குற்றப் புலனாய்வு! (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் - லால்குடி கோபாலகிருஷ்ணன் 10

/idhalgal/balajothidam/criminal-investigation-present-astrology-series-10

பேராசையாலே வந்ததொரு துன்பம்!

(சம்பவம் உண்மை. பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன.)

தன் வாழ்க்கையின் ஒளிமயமான எதிர்காலக் கனவில் விஸ்வநாதன் மூழ்கி யிருந்தான். நாகரத்தினத்தை வாங்குவதற் காகதன் கண்முன் தென்பட்ட எல்லாரிட மும் கடன்காரனானான். மொத்தத்தில் பகல்கனவால் பாழானான். முடிவில் அவன் நண்பன் என்று நம்பிய செந்தில் பணக்காரனானான்.

kk

உடல் முழுதும் ஊசியால் குத்துவது போல் படர்ந்திருந்த உறைபனியில் நடுங்கியபடி விஸ்வநாதன் நின்றிருந்தான். இருளும், பனியும் போட்டி போட்டுக்கொண்டு இயற்கையின் உண்மையான அழகை மறைத்தன. காட்டுவாசி பொன்னன் கையில் ஒரு நாகத்துடன் காட்சியளித்தான். நாகத்தைத் தலைகீழாகப் பிடித்ததும் நீல நிறத்தில் மினுமினுப்பான ஒரு கல் விழுந்தது. விஸ்வநாதன் இன்ப அதிர்ச்சியில் சொக்கிப்போனான். பொன்னன் அந்தக் கல்லின் மகிமையை பரிசோதித்துக் காட்டினான். அந்த நீலக்கல்லைப் பிடித்தி ருந்த காட்டுவாசியின் கையை நாகம் பலமுறை கடித்தும் பொன்னனிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. திருப்தியடைந்த விஸ்வநாதன் காட்டைவிட்டு வெளிய

பேராசையாலே வந்ததொரு துன்பம்!

(சம்பவம் உண்மை. பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன.)

தன் வாழ்க்கையின் ஒளிமயமான எதிர்காலக் கனவில் விஸ்வநாதன் மூழ்கி யிருந்தான். நாகரத்தினத்தை வாங்குவதற் காகதன் கண்முன் தென்பட்ட எல்லாரிட மும் கடன்காரனானான். மொத்தத்தில் பகல்கனவால் பாழானான். முடிவில் அவன் நண்பன் என்று நம்பிய செந்தில் பணக்காரனானான்.

kk

உடல் முழுதும் ஊசியால் குத்துவது போல் படர்ந்திருந்த உறைபனியில் நடுங்கியபடி விஸ்வநாதன் நின்றிருந்தான். இருளும், பனியும் போட்டி போட்டுக்கொண்டு இயற்கையின் உண்மையான அழகை மறைத்தன. காட்டுவாசி பொன்னன் கையில் ஒரு நாகத்துடன் காட்சியளித்தான். நாகத்தைத் தலைகீழாகப் பிடித்ததும் நீல நிறத்தில் மினுமினுப்பான ஒரு கல் விழுந்தது. விஸ்வநாதன் இன்ப அதிர்ச்சியில் சொக்கிப்போனான். பொன்னன் அந்தக் கல்லின் மகிமையை பரிசோதித்துக் காட்டினான். அந்த நீலக்கல்லைப் பிடித்தி ருந்த காட்டுவாசியின் கையை நாகம் பலமுறை கடித்தும் பொன்னனிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. திருப்தியடைந்த விஸ்வநாதன் காட்டைவிட்டு வெளியேறினான்.

யாருக்காகவும் காத்திருக்காத காலம் உருண்டோடியது. விஸ்வநாதனின் வீடுதேடி அதிர்ஷ்டம் வரவில்லை. கடன் கொடுத்தவர்கள்

lll

மட்டுமே வந்தார்கள். கடன்காரர்களின் தொல்லையால், பகலில் பல இடங்களில் நடமாடமுடியாமல் போனது. விஸ்வநாத னின் முகம்போல், அவன் உலகமும் சுருங்கிவிட்டது. தான் ஏமாற்றப்பட்டது புரிந்தது. தன் நண்பனைத்தேடினான். அவன் அலைபேசி தொடர்பற்றுப்போனது. தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று புரிந்தபின், கடைசி நம்பிக்கையாகிய ஜோதிடத்தை நாடினான். விஸ்வநாதன் கவலையால் கலைந்திருந்தான். தன் ஆழ்ந்த வருத்தத்தை கிருஷ்ணன் நம்பூதிரியிடம் தெரிவித்தான்.

விஸ்வநாதன்: இந்த செயலைத் தொடங்குவதற்குமுன் தங்களை ஆலோசனை கேட்டிருந்தால், இந்த கதி நேர்ந்திருக்காது என்பதை உணர்கிறேன்.

கிருஷ்ணன் நம்பூதிரி: பலரும் செயலைத் தொடங்குவதற்குமுன் ஜோதிட ஆலோசனை பெறுவதில்லை. கெட்ட பின்புதான் ஜோதிடத்தை நம்புகிறார்கள்.

ஒரு செயலைச் செய்வதற்குமுன், ஜனன ஜாதகத்தையும், தசா புக்தியையும், கோட்சார கதியையும் கருத்தில் கொண்டால் மட்டுமே வெற்றியடைய முடியும்.

