குற்றப் புலனாய்வு! (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் - லால்குடி கோபாலகிருஷ்ணன் 13

/idhalgal/balajothidam/criminal-investigation-prasanna-astrology-arudath-series-lalgudi-7

ரிலோர் காணி இல்லை (சம்பவம் உண்மை. பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன.) கௌவரவர்களும் பாண்டவர்களும் சகோதர பாசத்தை மறந்து மண்ணுக்காகப் போரிட்டு மாண்ட கதை இன்றும் தொடர்கதையாகவேயுள்ளது.பல குடும்பங்களில் சொத்துப் பிரச்சினையே அமைதியைக் கெடுக்கிறது. நீதி மன்றங்களின் உள்ளே சென்றவர்கள், வெளியேவர வழிதெரியாமல் தவிக்கிறார்கள்.

பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் நினைவாக விட்டுச்சென்ற சிவப்புநிற நீதிமன்றக் கட்டடத்திற்கு வெளியே, கோபத்தில் கண்சிவந்து காத்திருந்தான் தர்மராஜன். தன் அண்ணன் இதுபோன்ற துரோகத்தைச் செய்வான் என்று கனவிலும் நினைத்ததில்லை.

தனக்கு சேர வேண்டிய சொத்தையும் அபகரித்துக்கொண்டு அடிதடியிலும் இறங்குவான் என்பதை அவன் எதிர்பார்க்க வில்லை. வழக்கின் விசாரணை நீண்டுகொண்டே போனது. இந்தப் பிரச்சினையின் முடிவை அறிந்திடும் ஆவலில், ஒரு ஜோதிடரின் ஆலோசனையைப்பெற விரும்பினான்.

ஜோதிடர் கிருஷ்ணன் நம்பூதிரியை சந்தித்து தன் பிரச்சினைக்கு முடிவு கேட்டான்.

கிருஷ்ணன் நம்பூதிரி: சமாதானமாகப் பேசி இந்தப் பிரச்சினையை முடிக்க முடியவில்லையா?

தர்மராஜன்: துவக்கத்தில் சமாதானமாகப் போகவே விரும

தர்மராஜன்: துவக்கத்தில் சமாதானமாகப் போகவே விரும்பினேன். ஆனால், விதிவசத்தால் பிரச்சினை பெரிதாகி உறவே முறிந்துவிட்டது.

கிருஷ்ணன் நம்பூதிரி: விதியின் போக்கு வினோதமானதுதான். சோட்டாணிக்கரை பகவதியை வேண்டி பிரசன்னத்தைத் தொடங்குவோம் பிரசன்ன லக்னமும் சோழிப் பிரசன்ன லக்னமும் ரிஷப ராசியிலேயே அமைந்துவிட்டன.

vv

= லக்னத்திற்கு நான்காம் வீட்டின் அதிபதி எட்டாம் வீட்டில் மறைவது, அசையா சொத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையையும், அது அரசாங்கத்தின் மத்தியஸ்தத்தில் இருப்பதையும் காட்டுகிறது.

= இரண்டாம் வீட்டின் அதிபதியும் எட்டாம் வீட்டில் அமர்வது, நெருக்கமான உறவினரே ஏமாற்றுவதைத் தெளிவாக்குகிறது.

= பூமிகாரகனாகிய செவ்வாய் அதிஷ்ட பாவமாகிய ஐந்தாம் வீட்டிற்கு பாதகஸ்தானமாகிய மீனத்திலிருப்பது, தடையையும் மனக்கவலையையும் குறிக்கிறது.

= மூத்த சகோதர ஸ்தானமாகிய பதினோரா மிடத்தில் இருக்கும் செவ்வாய், வாக்கில் கடுமையையும், சகோதர யுத்தத்தையும் வெளிப்படுத்துகிறது.

= பாகப்பிரிவினையைக் குறிக்கும் மூன்றாம் வீட்டின் அதிபதியாகிய சந்திரன் நவாம்சத்தில் நீசமானது, மூதாதையர் சொத்தின் பாகப்பிரிவினையில் வில்லங்கம் உண்டானதைக் குறிக்கும்.

= நவாம்ச லக்னத்தின் அதிபதியாகிய சந்திரன் விருச்சிகத்தில் நீசமடைவதால், இந்தப் பிரச்சினை சீக்கிரத்தில் முடியாது என்பது உறுதி.

= தாய் மற்றும் தந்தைவழி பாட்டனார்களுக்குக் காரகர்களாக இருக்கும் ராகு- கேது போன்ற கிரகங்கள் லக்னத்தையும் ஏழாமிடத்தையும் சூழ்ந்திருப்பது, மூதாதையர் சொத்தினால் உண்டான பகையை எதிரொலிக்கிறது.

தர்மராஜன்: நியாயமாக எனக்கு வரவேண்டிய சொத்தின் பங்கைதான் நான் எதிர்பார்க்கிறேன். எங்கள் சகோதர ஒற்றுமைக்கு இதுபோன்ற சோதனை வருமென்று எதிர்பார்க்கவில்லை. ஏன் இதுபோன்ற நிலை ஏற்பட்டது என்பதை அறியமுடியுமா?

