நீதி கிடைக்குமா? நிதி வருமா?
(சம்பவம் உண்மை. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)
தன் மூத்த சகோதரனே, மூதாதையர் சொத்தினை அபகரித்துக்கொண்டு தன்னை வஞ்சிப்பதை தர்மராஜனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருந்தாலும் ஜோதிட ரின் பதிலை முன்கூட்டியே அறியும் ஆவலிலிருந்தான். கிருஷ்ணன் நம்பூதிரியிடம் தன் ஜனன ஜாதகத்தைக் கொடுத்தான்.
கிருஷ்ணன் நம்பூதிரி: கடக லக்னமும், மீன ராசியும் அமைந்துள்ள இந்த ஜாதகத்தினை பரிசீலனை செய்தால், பூர்வீகச் சொத்தை அடையமுடியுமா?
அதை அடைவதி லுள்ள சிக்கல் என்ன என்பதையும் அறியமுடியுமா?
= கடக லக்னத்திற்கு பதினோராம் வீட்டில் (பாதக ஸ்தானம்) தனித்த குரு அமர்ந்திருப்பது மூத்த சகோதரத்தால் ஏற்படும் பாதகத்தைக் குறிக்கிறது.
= இரண்டாம் வீட்டின் அதிபதியாகிய தனஸ்தானாதிபதி சூரியன் நீசமான நிலையில் இருந்தால் ஜாதகர் தன் தந்தையின் சொத்துகளை அனுபவிப்பதில் பல சிக்கல்கள் ஏற்படும்.
= பூமிகாரகனாகிய செவ்வாய், வீடு, வாகன ஸ்தானமாகிய நான்காம் வீட்டில் இருப்பது, காரகோ பாவநாஸ்தி என்ற அமைப்பினால், பாவம் கெடும்.
=நடப்பு தசாபுக்தி சுக்கிர தசையில் சனி புக்தி. தசாநாதனாகிய சுக்கிரனுக்கு புக்திநாதனாக அமையும் சனி பாதகஸ்தானத்தில் அமைவதும், பிரச்சினை எளிதில் முடியாது என்பதையே காட்டுகிறது.
= அசையா சொத்தினைக் காட்டும் நான்காம் வீட்டில் கிரக யுத்தம் உண்டாவதும் ஸ்திர சொத்தில் ஏற்படும் சிக்கலைக் குறிக்கிறது.
= பூர்வீக வழியில் புண்ணியங்களை அடைய அவரவர்களின் ஜனன ஜாதகத்தில் ஐந்தாம் பாவமானது பலமானதாக அமையவேண்டும். இந்த ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டின் அதிபதி, ஐந்தாம் வீட்டிற்கு விரயமாகிய நான்கில் அமர்வதும் பாதகமே.
ஆனாலும், ஐந்தாம் வீட்டோனும், நான்காம் வீட்டு அதிபதியும் பரிவர்தனையாவதால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டு.
= ஐந்தாம் வீட்டை குரு பார்ப்பதால் தோஷங்கள் குறைவதற்கு வாய்ப்புண்டு.
தர்மராஜன்: இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது.இது எப்போது முடிவுக்கு வரும்?
கிருஷ்ணன் நம்பூதிரி: லக்னத் திற்கு பத்தாமிடத்திலும், சந்திரனுக்கு இரண்டாமிடத்திலும் கேது அமைவதால், சுக்கிர தசை, கேது புக்தியில் சாதகமான முடிவு கிடைக்கும்.
தர்மராஜன்: இந்த பிரச்சினைக்கு பரிகாரம் செய்தால் பலன் உண்டாகுமா? அதற்கான வழிபாட்டைச் செய்ய தயாராகவுள்ளேன்.
கிருஷ்ணன் நம்பூதிரி: வளர்பிறை ஞாயிற்றுக்கிழமைகளில், கோவிலில் சூரிய பகவானுக்கு கோதுமையை சமர்ப்பித்து, செந்தாமரைப் பூவை வைத்து வணங்குவதால் சூரியனின் நல்லாசிகள் கிட்டும்.
செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானையும், அதே செவ்வாய்க்கிழமை களில் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு நெய் தீபமேற்றி வழிபட பூர்வீக சொத்துகளை அடைவதில் இருக்கும் பிரச்சினைகள் நீங்கும்.
சனிக்கிழமைகளில் ராகு- கேது பகவான்களுக்கு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் நற்பலன்களை தரும்.
(முற்றும்)
செல்: 63819 58636