தினசரி செய்திகளாக நம்மை மிரட்டுவது கொலை, கொள்ளை, பலாத்காரம், காணாமல் போகும் மனிதர்கள், சதி, நாசவேலை, மறைக்கப்பட்ட புதையல் என்று வரிசையாக நிற்கும் குற்றங்களின் பட்டியலே. விஞ்ஞானத்தின் துணைகொண்டு குற்றப் புலனாய்வுத்துறை துப்பு துலக்கினாலும், கண்டுபிடிக்கப்படாத குற்றங்களும், தண்டிக்கப்படாத குற்றவாளிகளும், மூடிமறைக்கப்படும் சதிச்செயல்களும் குறைய வில்லை என்பதே உண்மை. நம் பாரம்பரிய ஜோதிடத்தில் குற்றப் புலனாய்வுக்கு உதவும் குறிப்புகள் உள்ளன. "பிரசன்ன ஜோதிட'த்தின் பெரும் பகுதி மறைக்கப்பட்டும், மறக்கப்பட்டும் விட்டன என்பதே துயரமான செய்தி. ஜோதிடமும் அறிவியல்போல் பயன் தரும் விஞ்ஞானமே என்னும் கூற்றை வெளிப்படுத்துவதே இந்தத் தொடரின் நோக்கம்.

Advertisment

p

குற்றம்: இந்தத் தொடரில் "குற்றம்' என்னும் சொல் "நீதிமன்றங்களின் விசாரணைக்கு உட்படுத் தப்பட்ட வழக்குகளின் விவரம்' என்னும் பொருளில் கையாளப்படுகிறது.

திறக்காத அறையின் புரியாத மர்மம்!

2011, ஜூன் மாதத்தின் இறுதிநாள் காலையில், தூக்கம் கலைந்து எழுந்தவர்களை, அந்த காலை நேரத்துச் செய்தி கனவா, நிஜமா என்ற கேள்வி யால் மீண்டும் எழுப்பியது. அனந்த புரத்து பத்மநாபர் கோவில் உலகின் மிகப்பெரிய தங்கக் கருவூலமாக அறிவிக்கப்பட்ட நாள். ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் உச்சநீதிமன்றத்தால் கண்டு பிடிக்கப்பட்டன. ஆயிரம் கிலோ தங்கக் குவியல், வைரம், மரகதம், மாணிக்கம் முதலியவை அந்தக் கோவிலின் அறை களைத் திறந்தபோது கிடைக்கப் பெற்றன. அந்த பொற்குவியல் எங்கிருந்து வந்தது, இவ்வளவு நவநிதிகள் இதுவரை ஏன் பொதுவெளியில் அறியப்படவில்லை என்பதையறிய ஆவலிருந்தால் வாருங்கள்... யோகி ஆத்மானந்தரும், அவருடைய சீடர் வித்யாபதியும் நிகழ்த்திய உரையாடலைக் கேட்டு உண்மையை அறிவோம்.

Advertisment

f

வித்யாபதி: குருவே, கடவுளின் தேசமாகிய மலையாள நாட்டின் தேவ ரகசியங்களை முழுவதுமாய் அறிந்தோர் எவருமில்லை என்பது உண்மையே. ஆனாலும், சமீபத்தில் உலகையே உலுக்கியெடுத்த அனந்தபத்மன் கோவிலில் கிடைத்த அரிய பொக்கிஷங்கள் வியப்பின் உச்சிக்கே கொண்டுசென்றுவிட்டன. சகல சாத்திரங்களையும் கற்றுத்தேர்ந்த தாங்கள் இதுபற்றி விளக்கியருள வேண்டும்.

யோகி ஆத்மானந்தர்: இதில் அதிசயம் ஏதுமில்லை. பாரததேசத்தின் பழங்காலக் கோவில்களில் இதைவிட ஆயிரம் மடங்கு பொற்குவியல்கள் நிலவறை களில் புதைந்துள்ளன என்பதே உண்மை.

Advertisment

அனந்தபுரத்து ரகசியத்தை அறிய வேண்டுமெனில் காலத்திரையை விலக்கி, திருவனந்தபுரம் எனும் அனந்தன் காடுவரை பயணிக்கவேண்டும். உயர்ந்தோங்கிய மரங்களால் அடர்ந்து பரந்திருந்த அனந்தன் காடு பகலை இரவாக்கியது. மங்கிய ஒளியில் மரத்தின் வேரா? விழுதா? விழுங்கக்காத்திருக்கும் பாம்பா எனத் தீர்மானிக்கமுடியாதபடி அனந்தன் காடு ஆளரவமற்ற அரவக்காடாய் அழகையும், ஆபத்தையும் அணிந்திருந்தது. அலைகள் ஒன்றையொன்று துரத்தி விளையாடிக் கொண்டிருந்த நீலாற்றங் கரையில், முன்னொரு காலத் தில் விஷ்ணு அடியாராக விளங்கிய வில்வ மங்கலத்து சாமிகளுக்கு பெருமாள் தன் விஸ்வ ரூபத்தை விலக்கி வாமனனாகக் காட்சி யளித்தார். அந்தத் தலமே பிற்காலத் தில் குபேரன் வழிபடும் பரந்தாம னின் ஆலய மானது என்பதே தேவ ரகசியம். பலகாலம் கழித்து, அந்த ஆலயத்தைப் புனரமைத்த மன்னர் மார்த்தாண்ட வர்மர், தன்னையும், தன் தேசத்தையும் ஸ்ரீபத்மநாபருக்கு அர்ப்பணித்து, பத்மநாப தாசரானார்.

