குற்றப் புலனாய்வு! (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் -லால்குடி கோபாலகிருஷ்ணன் 4

/idhalgal/balajothidam/criminal-investigation-prasanna-astrology-arudath-series-lalgudi-2

என்று தணியும் நோயின் கொடுமை?

"கோவிட்-19' வைரஸ் தன்னுடைய கோரத் தாண்டவத்தைத் துவக்கியது.மேல்தட்டு மக்கள் தங்கள் அசையா சொத்துகளை விற்றுவிட்டு தனியார் மருத்துவமனைக்குப் போனார்கள். ஏழைகள் அரசு மருத்துவமனையில் ஒதுங்கினார்கள். நடுத்தர வர்க்கம், மருத்துவச் செலவுக்காக கடன்கேட்டு காவடி எடுத்தது. "கோவிட்-19' என்னும் தொற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்படாதபோதும் ஆறுதலுக்காக மருத்துவம் பார்க்கப்பட்டது. எமனையே ஏய்த்தவர்கள் வீடு திரும்பினார்கள். இறந்தவர்கள் முகம் காட்டாமல் பைகளில் புதைக்கப்பட்டார்கள். மொத்தத்தில், ஒரு போர்க்காலப் பதற்றம் தொற்றிக்கொண்டது. இந்த நோயை எய்தது யார்? உலக அரசியல் சூடுபிடித்தது. ஒருவரையொருவர் குறைக் கூறிக்கொள்ளும்போதே குறையத்தொடங்கியது மக்கள் தொகை. பொருளாதாரம் பள்ளத்தை நோக்கிப் பாய்ந்தது.

gg

கத்தியின்றி, இரத்தமின்றி யுத்தமொன்று தொடங்கியது. முதல் உலக யுத்தத்தில் கனரக பீரங்கிகள்; இரண்டாம் உலக யுத்தத்தில் அணுகுண்டு வீச்சு என்று அழிவுப்பாதையில் முன்னேறி வந்த மனிதனின் அடுத்தகட்ட நகர்வே கிருமி யுத்தம். இந்தத் தொற்று நோயின் துவக்கத்தையும் முடிவையும் அறியலாம்; வாருங்கள்.

அறிவழகன் (விஞ்ஞானி): இந்தத் தொற்றுநோய் இயற்கையில் உருவானதா?செயற்கையாக

என்று தணியும் நோயின் கொடுமை?

"கோவிட்-19' வைரஸ் தன்னுடைய கோரத் தாண்டவத்தைத் துவக்கியது.மேல்தட்டு மக்கள் தங்கள் அசையா சொத்துகளை விற்றுவிட்டு தனியார் மருத்துவமனைக்குப் போனார்கள். ஏழைகள் அரசு மருத்துவமனையில் ஒதுங்கினார்கள். நடுத்தர வர்க்கம், மருத்துவச் செலவுக்காக கடன்கேட்டு காவடி எடுத்தது. "கோவிட்-19' என்னும் தொற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்படாதபோதும் ஆறுதலுக்காக மருத்துவம் பார்க்கப்பட்டது. எமனையே ஏய்த்தவர்கள் வீடு திரும்பினார்கள். இறந்தவர்கள் முகம் காட்டாமல் பைகளில் புதைக்கப்பட்டார்கள். மொத்தத்தில், ஒரு போர்க்காலப் பதற்றம் தொற்றிக்கொண்டது. இந்த நோயை எய்தது யார்? உலக அரசியல் சூடுபிடித்தது. ஒருவரையொருவர் குறைக் கூறிக்கொள்ளும்போதே குறையத்தொடங்கியது மக்கள் தொகை. பொருளாதாரம் பள்ளத்தை நோக்கிப் பாய்ந்தது.

gg

கத்தியின்றி, இரத்தமின்றி யுத்தமொன்று தொடங்கியது. முதல் உலக யுத்தத்தில் கனரக பீரங்கிகள்; இரண்டாம் உலக யுத்தத்தில் அணுகுண்டு வீச்சு என்று அழிவுப்பாதையில் முன்னேறி வந்த மனிதனின் அடுத்தகட்ட நகர்வே கிருமி யுத்தம். இந்தத் தொற்று நோயின் துவக்கத்தையும் முடிவையும் அறியலாம்; வாருங்கள்.

