Advertisment

கேந்திராதிபத்திய தோஷம்!

/idhalgal/balajothidam/cosmopolitan-dose

வ்வொரு நாளும் நம் வாழ்வில் உண்டாகும் இன்பம்- துன்பம், நல்லது- கெட்டது அனைத் திற்கும் நவகிரகங்கள்தான் காரணம் என ஜோதிடரீதியாக நாம் அறிவோம். நவகிரகங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகளுக்கேற்ப நாம் அசைந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும்கூட நவகிரகங்களே காரகத்துவம் வகிக்கின்றன.

Advertisment

சும்மா படுத்து சோம்பேறியாகத் திரிபவனை கோடீஸ்வரனாக்கும் நவகிரகங்கள், உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்பவனை பிச்சைக் காரனாகவே வைத்திருப்பதும் உண்டு. சிலர் வறுமையான வீட்டில் பிறந்தாலும் ஒரு குறிப் பிட்ட காலத்திற்குப்பின் சுகமான வாழ்க்கை வாழ்வார்கள். சிலர் பிறக்கும்போது நல்ல வசதி வாய்ப்புகளுடன் இருந்து, இறுதிக்காலம்வரை அப்படியே வாழ்வார்கள். சிலருக்கு வசதி வாய்ப்பு களுடன் பிறந்தாலும் எல்லாவற்றையும் இழந்து தரித்திரவாசியாய் வாழக்கூடிய சூழல் உண்டாகும். இதற்கெல்லாம் நவகிரகங்களின் லீலைகளே காரணம்.

செவ்வாய் தோஷம், ராகு- கேது தோஷம் போல கேந்திராபத்திய தோஷமும் ஒன்று. அதுபற்றி இங்கு பார்ப்போம்.

ஒருவர் ஜாதகத்தில் கேந்திர ஸ்தானங்கள் என்பது 1, 4, 7, 10 ஆகும். 1-ஆம் பாவத்தைக் கொண்டு ஆயுள், ஆரோக்கியம், குண அமைப் புகள் பற்றியும்; 4-ஆம் பாவத்தைக் கொண்டு சுகவாழ்வு, வீடு, மனை யோகம், வாகன யோகம், கல்வி, தாய், தாய்வழி உறவுகளால் உண்டா கக்கூடிய பலன்கள் போன்றவற்றைப் பற்றியும்; 7-ஆம் வீட்டைக்கொண்டு மணவாழ்க்கை, நட்பு, கூட்டுத்தொழிலில் உண்டாகக்கூடிய பலன்கள் பற்றியும்; 10-ஆம் வீடான உச்ச கேந்திர ஸ்தானத்தைக் கொண்டு தொழில், வியாபாரம், உத்தியோகம் பற்றிய

வ்வொரு நாளும் நம் வாழ்வில் உண்டாகும் இன்பம்- துன்பம், நல்லது- கெட்டது அனைத் திற்கும் நவகிரகங்கள்தான் காரணம் என ஜோதிடரீதியாக நாம் அறிவோம். நவகிரகங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகளுக்கேற்ப நாம் அசைந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும்கூட நவகிரகங்களே காரகத்துவம் வகிக்கின்றன.

Advertisment

சும்மா படுத்து சோம்பேறியாகத் திரிபவனை கோடீஸ்வரனாக்கும் நவகிரகங்கள், உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்பவனை பிச்சைக் காரனாகவே வைத்திருப்பதும் உண்டு. சிலர் வறுமையான வீட்டில் பிறந்தாலும் ஒரு குறிப் பிட்ட காலத்திற்குப்பின் சுகமான வாழ்க்கை வாழ்வார்கள். சிலர் பிறக்கும்போது நல்ல வசதி வாய்ப்புகளுடன் இருந்து, இறுதிக்காலம்வரை அப்படியே வாழ்வார்கள். சிலருக்கு வசதி வாய்ப்பு களுடன் பிறந்தாலும் எல்லாவற்றையும் இழந்து தரித்திரவாசியாய் வாழக்கூடிய சூழல் உண்டாகும். இதற்கெல்லாம் நவகிரகங்களின் லீலைகளே காரணம்.

செவ்வாய் தோஷம், ராகு- கேது தோஷம் போல கேந்திராபத்திய தோஷமும் ஒன்று. அதுபற்றி இங்கு பார்ப்போம்.

ஒருவர் ஜாதகத்தில் கேந்திர ஸ்தானங்கள் என்பது 1, 4, 7, 10 ஆகும். 1-ஆம் பாவத்தைக் கொண்டு ஆயுள், ஆரோக்கியம், குண அமைப் புகள் பற்றியும்; 4-ஆம் பாவத்தைக் கொண்டு சுகவாழ்வு, வீடு, மனை யோகம், வாகன யோகம், கல்வி, தாய், தாய்வழி உறவுகளால் உண்டா கக்கூடிய பலன்கள் போன்றவற்றைப் பற்றியும்; 7-ஆம் வீட்டைக்கொண்டு மணவாழ்க்கை, நட்பு, கூட்டுத்தொழிலில் உண்டாகக்கூடிய பலன்கள் பற்றியும்; 10-ஆம் வீடான உச்ச கேந்திர ஸ்தானத்தைக் கொண்டு தொழில், வியாபாரம், உத்தியோகம் பற்றியும் அறியலாம்.

