கொடிது கொடிது தீராக் கொடுநோய் முன்னிரவு நேரம். இருளைக்கூட்டி, சோகத்தை முன்னறிவுப்பு செய்தது.தொலைக்காட்சிப் பெட்டிக்குள் மக்கள் தொலைந்துபோனார்கள். பெரிய, சின்னத்திரைகளில் வாய்ப்பிழந்த நடிகைகள் பற்பசை விளம்பரங்களில் பல்லைக் காட்டினார்கள். பிரதமர் வழக்கமான முறையில் வருத்தமான சேதி சொன்னார். மக்கள் வாய்பொத்தி, வீட்டுச்சிறையில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தயாரானார்கள். "கொரோனா' என்னும் அரக்கனோடு வாழப் பழகினார்கள். பணத்தை வசூலித்த மருத்துவர்கள், கடவுள் காப்பாற்றுவார் என்று உறுதியளித்தார்கள். மாணவர்களுக்கு விடுமுறை அலுத்துப் போனது. மொத்தத்தில் ஒரு கொடிய தொற்றுநோய் அன்றாட வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. எமனுடைய ஏஜென்டுகள் ஆயுள்காப்பீடுகளை உடைத்து, உயிர்களை அள்ளத்தொடங்கினார்கள். செல்வமும் செல்வாக்கும் உடையவர்கள் மரணத்தை எதிர்க்க முடியாமல் ஏற்றுக்கொண்டார்கள்.
மக்கள் இதுநாள்வரை நம்பியிருந்த விஞ்ஞானமும் காலை வாரிவிட்டு கைக்கட்டி வேடிக்கை பார்த்தது. இயற்கையோ, "நாம் இதுவரை கற்றது கையளவு, கல்லாதது உலகளவு' என்றுகூறி சிரித்தது.
சிலகாலங்களில் தொற்று நோய் பரவுவது இயல்புதான். ஆனால், தற்போது உலகை அச்சுறுத்திவரும் "கோவிட்-19' என்னும் வைரஸ் கிருமி, யுத்தத்தின் துவக்கமென்பது அதிர்ச்சிகரமான உண்மை. இந்தக் குற்றத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதே உலகின் எதிர்பார்
கொடிது கொடிது தீராக் கொடுநோய் முன்னிரவு நேரம். இருளைக்கூட்டி, சோகத்தை முன்னறிவுப்பு செய்தது.தொலைக்காட்சிப் பெட்டிக்குள் மக்கள் தொலைந்துபோனார்கள். பெரிய, சின்னத்திரைகளில் வாய்ப்பிழந்த நடிகைகள் பற்பசை விளம்பரங்களில் பல்லைக் காட்டினார்கள். பிரதமர் வழக்கமான முறையில் வருத்தமான சேதி சொன்னார். மக்கள் வாய்பொத்தி, வீட்டுச்சிறையில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தயாரானார்கள். "கொரோனா' என்னும் அரக்கனோடு வாழப் பழகினார்கள். பணத்தை வசூலித்த மருத்துவர்கள், கடவுள் காப்பாற்றுவார் என்று உறுதியளித்தார்கள். மாணவர்களுக்கு விடுமுறை அலுத்துப் போனது. மொத்தத்தில் ஒரு கொடிய தொற்றுநோய் அன்றாட வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. எமனுடைய ஏஜென்டுகள் ஆயுள்காப்பீடுகளை உடைத்து, உயிர்களை அள்ளத்தொடங்கினார்கள். செல்வமும் செல்வாக்கும் உடையவர்கள் மரணத்தை எதிர்க்க முடியாமல் ஏற்றுக்கொண்டார்கள்.
மக்கள் இதுநாள்வரை நம்பியிருந்த விஞ்ஞானமும் காலை வாரிவிட்டு கைக்கட்டி வேடிக்கை பார்த்தது. இயற்கையோ, "நாம் இதுவரை கற்றது கையளவு, கல்லாதது உலகளவு' என்றுகூறி சிரித்தது.
சிலகாலங்களில் தொற்று நோய் பரவுவது இயல்புதான். ஆனால், தற்போது உலகை அச்சுறுத்திவரும் "கோவிட்-19' என்னும் வைரஸ் கிருமி, யுத்தத்தின் துவக்கமென்பது அதிர்ச்சிகரமான உண்மை. இந்தக் குற்றத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதே உலகின் எதிர்பார்ப்பு. மக்களைக் காப்பாற்றப்போவது விஞ்ஞானமா? மெய்ஞ்ஞானமா என்ற பட்டிமன்றம் தொடங்கியது.
அறிவழகன் (விஞ்ஞானி): நவீன விஞ்ஞானத்தால் ஓரளவு எதிர்கால நிகழ்வுகளை அறிய முடிகிறது. வரும்முன் உரைத்தல் என்னும் பெருமையுடைய ஜோதிடத்தால் இந்த தொற்றுநோயை முன்கூட்டியே கணிக்க முடியாததன் காரணமென்ன?
பரஞ்சோதி (ஜோதிடர்): தும்பியும் எறும்பும் மயிலும் பஞ்சாங்கமும் முன் கூட்டியே உணர்த்தும் மழையையே பல கருவிகளைக் கொண்டும் விஞ்ஞானத்தால் இன்றுவரை துல்லியமாகக் கணிக்க முடியவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. 26-12-2019 (வியாழக்கிழமை) இரவு 10.26.30 மணிக்கு நிகழ்ந்த கிரகணத்தைக் கொண்டு, உலகையே அச்சுறுத்தப்போகும் பேரிடர் உருவாகுமென்று பல ஜோதிடர்களும் எச்சரித்தனர். பொதுவாக, மாத அமாவாசை, பௌர்ணமி திதிகள் நிகழும் நட்சத்திரப் பாகைகளைக்கொண்டு, நாட்டில் நிகழப்போகும் சம்பவங்களை முன்கூட்டியே அறிவதுபோல், சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் நட்சத்திரப் பாதங்களை அனு சரித்து உலக நிகழ்வுகளைக் கணிக்கலாம்.
*ஆறு கிரகங்கள் காலபுருஷனின் ஒன்பதாம் பாவத்தில் கூடுவதால் கிரக யுத்தம் உண்டாகிறது. சனி உத்திராடம் 1-ஆம் பாதம், கேது பூராடம் 4-ஆம் பாதம், குரு மூலம் 4-ஆம் பாதம், சூரியன் மூலம் 4-ஆம் பாதம், சந்திரன் மூலம் 3-ஆம் பாதம், புதன் மூலம் 1-ஆம் பாதத்தில் அமர, ஒரு அமாவாசை தினத்தன்று சூரியகிரகணம் ஏற்படுகிறது.
*குரு, சூரியன், சந்திரன், புதன் ஆகியோர் கேதுவின் மூல நட்சத்திரத்தில் அடைபடுவதால் கிரகணத்தின் வலிமைகூடி, கேதுவின் ஆதிக்கத்தை முழுமையாகக் காட்டுகிறது. கேது தன் சுயசாரமான மூலத்தில் வரும்போது இந்த கிரகணத்தின் விளைவைக் காட்டும் என்பதும் புலனா கிறது.
*கிரகணம்- பாதுகாப்பு, இறைவனின் அருள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் காலபுருஷனின் ஒன்பதாம் பாவத்தையும், அந்த பாவத்தின் அதிபதியாகிய குருவையும், ஆரோக்கியக் காரகனான சூரியனையும், ஔஷதக்காரகனான சந்திரனையும் பாதிப்பது உலகிற்கு மிகப்பெரிய ஆரோக்கியக்கேட்டினையும், வழிபாட்டுத் தலங்கள் அடைக்கப்படுவதையும் காட்டுகிறது.
*காற்று ராசியும், நுரையீரைலைக் குறிக்கும் ராசியுமான மிதுனத்தில் ராகுவின் தொடர்பு, காற்றில் பரவும் ஒரு பெரும் சுவாசத் தொற்று நோயைக் குறிக்கும்.
*கிரகண காலத்தின் லக்ன நவாம்சம் மகரமாக இருப்பது மக்களுக்கு இதுவொரு தண்டனைக்கான காலமெனத் தெரிகிறது.
அறிவழகன் (விஞ்ஞானி): ஜோதிடம் என்பது வானியியல் நிகழ்வுகளை மையமாகக் கொண்டதெனில், நவீன விஞ்ஞானம் ஒப்புக் கொள்ளும் ஒரு சான்றினை இந்த நிகழ்வோடு பொருத் திக்காட்ட முடியுமா?
பரஞ்சோதி (ஜோதிடர்):
பெட்டல் க்யூஸ் (Betelgeuse) என வானியல் விஞ்ஞானிகள் குறிப்பிடும் திருவாதிரை நட்சத்திர வெடிப்பு, இந்த வைரஸ் தாக்குதலுக்கு அறிகுறி காட்டியது. ஓரியன் நட்சத்திரக் குடும்பத்திலுள்ள இந்த நட்சத்திரக்கூட்டம் சிவப்பு நிற ராட்சதனைப் போல காணப்படும். இந்த ராகுவின் நட்சத்திரம் அக்டோபர் 2019 முதல் ஏப்ரல் 2020 வரை ஒளிமங்கிக் காணப்பட்டதாக விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள். இந்த காலகட்டமே உலகெங்கும் கொரோனா பரவிக்கொண்டிருந்த காலம். ராகுவின் நட்சத்திரங்களாகிய திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் மிகப் பெரிய போர்களாலும், நோயாலும் கொத்துக்கொத்தான மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சுவாதி நட்சத்திரத்தின்மீது சாமா என்னும் கிரகம் வந்து மோதிய போதுதான் மகாபாரத யுத்தம் நிகழ்ந்தது என்ற செவிவழிச் செய்தியுண்டு.
அறிவழகன் (விஞ்ஞானி): பொதுவாக, பிரதேச ஜோதிடத்தில் (mundane) ஒரு நிகழ்வை முன்கூட்டியே அறியும் முறையை, யாவரும் ஒப்புக்கொள்ளுமாறு பகுத்தறிவின் அடிப்படையில் விளக்கமுடியுமா?
பரஞ்சோதி (ஜோதிடர்): ஜோதிடமும் கணிதத்தை அடிப்படையாகக்கொண்ட விஞ்ஞானமே. அடிப்படைக் கோட்பாடுளைக் கொண்டு முன்மாதிரிகளை ஆராய்வது போல், ஏற்கெனவே நிகழ்ந்த சம்பவங்களின் அடிப் படையிலேயே புதிய கோட்பாடுகள் வகுக்கப் படுகின்றன. (model & pattern). 1918 முதல் 1920 வரை உலகில் பலகோடி மக்களை சூறையாடிய "ஸ்பானிஷ்-ஃப்ளு' என்ற கொள்ளை நோய் ஆட்சி செய்தது. அப்போதிருந்த கிரக நிலைக்கும், தற்போது கோரத் தாண்டவமாடும் கோவிட்-19 எனும் மரணத் தூதுவனின் காலத்து கிரக சஞ்சாரத்திற்குமுள்ள ஒப்பீட்டி னைக்கொண்டு விளைவை அறியலாம்.
1917, டிசம்பர் 15, காலை 11.00 மணியளவில் சூரிய கிரகணம் ஏற்பட்டது.
* ராகு மூலத்திலும், கேது திருவாதிரையில் சஞ்சரிக்கும்போது கிரகணம் நடக்கிறது.
* அம்சத்தில் இவர்கள் முறையே- மிதுனத்தில் ராகு, திருவாதிரையில் கேது, தனுசில் மூலத்தில் நிற்பார்கள். இந்த அம்ச அமைப்பே 2019, டிசம்பர் 26-ல் நடந்த சூரிய கிரகணத்தில் ராசியில் இருக்கிறது. இதுவே 1918-ல் நடந்த ஒரு நிகழ்வின் அடுத்த பதிவினை 2020-ல் திரும்பவும் கொண்டுவருகிறது எனத் தெரிகிறது.
* மேலும், 1917-ல் ராசியில் குரு ரோகிணியில் இருந்தாலும், அம்சத்தில் கேது நட்சத்திரமான அஸ்வினியில் நிற்கிறார். சனியும் ஆயில்யம் இரண்டாம் பாதத்தில் ராசியில் இருந்து, அம்சத்தில் மகரத்தில் அமைகிறார். மகரத்தில் சனி இருக்கும் இந்த அமைப்பு 2020 கிரகண காலத்திலும் நடக்கிறது.
* அம்சத்தில் கிரகண லக்னம் விருச்சிகத்தில் கேட்டை 3-ஆம் பாதமாகி, சூட்சும அம்சத்தில் சுவாதி 3-ல் சம்பந்தப்படுகிறது. இதுவும் ராகு- கேது சம்பந்தம் சேர்ப்பதால், இந்த கிரகணம் பெரும் நோயைக் கொண்டுசேர்த்தது.
அறிவழகன் (விஞ்ஞானி): கோவிட்-19 எனும் பெரும் தொற்று எங்கிருந்து உருவாகியது? அது எந்த காலகட்டத்தில் நீங்குமென்பதை ஜோதிடத்தின் மூலம் கணிக்கமுடியுமா?
பரஞ்சோதி (ஜோதிடர்): பிரசன்ன ஆரூடத்தின்மூலம் இதற்கு விடைகாண முடியும். அதைத் தொடர்ந்து கூறுவேன்.
(புலனாய்வு தொடரும்)
செல்: 63819 58636