அறிவழகன் (விஞ்ஞானி): இந்தத் தொற்றுநோய் இயற்கையில் உருவானதா?செயற்கையாக உருவாக்கப் பட்டதா என்னும் விவாதம் இன்றுவரை ஓய்ந்தபாடில்லை. ஜோதிடத்தில் இதற்கான விடையைக் கண்டறிய வழியுண்டா?

பரஞ்சோதி (ஜோதிடர்): 26-12-2019-ல் சூரிய கிரகணம் ஏற்பட்ட ராசி தனுசு. அந்த ராசியின் ரூபம் அம்பை யாரோ எய்வது. பொதுவாக, "உபயம்' என்னும் சொல்லுக்கு "பிறரின் உதவியால் செய்யப்படுவது' என பொருள். ஒரு ராசிக்கு ஏழாவது ராசியே காரணத்தைக் காட்டும். தனுசு ராசி சுட்டிக்காட்டும் உபய ராசியாகிய மிதுனமும், அதில் அமர்ந்திருக்கும் ராகுவும் இந்தக் கிருமி செயற்கையாக உருவாக்கப்பட்டதென்றும், இது ஒரு கிருமி யுத்தத்தின் துவக்கமென்றும் தெரிவிக்கிறது. மரபுமீறிய எல்லா செயல்களுக்கும் ராகுவே காரகன் என்பது பொது விதி.

அறிவழகன் (விஞ்ஞானி): யார் இந்தத் தொற்றுநோயை செயற்கையாக உருவாக்கியது என்பதைக் கண்டறியமுடியுமா?

பரஞ்சோதி (ஜோதிடர்): கேது குறிப்பிடும் கிருமி, ராகு சுட்டிக்காட்டும் நாட்டிலிருந்து வந்ததை உபய ராசியான மிதுனம் காட்டுகிறது. மிதுனம் தொலைதொடர்பைக் குறிப்பதும், ராகு சீனாவைக் குறிப்பதுமாகும். (சீனாவின் அடையாளம் டிராகன் என்னும் ஒருவகைப் பாம்பு). இந்தக் கிருமி சீனத்திலிருந்து பரப்பப்பட்டதும் தெரிகிறது. ஒரு நாட்டின் பொதுவான குணநலன்களைக்கொண்டு, அது எந்த நவாம்சத்தைக் குறிக்கிறதென்பதை அறியலாம். திருவாதிரை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்து குணாதிசயங்களை சீன தேசத்துடன் ஒப்பிடலாம். திருவாதிரை இரண்டாம் பாதத்தின் (மகர நவாம்சம்) தன்மைகள்: தன் விருப்பம் நிறைவேற எதையும் செய்யத் துணிதல்- விடாமுயற்சி- தோல்வி கண்டா லும் சோர்வடையாமல் அதிலிருந்து பாடம் கற்று மீண்டும் முயற்சிசெய்யும் வல்லூறு- பிடிவாத குணம்- ஆதிக்கமானது- சீற்றமுள்ளது- சினம்கொண்டது- இடதுசாரி- இரட்டைமொழி- குறுகிய நோக்கம்- குள்ளமான உருவம்- ஈ தான் இதன் குறியீடு. நிலையில்லா குணம்- கைகள் சிறியது, பரந்த நெற்றி, தனக்குப் பிடிக்காதவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் அதனால் அதிக சந்தோஷப்படுதல்- உள்ளே பிரச்சினை இருந்தாலும் வெளிப்பார்வைக்கு ஒற்றுமையாக இருப்பதாகவே தோன்றுவது- விளையாட்டு வீரர்- கம்ப்யூட்டர், விஞ்ஞான ஆராய்ச்சிகளில் திறமை. இந்த குணநலன்கள் சீன தேசத்துடன் ஒருங்கிணைவதை அறியலாம்.

கிரகண நேரத்து லக்னம் மகரத்தில் அமைவதும், அதற்கு ரோக ஸ்தான மாகிய மிதுனத் தில் ராகு அமர்வதும் இந்தத் தொற்றுநோயின் ஆரம்பப்புள்ளி சீனா விலுள்ள ஊகான் நகரம்தான் என்பது தெளிவாகிறது.

அறிவழகன் (விஞ்ஞானி): இந்தத் தொற்றுநோய் எப்போது நீங்கும்? தடுப்பு மருந்திற்காகச் செய்யப்படும் ஆராய்ச்சி வெற்றிபெறுமா?