Advertisment

கேந்திர ஸ்தானங்களில் பாவகிரகங்கள் அமைந்திருந்தால் அனுகூலமான பலன்கள் ஏற்படுகின்றன. சுபகிரகங்கள் கேந்திர ஸ்தானங் களில் அமைந்து ஆட்சி பெறுகின்றபோது கேந்திராபத்திய தோஷம் உண்டாகி நற்பலன் ஏற்படத் தடை உண்டாகிறது. சுபகிரகங்கள் கேந்திர ஸ்தானங்களில் தனித்து ஆட்சி பெறும் போது அதன் தசா புக்திக் காலங்களில் பல்வேறு வகையில் சோதனையான பலன்கள் ஏற்படு கின்றன.

thosam

மேஷ லக்னத்திற்கு ஜென்ம லக்னமான மேஷமும், 4-ஆம் வீடான கடகமும், 7-ஆம் வீடான துலாமும், 10-ஆம் வீடான மகரமும் கேந்திர ஸ்தானங்கள் ஆகும். கடகத்தில் சந்திரன் ஆட்சிபெற்றிருந்தால் தேவையற்ற மனக்குழப்பங்கள், சொந்த வீடு, வாகனம் அமையத் தடை, சுகபோக வாழ்க்கைக்கு இடை யூறுகள் உண்டாகின்றன. தேய்பிறையில் பிறந் திருந்தால், சந்திரன் பாவி என்பதால் 4-ல் அமைந்தால் நற்பலனைத் தருவார். 7-ஆம் வீடான துலாத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றிருந் தால் மணவாழ்க்கை விரைவில் அமையத் தடை- அப்படி அமைந்தாலும் நிம்மதியில்லாத நிலை உண்டாகிறது. கூட்டுத்தொழிலில் பிரச்சினைகள், நல்ல நண்பர்கள் கிடைப்பதில் தடை ஏற்படுகிறது.

ரிஷப லக்னத்திற்கு ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய வீடுகள் கேந்திர ஸ்தானங்களாகும். இந்த வீட்டு அதிபதிகளில் லக்னாதிபதி சுக்கிரன் மட்டுமே சுபராகும். லக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார். இதனால் ரிஷப லக்னக் காரர்களுக்கு கேந்திராதிபத்திய தோஷம் உண்டாவதில்லை.

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 1, 4-க்கு அதிபதி புதன். 7, 10-க்கு அதிபதி குரு. லக்னத்தில் புதன் ஆட்சி பெற்றால் லக்னா திபதி என்பதால் நற்பலன்களே உண்டாகும். அதுவே 4-ல் ஆட்சி, உச்சம் பெற்றால் எதிலும் தடை, தாமதங்கள், வீடு, வாகனம் வாங்கத் தடை, சுகவாழ்வு அமைவதில் இடையூறுகள் உண்டா கும். புதன் ஏதாவது ஒரு பாவகிரகச் சேர்க்கை பெற்றிருந்தால் நற்பலனை ஏற்படுத்தும். 7, 10-ல் குரு ஆட்சிபெற்றால் கேந்திராதிபத்திய தோஷம் உண்டாகி மணவாழ்க்கையில் பிரச்சினை, கூட்டுத் தொழில் மற்றும் தொழில், உத்தியோகரீதியாக தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

கடக லக்னத்திற்கு சுக்கிரன் 4-ல் ஆட்சி பெற்றால் கேந்திராதி பத்திய தோஷம் உண்டா வதுடன் பாதகாதிபதி என்ற காரணத்தாலும் அளவு கடந்த சோதனைகளை சந்திக்க நேரிடு கிறது. சந்திரன் லக்ன கேந்திரம் பெறுவது தோஷம் என்றாலும், லக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. தேய்பிறை யில் பிறந்திருந்தால், சந்திரன் பாவி என்பதால் லக்னத்தில் அமைந்தால் நற்பலனைத் தருவார்.

சிம்ம லக்னத்திற்கு 10-ல் சுக்கிரன் ஆட்சிபெறுவதால் தோஷம் உண்டாகி தொழில், உத்தியோக ரீதியாக பாதிப்பு களை அடைய நேரிடும் என் றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது.

கன்னி லக்னத்திற்கு லக்னத் தில் புதன் ஆட்சி, உச்சம் பெற்றால் சிறுசிறு இடையூறுகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் லக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. 4-ல் குரு ஆட்சிபெற்றால் சுகவாழ்வில் தடை, வீடு, வாகனம் வாங்க இடையூறுகள், உறவினர்களி டையே தேவையற்ற கருத்து வேறு பாடுகள் உண்டாகும். 7-ல் குரு ஆட்சிபெற்றால் மணவாழ் வில் பிரச்சினைகள், கூட்டுத் தொழிலில் தடைகள் உண்டா கும். 10-ல் புதன் ஆட்சிப்பெறுவது நல்லதல்ல என்றாலும், புதன் ஏதாவது ஒரு பாவகிரகச் சேர்க்கை பெற்றிருந்தால் நற்பலன்களையே வழங்கும்.

துலா லக்னத்திற்கு லக்னா திபதி சுக்கிரன் ஆட்சி பெற்றால் சிறுசிறு பாதிப் புகள் தோன்றினாலும், லக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதல்கள் ஏற்படாது. 10-ஆம் அதிபதி சந்திரன் வளர்பிறைச் சந்திரனாகி ஆட்சிபெற்றால் தேவையற்ற மனக்குழப்பங்கள், தொழில், வியாபாரரீதியாக இடையூறுகள் உண்டாகும். தேய் பிறைச் சந்திரனாக இருந்தால் நற்பலன்கள் உண்டாகும்.

விருச்சிக லக்னத்திற்கு 7-ஆம் அதிபதி சுக்கிரன் மட்டுமே சுபகிரகமாகும். சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் ஆட்சிபெற்றால் மணவாழ்வில் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். காரகோபாவ நாச ரீதியாகவும் களத்திர காரகன் சுக் கிரன் களத்திர ஸ்தானத்தில் ஆட்சிப்பெறுவது நல்லதல்ல. இதனால் திருமணம் நடைபெறத் தடை, தாமதங்கள் உண்டாகும். தாமதித்து திருமணம் அமையும். அதன்பின்னர் நற்பலன் உண்டாகும்.

தனுசு லக்னத்திற்கு 1, 4-க்கு அதிபதி குரு. 7, 10-க்கு அதிபதி புதன். கேந்திர ஸ்தானங்கள் அனைத்தும் சுபர்வீடாக இருப்பதால் கேந்திராதிபத்திய தோஷத்தால் அதிக பாதிப்பு களை எதிர்கொள்ள நேரிடுகிறது. 1-ல் குரு ஆட்சி பெறு வது தோஷம் என்றாலும், லக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. அதுவே 4-ல் ஆட்சிபெற்றால் சுகவாழ் வில் பாதிப்பு, வீடு, மனை, வாகனங்கள் வாங் குவதில் தடை, கல்வியில் இடையூறு உண்டா கும். 7, 10-ல் புதன் ஆட்சிபெற்றால் மணவாழ்க்கையில் பிரச்சினை, திருமணம் நடைபெறத் தடை, தொழில், வியாபார, உத்தியோகரீதியாக வீண் சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்றாலும், புதன் பாவ கிரகச் சேர்க்கையுடனிருந்தால் பெரிய கெடுதிகள் ஏற்படாது.

மகர லக்னத்திற்கு சுபகிரகமான சுக்கிரன் 10-ல் ஆட்சி பெற்றால் தொழில், வியாபாரரீதியாக வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். என்றாலும் திரிகோண ஸ்தானமான 5-ஆம் வீட்டிற்கும் அதிபதி என்பதால் பெரிய கெடுதல்கள் ஏற்படாது. சந்திரன் 7-ஆம் அதிபதி என்பதால் ஆட்சிபெற்று அமைந்து விட்டால் மனக்குழப்பம், மண வாழ்க்கைரீதியாக பிரச்சினைகள் ஏற்படும். என்றாலும் தேய்பிறைச் சந்திரனாக இருந்தால் பெரிய கெடுதிகள் ஏற்படாது.

கும்ப லக்னத்தில் பிறந்தவர் களுக்கு 4-ஆம் அதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று அமைந்தால் கேந்திராதி பத்திய தோஷம் உண்டாகி சுகவாழ்வு உண்டாகத் தடை, இல்வாழ்வில் பிரச் சினை, பெண்களால் இடையூறுகள், உறவினர்களால் வீண் மனக்கவலைகள் உண்டாகும்.

மீன லக்னத்திற்கு 1, 4, 7, 10-ஆம் அதிபதிகள் சுபர் என்பதால், 1-ல் குரு ஆட்சிபெற்றால் சிறிது தோஷம் என்றாலும், லக்னாதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது. 10-ல் ஆட்சிபெற்றால் தொழில், உத்தி யோகரீதியாக இடையூறுகள், முன்னேற்றமற்ற நிலை உண்டாகும். 4, 7-ல் புதன் ஆட்சிபெற்றால் சுக வாழ்வு பாதிப்பு, வீடு, வாகனம் அமைவதில் தடை, மணவாழ்க்கை அமைய தாமதம் ஏற்படும். இல்வாழ்க் கையிலும் நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். புதன் பாவ கிரகச் சேர்க்கையுடனிருந்தால் ஓரள வுக்கு கெடுபலன் குறைகிறது.

அந்தந்த கிரகங்களின் தசாபுக்திக் காலங்களில்தான் பாதிப்புகள் அதிக மாகிறது. ஜென்ம லக்னம் கேந்திர ஸ்தானம் என்றாலும், லக்னாதி பதியாக இருந்து ஆட்சிபெற்றால் பெரிய கெடுதல்கள் ஏற்படாது.

செல்: 72001 63001

bala261018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe