துலா லக்னம்
துலா லக்ன 8-ஆம் வீடு ரிஷபம் ஆகும். இந்த ரிஷபத்தில் சூரியன் நின்றால்: உங்கள் மூத்த சகோதரர் உங்கள் கவலைக்கு காரணமாவார்.
சந்திரன்: உங்களின் புகழ்பெற்ற, பிரசித்திவுடைய மாமியார் அழச் செய்வார்.
செவ்வாய்: உங்கள் வாழ்க் கைத்துணையும், அவர்களது குடும்பத்தாரும் சேர்ந்து, உங்களை கும்மி எடுப்பர்.
புதன்: உங்கள் தந்தை மற்றும் உங்கள் இளைய சகோதரத்தின் வாழ்க்கைத்துணை இவர்களால் துன்பம் வரும்.
குரு: உங்கள் இளைய சகோதரன் மற்றும் தாய்மாமா வால் இம்சை உண்டு.
சுக்கிரன்: உங்கள் துன்பத்துக்கு நீங்களே காரணமாவீர்கள்.
சனி: உங்கள் தாயாரும், உங்கள் வாரிசுகளும் சேர்ந்து, உங்களை பின்னி பெடலெடுப்பர். 8-ஆமிடத்தில் சந்திரன் உச்ச மடைவார்.
விருச்சிக லக்னம்
உங்களின் 8-ஆம் வீடு மிதுனம்.
இந்த மிதுனத்தில்
சூரியன்: இருந்தால் உங்கள் மாமியார் உங்களை பாடாய் படுத்துவார்.
சந்திரன்: உங்கள் பெற்றோர் விஷயமாக அவமானமும், துன்பமும் இருக்கும்.
செவ்வாய்: உங்கள் துன்பம், கடன், எதிரிகள், நோய் என அனைத்து கஷ்டத் திற்கும், உங்களின் எதிர்மறை எண்ணங்களே காரணமாகும்.
புதன்: உங்கள் மூத்த சகோதரர் உங்களை வெச்சு செய்வார்.
குரு: உங்கள் குடும்ப வாரிசுகளால் தொல்லை ஏற்படும்.
சுக்கிரன்: உங்கள் வாழ்க்கைத்துணை அல்லது தாய்வழி பாட்டி துன்பம் தருவர்.
சனி: உங்கள் தாயாரும், இளைய சகோதரனும் சேர்ந்து உங்களை அழச் செய்வர்.
தனுசு லக்னம்
உங்கள் எட்டாம் வீடு கடகம் ஆகும். இந்த கடகத்தில் சூரியன் இருந்தால்: உங்கள் தந்தையால் கால் காசு பிரயோஜனம் இல்லாதது மட்டுமல்ல, அவமானமும் சேர்ந்தே கிடைக்கும்.
சந்திரன்: சந்திரன் இங்கு ஆட்சிபெறுவர். தாயாரின் மனநிலை பிறழ்வால் துன்பம் அனுபவிப்பீர்கள்.
செவ்வாய்: இங்கு செவ்வாய் நீசம். வாரிசுகளால் வெகு தொல்லை ஏற்படும். சிலருக்கு, மூத்த சகோதரியின் கணவர் பாடாய்ப் படுத்துவார்.
புதன்: வாழ்க்கைத்துறையும், அவரது தாயாரும் பாடாய்ப்படுத்துவார்கள்.
குரு: உங்கள் தாயாரும், நீங்களுமே உங்கள் துன்பத்தின் காரணமாவீர்கள்.
சுக்கிரன்: உங்கள் தாய்மாமனும் அல்லது மூத்த சகோதரியும் துன்பத்துக்கு காரண மாவார்கள்.
சனி: உங்கள் குடும்பமும், இளைய சகோதரமும் துன்பத்தின் காரணமாவர்.
மகர லக்னம்
மகர லக்ன 8-ஆம் வீடு சிம்மம். சிம்மத்தில்
சூரியன் இருந்தால்: சூரியன் சிம்ம ராசியில் ஆட்சிபெற்று பலமாக இருப்பார். எனவே தந்தையின்மூலமே அனைத்து துன்பங்களும் வரும்.
சந்திரன்: வாழ்க்கைத்துணை அழஅழ, செய்வார்.
செவ்வாய்: உங்கள் தாயாரும், உங்கள் மூத்த சகோதரனும் சேர்ந்து வெகு கஷ்டம் தருவர்.
புதன்: உங்கள் தாய்மாமனிடம் வெகு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
குரு: உங்கள் இளைய சகோதரம் அல்லது தாய்வழி தாத்தா இவர்கள்மூலம் துன்பம் வரும்.
சுக்கிரன்: உங்கள் வாரிசு அல்லது மாமியார் பாடாய் படுத்துவார்கள்.
சனி: உங்கள் குடும்பமே, உங்களுக்கு எதிராக திரும்பிவிடும். உங்களின் சில செயல்களும் உங்களுக்கு தீரா துயர் தரும்.
