Advertisment

புத்திர பாக்கியம் வேண்டி சொத்துகளை இழந்த தம்பதியர்!

/idhalgal/balajothidam/couple-who-lost-their-property-sake-son

சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

மிழகத்தின் தென் மாவட்டம் ஒன்றிலிருந்து 68 வயதுடைய ஒரு ஆணும் சுமார் 62 வயதுடைய ஒரு பெண்ணும் வந்திருந்தனர். அவர்களிடம் என்ன விஷயமாக ஜீவநாடியில் பலன் கேட்க வந்திருக்கிறீர்கள் என்றேன்.

Advertisment

ஐயா, "இவர் எனது மனைவி. எங்களுக்கு புத்திர பாக்கியம் கிடையாது. குழந்தை வேண்டும் என்று நாங்கள் மருத்துவம், கடவுள் வழிபாடு, பூஜைகள், தானம், தர்மம் என்று அனைத்தும் செய்தோம். இதனால் எங்கள் சொத்துக்கள் அனைத்தும் அழிந் தன. ஆனால் குழந்தை பாக்கியம் இல்லாமல் போனது. தற்போது சொந்த ஊரை விட்டு வேறு ஊரில் ஒருவரி டம் சம்பளத்திற்கு வேலை செய்து வாழ்ந்துவருகிறோம். எங்கள் சொத்துக்கள் அழிந்ததற்கும் குழந்தை பாக்கி யம் இல்லாமல் போனதற்கும் காரணம் வித்தியா, பாப- சாபமா என்பதை அறிந்து கொள்ளவே அகத்தி யரை நாடி வந்துள்ளோம்'' என்றார்.

ஓலையை பிரித்து படிக்கத் தொடங்கி னேன். இவர் பாரம்பரியமான செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர். இவன் தந்தை தொழில், வியாபாரம் என பல வழிகளில் சம்பாதித்து வீடுகள், நிலங்கள்,

சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

மிழகத்தின் தென் மாவட்டம் ஒன்றிலிருந்து 68 வயதுடைய ஒரு ஆணும் சுமார் 62 வயதுடைய ஒரு பெண்ணும் வந்திருந்தனர். அவர்களிடம் என்ன விஷயமாக ஜீவநாடியில் பலன் கேட்க வந்திருக்கிறீர்கள் என்றேன்.

Advertisment

ஐயா, "இவர் எனது மனைவி. எங்களுக்கு புத்திர பாக்கியம் கிடையாது. குழந்தை வேண்டும் என்று நாங்கள் மருத்துவம், கடவுள் வழிபாடு, பூஜைகள், தானம், தர்மம் என்று அனைத்தும் செய்தோம். இதனால் எங்கள் சொத்துக்கள் அனைத்தும் அழிந் தன. ஆனால் குழந்தை பாக்கியம் இல்லாமல் போனது. தற்போது சொந்த ஊரை விட்டு வேறு ஊரில் ஒருவரி டம் சம்பளத்திற்கு வேலை செய்து வாழ்ந்துவருகிறோம். எங்கள் சொத்துக்கள் அழிந்ததற்கும் குழந்தை பாக்கி யம் இல்லாமல் போனதற்கும் காரணம் வித்தியா, பாப- சாபமா என்பதை அறிந்து கொள்ளவே அகத்தி யரை நாடி வந்துள்ளோம்'' என்றார்.

ஓலையை பிரித்து படிக்கத் தொடங்கி னேன். இவர் பாரம்பரியமான செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர். இவன் தந்தை தொழில், வியாபாரம் என பல வழிகளில் சம்பாதித்து வீடுகள், நிலங்கள், கடை, நகைகள், ரொக்கப் பணம் என நிலையான சொத்துகளை சேர்த்து கோடீஸ்வரனாக இவன் ஊரில் குறிப்பிடத்தக்க பணக் காரர்களில் ஒருவனாக மதிப்பு, மரியாதை யுடன் வாழ்ந்துவந்தான்.

முன்னோர்கள் தேடிவைத்த சொத்துகளை காப்பாற்றிக்கொண்டு இவனும் வியாபாரம் செய்து பணம் சம்பாதித்தான். ஏராளமான சொத்துக்கள் இருந்தாலும் இவன் வம்சம் விளங்க ஒரு வாரிசு பிறக்கவில்லையே என்னும் ஒரு குறை மட்டும் மனதில் இருந்தது. ஆனா லும் குழந்தை இல்லை என்பதே இவன் பெரிதாக எண்ணி வருத்தப்படவும் இல்லை. இவன் மனைவி இவனுக்கு மட்டும் தங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் இல்லையே என்ற குறை மனதை வாட்டிக்கொண்டே இருந்தது. எதை செய்தாவது ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ளவேண்டும் என்று வெறியாக அவளுக்கு மனம் மாறிவிட்டது. சித்த மருத்துவம், நவீன மருத்துவம் என நிறைய பணம் செலவு செய்தான். ஆனால் நவீன மருத்துவமும் பலன் தரவில்லை.

