துலாம்

துலாம் ராசியில் செவ்வாய் இருந்தால், கணவன் கலைத்துறையில் ஆர்வமுள்ளவன். கவர்ச்சியான- அழகான தோற்றமுடையவன். ஆடை அலங்காரப்பிரியன்.

பொன், வெள்ளி, அழகுப் பொருட்கள், கலைப் பொருட்கள், சொகுசுப் பொருள், ஆடம்பர, அலங்காரப் பொருட்கள், வட்டி, தரகுத்தொழில், வங்கிப் பணி, நிதி நிறுவனம், நீதித்துறை, இசை, நாடகம், நடிப்பு, பாட்டு, கேளிக்கை விடுதி, அழகு நிலையம், திருமண மண்டபம், சினிமா தியேட்டர் தொழில் செய்வார்.

ff

Advertisment

கணவன் இருக்கும் ஊர் மேற்கு சார்ந்த திசையில், பத்து மைல் தொலைவிற்குள் இருக்கும். கணவன் இருக்கும் வீடு கிழக்கு- மேற்கு வீதியில், தெற்கு- வடக்கு முன்வாசல் உள்ள வீடு. அந்த ஊர் ஒரு வியாபார ஸ்தலமாக இருக்கும்.

அழகு, மலர், அன்பு, வாசனை, சந்தோஷம், கல்யாணம், சுகம், காமம், கவிதை, இனிமை, இசை, ராகம், செல்வம் போன்றவற்றைக் குறிக்கும் பெயரை உடையவன்.

விருச்சிகம்

விருச்சிகத்தில் செவ்வாய் இருந்தால் முன்கோபம், அவசரபுத்தி இருக்கும். உரத்த குரலில் பேசுவான். பொறுமை இராது. ஆதிக்க குணமுள்ளவன். இரும்பு, நெருப்பு, சுரங்கம், விவசாயம், மின்னியில் துறை, பொறியியல், ஆன்மிகம், பூமி தொழில், தாதுப் பொருட்கள், உலோகங்கள் ஆராய்ச்சித்துறை, கருவிகள் சம்பந்தமான தொழில் செய்வான்.

தனுசு

தனுசு ராசியில் செவ்வாய் இருந்தால் கணவன் சாந்தமானவன். தர்ம நியாயம் அறிந்தவன். பொறுமையானவன். அனைவரிடமும் அன்பாக இருப்பான். குடும்பப் பாசம் உள்ளவன். அண்டியவரை ஆதரிப்பவன். கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவன். சொந்தத்திலும் அமையலாம். காட்டிலாக துறை, மர வியாபாரம், வங்கித் தொழில், சட்டம் மற்றும் நீதித்துறை, அறநிலையத்துறை, நிதித்துறை, கல்வித்துறை, ஆயுத சாலை, போர் பயிற்சி போன்றவற்றில் உத்தியோகம், தொழில் செய்வான். கணவனின் ஊர் கிழக்கு சார்ந்த திசையில் மூன்று மைலி-ருந்து 300 மைல் தொலைவிற்குள்கூட இருக்கலாம். கிழக்கு- மேற்கு வீதியில், தெற்கு- வடக்கு முன்வாசலுள்ள வீடு கணவன் வீடு. குரு, மத்தலைவர்கள், புண்ணிய ஸ்தலங்களின் பெயர், ஆலயங்களின் பெயர், விநாயகர், சித்தர்கள், ரிஷி, முனிவர்கள், அமைதி, குணம் ஆகியவற்றைக் குறிக்கும் பெயரை உடையவன்.

மகரம்

மகரத்தில் செவ்வாய் இருந்தால் உயர்ந்த நிலையில் இருப்பான். நல்ல குணமுள்ளவன். தொழிற்சாலை, பொறியியல்துறை, உணவு சம்பந்தப்பட்ட தொழில், சுரங்கத் தொழில், கட்டடம் சம்பந்தமான தொழில் செய்வான். கணவனின் ஊர், தெற்கு சார்ந்த திசையில் முப்பது மைல் தூரத்திற்குள் இருக்கும். கணவன் வீடு வடக்கு- தெற்கு வீதியில், கிழக்கு- மேற்கு முன்வாசல் உள்ள வீடு. ராம தேவதைகள், காவல் தெய்வங்கள், அடிமை, தாசன் போன்றவற்றைக் குறிக்கும் பெயரை உடையவன்.

கும்பம்

கும்பத்தில் செவ்வாய் இருந்தால் நல்ல அறிவுள்ளவன். பிறருக்கு ஆலோசனை, வழிகாட்டுதல் செய்வான். கவர்ச்சியான தோற்றமுடையவன். ஆசிரியர், ஆராய்ச்சியாளர், நிர்வாகம், பொருள் விற்பனை, விமானத்துறை, விண்வெளித்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை, தொல்பொருள்துறை, பொறியியல், சுரங்கம், வெடிபொருட்கள் என இதுபோன்ற துறைகளில் தொழில் செய்வான். கணவன் இருக்கும் ஊர் மேற்கு திசை யில் முப்பது மைல் தூரத்திற்குள் இருக் கும். கணவன் இருக் கும் வீடு கிழக்கு- மேற்கு வீதியில் தெற்கு- வடக்கு முன் வாசல் உள்ள வீடு. கிராம தேவதை, கருப்பு தெய்வப் பெயர்கள், அடிமை, தாசன், அன்னிய தேசத்துப் பெயர்கள், பொருள் இல்லாத பெயர்கள் என இவை குறிப்பிடும் பெயரை உடையவன்.

மீனம்

பெண்களின் ஜாதகத்தில் மீனத் தில் செவ்வாய் இருந்தால் கணவன் நல்லகுணம், ஆன்மிக ஈடுபாடு, சலனபுத்தி, நம்பிக்கை சார்ந்த வாழ்க்கை வாழ்பவன். கல்வித்துறை, மருத்துவம், நிதித்துறை, நீதித்துறை, தூதரகம், கடற்படை, நீர்நிலை கள், வங்கிப்பணி, ஆன்மிகம், ஆலயப்பணி போன்ற தொழில்களைச் செய்வான். சொந்தத்திலும் வரன் அமையலாம். கணவனின் ஊர் வடக்கு சார்ந்த திசையில், மூன்று மைல் முதல் 300 மைல் தொலைவிற்குள் இருக்கும். கணவன் வீடு வடக்கு- தெற்கு வீதியில், கிழக்கு- மேற்கு நோக்கி முன்வாசல் இருக்கும். குரு, ரிஷி, சித்தர்கள், ஞானி, மகான் கள், மதத்தலைவர், விநாயகர், அனுமன், புண்ணிய ஸ்தலங்கள், ஆலயங்கள், அமைதி, குணம் ஆகியவற்றைக் குறிக்கும் பெயரைக் கொண்டிருப்பான்.

செல்: 99441 13267