பரஞ்சோதி (ஜோதிடர்): 14-12-2020 அன்று நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை ஆராய்ந்தாலும், இந்தத் தொற்று நோய் இன்னும் சிலகாலம் நீடிக்கும் என்றே தெரிகிறது. குரு மகரத்தில் நீசமடைவதும் ஆரோக்கியத்தில் பின்னடைவையே காட்டுகிறது. சார்வரி ஆண்டுபலனைக் காணும்போதும் இந்தத் தொற்றுநோய் சற்றே உருமாறி, மீண்டும் தொல்லை தருமென்பது உறுதி. 20-07-2021 வரை நீசத்தை நோக்கி அவரோகண கதியில் செவ்வாய் சஞ்சரிப்பதால், அதுவரை நோய்த் தடுப்பு மருந்தோ, எதிர்ப்பு மருந்தோ முழுமையாக வெற்றியடையாது என்பதே உண்மை. இந்த காலகட்டத்திற்குமுன் வெளிவரும் தடுப்பு மருந்துகள் சில பின்விளைவுகளை உருவாக்கும். 20-11-2021 குருப்பெயர்ச்சிக்குப் பின் நோயின் கடுமை குறையும். 14-4-2022-ல் நிகழும் ராகு- கேது பெயர்ச்சியும், சுபகிருது ஆண்டின் உதயமும் உலகிற்கு மறுமலர்ச்சியையும், நல்ல பலனையும் தரும்.

அதுவரை, தீய எண்ணம் கொண்டோரும், உயிர்க்கொலை செய்வோரும் மாண்டொழிவது திண்ணம். நோயை உருவாக்கி, உலக மக்களை அச்சுறுத்திய நாடு பெரும் சேதத்தை சந்திக்கும்.

(புலனாய்வு தொடரும்)

செல்: 63819 58636

________________

​ரோகப் பிரசன்னம் (நோயறிதல்)

நீண்டநாட்களாகத் தொல்லை தரும் நோயின் தன்மையையும், அதைத் தீர்க்கும் வழியையும் ரோகப் பிரசன்னத்தினால் அறியலாம். ஆரூட லக்னத்தை மருத்துவராகவும், அதற்கு ஏழாம் பாவத்தை நோயாகவும், பத்தாம் பாவத்தை நோயாளியாகவும், நான்காம் பாவத்தை மருத்துவ சிகிச்சை எனவும் அறியவேண்டும்.

சுபர் ஆரூட லக்னத்தைத் தொடர்புகொண்டால் நோய் கட்டுப்படும்.

அசுபர் தொடர்புகொண்டால் நோய் தீவிரமாகும்.

பத்தாம் பாவத்தில் அசுபர் தொடர்பிருந்தால் நோயாளியின் தவறுகளால் சிகிச்சை பலனளிக்காது.

நான்காம் பாவத்திலும், ஏழாம் பாவத்திலும் அசுபர் தொடர்பிருந்தால், ஒரு நோயாகத் துவங்கி பல நோய்களாய்ப் பெருகும்.

ஆரூட லக்னத்தின் கேந்திராதிபதிகள் வக்ரம்பெற்றால் நோயாளி பிழைப்பது கடினம்.

சூரியன் ஆரூட லக்னாதிபதியாகி, சந்திரன் ஆறில் அமர்ந்து, ஏழாம் அதிபதியுடன் "இதசல யோக'த்தைப் பெற்றால், மருத்துவமனை சென்றவர் வீடு திரும்பமாட்டார். வேகமாக இயங்கும் கிரகம் குறைவான பாகையிலிருந்து, மெதுவாக இயங்கும் கிரகத்தின் பின்னால் அதேவீட்டில் அமர்ந்தால் இதசல யோகம்.

ஆரூட லக்னாதிபதியும், எட்டாம் பாவாதிபதியும் இணைந்து சந்திரனுக்கு எட்டில் அமர்ந்தாலும் உயிர் ஆபத்துண்டு.

ஆரூட லக்னம் உபய ராசியாக இருந்தால் உண்மையான நோய் கண்டறியப்படாமல் தவறான சிகிச்சையால் நோயாளி பாதிக்கப்படுவார்.

சூரியனின் துவா தசாம்சத்தில் ஆரூட லக்னம் அமைந்தால் நோய் தீராது.

bala301020
இதையும் படியுங்கள்
Subscribe