Advertisment

ஜோதிடரிடம் சென்று இருவரின் ஜாதக பலன்களை கேட்டபோது சிலர் புத்திர பாக்கியம் உண்டென்றும் இன்னும் சிலர் காலம் கடந்து குழந்தை பிறக்கும் என்றும் கூறி பலவிதமான ஹோமம், யாகம், பூஜை, பரிகாரங்கள் கூறினார்கள். அவர்கள் கூறிய அனைத்தையும் நிறைய செலவுடன் செய்தனர்.

ss

மேலும் பண வசதி இருந்ததால் காசி, கயா, இராமேஸ்வரம் என ஜோதிடர்கள் கூறிய ஏராளமான கோவில்களுக்கு சென்று பிரார்த்தனைகளையும் செய்தார்கள். ஆனால் இவர்கள் குறை தீரவில்லை; குழந்தை பிறக்க வில்லை.

இந்த மகளின் உறவு பெண் ஒருத்தி ஒரு மடாதிபதியிடம் சென்று அறிமுகப்படுத்தி வைத்தாள். அந்த போலி மடாதிபதி ஒரு அம்மன் சிலையை வைத்துக்கொண்டு சில தந்திர செயல்களை செய்து தன்னை தெய்வ சக்தி பெற்றவன் என்றும் சக்தியின் மைந்தன் என்றும் கூறிக்கொண்டு மடத்தை நடத்தி வந்தான். அவனையும் நம்பி சிலர் அவன் மடத் திற்கு பக்தியுடன் தங்கள் கோரிக்கையுடன் வந்தனர்.

இந்தப் பெண் மட்டும் அவனை முழுமை யாக நம்பினால். பலவிதமான பூஜைகள், யாகங் களை அவன் கூறியபடி செய்தாள். 24 பௌர்ணமி பூஜைகளை செய்தால் குழந்தை பிறக்கும் என்று ஏராளமான பணத்தை இவளிடம் வாங்கினான். அம்மன் சிலைக்கு தங்கத்தில் ஒட்டியானம், வளையல், மூக்குத்தி மாலை என நிறைய நகைகளை சாற்ற சொன்னான். ஆன்மிகத்தை நம்பி இவள் ஆஸ்திகளை விரயம் செய்தாள். அவன் கொடுத்த பொருட்களை எல்லாம் வீட்டில் வைத்து பூஜை செய்தாள். அவனுடனே மடத்தில் வசித்தாள். ஆனாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.

இவர்களின் சொத்து அறிவதற்கும் ஏழ்மை நிலையை அடைவதற்கும் விதியோ, முற்பிறவி பாவ- சாபங்களோ, கிரகங்களோ காரணம் இல்லை. இவளுக்கு சுய அறிவு இல்லாததும் கடவுள் நம்பிக்கையும் தவறான நபர்களை நம்பி செயல்பட்டு வாழ்ந்ததும்தான் காரணம். கடவுளை நம்பு என்று சொன்னவன் செல்வந்தன் ஆகிவிட்டான். கடவுளை நம்பிய இவர்கள் தரித்தரர்களாகி தெருவில் நிற்கிறார்கள். கலியுகத்தில் ஏராளமானோர் ஆன்மிகவாதிகள் சொல்வதைக்கேட்டு நம்பி பொருளையும் சொத்துகளையும் இழந்துகொண்டுதான் இருப்பார்கள். இதுகலியின் செயல்.

இந்த தம்பதியருக்கு ஏன் இப்பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லாமல் போனது என்னும் இவனது அடுத்த கேள்விக்கு பதில் கூறுகிறேன்.

இந்த தம்பதியர் இருவரும் புண்ணிய ஆத்மாக்கள். இவர்களுக்கு இதுவே கடைசி பிறவி. இந்த ஆத்மாக்களின் விந்து, ரத்தம் இனி இந்த பூமியில் இருக்கக்கூடாது. இவர்கள் மறுபடியும் பிறக்கக்கூடாது என்று கருவி லேயே தீர்மானிக்கப்பட்டு பிறந்தவர்கள். இவர்களுக்கு ஒரு குழந்தை இருந்தால் அந்த குழந்தையின் விந்துமூலம் இவர்கள் பிறக்க நேரிடும் என்பதால் குழந்தை பாக்கியம் இல்லா மல் போனது. அடுத்த பிறப்புக்கும் வழி அடைக் கப்பட்டது. அதனால்தான் மருத்துவம் பலிதம் இல்லாமல் போனது. பொதுவாக குழந்தை பாக்கியம் இல்லாத அனைவருக் கும் இதுவே கடைசி பிறவி. இந்த பிறவி யிலேயே மோட்சம் அடைவார்கள் என்று கூறி விட்டு ஓலையில் இருந்து மறைந்துபோனார் அகத்தியர்.

மோட்சப் பிறவிகள் யார் என்று அவர் களுக்கு விளக்கமாக கூறி இனிமேலாவது கடவுள் நம்பிக்கையில் பிறர் கூறுவதைக் கேட்டு பணத்தை விரயம் செய்யாமல் வாழுங்கள் என்று கூறி அனுப்பிவைத்தேன்.

இன்றைய நாளிலும் பலர் குழந்தை பாக்கியம் வேண்டுமென்று நிறைய சாமியார் கள், ஆன்மிகவாதிகளை நம்பி அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். குழந்தை பிறக்குமா- பிறக்காதா என்று தங்களின் இப்பிறவி ரகசியம் தெரிந்து எதையும் செய்தல் வேண்டும். குழந்தை இல்லையென்று தெரிந் தால் முதுமை வாழ்க்கைக்காக கையிலுள்ள பணம், சொத்துகளை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

செல்: 99441 13267

bala160623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe