அஷ்டம ஸ்தானம் எனும் எட்டாமிடம் அதிர்ஷ்டம் என்றால் என்ன? அதை அடைவது எப்படி? நாம் விரும்பும் போது வருவது அதிர்ஷ்டமா? அல்லது எதிர்பார்க்காமல் தேடிவருவது அதிர்ஷ்டமா? அதிர்ஷ்டத்தை ஜாதகத் தால், வாஸ்துவால் அதிர்ஷ்ட எண்களால், அதிர்ஷ்டக் கற்களால் அழைக்க முடியு மா? தேடும் அனைவருக் கும் கிடைக்காமல் ஒரு சிலரின் வாழ்வில் மட்டும் முகம்காட்டுவது ஏன் என்ற அனைத்து கேள்வி களுக்கும் ஒரே பதில் தருபவர் அஷ்டமாதிபதி. ஒருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டுக் குரியவரே அஷ்டமாதிபதி யாவார். அந்த அஷ்டமாதி பதியும் அஷ்டமத்தில் நின்ற கிரகங்களும் ஒருவருக்கு யோக, அவயோகத்தைத் தருகின்றன.
எட்டாம் பாவகத்துடன் சம்பந்தம்பெறும் கிரகங் களின் காரகத்துவம் சார்ந்த பயம் இருந்துகொண்டே இருக்கும். ஒருவருக்கு பிறரின் கோபத்தால் ஏற்படும் சாபத்தைக் குறிக்குமிடம் 8-ஆம் பாவகமாகும். ஒருவருடைய ஜாதகத்தில் 8-ஆம் பாவகாதிபதி, 8-ல் நின்ற கிரகங்களே ஒருவருக்கு எதிர்பாராத துன்பம், அவதூறு களைத் தருபவர்கள்.
எட்டாமிடத்தின்மூலம் ஆயுள் மட்டுமல்ல; தீராத நோய், விபத்து, கண்டம், அவமானம், வறுமை, மன நிம்மதியின்மை, தற்கொலை எண்ணம், கோர்ட், கேஸ் பிரச்சினை போன்றவற்றை அறியமுடியும்.
ஒருசிலர் தானுண்டு- தன் வேலையுண்டு என்று இருந்தாலும் வம்பு, பொய்வழக்கு, அவமானம், கண்டம், விபத்து தேடிவருவதற்கு அஷ்டமாதிபதியே காரணம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/money_30.jpg)
இன்று உலகம் முழுவதும் பண இழப்பு பல்வேறு நுதன முறையில் நடந்துவருகிறது. குறிப்பாக பணத்தைப் பன்மடங்காக மாற்றித் தருவது. அதாவது ஒரு லட்சம் கொடுத்தால் மூன்று லட்சம் திரும்பத் தருகிறேன் என்று கூறுபவர்களிடம் பணம் கொடுத்து ஏமாறு கிறார்கள். இதில் படித்து நல்ல அரசு உத்தி யோகத்தில் இருப்பவர்கள், மிகப்பெரிய தொழிலதிபர்கள்தான் அதிக அளவில் பணம் கொடுத்து ஏமாறுகிறார்கள். பணத்தை கொடுத் தவர்கள் அசல் வந்தால்கூட போதுமென்று புலம்புகிறார்கள். எந்த ஆதரமும் இன்றி கொடுத்த பணம் எப்படி வரும்?
இன்று உலகில் நிலவும் பண வீக்கத்தில் அதிக பணத்தை குறைந்த வட்டிக்குத் தர முடியுமா? ஒருவர் பணத்தை இழக்கிறார் என்றால் எட்டாம் பாவகம் வலிமையாக இயங்குகிறது என்று பொருள். 5-ஆம் பாவகம் என்பது ஆசை. 8-ஆம் பாவகம் என்பது பேராசை. 5-ஆம் பாவகம் என்பது. மதிநுட்பம். 8-ஆம் பாவகம் என்பது மதியை இழத்தல். சொல்புத்தி, சுயபுத்தி இல்லாத நிலை.
