ஜோதிடத்தில் 12 கட்டங்கள், 9 கிரகங்கள் உள்ளது. இதில் சில ராசி பாவங்களும், சில கிரகங்களும் சுபத்தன்மை கொண்டவை. சில அசுபத்தன்மை கொண்டவை.
இதில் 8-ஆமிடம் மிகுந்த அசுபத் தன்மை கொண்டது. இந்த 8-ஆமிடத்தில் எந்த கிரகம் அமர்ந்துள்ளதோ, அது குறிக்கும் உறவு விரிசலைத் தரும். அந்த சொந்தம் மிகுந்த இன்னலை யும், வாழ்வு பின்னடவையும் தரும்.
12 லக்னமும், அதன் எட்டாம் பாவத்தில் அமர்ந்த உறவு தரும் இம்சைகளும்.
மேஷ லக்னம்
8-ஆமிடம் விருச்சிகம். இதில் அமர்ந்த கிரகம் தரும் பலன்.
சூரியன்: உங்கள் வாரிசுகள் மற்றும் தந்தைமூலம் தொல்லை ஏற்படும்.
சந்திரன்: உங்கள் தாயார் மனநலம் குன்றுவதால் பெரிய தர்மசங்கடம் உண்டாகும்.
செவ்வாய்: உங்களுக்கு ஏற்படும் அனைத்து அவமானத்துக்கும், நீங்களே காரணம் ஆவீர்கள். உங்கள் முட்டாள்தனமான கோபம் அனைத்தையும் கெடுத்துவிடும்.
புதன்: உங்கள் இளைய சகோதரன் மற்றும் தாய்மாமா உங்களை வௌங்கவிடாமல் செய்துவிடுவர்.
குரு: உங்கள் மைத்துனன், உங்கள் சகோத ரன் மனைவி, உங்கள் தந்தைவழி பாட்டி, தாய் வழி தாத்தா இவர்கள் இன்னல் தருவர்.
சுக்கிரன்: உங்கள் வாழ்க்கைத்துணை, உங்கள் தாயின் மூத்த சகோதரர், உங்கள் தாய்வழி பாட்டி இவர்கள் இம்சை தருவர்.
சனி: சனி, மேஷ லக்ன 8-ல் நின்றால், கண்டிப்பாக உங்கள் மருமகன்- மருமகள் உங்களை புடுங்கி எடுத்துவிடுவார். அல்லது உங்கள் மூத்த சகோதரன், உங்கள் மாமியார், தந்தைவழி சித்தப்பா என இவர்களில் யார் மூலமாவது தொல்லை வந்துவிடும்.
ராகு- கேது: தாத்தா, பாட்டி அல்லது அவர்கள் சாரநாதரைக் குறிக்கும் உறவு களால் தொல்லை உண்டு.
செவ்வாய்தோறும், மலைமீதுள்ள முருகரை, பழனி முருகரை, கந்த குரு கவசம் சொல்லி வணங்குவது மிக நல்லது. மேஷ லக்னத்துக்கு 8-ஆமிடமான விருச்சிகத்தில், சந்திரன் நீசமடைவார். எனவே தாயார்மூலம் நிறைய துன்பம் ஏற்பட வாய்ப்புண்டு.
ரிஷப லக்னம்
ரிஷப லக்ன 8-ஆமிடம் தனுசு.
சூரியன்: உங்கள் தாயார் அல்லது தந்தை மூலம் சற்று மன வேறுபாடு உண்டாகும்.
சந்திரன்: உங்கள் இளைய சகோதரி அல்லது உங்கள் மாமனாரால் வெகு இம்சை உண்டாகும்.
செவ்வாய்: உங்கள் வாழ்க்கைத்துணை, தந்தைவழி பாட்டி, தாத்தா இவர்கள் வெச்சு செய்வார்கள்.
புதன்: வாரிசுகள், காதலர், பெரியப்பா, மூத்த சகோதரனின் மனைவி இவர்கள் துன்பம் தருவர்.
குரு: உங்கள் மருமகன்- மருமகள் உங்கள் மூத்த சகோதரன் இவர்கள் இம்சை தருவர்.
சுக்கிரன்: உங்கள் துன்பத்துக்கு நீங்களே காரணமாவீர்கள். சில தாய்மாமன்களும் கவலை தருவர்.
சனி: உங்கள் தந்தை, உங்கள் மாமியார் மச்சினன் இவர்கள் இம்சையின் காரண மாவர்.
மிதுன லக்னம்
உங்கள் லக்னம் 8-ஆம் அதிபதி மகர சனி ஆவார்.
சூரியன்: உங்கள் இளைய சகோதரன், உங்கள் மாமனார் உங்கள் துன்பத்துக்கு காரணமாவர்.
சந்திரன்: உங்கள் தாயார் மற்றும் குடும்பத்தினர் இன்னலின் காரணமாவர்.
செவ்வாய்: உங்கள் மருமகன்- மருமகள், மூத்த சகோதரன், தாய்மாமா இவர்கள் உங்கள் கண்ணீரின் காரணமாவர்.
புதன்: உங்களின் இன்னலுக்கு, நீங்களும், உங்கள் தாயாரும் காரணமாவீர்கள்.
குரு: உங்கள் வாழ்க்கைத்துணையும், அவரின் தாயாரும் ரொம்ப, ரொம்ப பாடாய்படுத்துவார்கள்.
சுக்கிரன்: உங்கள் வாரிசுகள், மூத்த சகோதரன் மனைவி, தாத்தா, பாட்டி இவர்களும் கஷ்டம் தருவர்.
சனி: உங்கள் தந்தை, மைத்துனன் இவர்கள் துன்பம் தருவர்.
மிதுனம் 8-ஆமிட மகர சனியில் குரு நீசமடைவார். உங்கள் மாமியாரிடம் வெகுகவனமாக இருப்பது அவசியம்.
கடக லக்னம்
உங்கள் 8-ஆம் அதிபதி கும்ப சனி ஆவார்.
சூரியன்: குடும்பம், தாய்வழி பெரியப்பா, உங்கள் தந்தையால் மனம் கஷ்டப்படும்.
சந்திரன்: உங்கள் அவமானத்திற்கு நீங்களும், உங்கள் தாயாரும், மனநிலை தள்ளாட்டமும் காரணமாகிவிடும்.
செவ்வாய்: உங்கள் வாரிசு, மூத்த சகோதரன் மனைவி, உங்கள் மாமியார் என இவர்கள் தரும் கொடுமை சொல்லிமாளாது.
புதன்: உங்கள் இளைய சகோதரன், தாய்வழி தாத்தா, தந்தைவழி பாட்டி என இவர்கள் தரும் சிரமம் தாங்கமுடியாதது.
குரு: உங்கள் தந்தை, தாய்மாமன், இளைய சகோதரன் மனைவி, மைத்துனன் என இவர்களில் யாராவது ஒருவர் அழச்செய்வர்.
சுக்கிரன்: தாயார், மூத்த சகோதரி, மருமகள், தந்தைவழி சித்தப்பா இவர்கள் தொல்லைத் தருவர்.
சனி: உங்கள் வாழ்க்கைத்துணை ஒருவரே உங்களின் அனைத்து கண்ணீருக்கும் காரண மாகிவிடுவர். தாய்வழி பாட்டி, கூட சேர்ந்து கொள்வார்.
சிம்ம லக்னம்
சிம்மத்தின் எட்டாம் வீடு மீனம்.
சூரியன்: உங்கள் அவமானம், அழுகை, துக்கம், கண்ணீர் அனைத்திற்கும் நீங்களே காரணமாவீர்கள்.v சந்திரன்: உங்கள் தாயார், தாய்வழி தாத்தா என இவர்கள் தொல்லைத் தருவர்.
செவ்வாய்: உங்களின் அனைத்து துன்பங் களுக்கும், உங்களின் பெற்றோரே காரண கர்த்தா ஆவர்.
புதன்: உங்கள் மூத்த சகோதரன், மருமகன் மற்றும் குடும்பத்தினர், பெரியப்பா என துன்பம் தருவர்.
குரு: உங்கள் வாரிசுகள் துன்பம் கொடுப்பர்.
சுக்கிரன்: உங்கள் இளைய சகோதரி, மாமனார்- மாமியார் என இவர்கள் அழச் செய்வர்.
சனி: உங்கள் வாழ்க்கைத்துணை, தாய்மாமன், தாய்வழி பாட்டி என உங்களை அழச்செய்யும் லிஸ்ட்டில் இடம்பிடிப்பர்.
8-ஆமிடத்தில் சுக்கிரன் உச்சம்பெறுவர். எனவே உயர்நிலையில் இருக்கும் உங்கள் இளைய சகோதரி, உங்கள் கண்ணீருக்கு காரணமாகிவிடுவாள்.
கன்னி லக்னம்
கன்னி லக்னத்தின் 8-ஆம் வீடு மேஷம்.
சூரியன்: தாய்வழி தாத்தா, பாட்டி இவர்களாலும், உங்கள் தந்தையாலும் துன்பம் உண்டாகும்.
சந்திரன்: உங்கள் மருமகள் உங்கள்மீது அவமான வழக்கு தொடர்வாள்.
செவ்வாய்: உங்கள் இளைய சகோதரன் விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும்.
புதன்: உங்கள் கண்ணீருக்கு நீங்களே காரணமாவீர்கள்.
குரு: உங்கள் தாயார் அல்லது உங்கள் வாழ்க்கைத்துணை உங்களை பாடாய் படுத்துவார்கள்.
சுக்கிரன்: உங்கள் தாயின் உடன்பிறந்த சகோதரிகள் உங்களுக்கு துன்பம் தருவர்.
சனி: உங்கள் வாரிசுகள் அல்லது உங்கள் தாய்மாமன் உங்களின் கஷ்டங்களின் காரண மாவர். 8-ஆமிடத்தில் சனி நீசம்; கவனம் தேவை.
தொடர்ச்சி வரும் இதழில்...