மகாபாரதத்தில் "இந்த உலகில் அதிசயம் எது' என்று கேட்ட யட்சன் கேள்விக்கு பதில் அளித்த தர்மர், "நேற்று இருந்தவர் இன்று இல்லை என்பதே அதிசயம்' என்றார். இதன் அடிப்படையிலேயே நமது வாழ்க்கைப் பயணம் இயங்குகிறது. இதில் குழந்தைப் பருவம், இளமைப் பருவம் என நாம் நம் பெற்றோரின் அரவணைப்பில் இருந்தாலும், திருமணம் என்னும் நிகழ்வு நடந்தபின்னர் இன்னொரு வாழ்க்கைக்குள் செல்கிறோம். இதுவே நம் ஆயுள் முழுவதுமான வாழ்க்கை.
இதில் திருமணத்திற்குப்பிறகு கணவன்- மனைவி உறவானது பிள்ளைகள், உறவினர்களின் அனுசரணை, எதிர்வினை என பலவும் தாண்டி நம் வாழ்க்கைப் பயணம் மகிழ்ச்சியுடனும் துன்பத்துடனும் பயணிக்கிறது. இளமையில் திருமண வாழ்க்கை சிலருக்கு வாய்க்கிறது. பலருக்கு 30 வயதிற்குப்பிறகு கிடைக்கிறது. கிடைத்தாலும் அது எவ்விதம் செல்கிறது என்பதை அவர்களது பொருளாதார சூழலும், உற்றார்- உறவினரின் ஆதரவும், தம்பதியினரின் மனநிலையும் தீர்மானிக்கின்றன.
ஒருவரது வாழ்வில் அட்சதை மற்றும் ஆசிர்வாதங்களுடன் கூடிய மாபெரும் மங்கள நிகழ்வு திருமணமாகும்.
அதிகாரங்களின் வழியே உன்னதத்தைப் பறைசாற்றிய வள்ளுவமும்,
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/marr.jpg)
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது'
என்று தீர்க்கமாக உரைக்கின்றது. இல்லற வாழ்க்கையானது அன்பினையும், அறத்தினையும் உடையதாக இருக்குமேயானால் அதுவே இல்லறத்தின் பண்பும், பயனும் என்கின்றது.
இத்தகைய மாண்புடைய இல்லறத்தின் இரு ஜீவநாடி கணவன் மற்றும் மனைவியே ஆவர்.
இவர்களின் அசைவும் இசைவும், துறப்பும் மறுப்பும் பல நிகழ்வுகளை ருசிகரமாகவும், சுவை நிறைந்ததாகவும் எடுத்துச் செல்ல வழிவகுக்கும்.
கண்ணதாசன் கூறியதுபோல் மனைவி அமைவதெல்லாம் நிச்சயமாக இறைவன் கொடுத்த வரம்தான்.
இல்லற வாழ்வின் பயணத்தில் இரு மனங் களும் இறுதி அத்தியாயத்தைத் தொடும்வரை இணைந்து பயணிக்கும் பாக்கியம் இருக்கும் பட்சத்தில், அவர்களின் வாழ்க்கை நிச்சயமாக மண்ணில் ஒரு சொர்க்கத்தை அமைத்துக் கொடுத்துவிடும்.
பொதுவாக ஜாதகத்தில் கணவன் மற்றும் மனைவியைக் குறிக்கும் கிரகங்கள் சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகும். அதேபோன்று இருவரின் 7-ஆம் அதிபதியும் அவர்களுக்கு அமையப்போகும் துணையைக் குறிக்கும்.
ஒரு ஜாதகத்தில் ஏழு மற்றும் இரண்டு ஆகிய பாவகங்கள் சிறப்பாக அமையவேண்டும்.
அதேபோன்று நட்சத்திரங்களை இணைத் துப் பொருத்தம் பார்க்கும் சூழலில், சில பொருத் தங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். அவற்றில் ரஜ்ஜு மற்றும் யோனிப் பொருத்தம் மிக அத்தியாவசியமான பொருத்தமாகும்.
இதில் லக்னத்திற்கென்று மாபெரும் தன்மை வழங்கப்பட்டுள்ளது. ஏழாம் அதிபதிக்கு இணங்கிச்செல்லும் லக்னம் அமைந்தால் இவர்களின் வாழ்க்கை நிச்சயமாக சொர்க்கத்தை கைசேர்க்கும்.
அப்படி நெடுநாட்கள் இணைபிரியாமல் வாழும் சிறந்த தம்பதியரின் ஜாதகத்தைக் காணலாம்.
உதாரண ஜாதகம்-1
இந்த ஆண் ஜாதகத்தில் கடக லக்னமாகி, ஏழாம் அதிபதி லக்னத்திலேயே அமர்ந்துள்ளார். இது தன் துணைக்கு இவர் கொடுக்கும் இடம் எதுவென்று அறியமுடிகின்றது. லக்னமாகிய ஜாதகர் ஏழாம் பாவகாதிபதியாகிய சனியைத் தன்னுடனேயே, தனக்கு நிகரான இடத்தில் அமர்த்திருப்பார்.
மேலும் களத்திரகாரகன் சுக்கிரன் 9-ல். இதுவும் மேற்கூறிய அதே விதியை எடுத்துரைக்கின்றது. இந்த ஜாதகத்தை நுட்பமாக ஆராய்ந்தால் சில எதிர்மறையான தன்மைகள் நமக்குப் புலப்படும்.
