Advertisment

கோட்சாரமும் திருமணமும்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/corsage-and-marriage-prasanna-astrologer-i-anandi

னிதர்களின் சமுதாயக் கட்ட மைப்பு என்பது குடும்பமாக இணைந்து வாழ்வது. திருமணம் என்ற ருண பந்தமே அனைவருக்கும் குடும்பத்தை ஏற்படுத்தித் தருகிறது. இத்தகைய குடும்ப வாழ்க்கை அனைவருக்கும் வரமாக அமை வதில்லை.

Advertisment

இன்றைய இளைய தலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படுவது திருமணத்தா லும் திருமண வாழ்க்கையாலும் என்றால் மிகைப்படுத்தலாகாது.ஒரு மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து ஏற்ற- இறக்கத்திற்கும் சுய ஜாதகமும் தசாபுக்திகளும் மட்டுமே காரணமாக இருக்கமுடியும். ஆனால் ஜாதகத்தின் மூலம் ஏற்படும் அனைத்து விளைவு களையும் நிர்ணயிப்பது கோட்சார கிரகங்களே. குறிப்பாக வருட கிரகங் களான குரு, ராகு- கேது மற்றும் சனி போன்றவற்றின் பெயர்ச்சியைக் கூறலாம்.

Advertisment

தற்போதைய கோட்சார கிரகங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகும் தோஷங்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

குரு பகவான்

மனித வாழ்வில் நடக்கும் அனைத்து விதமான சுபங்களையும் வழங்குவதில் முன்னிலை வகிப்பவர் குருபகவான். இவர் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி காலபுருஷ 12-ஆமிடமான மீனத்தில் ஆட்சிபலம் பெறுகிறார். அவரின் கிரக சஞ்சாரங்கள்:

பூரட்டாதி 4-ல் 13-4-2022 முதல் 28-4-2022 வரை.

உத்திரட்டாதியில் 29-4-2022 முதல் 24-2-2023 வரை.

29-7-2022 முதல் 23-11-2022 வரை உத்திரட்டாதியில் வக்ரம்.

ரேவதியில் 25-2-2023 முதல் 22-4-2023 வரை.

கால புருஷ 12-ஆமிடமான மீனத்தில் ஆட்சிபலம் பெறும் குருவின் 5-ஆம் பார்வை காலபுருஷ 4-ஆமிடமான கடகத்திலும், 7-ஆம் பார்வை காலபுருஷ 6-ஆமிடமான கன்னியிலும், 9-ஆம் பார்வை காலபுருஷ 8-ஆமிடமான விருச்சிகத்திலும் பதிகிறது.

ராகு- கேது

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 12-4-2022 முதல் 30-10-2023 வரை ராகு பகவான் காலபுருஷ லக்னமான மேஷத்திலும், கேது பகவான் காலபுருஷ களத்திர ஸ்தானமான துலாத்திலும் சஞ்சரிக்கின்றனர். ராகு மேஷ ராசியிலுள்ள நட்சத்திரப் பாதங்களான கிருத்திகை, பரணி, அஸ்வினி நட்சத்திரங்களின்மூலம் ராசிய

னிதர்களின் சமுதாயக் கட்ட மைப்பு என்பது குடும்பமாக இணைந்து வாழ்வது. திருமணம் என்ற ருண பந்தமே அனைவருக்கும் குடும்பத்தை ஏற்படுத்தித் தருகிறது. இத்தகைய குடும்ப வாழ்க்கை அனைவருக்கும் வரமாக அமை வதில்லை.

Advertisment

இன்றைய இளைய தலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படுவது திருமணத்தா லும் திருமண வாழ்க்கையாலும் என்றால் மிகைப்படுத்தலாகாது.ஒரு மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து ஏற்ற- இறக்கத்திற்கும் சுய ஜாதகமும் தசாபுக்திகளும் மட்டுமே காரணமாக இருக்கமுடியும். ஆனால் ஜாதகத்தின் மூலம் ஏற்படும் அனைத்து விளைவு களையும் நிர்ணயிப்பது கோட்சார கிரகங்களே. குறிப்பாக வருட கிரகங் களான குரு, ராகு- கேது மற்றும் சனி போன்றவற்றின் பெயர்ச்சியைக் கூறலாம்.

Advertisment

தற்போதைய கோட்சார கிரகங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகும் தோஷங்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

குரு பகவான்

மனித வாழ்வில் நடக்கும் அனைத்து விதமான சுபங்களையும் வழங்குவதில் முன்னிலை வகிப்பவர் குருபகவான். இவர் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி காலபுருஷ 12-ஆமிடமான மீனத்தில் ஆட்சிபலம் பெறுகிறார். அவரின் கிரக சஞ்சாரங்கள்:

பூரட்டாதி 4-ல் 13-4-2022 முதல் 28-4-2022 வரை.

