சென்ற இதழ் தொடர்ச்சி...
ஆறாம் பாவகம்
லக்னத்திற்கு ஆறாமிடத்தில் நிற்கும் மாந்தி உறவினர்களி டையே பிரிவினை, காரியத் தடை, மன உளைச்சலை ஏற்படுத்தும்.
உற்றார்- உறவினர்களுடன் கூடி வாழமுடியாது. தனித்து வாழ்வதே பெருமை, நிம்மதி என்ற நிலை ஏற்படும். எதிர்பா ராஹத- சமாளிக்கமுடியாத தனநஷ்டம், செல்வம், புகழ் பிறரால் கவரப்படும் நிலை ஏற்படும். ஆறாமிடத்தில் மாந்தி நிற்க, எந்த வகையிலாவது கடன் வந்துசேரும். இனம்புரியாத நோய்த்தாக்கம் இருக்கும். வியாதிக்கான மருந்தை உடல் ஏற்றுக்கொள்ளாது. தவறான பெண் நட்பினால் ஏற்படும் வியாதிகள், விஷ ஜந்துகளால் ஆபத்து, மிருகங்களால் உயிர் ஆபத்து, நீரினால் கண்டம், சிறைவாசம், காரியத் தடங்கல், சந்தேகம்- தீயவரின் நட்பு, குரூரச் செயல், பிறரை நிந்தனை செய்தல், நிலையற்ற உத்தியோகம் போன்ற பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்கும். பணம், பதவி, பட்டம், சுகம் என்றால் என்னவென்று கருதும்வகையில் ருண, ரோக, சத்ரு ஸ்தானமான ஆறா மிட மாந்தியின் கருணை யற்ற தாக்கம் இருக்கும். பிரச்சினை தரும் நிறைய எதிரிகளை வாழ்வில் சந்திக்க நேரிடும். எதிரிகளால் பெரிய பாதிப்புகள் இல்லா விட்டாலும் மன உளைச்சல் இருந்துகொண்டே இருக்கும்.
தாய்மாமன் உறவு நிலைக்காது. தாய்மாமன் உறவு உதட்டளவில்தான் இருக்கும். மாமன்மார்கள் பெரும் யோகம், செல்வம் பெறமுடியாது. தம்பதிகளுக்குள் சண்டை, எதிர்கால வாழ்க்கை பயம் நீண்டகாலமாக இருந்து கொண்டே இருக்கும். திருட்டுப் பட்டம், திடீர் அவமானம் ஏற்படும்.
சென்ற ஜென்மத்தில் அநியாயமாக ஒருவரின்மேல் ஏற்படுத்திய வழக்கு, கடன், நோயுள்ளவர்களுக்கு உதவாமை ஆகிய காரணங் களால் ஆறாமிட மாந்தி பிரச்சினை ஏற்படுத்துகிறது. இதனால் வழக்கிற்குமேல் வழக்கு, கடன், நோய்த் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். மேலும் முரட்டுப் பிடிவாதத்தால் ஒருவரை அடிமைப்படுத்துவது, அடிப்பது, காயம் ஏற்படுத்து வது, நோய் ஏற்படக் காரணமான உணவுப் பொருள் விற்பனை, நோய் பரவக் காரணமாக இருந்தவர்களுக்கு இந்த கிரக அமைவு ஏற்படும். அதன்பலனாக இனம்புரியாத நோய்கள், கடன், இனம்புரியாத குடும்பப் பிரச்சினைகள், உரிமையை நிலைநாட்ட முடியாமை ஏற்படும்.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை பஞ்சமி திதி நாளில், வைபவ லட்சுமி பூஜை நடத்த, கடன் தொல்லை அகலும்.
வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.
ஏழாம் பாவகம்
ஒவ்வொரு மனிதனின் எதிர்பார்ப்பும் நல்ல வாழ்க்கைத்துணைதான். ஒருவரின் நிம்மதியான வாழ்வென்பது அவரின் வாழ்க்கைத்துணையைச் சார்ந்தே உள்ளது. களத்திர ஸ்தானமான ஏழாமிடத்தில் மாந்தி நிற்கும் தோஷத்தால் நல்ல களத்திரம், சுகவாழ்வு கிடைக்காது. களத்திரத்தை இழந்து அல்லது பிரிந்து வாழவும் நேரும். வியாபாரம் செல்வத்தைக் கொடுக்காது. சுபயோகம், அரசு சன்மானம் பெறுதல் போன்ற யோகம் குறைவு படும். யாத்திரையின்மூலம் நன்மைபெற வாய்ப்பில்லை. நல்ல தொழில் கூட்டாளிகள் அமையமாட்டார்கள். நம்பகத்தன்மை வாய்ந்த நண்பர்கள் கிடைக்கமாட்டார்கள். களத்திர தோஷம் காரணமாக கண்டம் ஏற்படலாம். காமம், காதல் இவற்றில் முழுமையாக வெற்றி கிடைக்காது. களத்திரத்திற்கு ஆரோக்கியக் குறைவு, மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உண்டு. மாந்தி ஏழில் இருந்தால், பல பெண்கள் தொடர்பு களத்திர தோஷத்தை ஏற்படுத்தும். நிரந்தரத் தொழில், போதுமான வருமானம் அமையாது. வியாபாரம் மந்தமாகும். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல கூட்டாளி அமைய மாட்டார்கள். சட்டத்திற்குப் புறம்பான தொழில் ஆர்வம் மிகும்.
திருமண விஷயத்தில் கணவன்- மனைவி ஒருவரையொருவர் ஏமாற்றிய குற்றம், பிறர் மனைவியை விரும்பியது, நம்பிக்கைத் துரோகம், பெண்பித்து போன்ற வினையைத் தீர்க்க எடுத்த பிறப்பென்று கூறலாம்.
இத்தகையவர்களுக்கு நடக்கும் திருமணம் வம்ச விருத்திக்காகவும், தனிமையை நீக்கிக்கொள்வதற்குமானதாகவே இருக்கிறது. அத்துடன் தொழில் கூட்டாளியை ஏமாற்றுதல், சட்டத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்ததால் தோன்றிய வினைப் பதிவாகும். இதன்பலனாகத் திருமண வாழ்வில் குழப்பம், தம்பதியினர் கருத்து வேறுபாட்டுடன் வாழ்வது, கூட்டாளிகளால் ஏமாற்றப்படுதல், பணத்தைப் பறிகொடுத்தல் ஆகிய நிகழ்வுகள் ஏற்படும்.
பரிகாரம்
லட்சுமி நாராயண ஹோமம் திருமணத் தடையை நீக்கும்.
பொருளாதாரத்தில் நலிந்த குடும்பத்திற்கு திருமண உதவிகள் செய்யவேண்டும்.
எட்டாம் பாவகம்
மனித வாழ்வில் எவ்வளவு வசதிகள் இருந்தாலும், அதை அனுபவிக்க நீண்ட ஆயுள் தேவை. எட்டாமிடமான ஆயுள் ஸ்தானத்தில் மாந்தி நிற்க, ஆயுள் குற்றம் மிகுதியாகும். மேலும் ஆயுள்முழுவதும் நீதிமன்ற வழக்குகள், பிரச்சினைகள், காரியத்தடங்கல், தீராதக் கவலை, அவமானம், தவிர்க்கமுடியாத விரயம், வீண் அலைச்சல், செய்யாத தவறுக்கு பழி ஏற்றல், தீராத பயவுணர்வு போன்றவற்றை அனுபவிக்கநேரும். தனவிரயம் அதிகமாக இருக்கும். தாய்- தந்தை உறவில் விரிசல் அல்லது பிரியாமல் பிரிந்துவாழும் நிலை, தந்தைக்கு போதிய வருமானமில்லாத நிலை, காரியத் தடை ஏற்படும். காரியங்களில் ஜெயம் கிடைப்பது மிகமிக அரிது. மன வருத்தம் அதிகமாக இருக்கும். பெற்றோர் அல்லது ஜாதகர் விஷம் மற்றும் ஆயுதத்தினால் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எவ்வளவு வருமானம் வந்தாலும் தரித்திரம் தாண்ட வமாடும். விபத்து, மரணத்திற்கு ஒப்பான கண்டம் ஏற்படும். பங்காளிவகையில் மிகுந்த வில்லங்கமான நிலை ஏற்படும். எடுத்த காரியம் முடியாமல்போகும். பகை, வழக்கை எதிர்கொள்ள நேரிடும். ஜாதகர் பெண்ணானால் மாங்கல்ய பலம் குறையும். கணவனுக்கு உயிர் சேதத்திற்கு ஒப்பான கண்டத்தைத் தரும்.