புதிய தொழில் முயற்சிக்காக, தொழிலில் பங்குதாரராக பணம் கொடுத்து ஏமாறுவது வீடு, மனை வாங்க இடைத் தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறுவது; அரசு உத்தி யோகம் வாங்கித் தருகிறேன் என்று கூறுபவர் களிடம் பணம் கொடுத்து ஏமாறுவது, தொழிலுக்காக குறைந்த வட்டிக்கு அதிகம் பணம் கிடைக்குமென இடைத்தரகர்களை நம்பி பெரிய பணத்தை முன்பணமாக ATM, Debit Card, Credit Card கடன் வாங்கிக் கொடுக்கிறார் கள். ஒரு கடனை வாங்கி மற்றொரு கடனை அடைப்பது;
மருத்துவத் தேவை, வீட்டில் சுப நிகழ்விற்கு என அவசரத் தேவைக்கு பரிதாபப்பட்டு கொடுத்த பணம் வராமல் நின்றுவிடும். ஆபங, உங்க்ஷண்ற் ஈஹழ்க், ஈழ்ங்க்ண்ற் ஈஹழ்க் மூலம் பண இழப்பு- இதுபோன்ற பல்வேறு வழிமுறைகளில் பணம் பறிக்கப்படுகிறது. மேலும் ஒரு சாரருக்கு வரவுக்குமேல் செலவு வந்துகொண்டே இருக்கும்.
மேலே கூறிய இந்த முறையில் சில லட்சம் முதல் கோடிகள்வரை பணம் கொடுத்து வேதைனையில் இருப்பவர்களே அதிகம். எந்த ஆதாரமுமின்றி பல லட்சம் பணத் தைப் பறிகொடுத்தவர்கள் வெளியில் சொல்ல முடியாமல், அடுத்த அடி எடுத்துவைக்க முடியா மல் நடைப்பிணமாக காலம் தள்ளுகிறார்கள். பெரிய பணம் கொடுக்கும்போது சுய ஜாதகப் பரிசோதனை மிக அவசியமானதாகும்.
ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலிருந்து 6, 8, 12 ஆகிய மூன்று பாவகங்களும் துர் ஸ்தானங் கள் அல்லது மறைவு ஸ்தானங்களாகும். ஒருவர் கர்மவினைப்படி அனுபவிக்கவேண்டிய துன்பங்களைப் பரிபூரணமாகத் தருவது இந்த மறைவு ஸ்தானங்களே. 6-ஆம் பாவகம் கடனைக் குறிக்கும். 8-ஆம் பாவகம் இழப் பைக் குறிக்கும். 6-ஆம் பாவகக் கடனைத் தீர்க்க முடியும். 8-ஆம் பாவகக் கடனைத் தீர்ப்பது சுலபமல்ல.
இன்றைய காலகட்டத்தில் பிரபஞ்ச சக்தியைவிட மனிதனை இயக்கும் சக்தியாக இருப்பது பணம். பணம் மனிதனைப் படைத் ததா? மனிதன் பணத்தைப் படைத்தானா என்று எண்ணும் அளவிற்கு நாளுக்கு நாள் பணத் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பணத்தால் சாதிக்க முடியாத செயலே கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு ரூபாய் காசாக இருந்தால்கூட உழைத்தால் மட்டுமே கிடைக்கும். பணம் சம்பாதிப்பது எளிதான செயலல்ல என்ற நிலை இருக்கும் போது எதிர்பாராத பண இழப்பு சிலருக்கு வாழ்க்கைப் பாதையை தடம்புரட்டி விடுகிறது. 8-ஆமிடம் அசுப வலுப்பெற்றால் போலீஸ், கோர்ட், கேஸ், கட்டப் பஞ்சாயத்து, நஷ்டம், அவமானம், தற்கொலை எண்ணம், சிறை தண்டனை உண்டாகும். இவர்களில் பெரும்பான்மையோர், ஷேர், சீட்டு, ரேஸ், தவறான நடவடிக்கைகள் மூலம் பணத்தை தொலைத்துக் கடனாளியானவர்கள்.