2-ஆம் அதிபதி 11-ல். இவர் பேசும் விதமும், பேச்சும் நிச்சயமாக பல பாதகங்களை அமைத்துக் கொடுத்திருக்கும்.
அதோடு மட்டுமல்லாமல் லக்னாதிபதி 12-ல் பாதகத்தில் உச்சம். அதானல் இந்த ஜாதகரின் தன்மை சற்று எதிர்மறையான செயல்பாடுகளைக் கொண்டிருக் கும் என்பது தெரிகின்றது.இருந் தும் இவருக்கு அமைந்த அந்த எதிர் ஜாதகம் இவரை அனுசரித்து இன்றுவரை அழகான குடும்ப வாழ்க்கையில் நிறைவான சுகங்களுடன் வாழச் செய்துள்ளது.
இவரது துணைவியின் ஜாதகத்தை சற்று ஆராயலாம்.
இந்த ஜாதகமும் கடக லக்னமே. இவரது 7-ஆம் அதிபதி சனி 4-ல் உச்சம். அதேபோன்று 7-ல் சுக்கிரன், செவ்வாய் ஆட்சியும் பெற்று அமைந்துள்ளது.
7-ஆமிடத்து சுக்கிரன் களத்திர தோஷத்தை எடுத்துக்காட்டினாலும், இடம்கொடுத்த சனி உச்சம் பெறுவதால் பெரும் பாதிப்புகள் இல்லாமல் அற்புதமான ஒரு வாழ்க்கையை நடத்தமுடிந்தது.
7-ஆம் அதிபதி சுகஸ்தானமான 4-ல் உச்சமானது, விட்டுக்கொடுக்கும் சூழலை இவருக்குக் கொடுத்து, இந்த வாழ்க்கையின் அற்புதமான ஏடுகளைப் புரட்டிப் பார்க்கும் சிறந்த புத்தகமாக இவர்களின் வாழ்க்கை அமைந்துள்ளது.
கோடிகளில் சம்பாத்தியமும், சொத்துகளும் இருந்த பொழுதும் இந்த தாயாரின் கழுத்தில் மஞ்சள் கயிறு இருந்தது. அந்த தாலிக் கயிறில் சில பவள மணிகளும், உறுக்கள் என்று சொல்லக்கூடிய தங்கத்தினாலான சில பொருட்களும் இடம்பெற்றிருந்தன. மேலும் இவர் களின் வழிபாட்டில் அதிகமாக குரு, சுக்கிரனின் இயக்கங் களைக்கொண்ட வழிபாடாக அமைந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. இவையே இந்த தம்பதியரை இந்த எல்லை வரை அழைத்து வந்திருக்க வாய்ப்புகள் இருக்கலாம்.
மேலும் இவர்கள் கயிறு மாற்றும்பொழுது இவர்கள் இருவருக்கும் உகந்த தாராபலன் நாளில் மாற்றி, மாற்றும் பொழுதெல்லாம் கணவரின் கைகளாலேயே முடிச்சுபோட சொல்வார்களாம். இதைக் கேட்கும்பொழுது அதிசய மாகவும் மனநிறைவாகவும் தோன்றியது.
நாம் தொட்டுப் பார்க்கத் தயங்கு கின்ற சில சடங்குகள் நிச்சயமாக பலமான வாழ்க்கையைத் தொடரவழி வகுத்துக் கொடுத் துள்ளது என்பது இதன்மூலம் தெரிகின்றது.
உதாரண ஜாதகம்-2
இந்த இரண்டு ஜாதகங்கள் நிறைவான, சமுதாயத்தில் நல்ல சூழலிலும், பொருளாதாரரீதியான வளர்ச்சியிலும், கருணையின் வழியிலும், இறையின் ஆசியிலும் தங்களது தாம்பத்திய வாழ்க்கையை யோக வாழ்க்கையாக மாற்றி பயணித்துள்ளனர்.
இந்த ஆண் ஜாதகத்தில் ரிஷப லக்னமாகி, 7-ஆம் அதிபதி செவ்வாய் 5-ல் திரிகோணம் ஏறி அமர்ந்துள்ளார்.
அதேபோன்று லக்னாதிபதி இரண்டில் என்ற அமைப்பும் இவர் களின் வாழ்வில் ஒரு சிறப்பை அளித்துள்ளது.
இந்தப் பெண் ஜாதகத்தில் சிம்ம லக்னமாகி, 7-ஆம் அதிபதி சனி சுகஸ்தானமான 4-ல் கேந்திரத்தில் அமைந்துள்ளார். மேலும் பூர்வ புண்ணியாதிபதி குரு 2-ல் அமர்ந்து, சிறப்பான ஒரு வாழ்க்கையை கைக்கொள்ளும் ஜாதகங்களாக இடம்பெற்றுள்ளது.
இரண்டு ஜாதகங்களுக்கிடை யில் பொருத்தங்களைக் கணக் கிடும்பொழுது, சில விதிகளை மனதில் வைத்துக்கொண்டு ஆழ்ந்து கணித்து செயல்படுவதோடு, சில சடங்குகளையும், பின்பற்றுவதன் மூலம் சிறப்பான இல்லறத்தைத் தொடரமுடியும்.
செல்: 80563 79988
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-10/marr-t.jpg)