எட்டாமிட மாந்தியின் வலிமையை ஒரு சிறிய ராமாயணக் கதைமூலம் அறியலாம்.
இலங்கையை ஆண்ட இராவணேஸ்வரன் தனக்குப் பிறக்கும் ஆண் வாரிசு எல்லா நிலைகளிலும் பிரசித்தி பெற்று, பல வெற்றிகளை அடைந்து, தீர்க்கமான ஆயுளுடன் இருக்கவேண்டுமென்று விரும்பினான்.
அதுபோன்ற கிரக நிலவரம் அமையச்செய்து செய்து, இராவணேஸ்வரன் தன் மகன் இந்திரஜித்தை ஜனிக்கச் செய்தான். இந்திரஜித் ஜனித்தபிறகு கணிக்கப்பட்ட ஜாதகத்தில், யாராலும் தோற்கடிக்கப்படமுடியாத வெற்றி வீரனாகத் திகழ்வான் என்ற அமைப்பு இருந்தது. ஆனால், இந்திரஜித்தை வீழ்த்தி, தர்மத்தை நிலைநாட்டவேண்டுமென்ற நியதி இருந்ததால், ராமனால் வதம் செய்யப்பட்ட வாலிக்கு மாந்தி என்ற கிரக அந்தஸ்து கொடுத்து, இந்திரஜித் ஜாதகத்தில் எட்டாம் பாவத்தில் அந்த மாந் தியை இடம்பெறச்செய்து, இந்திரஜித்தின் அழிவுக்கு வழிவகுக்கப்பட்டது. இதனால் இப்பொழுதும் எட்டில் மாந்தி நின்ற ஜாத கருக்கு கூட்டுமரணம் நிகழும் என்ற கருத்து நிலவுகிறது.
கொலை, பொய், களவு, கற்பழிப்பு, குரு நிந்தனை செய்தல், நீதிக்குப் புறம்பாக நடத்தல், மரணப் படுக்கையில் அவதிப்படுபவர் ஆன்மா அடங்க உதவாதது போன்ற குற்றங்களால் எட்டாமிடத்தில் மாந்தி அமர்வு ஏற்படுகிறது.
இதன்காரணமாக ஆயுள் கண்டம், ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிடவேண்டிய வியாதி, ஆயுள்குற்றம் தரும் நோய், உறவுகளால் மன நிம்மதி இல்லாமலிருப்பது, பொருட்கள் தங்காத நிலை, குடும்பத்தில் காலை நேரத்தில் சண்டை, சச்சரவு போன்றவை இருக்கும்.
மேலும், ஜனனகால ஜாதகத்தில் எட்டா மிடத்தில் மாந்தி இருப்பவர்கள், சந்திராஷ்டம நாள் மற்றும் கோட்சார கிரகம், தசாபுக்தி சரியில்லாத காலத்தில் இரவில் தொலைதூரப் பயணம் செய்வது, பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவிர்க்கவேண்டும்.
பரிகாரம்
வருடம் ஒருமுறை ஜென்ம நட்சத்திர நாளில் ஆயுஷ்ஹோமம் நிகழ்த்தவும்.
குலதெய்வத்திற்குப் பாலாபிஷேகம், அர்ச் சனைசெய்து வழிபாடு செய்தல் வேண்டும்.
சித்தர்கள் ஜீவசமாதி வழிபாடு அல்லது குருபூஜை செய்யவேண்டும்.
தேய்பிறை அஷ்டமி திதியில் காலபைரவ வழிபாடும் நல்ல பலன் தரும்.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)
செல்: 98652 20406