குறிப்பு: புதன்கிழமை சூரியஹோரை, அபிஜித் முகூர்த்தம் முடிசூட்டு விழா மற்றும் உயில், சாசனம் எழுதச் சிறந்தது. நவாம் சத்தில் நாளின் அதிபதியாகிய புதனும், ஹோரையின் அதிபதியாகிய சூரியனும் கும்பத்திலிருந்து சிம்மத்திலிருக்கும் pகுருவால் பார்க்கப்படுவதும், சந்திரன் மகரத் திலிருப்பதும், மகாபலிச் சக்கரவர்த்தி போல், திரிபாதி தானமாகத் தன்னையும், தன் நாட்டையும் அர்ப்பணித்தது பொருத்த முடையதாகவே அமைகிறது.

வித்யாபதி: குருவே, திறக்கமுயன்றும் இயலாமல்போன பத்மநாபர் கோவிலின் "பரதகோன்' நிலவறையைத் திறப்பதற்காகப் பார்க்கப்பட்ட தேவப் பிரசன்னத்தில் கண்ட உண்மைகளைத் தாங்கள் எடுத்துரைக்க வேண்டுகிறேன்.

தேவப்பிரசன்னம்

யோகி ஆத்மானந்தர்: பொதுவாக, தேவப் பிரசன்னத்தில் காணும் சூட்சுமமான தேவ ரகசியங்கள் எல்லாருக்கும் தெரிவிக்கப்படுவதில்லை. ஆனாலும், உனக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தேவ பிரசன்னத்தின் உதய லக்னம் கன்னி ராசியிலும், ஸ்வர்ண லக்னம் விருச்சிக ராசியிலும் அமைந்தன. சந்திரன் மற்றும் ராகு விருச்சிகத்தில் இருக்க, ராகு நாச- ஜீவ நவாம்சத்தில் அமர்கி றார். மூன்றாம் பாவமான விருச்சிக ராசியும் (ஸ்வர்ண லக்னம்) சர்ப்பத் திரேக்காணம்கொண்டு நாச ஜீவனில் நிற்கிறது. இதுவே காலபுருஷனின் எட்டாம் பாவமாக இருக்க, தேவப் பிரசன்னத்தில் மூன்றாம் பாவமாகவும், ஸ்வர்ண லக்னமாகவும் இருப்பதால், இந்த அறையில் மிகவும் ஆபத்தான ராட்சத நாகம் உள்ளதென்பது தெளிவாகிறது.

விருச்சிகம் பெண் ராசியாகி அங்கே சந்திரனும், விருச்சிகத்தின் ஒன்பதாம் பாவம் (பாதக ஸ்தானம்) கடகத்தில் சர்ப்பத் திரேக்காணத்தில்- ஆயில்ய நட்சத்திரத்தில் ஒன்பது மற்றும் இரண்டாம் பாவதிபதி சுக்கிரனும் இருப்பதால், இந்த அறையை நவயட்சினிகள் காவல் காப்பது தெளிவாகிறது.

எட்டாம் பாவம் நவாம்சத்தில் சர்ப்ப- பாசத் திரேக்காணம் ஏறி, போக ஜீவசாரத்தில் ராசி, கிரகம் மற்றும் நட்சத்திரம் அனைத்தும் தாதுசாரமாக அமைந்து, குரு எட்டாம் வீட்டிலிருக்க, இந்த அறையினுள் அளவிடமுடியாத தங்கமும் (தாது), தங்கத்தாலான சங்கு, சக்கரம், கதை, சாரங்கம், கட்கம் ஆகிய திருமாலின் ஐவகை ஆயுதங்களும் உள்ளன. இதுவரைக் குறிப்பிட்ட பொருட்களும், எச்சரிக்கைகளும் ஓரளவு எவராலும் சிந்திக்கக்கூடியவைதான். ஆனால், மனிதர்களின் கற்பனைக்கு எட்டாததும், சிந்தனையே உறைந்து போகுமளவுக்கு வியப்பைத் தருவது மான பொருட்கள் திறக்கப்படாத அந்த அறையில் உள்ளன என்பதே உண்மை. தகுந்த ஜோதிடச் சான்றுகளுடனும், ரகசியக் குறியீடுகளின் ஆதாரங்களுடனும் பின்னர் விளக்குவேன்.

(புலனாய்வு தொடரும்)

செல்: 63819 58636