8-ஆமிடத்தில் நின்ற கிரகம் தனது சமசப்தமப் பார்வையால் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால், 8-ஆமிடம் மிகவும் வலுப்பெற்ற ஜாதகர்கள் முரட்டுப் பிடிவாதம், முன்கோபம், கடுமையான வார்த்தை களால் பிறரை நோகச்செய்யும் இயல்பு உடையவர்கள். பெண்கள் ஜாதகத்தில் அஷ்ட மாதிபதியே. மாங்கல்ய பலம் பற்றியும் தெரிவிப்பவர். 8-ஆமிடத்தில் நிற்கும் பாவ கிரகங்கள் மட்டுமல்ல; சுப கிரங்களும் ஜாத கரை நிலைகுலைய வைக்கும்.
8-ஆமதிபதி சுபவலுப் பெற்றால் லாட்டரி, ரேஸ், வாரிசு இல்லாத சொத்து போன்ற விபரீத ராஜயோகமும் உண்டாகும்.ஒருவர் ஜாதகத் தில் அஷ்டமாதிபதி சுபப்பலன் வழங்குவாரா அல்லது அசுபத்தை ஏற்படுத்துவார என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுவது இயல்பு. அஷ்டமாதிபதிக்கு பாதகாதிபதி சம்பந்தம் இருந்தாலும், 6, 12-ஆம் அதிபதியின் சம்பந்தம் இருந்தாலும் அஷ்டமாதிபதி உச்சகட்ட பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துவார். லக்ன ரீதியான சுப கிரகத்தின் சம்பந்தம் ஏற்படும் போது சிறு பாதிப்பு ஏற்படும். கஷ்டங்கள் மற்றும் பிரச்சினையிலிருந்து மீளமுடியும். என் கணிப்பில் திருமணத்திற்குபின் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டால் அஷ்டமாதிபதி வலுவாக உள்ளார் என்று பொருள்படும்.
திருமண வாழ்க்கை
திருமணத்திற்குமுன்பு கட்டுக்கடங்காத காளையாக சுற்றிவந்த பலர் திருமணத்திற் குப்பிறகு நன்றாக சம்பாதித்து மனைவி, குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்வதைப் பார்க்கிறோம். அதைத்தான் மனைவி, வந்த நேரம் என்று கூறுகிறோம். வாலிப வயது முதல் திருமணமாகும்வரை நிலையான வேலையில்லாமல், தொழில், வருமானமில்லாமல் இருக்கும் ஒருவருக்கு திடீரென திருமணமானபிறகு தொழிலும் வருமானமும் முன்னேற்றமும் ஏற்படுகிறது.
ஒரு மனிதனுக்குப் பொருளாதார வளர்ச்சி யைக் கொடுப்பதில் பணபர ஸ்தானம் முன்னிலையில் இருக்கிறது. அதன்படி பணபர ஸ்தானங்களான 2, 5, 8, 11-ஆம் பாவகங்கள் 7-ஆமிடத்துடன் சம்பந்தம் பெறும். மனைவி வந்தபிறகு பண வளர்ச்சி பல மடங்காக பெருகும். ஏழுக்குடையவன் எட்டில் இருக்கும் போது வாழ்க்கைத் துணையால் திருமணத் துக்குப்பின் பொருளாதார நிலை உயரும். 7-க்கு 2-ஆமிடம் என்பதால் மனைவியால் விபரீத ராஜயோகம் ஏற்படும். அடிப்படை வசதி இல்லாதவர்களுக்கு வீடு, கார், பங்களா, நகை, தங்கம், வெள்ளி, பணம், சீர்வரிசை என பெரும் பொருளுடன் மனைவி அமைவாள்.
8-ல் நிற்கும் கிரகம் 2-ஆமிடத்தைப் பார்ப்ப தால் தனது வாய்ஜாலத்தால் மனைவியை மகிழ்வித்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் யோகம் தொடரும். அதாவது மனைவிக்கு கூஜா தூக்கவேண்டும். மனைவி சொல்லே மந்திரம்; மீதியெல்லாம் தந்திரம் என்று, குதிரைக்குக் கடிவாளம் போட்டதுபோல் மனைவியின்பின் செல்லும்போது வாழ்க்கை வசந்தமாகும்.
