மந்திரப் பதுமை!

(சம்பவம் உண்மை. பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன.)

ஆப்பிரிக்காவின் "டோகோ' நாட்டுக் கடலோரத்து கிராமத்தில், இரவின் அமைதி உருக்குலைந்தது. இருள் சூழ்ந்திருந்த அந்த சமரச பூமியில், சிவப்பு மெழுகுவர்த்திகளை எரியவிட்டு இறந்த முன்னோர்களைப் பிரார்த்தித்தார்கள் "வூடு' இனத்து மக்கள். இறந்துபோன மூதாதையர்களின் ஆவிகளுடன் தொடர்புகொண்டு அதீத சக்திகளைப்பெறுவதற்காக பேய் வேடமிட்டு நடனமாடத் துவங்கினார்கள். இது எதிலும் தொடர்பில்லாதவன்போல் அந்த மந்திரவாதி இறுகிய முகத்துடன், இறகு களும் எலும்புகளும் சிதறிக்கிடந்த அந்த மயானத்தின் ஒரு மூலைக்குச் சென்றான். நரிகள்கூட இவனைப் பார்த்து தெறித்து ஓடுகின்றன. திடீரென்று வானத்தை நோக்கி ஒரு பேய்ச் சிரிப்பு சிரித்துவிட்டு, "நிர்மலா' என்ற பெண்ணின் வாழ்வை சிதைக்கும் "செய்வினை'யைச் செய்யத் தயாரானான். களிமண்ணால் செய்யப்பட்டிருந்த மந்திரப் பதுமையின்மீது ஆணிகளைப் பொருத்தி தீயகாரியங்களை நிறைவேற்றத் தொடங்கினான்.

Advertisment

invest

சென்னையின் இரைச்சலான வாகனங் களின் ஒலியலைகள் மெல்ல அடங்கியிருந்த பின்னிரவு நேரம். நிர்மலாவின் கூச்சல், நிம்மதியைக் கெடுத்தது. தீயில் எரியும் ஆடையுடன் தன் மகள் ஓடிவருவதைக்கண்ட நீலகண்டன் பதறிப் போனார். ஒருவாறாகத் தீ அணைக்கப்பட்டு, மீண்டும் அமைதி திரும்பியது.

நீலகண்டன்: திடீரென்று ஒரு நாள், எந்த காரணமும் இல்லாமல் என் மகளின் ஆடை மட்டும் தீப்பற்றி எரிந்தது. இதற்குக் காரணமும் ஏவல்தானா?

கிருஷ்ணன் நம்பூதிரி (ஜோதிடர்): இதுபோன்ற பல நிகழ்வுகள், தமிழ் நாட்டில் நடந்திருக்கின்றன. விழுப்புரத்தில் நடந்த நிகழ்வு, மனிதர்கள் தாமாகப்பற்றி எரிதல் (Spontaneous Human Com bustion -18-2-2016) Ultra என்று பெயரிடப்பட்டு, மருத்துவர்களால், மூடி மறைக் கப்பட்டுவிட்டது. நம் நாட்டில், அக்னி கிரீடத்தைச் சுமந்த காளியின் உபாசகர்கள், வெள்ளெருக்கு சமித்தினால், அபிச்சார அக்னி குண்ட பூஜை செய்து, எதிரிகளை அக்னியால் வீழ்த்துகிறார்கள்.

நீலகண்டன்: மந்திரங்களைக் கொண்டு ஒருவரைக் கட்டுப்படுத்த முடியுமா? மந்திரங்கள் அவ்வளவு வலிமையானவையா?

கிருஷ்ணன் நம்பூதிரி (ஜோதிடர்) : மந்திரங்களில் தூய மந்திரம் (நேர்மறை), தீய மந்திரம் (எதிர்மறை) என்ற இரண்டு வகைகள் உள்ளன. மந்திரங்கள் என்பவை சக்திவாய்ந்த ஒலி அதிர்வுகள். மந்திரங்கள் பிரபஞ்சத்தில் உள்ள சக்திகளின் அதிர்வலைக் குறியீடுகள். ஒவ்வொரு தேவதைக்கும் ஒவ்வொரு அதிர்வலை உண்டு. இந்த பிரபஞ்சமே, "ஓம்' என்ற ஒலியால் உருவானதே. திபெத்திய லாமாக்கள் வேறுபட்ட ஒலி அலை களால் எதையும் மாற்ற முடியுமென்று சாதித்துக் காட்டினார்கள். சிதம்பரம் கோவில் சிகண்டி பூரண மணியின் ஒலி, பலவித மன நோய்களைத் தீர்க்கக்கூடியது. விஞ்ஞானி களும் அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அலை களால், (sound)மனதின் எண்ண ஓட்டங்களையே மாற்றமுடியும் (Nonsurgical brain stimulation) என்று நிரூபித்துள்ளார்கள் .

நீலகண்டன்: பிரசன்ன ஆரூடத்தைக் கொண்டு பலன்களைக் காண்பது போல், ஜனன ஜாதகத்தைக் கொண்டும் பலன் அறியமுடியுமா?

