ஆசையே அலை போலே

(சம்பவம் உண்மை. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)

காலை நடைப்பயிற்சியில், காலை வீசி நடந்துக்கொண்டிருந்த விஸ்வநாதன், திடீரென்று மயக்கம் வர, பக்கத்தில் நின்றிருந்த செந்திலின் கரங்களில் வீழ்ந்தான். தன்னைக் காப்பாற்றிய செந்திலே தனக்கு ஒளிமயமான எதிர்காலத்தையும் காட்டுவான் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.தான் கோடிஸ்வரரானானதற்கு நாகமணியே காரணம் என்று ஆரம்பித்து, பெருங்கதையைச் சொல்லி முடித்த செந்தில், தன் நண்பனுக்கும் அதை வாங்கித்தரும் பொறுப்பையும் தானே ஏற்றான். சின்னமனூருக்கு அருகிலுள்ள காட்டிலிருக்கும் பொன்னன் என்ற காட்டுவாசியை சந்திக்க வழிகாட்டினான். மேகமலை, தன் பசுமையை மறைத்துக் கருப்புப்போர்வை போர்த்தியிருந்தது. மரங்களின் கீற்றுகளுக்கிடையே பாய்ந்த சந்திரனின் ஒளியும், ஊதைக் காற்றின் ஒலியும், அந்த காடு தன் வெண்மையான பற்களைக் காட்டி கேலியாக சிரித்தது போலிருந்தது. அறிவு ஜீவி, சாணக்கியன் என்று பலராலும் பாராட்டப்பட்ட விஸ்வநாதன், காட்டுவாசி பொன்னனின் வருகைக்காகக் காத்திருந்தான். தூரத்தில் ஒரு புள்ளியாய்த் தெரிந்து, கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாகி, அருகில் வந்தபோது அது தீவட்டியின் ஒளியென்று புரிந்தது. அந்த ஒளியில் தேடிவந்தவன் தெரிந்தான்.

excerise

Advertisment

பழைய ஓலைச்சுவடிகளைப் படித்துக்கொண்டிருந்த கிருஷ்ணன் நம்பூதிரி, தன் முன்னால் நிழல் விழுந்ததால் நிமிர்ந்துப் பார்த்தார். கவலையுடன் விஸ்வநாதன் நின்றிருந்தான். தான் பல இடங்களில் கடன்வாங்கி அதிஷ்டம் தரும் ஒரு பொருளைவாங்க முயன்றதையும், பணம் கைமாறியதும் காட்சிகள் மாறி சாட்சிகள் காணாமல் போனதுவரை பெருமூச்சுடன் சொல்லி முடித்தான்.

கிருஷ்ணன் நம்பூதிரி: பேராசை அறிவாளிகளைக்கூட அசைத்துவிடும். ஏமாற்றுபவன் மட்டும் திருடன் அல்லன். பேராசையால் ஏமாறுபவனும் திருடன்தான். என் வீடுதேடி வந்ததால் உனக்கு உதவிசெய்யக் கடமைப் பட்டிருக்கிறேன். முதலில் பிரசன்ன ஜாதகத்தைக் கணித்துப் பார்ப்போம்.

தெய்வ உபாசனைமூலம் உருவேற்றப் பட்ட சோழிகளை உருட்டி பரல்களை எண்ணத் தொடங்கினார்.

Advertisment

பிரசன்ன லக்னம் மற்றும் சோழிப்பிரசன்ன லக்னம்

1. 12-ஆம் பாவமாக வருவதும், பிரசன்ன லக்னாதி பதி, எட்டாம் பாவாதிபதியுடன் கூடி பன்னிரண்டாம் பாவத்தில் அமர்வதும் இழப்பைக் காட்டுகிறது.

2. பன்னிரண்டாம் பாவம் கேதுவின் மூலத்திலிருந்து, கேதுவே அதற்கு விரயத்தில் அமர்வது முதலீட்டின் இழப்பையும் தெளிவாக்கும்.

exce

3. பிரசன்ன லக்னத்தின் மாந்தியும் சனியும் கூடுவது, பிரசன்னம் கேட்பவர் ஏமாற்றபட்டதைக் காட்டும்.

4. சோழிப்பிரசன்ன லக்னத்தின் பாதகாதிபதி புதன் ராகு நட்சத்திரமாகிய ஸ்வாதியில் துலாமாக இருப்பதும், அம்சத்தில் அதுவே சதயம் ஏறுவதும், பிரசன்னம் கேட்பவர் சட்டத்திற்குப் புறம்பான ஏதோ ஒரு நூதனமான மோசடியில் ஏமாந்தது தெரிகிறது.

5. புதனும் அம்சத்தில் சர்ப்ப திரேக்காணத்தில் அமைவது, இழப்பு சர்ப்பம் சம்பந்தப்பட்ட ஒரு தாது என்று காட்டினாலும், ராசியில் புதன் பக்ஷி திரேக்காணத்தை தொடர்புக்கொள்வது அம்சத்திற்கு நாசமாக அமைவதால், இது போலியென்று தெரிகிறது.