உத்திரட்டாதியில் 29-4-2022 முதல் 24-2-2023 வரை.

29-7-2022 முதல் 23-11-2022 வரை உத்திரட்டாதியில் வக்ரம்.

ரேவதியில் 25-2-2023 முதல் 22-4-2023 வரை.

கால புருஷ 12-ஆமிடமான மீனத்தில் ஆட்சிபலம் பெறும் குருவின் 5-ஆம் பார்வை காலபுருஷ 4-ஆமிடமான கடகத்திலும், 7-ஆம் பார்வை காலபுருஷ 6-ஆமிடமான கன்னியிலும், 9-ஆம் பார்வை காலபுருஷ 8-ஆமிடமான விருச்சிகத்திலும் பதிகிறது.

ராகு- கேது

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 12-4-2022 முதல் 30-10-2023 வரை ராகு பகவான் காலபுருஷ லக்னமான மேஷத்திலும், கேது பகவான் காலபுருஷ களத்திர ஸ்தானமான துலாத்திலும் சஞ்சரிக்கின்றனர். ராகு மேஷ ராசியிலுள்ள நட்சத்திரப் பாதங்களான கிருத்திகை, பரணி, அஸ்வினி நட்சத்திரங்களின்மூலம் ராசியைக் கடக்கிறார்.

12-4-2022 முதல் 14-6-2022 வரை கிருத்திகை நட்சத்திரம்.

15-6-2022 முதல் 20-2-2023 வரை பரணி நட்சத்திரம்.

21-2-2023 முதல் 30-10-2023 வரை அஸ்வினி நட்சத்திரம்.

கேது துலா ராசியிலுள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள்மூலம் தன் பயணத்தைச் செலுத்துகிறார்.

12-4-2022 முதல் 17-10-2022 வரை விசாக நட்சத்திரம்.

18-10-2022 முதல் 26-6-2023 வரை சுவாதி நட்சத்திரம்.

27-6-2023 முதல் 30-10-2023 வரை சித்திரை நட்சத்திரம்.

சனி பகவான்

தற்போது கோட்சாரத்தில், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான் 29-4-2022 முதல் 12-7-2022 வரை கும்பத்திற்கு அதிசாரமாகச் செல்கிறார். 17-1-2023 அன்று கும்ப ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். 17-1-2023 வரை சனியின் 3-ஆம் பார்வை காலபுருஷ 12-ஆமிடமான மீனத்திலுள்ள குருவின்மேல் பதிகிறது. 7-ஆம் பார்வை காலபுருஷ 4-ஆமிடமான கடகத்திலும், 10-ஆம் பார்வை காலபுருஷ 7-ஆமிடமான துலாத்திலுள்ள கேதுவின்மேலும் பதிகிறது. 17-1-2023-க்குப்பிறகு சனியின் 3-ஆம் பார்வை காலபுருஷ லக்னமான மேஷத்திலுள்ள ராகுவின்மேலும், 7-ஆம் பார்வை காலபுருஷ 5-ஆமிடமான சிம்மத்திலும், 10-ஆம் பார்வை காலபுருஷ 8-ஆமிடமான விருச்சிகத்திலும் பதிகிறது.

கோட்சாரமும் திருமணமும் மனிதர்களின் வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளையும் தீர்மானிப்பதில் கோட்சார கிரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என பார்த்தோம்.

ஜோதிடரீதியாக ஒரு ஜாதகத்தைப் பார்த்தவுடன் ஆட்சி, உச்சம்பெற்ற கிரகங்கள், வலிமை பெற்றவை என்ற கருத்து பலரிடம் நிலவிவருகிறது. அது தவறு. அந்த வகையில் ஆட்சிபலம் பெற்ற சனியும், ஆட்சிபலம் பெறப்போகும் குருவும், மேஷ ராகு மற்றும் துலா கேதுவுடன் இணைந்து மனிதர்கள் வாழ்வில் பலவிதமான தடுமாற்றத்தை ஏற்படுத்தலாம். இதை சனிப்பெயர்ச்சிக்குமுன், பின் என இரண்டாக வகைப்படுத்தலாம்.

ff

லக்னம்

லக்னம் மற்றும் லக்னாதிபதியின்மூலம் ஒருவரின் குணம், சிந்திக்கும் திறன், முடிவெடுக்கும் தன்மைபற்றி அறியமுடியும்.