கிருஷ்ணன் நம்பூதிரி (ஜோதிடர்): ஜனன ஜாதகத்தைக்கொண்டு துல்லியமான பலன்களைச் சொல்லமுடியும் என்றா லும், சரியான ஜனன காலம் எவருக்கும் தெரிவதில்லை. ஜனன காலத்தைக் காட்டிய கடிகாரம் எவ்வளவு நேர வித்தியாசத்திலிருந்தது என்பது யாருக்கும் தெரியாது. ஜோதிட கணிதத்தில், ஒரு விநாடி வேறுபட்டாலும் பலன் மாறிப்போகும். கட்டைவிரல் ரேகையைக் கொண்டும், வாழ்வின் சில நிகழ்வுகலைப் பொருத்திப் பார்த்துமே, ஜனன நேரத்தை சரிசெய்து கொள்ளமுடியும்.

நாடியிலிருந்து கணிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் ஜாதகம்: பாவ சக்கரத்தில், மனம் மற்றும் சுக ஸ்தானமுமாகிய நான்காம் பாவத்தில், மாந்திரீக கிரகங்களாகிய சனியும், ராகுவும் சேர்ந்து ஒரே நட்சத்திரத்தில் இருப்பது, செய்வினையால் ஜாதகரின் மனமும் சுகமும் பாதிக்கப்படுவதைக் குறிக்கிறது.

நான்காம் பாவமும், எட்டாம் பாவமும் கேதுவின் நட்சத்திரத்தில் அமைவதாலும், கேது- ராகு சாரத்திலும், குரு- சனி சாரத்திலும் இருப்ப தாலும், இந்த ஜாதகர் குரு தசை, கேது புக்தியில், அபிச்சாரம் எனப்படும் பில்லி, சூனியம், ஏவல்களினால் பாதிக்கப்படுவார் என்பதும் தெளிவாகிறது.

லக்னம் வர்கோத்தமமாக அமைவதால், ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு என்பது உறுதி.

எட்டாம் பாவாதிபதி, மூன்றாம் பாவத்திலிருப்பதால், எப்போதும் மனதில் ரகசிய பயம் உண்டாகும்.

ராகுவின் நட்சத்திரத்தில் சூரியன், சூரியனின் ஆட்சி வீட்டில் ராகு அமர்வதும், ஜாதகர் எளிதில் துஷ்ட மாந்திரீகத்தால் கட்டுப்படுத்தப்படுவார் என்பது தெளிவாகிறது.

லக்னத்திற்கு பாதகாதிபதியாகிய சனி, ஆறாம் பாவம் அமையும் நட்சத்திரத்தின் அதிபதியான ராகுவுடன் தொடர்பு கொள்வது, எதிரிகளால் மரபுமீறிய முறையில் பழிவாங்கப்படுவார் என்பது உறுதியாகிறது.

ஜாதகருக்கு குரு தசை கேது புக்தியில் மாந்திரீகத் தொந்தரவு ஏற்பட்டது. இதற்குக் காரணம்:

குரு 4, 8, 12-ஆம் பாவத் தொடர்பில் உள்ளது; கேது 4, 10-ஆம் பாவத் தொடர்பு கொண்டது.

சனி ரிஷபத்திற்கு பாதகாதிபதி யாக மற்றும் மகா பாதகாதிபதியாக இருப்பது, இந்த ஜாதகரின் குலதெய்வப் பாதுகாப்பைக் குறைக் கிறது.

குரு தசை முழுவதுமே சோதனைக் காலம்தான்.

நீலகண்டன்: செய்வினை செய்யும் மந்திரவாதிகள் எவ்வாறு ஒருவரைக் கட்டுப்படுத்துகி றார்கள்?

கிருஷ்ணன் நம்பூதிரி (ஜோதிடர்) : ஒருவருக்கு இடையூறு செய்ய ஒரு உருவ பொம்மையைச் செய்து, அதை அந்த மனிதராக பாவித்து, சில மந்திரங்களைக் கூறி உடல் உறுப்புகளை ஊசியால் குத்தினால் அவனை ஊனப்படுத்தலாம். ஒரு மனிதனின் காலடி மண்ணை எடுத்து நெருப்பில் போடுவதால், அவனுக்கு கேடு விளைவிக்கமுடியும். ஒருவரின் தலைமுடியை எடுத்து மந்திரம் கூறி, அவரை மந்திரவாதி யின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியும்.

நீலகண்டன்: ஆப்பிரிக்காவில் தொடுக்கப்பட்ட ஏவலால் பாதிக்கப்பட்டவர் இந்தியவுக்கு வந்த பின்னாலும், பாதிப்பு விலகாதது ஏன்?