கிருஷ்ணன் நம்பூதிரி: விதி வலியது. முன்ஜென்ம கர்மாதான் இதற்கெல்லாம் காரணம் என்பதே உண்மை. உங்களுடைய ஜனன ஜாதகத்தைப் பார்த்தபின்னரே இதைவிட தெளிவான முடிவுக்கு வரமுடியும்.

தர்மராஜன்: இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது. இது எப்போது முடிவுக்கு வருமென்பதை அறியமுடியுமா?

=கிருஷ்ணன் நம்பூதிரி: உங்களுடைய நடப்பு தசாபுக்தி மற்றும் கோட்சார கிரக அனுகூலங்களையும் கணக்கிட்டே துல்லியமாகக் கூறமுடியும்.

(புலனாய்வு தொடரும்)

செல்: 63819 58636

_______________

ஜோதிடத்தில் சொத்துப் பிரச்சினை

* 2-க்கு அதிபதியும், 4-க்கு அதிபதியும் ஒருவருடைய சொத்துபற்றிக் குறிப்பிடும். அவை ஜாதகத்தில் சரியாக இல்லையென்றால் கிடைக்கவேண்டிய சொத்து கிடைக்காமல் போய்விடும்.

* 4-க்குரிய கிரகம் நீசமடைந்தால் அல்லது பலவீனமாக இருந்தால் அவருக்கு சேரவேண்டிய வாகனம், வீடு, நிலம், பூர்வீக சொத்து ஆகியவற்றில் பிரச்சினைகள் ஏற்படும்.

* 2-ஆம் அதிபதி கெட்டுப்போனால், சுயமாக சம்பாதித்த சொத்தில் பிரச்சினைகள் உண்டாகும்.

* 2-ல் நீசச் செவ்வாய் இருந்தாலோ, பார்த்தாலோ சொத்தில் வில்லங்கம் உண்டாகும்.

* ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் 2-க்கு அதிபதியாகி பலவீனமாக இருந்தால் நோயின் காரணமாக சொத்தை இழக்கவேண்டிய சூழல் உண்டாகும்.

* ஜாதகத்தில் 4-க்கு அதிபதி பலவீனமாக இருந்து, பாவகிரகத்தால் பார்க்கப்பட்டால் அவருக்கு நல்ல வீடு அமையாது.

* 4-க்கு அதிபதி 12-க்கு அதிபதியுடன் சேர்ந்து 12-ல் இருந்தால், அவருடைய பிறந்த ஊரிலுள்ள சொத்தில் பிரச்சினைகள் ஏற்படும்.

* ஒரு ஜாதகத்தில் 4-ல் சூரியன் இருந்து சனியால் பார்க்கப்பட்டால் ஜாதகர் தன் சொத்துகளை அனுபவிக்கமுடியாது. அவருடைய சொத்து அவருக்குக் கிடைக்காத வகையில் பிறர் ஏமாற்றுவார்கள்.

* அதே ஜாதகத்தில் சுக்கிரன் ராகுவுடன் சேர்ந்து, 3-ஆம் வீட்டில் சேர்ந்தால், சகோதரர்கள் சொத்துகளை அபகரித்துக்கொள்வார்கள்.

* சந்திரன் 11-ல் உச்சமாக இருந்து, 12-ல் செவ்வாய், சனி இருந்தால், ஜாதகர் தன் பேராசை குணத்தால் ஏமாந்துவிடுவார்.

* 12-ல் சந்திரன், 4-ல் கேது, 7-ல் செவ்வாய் இருந்தால், பூர்வீக சொத்து கைக்கு வருவதில் சிக்கல் ஏற்படும்.

* 4-ல் சனி, 7-ல் செவ்வாய், 12-ல் ராகு இருந்தால், வரவேண்டிய குடும்பச் சொத்தில் பிரச்சினைகள் உண்டாகும்.

* 8-ல் சுக்கிரன், ராகு, செவ்வாய் இருந்தால், தந்தைவழியில் வரவேண்டிய சொத்து கிடைக்காது.

* 4-க்கு அதிபதி நீசமடைந்து 8-ல் பாவகிரகத்துடன் இருந்தால் அல்லது 8-ஆம் அதிபதியுடன் இருந்தால், அவருக்கு வரவேண்டிய சொத்து கிட்டாது.

* ஒருவருக்கு பூர்வீக சொத்துகளை அனுபவிக்க ஜாதகத்தில் தந்தைக்கு காரணமான சூரியன் பூமிகாரகனாகிய செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஜனன ஜாதகத்தில் பாதகமான அமைப்பில் இருந்தாலும், சுப கிரகங்களின் பார்வை பெற்றிருந்தால் பெரும் போராட்டமும், முடிவில் நற்பலனும் ஏற்படும்.

bala010121
இதையும் படியுங்கள்
Subscribe