ஒரு ஜாதகரை வழிநடத்திச் செல்வது லக்னம், லக்னாதிபதி என்பதால், லக்னத்தில் பாவ கிரகங்களான சனி, செவ்வாய், ராகு மற்றும் கேது போன்றவை இடம்பெறாமல் இருத்தல் நல்லது. அவ்வாறு இடம்பெற்றிருப் பின் அவை தனக்கு ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்யுமென்பதால் திருமணத்தைத் தடைசெய்கின்றன.

லக்னத்தில் அசுப கிரகங்கள் இருப்பது களத்திரதோஷத்தினை ஏற்படுத்து மென்பதால் திருமணம் தடைப்படுவதுடன் மனதுக்குப் பிடித்த களத்திரம் அமைவதற்கும் தடையாக இருக்கும்.

சர்ப்ப தோஷம்

காலபுருஷ லக்னமான செவ்வாயின் வீடான மேஷத்தில் ராகு நிற்கிறார். இது சர்ப்ப தோஷமாகும்.

இரண்டாமிடம்

இரண்டாமிடம் குடும்ப வாழ்க்கையைப் பற்றிக் கூறுமிடம். குடும்ப ஸ்தானத்தில் ராகு- கேது, சனி மற்றும் செவ்வாய் போன்ற கிரகங்கள் இடம்பெறும்போது ஏழாம் பார்வையாக மாங்கல்ய ஸ்தானத்தைப் பார்வை செய்வதால், குடும்ப ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம் ஆகிய இரண்டு இடங்களும் பாதிக்கப்படுகிறது என்பதால் காலதாமதமாக திருமணத்தை ஏற்படுத்தும்.

குடும்ப தோஷம்

கோட்சாரத்தில் 15-6-2022 முதல் 20-2-2023 வரை காலபுருஷ குடும்ப ஸ்தானாதி பதி சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் ராகு பயணிப்பது குடும்ப தோஷமாகும்.

ஏழாமிடம்

ஒருவரது ஜாதகத்தில் ஏழாமிடம் என்பது வாழ்க்கைத் துணையைக் குறிக்குமிடமாகும். ஏழாமிடத்தில் பாவ கிரகங்கள் சம்பந்தம் பெறாமலிருத்தல் நல்லது.

ஏழாமிடத்தில் எந்த கிரகங்களும் இடம்பெறாமல் இருப்பதே சிறப்பு. ஏழாமிடத்தில் சனி, ராகு- கேது மற்றும் செவ்வாய் போன்ற பாவகிரகங்கள் இடம் பெற்றிருப்பின் திருமணம் காலதாமதமாகிக் கொண்டே செல்லும். அவ்வாறிருக்கும் பட்சத்தில், ஏழாம் பார்வையால் அவை லக்னத்தையும் பாதிப்படையச் செய்து விடுகின்றன. ஏழாமிடத்தில் வக்ர கிரகங் களான ராகு- கேதுவுடன் அசுப கிரகங் களான சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் சம்பந்தம் பெற்று நின்றால், எத்தனை தாரம் வந்தாலும் நிலைக்காது. காலபுருஷ 7-ஆமிடமான சுக்கிரனின் வீடான துலாத்தில் கேது நிற்கிறார். அங்கு சனியின் 10-ஆம் பார்வை விழுகிறது. இதை பரதேசி யோகம் எனலாம்.

பரதேசி யோகம்

சனியுடன் கேது இணைவால் உருவாகும் இந்த யோகம் பற்றற்ற நிலையை ஏற்படுத்தும். இல்லறவாசியாக இருந்தாலும், இல்லற சுகவாசியாக இருந்தாலும் பற்றற்ற ஞானியாக- இல்லற சந்நியாசியாக வாழந்துவருவார்கள். இல்லாவிட்டால் இல்லற வாழ்வை வெறுத்து ஆன்மிக வாழ்வில் ஈடுபடுவார்கள். ஆன்மிகத்தில் உச்சநிலைக்குச் சென்று ஞானம்பெற்று ஞானியாக வலம் வருவார்கள். இவர்கள் எளிமையை விரும்பு வார்கள். பல சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும், தடைகளுக்கும் ஆளாகி இறுதியில் வெற்றிகளைப் பெறுவார்.

எட்டாமிடம்

எட்டாமிடம் என்பது பெண்ணுக்கு மாங்கல்ய ஸ்தானம் எனப்படும். ஆணுக்கு ஆயுள் ஸ்தானம். எனவே இந்த ஸ்தானத் தில் பாவ கிரகங்கள் அமர்ந்திருப்பின் அவை ஏழாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை யும் பார்வை செய்வதால் கால தாமதத் திருமணத்தைத் தரும்.