கிருஷ்ணன் நம்பூதிரி (ஜோதிடர்): அதிநவீன விஞ்ஞானத்தில், தொலைதூர அணுகுதல் (தங்ம்ர்ற்ங் ஆஸ்ரீஸ்ரீங்ள்ள்) சாத்தியம் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. எங்கோ இருக்கும் ஒருவர் நம் கணினியிலும், கைபேசியிலும் நம் அனுமதியில்லாமல் உட்புக முடியுமென்றால், எங்கிருந்து வேண்டுமானாலும், மனம் எனும் மென்பொருள் மூலம் பிறரைத் துன்புறுத்த முடியும் என்பது உறுதியாகிறது. ஒருவர் எங்கே சென்றாலும், அவரைப் பின்தொடரும் நிழல்போல், அவர்மேல் ஏவப்பட்ட செய்வினையும் பின்தொடரும் மந்திர ஒலியானது பஞ்சபூதங்களிலும் பாயக்கூடியது. மந்திர ஒலி காற்றில் கலந்து, ஆகாயத்தில் பரவி குறிப்பிட்ட இலக்கைத் தாக்கி செயல்படுத்துகிறது. பொது வான காற்றுவெளியில்தான் எல்லா உயிர்களின் மூச்சுக் காற்றும் கலக்கிறது. காற்றே செய்திகளைக் கடத்தும் பிராதான ஊடகம் என்பதை அறிந்தால் மட்டுமே, மந்திர சாத்திரத்தை அறிந்துகொள்ளமுடியும்.

நீலகண்டன்: வெகு தூரத்தில் உள்ளவருக்கும் ஏவல் செய்யமுடியுமா?

கிருஷ்ணன் நம்பூதிரி (ஜோதிடர்): அன்னமய கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் எனும் ஐந்து உடல்கள் எல்லா மனிதர்களுக்குமுண்டு. மனோமய கோசத்தின் மூலமாகவே ஒருவரின் உடலில் ஏவல் செலுத்தப்படுகிறது. மந்திரம் செய்பவன், பாதிக்கப்படுபவரை மனதின் மூலமே தொடர்புகொள்கிறான்.

நீலகண்டன்: இதுவரை பலவிதமான ஹோமங்களைச் செய்தும், செய்வினையால் ஏற்பட்ட பாதிப்பை நீக்கமுடியாமல் போனதன் காரணம் என்ன? பாதிப்பு நீங்குவதற்கான வழிமுறையைத் தாங்களே சுட்டிக்காட்டவேண்டும்.

கிருஷ்ணன் நம்பூதிரி (ஜோதிடர்): அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ள பரிகாரங்களை, "பரசுராம ஷேத்திரம்' எனப் படும் கேரளத்தில் செய்வதே சரியானது. சோட்டாணிக்கரை கோவிலின் 'கீழ்க்காவில்' நடைபெறும் பூஜைகளில் ஒன்றான "குருதி பூஜை'யில் கலந்துகொண்டு, தகுந்த பரிகாரங்களைச் செய்தால் மட்டுமே இந்த பாதிப்பு தீரும்.

(புலனாய்வு தொடரும்)

செல்: 63819 58636

செய்வினை பாதிப்பின் அறிகுறிகள்

செய்வினையால் பாதிக்கப்பட்டவருக்கு அருகில் யாரோ இருப்பது போலவும், யாரோ தன்னை உற்று நோக்குவது போலவும், யாரோ தொடுவது போலவும் உணர்வார்கள்.

கையில் வைத்திருந்த பொருள் திடீரென காணாமல் போகும். சில நிமிடங்களில் அதே இடத்தில் மீண்டும் இருக்கும். அதனால் பாதிக்கப் பட்டவர்கள் குழம்புவார்கள்.

நன்றாகப் போய்க்கொண்டிருந்த தொழிலில் திடீரென தோல்விகள் ஏற்படும்.

மருத்துவர்களால் கண்டுபிடித்து குணப்படுத்த முடியாத தீரா நோய்களுக்கு ஆளாவார்கள்.

கெட்ட கனவுகளால் உறக்கம் கலையும்.

பாதிக்கப்பட்டவர்கள் உடல் நடுக்கத்துடன் நடு ராத்திரியில் பயந்து எழுந்துகொள்வார்கள்.

மனம் கலக்கமுற்று, சித்த பிரம்மை பிடித்தது போலிருப்பார்கள்.

செய்வினை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தில், தொடர்ந்து மர்மமான முறையில், நெருங்கிய உறவினர்கள் இறந்துபோவார்கள்.

தொடர்ந்து யாரோ அழுதுகொண்டிருப்பது போன்ற சப்தம் பாதிக்கப் பட்டவருக்கு மட்டும் கேட்கும்.

இரவில் திடீரென்று ஒரு கருப்புப்பூனை அந்த வீட்டைச் சுற்றிவந்து அலறும்.

பசுமாடு, பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு அருகில் வந்தால் மிரண்டு ஓடும்.

காக்கைக்கு உணவு வைத்தால் உண்ணாது.

நன்றாக வளர்ந்த துளசிச் செடி வாடிப்போகும்.

பூஜையறையில் விளக்கை எத்தனை முறை ஏற்றினாலும் அணைந்து போகும்.

இறந்துபோன முன்னோர்கள் அடிக்கடி அழுத முகத்தோடு கனவில் வருவார்கள்.