயம் உருண்டது.
நகரத்தின் இரைச்சல் அடங்கி, அமைதி திரும்பிக்கொண்டிந்த ஒரு மௌனமான இரவு நேரம். நிர்மலாவின் அலறலால் பக்கத்து வீட்டுக்காரர்களின் பாதி தூக்கம் தொலைந்துபோனது. தன்னருகில் யாரோ நிற்பதுபோல், தொடுவது போல் உணர்வதாக அழுகைக்கு நடுவே உளறினாள். மருத்துவமனைகளில் ஏறி குழப்பத்தில் இறங்கினார்கள். மந்திரவாதிகள், குடுகுடுப்பைக்காரர்கள், கோவில் பூசாரிகள் ஆவியை விரட்டுவதாக மாறிமாறிப் பணம் பறித்தார்கள். பணம்தான் ஆவியானது.
உறவினர் ஒருவரின் யோசனையால், பிரசன்ன ஜோதிடர் கிருஷ்ணன் நம்பூதிரி பிரசன்னமானார். நீலகண்டன் ஆதியோடு அந்தம், நடந்த விபரீதங்களை மனப் பாடம் செய்தவர்போல் ஒப்பித்தார். நிர்மலாவின் ஜாதகத்தை ஒப்படைத்தார். 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள், 8 திக்குகள், 7 ஓரைகள், 6 அக்ஷரங்கள், 5 பூதங்கள், 4 திசைகள், 3 தேவர்கள், 2 சக்திகள், 1 பிரம்மஸ்தானம் குறிக்கப்பட்டிருந்த அத்திமரப் பலகையின் முன், கையில் சோழி களுடன் அஷ்டாட்சர ஜபத்தை ஜோதிடர் தொடங்கினார்.
கிருஷ்ணன் நம்பூதிரி(ஜோதிடர்): பெரும்பாலும் ஜனன ஜாதகங்களில் குறிக்கப்படும் நேரம் துல்லியமாக இருப்பதில்லை என்பதால், முதலில் பிரசன்ன ஆரூடத்தைக் காண்போம். அது நீங்கள் குறிப்பிடும் விபரீதத்தைக் காட்டுகிறதா என்பதைப் பார்க்கவேண்டும். இது ஜாதகரின் மனம் சார்ந்த பிரச்சினையா? உடல் சார்ந்த பிரச்சினையா என்பதை அறியவேண்டும். பிரசன்ன ஜாதகத்தின் மனமகிழ்ச்சியைக் குறிக்கும் 3, 7, 11-ஆம் பாவங்கள் காலபுருஷனின் 4, 8, 12-ஆம் வீடுகளுடன் சம்பந்தபட்டிருப்பதால், ஜாதகரின் மனமகிழ்ச்சியைக் கெடுக்கும் நாசவேலை நடந்திருப்பதைக் காட்டுகிறது. மனோ காரகனாகிய சந்திரன், கேது நட்சத்திரத்தில், ராகு உப நட்சத்திரத்தில் மகத்தில் இருப்பது, ஜாதகரின் மனம் மலைப்பாம்பிடம் மாட்டிக் கொண்ட மனிதரைப்போல், துஷ்ட மந்திரத்தில் சிக்கித்தவிப்பது தெரிகிறது.
நீலகண்டன்: இந்தப் பிரச்சினைக்குக் காரணம் மனதின் வியாகூலமா? அல்லது செய்வினையா என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது?
கிருஷ்ணன் நம்பூதிரி (ஜோதிடர்): ஒரு ராசியை 150 பாகங்களாகப் பிரிப்பதே நாடி அம்சம். ராசி மண்டலத்தை 1,800 பாகங் களாகப் பிரித்தால் மட்டுமே பிரசன்ன ஆரூடத்தில் துல்லியமான பலன்களை அறியமுடியும். பிரசன்ன ஆரூட சக்கரத்தில் நிழல்கிரகங்களாகிய ராகு- கேது இருவரும் "காலகூட்ட' நாடி அம்சத்திலிருப்பது ஜாதகர் செய்வினையால் பாதிக்கப்பட்டி ருக்கிறார் என்பதை உறுதிசெய்கிறது.
நீலகண்டன்: இந்த ஏவல் எங்கிருந்து வந்தது என்பதை அறியமுடியுமா?
கிருஷ்ணன் நம்பூதிரி (ஜோதிடர்): சோழிப் பிரசன்னத்தின் ஆரூட லக்னம் தனுசில் இருப்பது, வடமேற்குத் திக்கில், அயல்நாட்டிலிருந்து வந்த ஏவலால் வரும் உபாதையைக் காட்டுகிறது. ஆரூட லக்னமும் தனுசு ராசியாகி, ஆரூட கிரகமும் குருவாக வருவது 12-ஆம் பாவத்திற்கு வலுசேர்க்கிறது. 12-ஆம் பாவத் தொடர்பிருப்பதால், முன் ஜென்ம வினையால் அந்நிய தேசத்தில் நடந்த ஒரு கர்மவினையின் எச்சமெனத் தெரிகிறது.
நீலகண்டன்: இந்த செய்வினை எதற்காக, யாரால் செய்யப்பட்டது என்பதை அறிய முடியுமா?
கிருஷ்ணன் நம்பூதிரி (ஜோதிடர்): மறைமுகமான குற்றம் செய்தவரை பிரசன்ன ஜாதகத்தின் எட்டாம் பாவத்தைக்கொண்டு அறியலாம். பிரசன்ன ஆரூடத்தில் எட்டாம் பாவத்தில் பெண்கிரகமாகிய சந்திரன் கேதுவின் சாரத்திலிருப்பதால், இந்த ஏவலுக்குக் காரணமானவள் பெண் என்பதும், அது ஆண் ராசியில் அமைவதாலும், நான்காம் பாவத்தில் செவ்வாய் வக்ரத்தில் இருப்பதாலும், (மீனச் செவ்வாய்- வாக்கில் கடுமை) கொடூரமான, வக்ர புத்தியுள்ள ஓர் ஆண் மந்திரவாதியால் செய்யப்பட்ட செய்வினை எனவும் தெரிகிறது.
நீலகண்டன்: பல கோவில்களுக்குச் சென்றும் இந்த செய்வினையின் பாதிப்பு ஜாதகரைவிட்டு விலகாதது ஏன்?
கிருஷ்ணன் நம்பூதிரி (ஜோதிடர்): பூர்வஜென்ம கர்மாவால், பாதுகாப்பினைத் தரும் குரு தோஷமடைந்திருப்பதால், தகுந்த கிரக தோஷப் பரிகாரங்களைச் செய்தபின், மந்திரக்கட்டுகளை நீக்கினால் மட்டுமே பலன் கிடைக்கும். குலதெய்வத்தைக் கட்டியபின் செய்யப்படும் மாந்த்ரீக ஏவலை எளிதாக சரிசெய்யமுடியாது. இதுதவிர, மாந்தி அமரும் பாவத்தையும் அறியவேண்டும். மரண பயம் தரும் மாந்தியின் முக்கியத்துவத்தை பிரசன்ன ஆரூடத்தில் சேர்க்காவிட்டால் துல்லியமான பலன்களை அறியமுடியாது. குருவும் மாந்தியும் 12-ல் சேர்ந்திருப்பதும், ராசியில் பன்னிரண்டாம் வீட்டில், அம்சத்தில் எட்டாம் வீட்டில் குரு மறைவதும், குலதெய்வத்தின் பாதுகாப்பும் இந்த ஜாதகருக்குக் குறைவாக இருப்பதைக் காட்டுகிறது. சயன ஸ்தானம் தனுசு ராசியாக இருப்பது, தீயசக்திகள் ஜாதகரின் உடலில் ஏவல்மூலம் புகுத்தப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. ஆரூட லக்னம் உபய ராசி யாகி, உதய லக்னம் சர (மகரம்) ராசியாக இருப்பது மிருத்யு சூத்திரமாக வரும். இந்த மிருத்யு சூத்திரம் மூன்று இடங்களில் வருவதும் (அம்சம், ராசி கிரகம்) ஜாதகரின் உயிருக்கு வரும் ஆபத்தைக் காட்டுகிறது. பாதுகாப்பைத் தரும் ஒன்பதாம் பாவம் கேது சாரத்தில் கிரகணப் பிடியில் சிக்கியிருப்பதும், மாந்தி, சூரியனின் உத்திராட நட்சத்திரத்தில் அமர்வதும் ஜாதகருக்கு மனவலிமை இல்லாததையும் தெய்வத்தின் அருள் குன்றியிருப்பதையும் காட்டுகிறது.
நீலகண்டன்: வெளிநாட்டில் செய்த செய்வினை இந்தியாவிலுள்ள என் மகளை எவ்வாறு பாதிக்கும்? ஏவலும் ஏவுகணை போல் கண்டம்விட்டு கண்டம் தாவுமா? விஞ்ஞானப்பூர்வமாக இதை விளக்க முடியுமா?
கிருஷ்ணன் நம்பூதிரி (ஜோதிடர்): விஞ்ஞானத்திற்கே சவால் விடும் அமானுஷ் யங்கள் பலவும் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இதுவரை விஞ்ஞானத்தால் "உயிர்' என்பதற்கும், "மரணம்' என்பதற்கும் சரியான விளக்கம் கொடுக்கமுடியவில்லை. மரணச் சான்றிதழ் கொடுக்கப்பட்ட பின்னாலும் உயிருடன் மீண்டவர்கள் பலருண்டு. ஆனாலும், ஒருவர் எங்கே சென்றாலும் அவரைப் பின்தொடரும் அவருடைய நிழலைப்போல், கர்மவினையும், செய்வினையும் எவ்வாறு ஒருவரைத் தொடர்கிறது என்பதை விஞ்ஞானப் பூர்வமாக விளக்குவேன்.
(புலனாய்வு தொடரும்)
செல்: 63819 58636