விஸ்வநாதன்: என் கண்முன் நடந்த காட்சிகளை வைத்து உண்மையென்று நம்பிவிட்டேன்.

கிருஷ்ணன் நம்பூதிரி: நாகத்தின் நச்சுப்பையை அகற்றியபின், நாகம் கடித்தால் ஒரு ஆபத்தும் நேராது என்பது அந்த காட்டுவாசிக்குத் தெரிந்திருக்கும். மின்னுகின்ற எந்தப்பொருளைப் பார்த்தாலும், பாம்பு அதைப் பூச்சியென்று நினைத்து விழுங்கிவிடும். செரிக்காத உணவைக் கக்கிவிடும்.இதைப்பார்த்தே நீங்கள் ஏமாற்றமடைந்துள்ளீர்கள்.

விஸ்வநாதன்: நான் ஓரளவு ஜோதிடத்தைப் பயின்றவன். நடப்பு தசை குரு தசையாக இருப்பதாலும், குரு ஜனன ஜாதகத்தில் கடகத்தில் உச்சம் பெற்றிருப்பதாலும் செல்வந்தனாகி விடலாம் என்று எண்ணினேன்.

கிருஷ்ணன் நம்பூதிரி: வேத விஞ்ஞானமாகிய ஜோதிடத்தை முழுமையாக அறியாததால் வந்த பிழைதான் இது. நடப்பு குரு தசை, கேது புக்தி, சனி அந்தரம்.

 லக்னத்தின் அஷ்டமாதிபதி தசை நடத்தினால் சங்கடம் உண்டாகும்.

ஜனன ஜாதகத்தில், தனித்த குரு இருந்து தசை நடத்துவதும் அவஸ்தையை உண்டாக்கும்.

 சந்திரன் ரோகிணியிலும், நடப்பு தசாநாதனாகிய குரு பூசத்திலுமிருப்பதால், தாராணி பலத்தின்படி- பிரதியாத தாரை- இடையூறு.

 சந்திரன் ரோகிணியிலும் நடப்பு புக்தி, நாதனாகிய கேது சதயத்திலும் இருப்பது விபத்துத்தாரை.

 கோட்சாரத்தில் அந்தரநாதனாகிய சனிபகவான், தற்போது உங்கள் ராசிக்கு பாதகஸ்தானமாகிய மகரத்தில் ஆட்சி பலத்துடன் சஞ்சரிக்கிறார். .அதனால் பாதகம் ஏற்படுமென்பதே விதி.

 வருமானம் மற்றும் பணப்புழக்கத் தைக் குறிக்கும் இரண்டு, ஆறு, பத்தாம் பாவங்கள் குருவின் நட்சத்திரத்தில் அமைகின்றன. குரு இடையூறு தரும் நடத்திரத்தில் இருப்பதால், குரு தசையில் செல்வத்தின் இழப்பும், கடனால் சங்கடமும் உண்டானது.

விஸ்வநாதன்: இந்த குற்றத்தைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவார்களா?

கிருஷ்ணன் நம்பூதிரி: ஏழாம் பாவம் சர்ப்ப திரேக்காணம் கொண்டு ஆணைக் குறிப்பதால் இந்த சிக்கலில் உங்களை ஈடுபடுத்தியவர், நச்சுப்பாம்பைப் போன்றவர். ஏழாம் பாவம் புதன் ராசியின் கடைசியில் ஆரம்பிப்பது, உங்கள் நண்பர்போல் நடித்து ஏமாற்றியவர், பல இடங்களில் மோசடி செய்தவர். ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டவர். ஆறாம் பாவமும் ஏழாம் பாவமும் சேர்வது, இந்த ஏமாற்று வியாபாரம் நீண்டகாலம் நீடிக்காது என்று தெரிகிறது. அவர்கள் சிறைக்குச் செல்வது உறுதி. நீதிமன்றத்திற்குச் சென்றாலும், உங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது.

L

விஸ்வநாதன்: என்னிடம் கொடுக்கப்பட்ட பொருள் நாகரத்தினமா? அவ்வாறு இல்லையெனில் நான் கொடுத்த பணமாவது திரும்பக் கிடைக்குமா?

கிருஷ்ணன் நம்பூதிரி: ராகு அம்சத்தில் பக்ஷி திரேக்காணத்தில் அமர்வது, உங்களுக்குக் கிடைத்தது சர்ப்பம் சம்பந்தப்பட்ட பொருளல்ல என்றே தெரிகிறது. பாதகாதிபதி மிகவும் பலமாக இருப்பதால் இழந்த பொருள் திரும்பக் கிடைக்காது என்பதே உண்மை.

விஸ்வநாதன்: நான் பலரிடமிருந்து வாங்கிய கடனைத் திருப்பியளிக்க முடியுமா?

கிருஷ்ணன் நம்பூதிரி: கோட்சாரத்தில் குரு மகரத்தில் நுழைந்து, உங்கள் ஜனன ஜாதகத் திலுள்ள குருவை ஏழாம் பார்வையாகப் பார்ப்ப தால், கடனை சமாளிக்க முடியுமென்பது தெளிவாகிறது. குருதசை, கேது, புக்தி முடிந்து சுக்கிர புக்தி தொடங்கும்போது, ஓரளவு அமைதி உண்டாகும்.

(புலனாய்வு தொடரும்)

செல்: 63819 58636

bala111220
இதையும் படியுங்கள்
Subscribe