6. எட்டாம் பாவம் மக நட்சத்திரத்தில் அமைவதால் கேது தொடர்பு தெரிகிறது, அதோடு பாதகாதிபதி ராகுவும் தொடர்பு கொண்டுள்ளார். மேலும் ராகு போக மூலத்திலும், எட்டாம் பாவம் தாது சாரத்திலும் அமைகிறது. ஆதலால் இது ஒரு சர்ப்ப சம்பந்தபட்ட பொருளால் ஏமாற்றமே உண்டாகும் என்று தெரிகிறது.

7. சோழிப்பிரசன்ன லக்னம் அமைந்த திரேக்காணம் திருடர்களை குறிப்பதாலும், அதற்கு ஏழாமிடம் திட்டமிடுதலைச் சுட்டிக் காட்டுவதாலும் பிரசன்னம் கேட்பவரின் பணம் திட்டமிட்டுத் திருடப்பட்டது என்று தெரிகிறது.

விஸ்வநாதன்: என் நண்பன் நாகரத்தினத்தால் அதிர்ஷ்டம் அடைந்ததாக சொன்னதால் நானும் முன்னேறலாமென்று எண்ணினேன். பலரிடமும் கடன் வாங்கிக் கொடுத்தேன். இப்போது என் நண்பனும் தொடர்பில் இல்லை. நாகரத்தினம் என்பது உண்மையா? .அதை அணிவதால் கோடீஸ்வரனாகும் யோகம் உண்டாகுமா?

கிருஷ்ணன் நம்பூதிரி: பண்டைய நூல்களில், நாகரத்தினம் என்ற சொல் கையாளப்பட்டிருக்கிறது என்பது மட்டுமே உண்மை. அது உவானமா?

excer

உண்மையா என்பது எவருக்கும் தெரியாது. நாகம் என்ற சொல்லுக்கு மலை என்ற பொருளுமுண்டு. மலையில் கிடைக்கும் ரத்தினமே நாகரத்தினமா என்ற கேள்வியுமுண்டு. சித்தர் பாடலில், "இரு குரங்கின் கை ஒடித்து' என்று முசுமுசுக்கைக் கொடியின் பெயரைச் சங்கேதமாகச் சொல்வார். முசு என்றால் கருங்குரங்கு என்பதே பொருள். அதற்காக யாராவது மருந்து செய்ய குரங்கின் கையை ஒடிப்பார்களா? எந்த ஞானியும் ஒரு மிருகத்தைக்கொன்று ஒரு பொருளை எடுத்தால் அதிர்ஷ்டம் வருமென்று சொல்லியிருக்க வாய்ப்பில்லை. பலகாலமாய் சுமந்து திரிந்த நாகத்திற்கு அந்த ரத்தினம் மரணயோகத்தைத் தருமென்றால், அதை அணிபவருக்கு மட்டும் அதிர்ஷ்டத்தைத் தந்துவிடுமா? அப்படியே அதை வைத்திருப்பவருக்குக் கோடிகளை அள்ளித்தரும் என்பது உண்மையானால், அதை விற்பவரே வைத்துக்கொள்ளலாமே? அதை சில ஆயிரங்களுக்கு விற்கவேண்டியதன் அவசியமென்ன? ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களுக்குக் கொண்டாட்டம்தான். இது மட்டுமல்ல; இரிடிய கலசம், சிவப்பு பாதரசம், சித்திரக்குள்ளன் என்று பலவித மோசடிகள் நடந்துகொண்டேயிருக்கின்றன. நண்பர் என்று நீங்கள் குறிப்பிட்டவர்தான் இந்த சதியின் முக்கியமான காரணம்.

சோழிப்பிரசன்ன லக்னத்தின் ஐந்தாம் பாவத்தில் ராகு இருப்பது செல்வந்தர்போல் தன்னைக்காட்டிக் கொள்ளும் நண்பர் இருப்பது தெளிவாகிறது.

ஐந்தாம் பாவத்தின் ஆரம்ப முனை கார்த்திகை நான்காம் பாதத்தில் அமைந்து, அதன் அதிபதியாகிய சூரியன் இருட்டு ராசியாகிய விருச்சிகத்தில் பதுங்குவது, நண்பனின் தீய நோக்கத்தை வெளிக்காட்டுகிறது.

நீங்கள் கொடுத்த பணம் திரும்பி வருமா என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

(புலனாய்வு தொடரும்)

செல்: 63819 58636

_________

ஆசை நிறைவேறுமா?

 கோட்சாரத்தில் ராசிக்கு குரு கேந்திரம் எனும் 4-ஆம் வீட்டில் அல்லது 7-ஆம் வீட்டில் அல்லது 10-ம் வீட்டில் இருக்கும் காலத்தில் ஆசைகள் நிறைவேறும்.

 லக்னத்துக்கு இருபுறமும் வரிசையாக மாலைபோல் கிரகங்கள் இருந்தால் ஏற்படும் கிரகமாலிகா யோகம் உள்ளவர்கள், வாழ்க்கையில் எல்லா ஆசைகளும் நிறைவேறுப்பெறுவர்.

 மூன்றாம் பாவாதிபதி, பதினொன்றாம் பாவாதிபதிகளின் தசைபுக்தி, காலங்களில் ஆசை நிறைவேறி வெற்றிகள் குவியும்.