கும்ப லக்னம்
கும்ப லக்னத்துக்கு 8-ஆமிடம் கன்னியாகும். இந்த கன்னி ராசியில்
சூரியன் இருந்தால்: வாழ்க்கைத் துணையால் பிரச்சினை வரும்.
சந்திரன்: தாய்மாமனால் இன்னல் ஏற்படும்.
செவ்வாய்: இளைய சகோதரன் மற்றும் மாமியாரிடம் வம்பு வைத்துக் கொள்ளக்கூடாது.
புதன்: புதன் இந்த எட்டாம் வீட்டில் உச்சமடைவார். வாரிசுகளால் பிரச்சினை, அவமானம் உண்டாகும்.
குரு: மூத்த சகோதரன் குடும்பத்தால், வெகு இன்னல் ஏற்படும்.
சுக்கிரன்: உங்கள் பெற்றோர்களால் கஷ்டம் வரும்.
சனி: உங்கள் தந்தைவழி தாத்தா, தாய்வழி பாட்டி, பின்னும் உங்களாலும் துன்பத்தை வரவழைத்துக்கொள்வீர்கள்.
மீன லக்னம்
மீன லக்ன 8-ஆம் வீடு துலாம். இந்த துலா ராசியில்
சூரியன் இருந்தால்: நீசமாக இருப்பார். தந்தையின் கடன், நோய் எதிரிகளால் நீங்கள் துன்பப்படுவீர்கள்.
சந்திரன்: வாரிசுகளால் அவமானமுண்டு.
செவ்வாய்: உங்கள் தந்தை, உங்கள் குடும்பம், தம்பி மனைவி இவர்களால் கஷ்டம் ஏற்படும்.
புதன்: உங்கள் வாழ்க்கைத்துணையும், உங்கள் தாயாரும் துன்பங்களின் காரண மாவார்.
குரு: உங்கள் அழுகைக்கு காரணம் நீங்களே ஆவீர்கள். மற்றும் உங்கள் மாமியாரும் சேர்ந்துகொள்வார்.
சுக்கிரன்: இளைய சகோதரி விஷயத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
சனி: இங்கு சனி உச்சமடைவார். உங்கள் மூத்த சகோதரன் வெகுபலத்துடன் உங்களை பந்தாடுவார். எல்லா லக்னத்துக்கும் எட்டாமிடத்தில் ராகு- கேது இருப்பின், அவர்கள் அமர்ந்த ராசி, வாங்கிய சாரம் இதனை பொறுத்து, அவை குறிப்பிட்ட உறவு கள் துன்பம் தரும்.
8-ஆமிடத்தில் கிரகங்கள் நீசம், உச்சம் பெறுவது சிறப்பான விஷயமல்ல.
சில உறவுகள் மேன்மையடைய வணங்கவேண்டிய கோவில் கணவன்: ஈரோடு சென்னிமலை முருகன் மற்றும் மதுரை யானை மலை ஒத்தக்கடை நரசிம்மர் கோவில்.
மனைவி: அஷ்ட புஜ பெருமாள், காஞ்சிபுரம்.
மாமியார்: மருமகள் வேற்றுமை நீங்க, சென்னை அருகிலுள்ள பஞ்சேஷ்டி தலம்.
தந்தை: வாரிசுகளுடன் மன வேற்றுமை நீங்க, கும்பகோணம் திருவலஞ்சுழி.
தாயார் மனநலம் பெற: குணசீலம் மற்றும் ஏகாதசி திதியில் ஸ்ரீகிருஷ்ணருக்கு அவல் பாயசம்.
அண்ணன்- தம்பி சண்டை சரியாக திருவாரூரிலுள்ள, திருநாட்டியத் தான்குடியில், ஸ்ரீரத்தின புரீஸ்வரர் சந்நிதியில் மாதுளம் பழம் நைவேத்தியம் செய்து, அடுத்தவருக்கு பிரசாதமாக கொடுக்க வேண்டும்.
சகோதர- சகோதரிகள் சண்டை நீங்க...
விஷ்ணு- துர்க்கையை வணங்கவும்.
கணவன்- மனைவி சண்டை சரியாக...
சென்னை பார்த்தசாரதியை வணங்கவும்.
உங்கள் குலதெய்வக் கோவிலுக்கு சென்று வணங்கும்போது, பங்குனி உத்திரம் போன்ற மிக முக்கிய விசேஷங்களில் தெய்வத்தை தரிசிக்கும்போது, தன்னிச்சையாக, அனைத்து உறவுகளும் மேம்படும். சொந்த உறவுகளில் விரிசல் வராமல் இருக்கவும், வந்த சண்டையை தீர்க்கவும், குல தெய்வ வழிபாட்டை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனும் நெறிமுறையை வகுத்துள் ளனர்.
சொந்த என்பது துப்பவும் முடியாத, விழுங்கவும் முடியாத ஒன்று என்பதை அனைவரும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
செல்: 73056 04432