மலருமா மணவாழ்க்கை?

(சம்பவம் உண்மை. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)

காலங்காலமாய் தொடரவேண்டிய திருமண பந்தம், நடுவில் கேள்விக்குறியாகிப் போனதை நினைத்து, நடராஜன் அதிர்ந்து போனார். தான் எவ்வளவு தான் எச்சரிக்கையாக இருந்தும், தன் மகளின் வாழ்வில் எழுந்த சிக்கலைத் தவிர்க்கமுடியாமல் போனதற்கு வருந்தினார். மனம் என்பது ரகசிய ஆவணப் பெட்டகம். ஒருவரின் மனதை மற்றவரால் புரிந்துகொள்ள முடிவதில்லை. நடந்ததை நினைத்துக் கவலைப்பட்டு இனி ஆகப்போவது ஒன்றுமில்லை. முள்ளில் விழுந்த சேலையை சேதாரமில்லாமல், மெல்ல எடுக்கும் முயற்சியில் இறங்கினார். ஜோதிடர் கிருஷ்ணன் நம்பூதிரியை சந்தித்து, பிரச்சினைக்கு முடிவுதேட விரும்பினார்.

கிருஷ்ணன் நம்பூதிரி: திருமணத்திற்கு முன் மணமக்களின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்திருந்தால், இதுபோன்ற துயரம் நேர்ந்திருக்காது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பிரிவு ஏற்படுவது சோகமானதுதான். நாடிவரும் பக்தர்களுக்கு நலம்புரியும் மாங்கோட்டுக்காவு பகவதியை வேண்டி, பிரசன்னத்தைத் தொடங்குவோம்.

Advertisment

dd

நடராஜன்: ஜோதிடரிடம் ஜாதகப் பொருத்தம் பார்த்தபின்தான் திருமணத்தை உறுதிசெய்தோம். எட்டுப் பொருத்தம் அமைவதாக ஜோதிடர் சொன்னதால் ஒப்புக்கொண்டோம்.

கிருஷ்ணன் நம்பூதிரி: பெண்ணின் நட்சத்திரம் கிருத்திகை-2, ஆணின் நட்சத்திரம் உத்திரட்டாதி-4. கணப் பொருத்தமும், வசியப் பொருத்தமும் இல்லை. நீங்கள் குறித்த திருமண லக்னமும் பிழை உடையதாகவேயுள்ளது.பொதுவாக, திருமண முகூர்த்தத்தை நிர்ணயிப்பதிலும் எவரும் அக்கறைக் காட்டுவதில்லை.

அந்த முகூர்த்த நாளே திருமண வாழ்வின் வெற்றியை நிச்சயிக்கும். மணமகன், மணமகள் இருவருக்கும் தாராபலமுள்ள நாளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்படும் முகூர்த்த நேரங்கள் உத்தேசமானவை. திருமணம் நடைபெறும் ஊரின் சூரிய உதயாதி நாழிகையைக் கொண்டே லக்னத்தை அமைக்கவேண்டும். மணமக்களின் ஜாதகத்தில் தோஷமிருந்தாலும், சரியான திருமண மூகூர்த்தத்தைத் தேர்ந்தெடுத்தால், தோஷ நிவர்த்தி பெறலாம். அபிஜித், பிரம்ம முகூர்த்தங்களில் செய்யப்படும் அனைத்து செயல்களும் நன்மையையே தரும்.

திருமணத்தின் வெற்றி யைத் தீர்மாணிக்கும் சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்காமல், ஊராரைத் திருப்திப்படுத்துவதற்காக நடத்தப்படும் செயல், தோல்வி யில்தான் முடியும்.

நடராஜன்: என்னு டைய மருமகனின் ஜாதகத்தை ஆராய்ந்து, அதிலுள்ள தோஷங்களையறிந்து, அதை நீக்கும் வழிமுறையும் சொல்ல வேண்டும்.

கிருஷ்ணன் நம்பூதிரி: ராசி, நவாம்சம், பாவ சக்கரத்தை ஆராய்ந்தபின் தான் ஒரு முடிவுக்கு வரமுடியும்.

= ஜனன ஜாதகத்தில் சந்திரனுக்கு எட்டில் ராகு அமைவது தீய பழக்கங்களைத் தரும்.

=நடப்பு தசையின் புக்திநாதன் புதன் நவாம்சத்தில் சந்திரனுக்கு நான்கில் அமைவது கெடுபலனைக் காட்டுகிறது.

= களத்திர ஸ்தானமாகிய ஏழாம் வீடு ஸ்திர ராசியாகி, அதற்குப் பாதக வீடாகிய கடகத்தில் செவ்வாயும் சனியும் அமைவது, மணவாழ்க்கைக்கு பாதகமே தரும்.

= சந்திரன் அமர்ந்திருக் கும் மீனத்திற்கு பாதகஸ்தானமாகிய கன்னி ராசியின் அதிபதியாகிய புதனின் நட்சத்திரங்களாகிய ஆயில்யம், கேட்டை, ரேவதியில் காமத்திரிகோணம் அமைவது இந்த ஜாதகரின் பாதகச்செயலால்- மணவாழ்க்கைக் கெடும் என்பது தெளிவாகிறது.

நடப்பு தசாபுக்தி- சுக்கிர தசை, புதன் புக்தி. புக்திநாதன் புதன், ஜனன ஜாதகத்தில் கிருத்திகையிலிருக்கிறார். சந்திரன் உத்திரட்டாதி நட்சத்திலிருக்கிறார், தாரா பலத்தின்படி, பிரதியாத தாரை இடையூறு விளைவிக்கும்.

நடராஜன்: இந்த திருமண பந்தம் முறிவில் முடியுமா? இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர ஏதேனும் பரிகாரம் உண்டா?

கிருஷ்ணன் நம்பூத்ரி: சர்வ அஷ்ட வர்க்கத்தில் சந்திரனுக்கு ஏழாமிடமாகிய கன்னி ராசி அதிக பரல்களைக் கொண்டி ருப்பதால், திருமண வாழ்வில் ஏற்பட்ட பிளவு சரியாகும். கும்பகோணம் அருகேயுள்ள திருச்சத்திமுற்றம் சென்று சிவக்கொழுந்தீச ரையும் (தழுவக்குழைந்த நாதர்), திருச்செங் கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரரையும் ஒரு சோமவார நாளில் வழிபட்டுவிட்டு வந்தால், மற்ற பரிகாரங்களைச் சொல்லுவேன்.

(புலனாய்வு தொடரும்)

செல்: 63819 58636