மனைவியைத் தவறான வார்த்தைகளால் வசைபாடினால், முதல் திருமண பந்தத்தில் விவாகரத்து, கோர்ட், கேஸ் என அழைந்து மன நோயாளியாவார்கள். இது வலுவான இரண்டு தார யோக அமைப்பாகும். நிலையான நண்பர்கள் அமையமட்டார்கள். இவர்கள் கூட்டுத் தொழிலைத் தவிர்ப்பது நல்லது. தம்பதிகள் சண்டை நீதிமன்றம்வரை சென்று அவமானத்தை அதிகப்படுத்தும்.
இரண்டாவது குழந்தை பிறந்தபிறகு பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்தா லும், அஷ்டம ஸ்தானம் அதிர்ஷ்டமாக செயல் படுகிறதென்று புரிந்துகொள்ள வேண்டும்.
எட்டாம் பாவகம் என்பது முதலீடு. தனது பிற்கால வாழ்விற்காகவும், தனது சந்ததியினருக்காகவும் சேர்த்துவைக்கும் அனைத்தும் முதலீடு. இதிலும் ஒரு சூட்சம ரகசியம் உள்ளது. ஒருவர் அதிக முதலீட்டில் தொழில் செய்தாலும் எட்டாம் பாவக வலிமை வேண்டும். போட்ட முதலீடு பத்திரமாக வீடுவந்து சேர்ந்தால் எட்டாம் பாவகம் வலிமை; தொழில் முதலீட்டை ஒருவர் இழந்தால் எட்டாம் பாவகம் வலிமையில்லை.
ஜோதிடத்தில் பல்வேறு சூட்சுமங்கள் உள்ளது. என்ன வாசகர்களே குழப்பமாக உள்ளதா? நீங்கள் விழிப்பது போன்ற உணர்வு என்னுள் எழுகிறது. பத்தாமிடம் என்பது தொழில் ஸ்தானம். பத்தாமிடத் திற்கு லாப ஸ்தானம் எட்டா மிடம்தானே. ஒரு ஜாதகத்திற்கு பலன்சொல்ல பராம்பரிய முறைப் படி பல்வேறு முறைகள் உள்ளன.
மல்டி மில்லியனர்கள் ஜாதகத்தில் எட்டாமிடம் வலுவாக இருக்கும். அவர்களின் முதலீடுகள் பல மடங்காகப் பெருகும். அவர்களின் வாழ்க்கையும், முதலீடும் யாரும் புரிந்துகொள்ளமுடியாத வண்ணம் மறைபொருளாக, ரகசியமாக இருக்கும்.
நான் எப்பொழுதும் எட்டாம் பாவகத்தைப் பலப்படுத்த எந்த பரிகாரமும் சொல்வதில்லை. எட்டாமிடம் என்பது என்றுமே மதில்மேல் பூனை. ஆனால் வழிபாடுகள் எப்பொழுதும் ஜாதகரைக் காக்கும் .
பரிகாரம்
செல்வத்திற்கு அதிபதியாகக் கருதப்படுபவர் குபேரர். குபேரர் ஒரு தீவிரமான சிவபக்தர். சிவனை வணங்கி செல்வங்கள் அனைத் தையும் பெற்றவர். மேலும் மகாலட்சுமி தாயாருக்கு ஐஸ்வர்ய லட்சுமி என்ற ஸ்தானத்தை வழங்கியவரும் சிவபெருமானே. அதனால்தான் சிவபெருமானை ஐஸ்வர்யேஸ்வரர் என்று அழைக் கிறோம். இவரை நாம் முறையாக வழிபடுவதன் மூலம் நமக்கு அவர் செல்வங்களையும், ஐஸ்வர் யத்தையும் வாரி வழங்குவர்.
தொடரும்....
செல்: 98652 20406
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-11/money-t_1.jpg)