மாங்கல்ய தோஷம்

மேலும் 8-ல் சனி இருந்தாலும், 8-ஆமிடத் தைச் சனி பார்த்தாலும், 8-ஆமதிபதியுடன் சனி இணைந்தாலும் மாங்கல்ய தோஷமாகும்.

காலபுருஷ எட்டாமிடமான விருச்சிகத் திற்கு 17-1-2023 வரை குரு பார்வை மட்டும் உள்ளது. அதன்பிறகு சனி பார்வையும் உள்ளது. மேலும் கோட்சார கேது 27-6-2023 முதல் 30-10-2023 வரை செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் பயணிக்கிறார். கோட்சார சனி 14-3-2022 வரை செவ்வாயின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். அஷ்டமச்சனியின் காலத்தில் ஏன் திருமணம் செய்வதில்லை என்ற காரணம் இப்பொழுது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

பன்னிரண்டாமிடம்

12-ஆமிடம் என்பது அயன, சயன போக ஸ்தானம். இதில் அசுப கிரகங்களான ராகு- கேது, சனி, செவ்வாய் அமர்வது இல் வாழ்க்கை இன்பத்தைக் கெடுக்கும். இங்கே குரு ஆட்சிபலம் பெறுகிறார். 17-1-2023 வரை சனி பார்வையும் உள்ளது.

தர்மகர்மாதிபதி யோகம்

ஒன்பதாமிடத்தை தர்ம ஸ்தானமென்றும் பத்தாமிடத்தை கர்ம ஸ்தானமென்றும் கூறலாம். அந்த இரு இடங்களுக்குமுரிய வீட்டு அதிபர்களுக்குப் பெயர் தர்ம- கர்மாதிபதிகள். அவர்கள் இருவரின் சம்பந்தம் ஜாதகத்தில் எந்தவிதத்தில் இருந்தாலும் தர்மகர்மாதிபதி யோகமாகும். அந்த யோகம் பெற்றவர்கள் அதீதமான பொருள் ஈட்டுவார்கள். காலபுருஷ தர்மாதிபதி குரு மற்றும் கர்மாதிபதி சனியின் சம்பந்தம் 12-ஆமிடமான அயன சயன ஸ்தானத்திற்கு இருப்பதால், இல்வாழ்க்கை ஈடுபாடு குறையும்.

ஒரு கிரகம் தான் பயணிக்கும் நட்சத்திர சாரத்தின் பண்புகளைத் தன்னுள் ஏற்றுக் கொண்டு பயணிக்கும் என்பது ஜோதிட விதி. 12-ல் ஆட்சிபலம் பெற்ற குரு 29-4-2022 முதல் 24-2-2023 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் இதன் தாக்கம் மிகுதியாகி, திருமண வாழ்வில் மகிழ்ச்சிக் குறைவை ஏற்படுத்தலாம்.

காதல் என்ற பெயரில் பெண்கள் ஏமாறுவது அதிகமாகிவிட்ட இந்தக் காலத் தில், திருமணமெனும் பந்தத்தில் தோற்பதும் சகஜமாகிவிட்டது. ஆயிரத்தில் ஒருவர் திருமணத்தில் தோல்வியை சந்தித்த காலம் சென்று, நூற்றுக்கு ஒருவர் திருமணத் தோல்வி, தடையை சந்திக்கும் நிலை வந்துவிட்டது.

பலருக்கு ஜாதகரீதியான திருமணத் தடை, பிரிவினை இல்லாதபோதுகூட திருமண தாமதம், கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கு கோட்சார கிரகங்களின் தாக்கமே காரணம். ஒரு ஜாதகத்தின் பலனை நிர்ணயம் செய்யும்போது காலபுருஷ தத்துவ அமைப்புப்படி கோட்சார கிரகங்கள் நின்ற வீட்டின் பலனையும் சேர்த்து அறியும்போது மட்டுமே கிரகத்தின் பலம், பலவீனத்தைத் துல்லியமாக அறியமுடியும்.

பரிகாரம்

எனவே திருமண முகூர்த்தம் குறிக்கும் போது 1, 2, 7, 8, 12-ஆமிடத்திற்கு அசுப கிரக சம்பந்தமில்லாத நாட்களாக இருப்பது நல்லது.

கோட்சார கிரகங்கள் பிரிவினையைத் தரும் அமைப்பில் தசாபுக்தியோடு இணைந்து செயல்பட்டால் திருமணத்தைத் தள்ளிப் போடவும்.

திருமணத்திற்குப்பிறகு கோட்சார கிரகங் களால் பாதிப்பிருந்தால் தில்லைக் காளியை வழிபடவும்.

செல்: 98652 20406

bala150422
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe