Advertisment

சூழ்நிலைகள் மாறுமா சூரிய கிரகணத்தால்! -எஸ். விஜயநரசிம்மன்

/idhalgal/balajothidam/circumstances-will-change-due-solar-eclipse-s-vijayanarasimhan

சூரிய, சந்திர கிரகணங்கள் உலகியல் ஜோதிடத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின் றன. அந்த தருணங்களில் வெளிப்படும் சக்தி யானது மிகுந்த உச்ச சக்தியாக பரிணமிப்ப தோடு அல்லாமல், கிரகணம் தெரியக் கூடிய சம்பந்தப்பட்ட பகுதிகளில் பிரபஞ்சத் தின்மீதான- இயற்கையின்மீதான தாக்கங் களும் சில காலங்களுக்குத் தொடர்கின் றன. சந்திர கிரகணத்தினால் ஏற்படும் தாக்கங் களானது உடனடியாக பாதிப்புகளை அளித்தாலும், சூரிய கிரகணத்தால் ஏற்படும் பாதிப்பு சில மாதங்கள் தாமதமாகவே ஏற்படுகிறது அல்லது உணரப்படுகிறது.

Advertisment

கிரகணத்தைப்பற்றி முனி சிரேஷ்டர் வராகமிகிரர் குறிப்பிடுகையில், ‘ஒளி கிரகங் களான சூரிய, சந்திரர்கள் கிரகணமடையும் காலங்களில் அந்த நாட்டின் அரசனுக்கு அபாயம் ஏற்படுவதோடு, சரத் ருது என்று சொல்லப்படும் இலையுதிர்க் காலத்தே பயிர்வகைகளும் அழிந்து நாசமாகும் நிலைகள் ஏற்படுகின்றன. இதில் பகுதி நேர கிரகணங்களும், முழு நேர கிரகணங்களும் ஏற்படுவதுண்டு. முழு நேர கிரகணமாகி, அசுப கிரக பார்வையும் ஏற்பட்டால் கொள்ளை நோய் மற்றும் இயற்கை சீற்றங்களால் பேரழிவு ஆகியவை கிரகணம் தெரியக்கூடிய உலகின் சம்பந்தப்பட்ட பகுதிகளில்- பாகங்களி

சூரிய, சந்திர கிரகணங்கள் உலகியல் ஜோதிடத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின் றன. அந்த தருணங்களில் வெளிப்படும் சக்தி யானது மிகுந்த உச்ச சக்தியாக பரிணமிப்ப தோடு அல்லாமல், கிரகணம் தெரியக் கூடிய சம்பந்தப்பட்ட பகுதிகளில் பிரபஞ்சத் தின்மீதான- இயற்கையின்மீதான தாக்கங் களும் சில காலங்களுக்குத் தொடர்கின் றன. சந்திர கிரகணத்தினால் ஏற்படும் தாக்கங் களானது உடனடியாக பாதிப்புகளை அளித்தாலும், சூரிய கிரகணத்தால் ஏற்படும் பாதிப்பு சில மாதங்கள் தாமதமாகவே ஏற்படுகிறது அல்லது உணரப்படுகிறது.

Advertisment

கிரகணத்தைப்பற்றி முனி சிரேஷ்டர் வராகமிகிரர் குறிப்பிடுகையில், ‘ஒளி கிரகங் களான சூரிய, சந்திரர்கள் கிரகணமடையும் காலங்களில் அந்த நாட்டின் அரசனுக்கு அபாயம் ஏற்படுவதோடு, சரத் ருது என்று சொல்லப்படும் இலையுதிர்க் காலத்தே பயிர்வகைகளும் அழிந்து நாசமாகும் நிலைகள் ஏற்படுகின்றன. இதில் பகுதி நேர கிரகணங்களும், முழு நேர கிரகணங்களும் ஏற்படுவதுண்டு. முழு நேர கிரகணமாகி, அசுப கிரக பார்வையும் ஏற்பட்டால் கொள்ளை நோய் மற்றும் இயற்கை சீற்றங்களால் பேரழிவு ஆகியவை கிரகணம் தெரியக்கூடிய உலகின் சம்பந்தப்பட்ட பகுதிகளில்- பாகங்களில் ஏற்படும் என்றும் குறிப்பிடுகிறார்.

Advertisment

s

இம்முறை சூரிய- சந்திர கிரகணங்கள் இரண்டுமே சர ராசிகளில் நிகழ்வதால், அதன் பாதிப்புகளும் சரவெடிபோல் விரைவாகவும், வேகமானதாகவும் நிகழும். சூரிய கிரகணம் இம்மாதம் அக்டோபர் 25-ஆம் நாள் துலா மாதத்தில் நிகழ்கிறது. அத்தருணத்தில் அசுபரான சனியின் தசம பார்வையும் அதன்மீது விழுகிறது. எனவே, மேலே சொல்லப்பட்ட முனிவரின் கூற்றுப்படி பாதிப்புகளும் அதிகமாகவே இருக்கும். மேலும், குறுகிய இடைவெளி காலத்தில் சூரிய- சந்திர கிரகணங்கள் ஏற்பட்டால் மக்கள் நியாய தர்ம வழிகளிலிருந்து விலகிச் செல்பவர்களாகவும், குணமற்றவர்களாகவும், தம்பதிகள் கருத்து வேற்றுமைகளால் சண்டையிட்டுக்கொண்டு முட்டாள்களாகவும் திகழ்வார் கள் என்றும் குறிப்பிடுகிறார்.

பண்டைய ஜோதிட நூல்களில், மிக நெருக்கமான காலங்களில் அல்லது அரைமாத கால இடைவெளிகளில் ஏற்படும் சூரிய- சந்திர கிரகணங்கள் போர் அழிவுகளுக்கான நிமித்தமாகக் கொள்ளப்படுகிறது. மேலும், வணிக விலையிறக்கப் போக்கு, பின்னடைவு, சரிவு, விலை மந்தம், வியாபார சுணக்கம் ஆகியவற் றால் பொருளாதார மந்த நிலை, தொழில் பின்னடைவு ஆகியவையும் ஏற்படலாம்.

இரண்டாவது உலகப் போர் நிகழ்ந்த காலத்தே சர ராசிகளில் நான்கு அசுப கிரக இணைவுகள் காணப்பட்டதைப்போலவே தற்போது மூன்று அசுப கிரகங் கள் சர ராசியில் இருப்பதோடு, செவ்வாயும் மிதுனத்தில் இருந்து, (இரு கிரகண நிகழ்வு களின் போதும்) சனியைப் பார்வை செய்கிறார்.

பிருஹத் சம்கிதாவில், மிதுனம், துலாம், கும்பம் ஆகிய காற்று ராசிகளில் கிரகணம் ஏற்படும்போது சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்களும், பிற மாநிலங்களுடனான பிரச்சி னைகளும் எழலாம் என குறிப்பிடப்பட் டுள்ளது. பகுதி சூரிய கிரகணம் சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 8-ஆம் தேதி (25-10-2022) அன்று சுவாதி நட்சத்திரத்தில் ஆரம்ப மாகும் நேரம்- மாலை- 05 - 14 மணிமுதல் அஸ்தமன வேளையில் கிரகணம் முடியும் நேரம்- மாலை 05 - 54 மணி (சூரிய அஸ்தமனம்) வரை. மொத்த கிரகண நேரம் 40 நிமிட மாகும். எனவே, இதன் பாதிப்பு சுமார் எட்டு மாதங்களுக்கு இருக்கும். இந்த கிரகணம் நமது நாட்டில் சில பகுதிகளில் ஆரம்பம் மற்றும் மத்திமம் மட்டும் தென்படும். கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள் சித்திரை, சுவாதி, விசாகம், சதயம் மற்றும் திருவாதிரை ஆகியவையாகும். இந்த நட்சத்திரக்காரகர்கள் சாந்தி செய்து கொள்ளவேண்டும். ரிக் வேத சம்கிதா 5-ஆவது மண்டலம், 40-ஆவது சூத்திரத்தில் சூரிய- சந்திர கிரகணங்களைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இராகு- கேதுவால் ஏற்படும் இவ்விளைவுகளுக்குப் பரிகாரமாக தெய்வ வழிபாடுகளுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

கிரகண ராசியான துலாத்துக்கு அதிபதி யான சுக்கிரன் அஸ்தமனம் அடைத்துள் ளார். அவர் லக்னத்துக்கு 8-ல் உள்ளார்.

அவர் சனியின் பார்வையாலும் பாதிப்படைந் துள்ளார். எனவே, பெரிய விபத்துகள், மரணங்கள், ரயில் மற்றும் விமான விபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படலாம். அரசு கவிழ்தல், முக்கிய பிரமுகர் களின் மரணம் (சுக்கிரன், சந்திரன் இணைவு- பெண் பிரமுகர்கள்) ஆகியவையும் நிகழலாம். அட்டமத்தில் ஒளிகிரகங்களின் இணைவு மத்திய- மாநிலத் தலைமை களுக்கு அசம்பாவிதங் களையோ அல்லது அவக்கேடான நிலைகளையோ ஏற்படுத்தலாம். ராகு மற்றும் சுக்கிரன் சாரப் பரிவர்த்தனை பெற்று, ராகு தன பாவத்தில் அமர்ந்துள்ளதால் பொருளாதார பாதிப்பு இருக்கத்தானே செய்யும். தனகாரகன் குருவும் சனியின் பார்வை பெறுகிறாரே?

அரசின் பொருளாதார திட்டங் கள் மக்களை பாதிக்கும். முகஸ்துதி மற்றும் அரசியல் வாதிகளை புகழும் குணம் அதிகரிக்கும். மக்களின் செலவினங்கள் அதிகரித்து நலிவடைவர்.

சுக பாவத்தில் அங்காரகன் அமர்ந்து, தீ விபத்துகள், பூகம்பம், சுரங்க விபத்துகள் ஆகியவற்றுக்கு வழிவகுப்பதோடு, மண், மனை, தரகு வியாபாரங்களில் ஆதாயங்கள் குறையும். உச்ச புதனால் ஆறுதல் தரும் விஷயம் என்னவென்றால், வணிக ஒப்பத்தங்கள் மற்றும் ராஜதந்திரங்கள் வெற்றியடையும். புதனும், குருவும் முறையே பத்ர மற்றும் ஹம்ச யோகத்தை அமைத்துத் தருவதால் மக்களின் சேமிப்புப் பழக்கம் அதிகரிக்கும்.

இந்த கிரகணமானது நம் நாட்டில் டெல்லி, மதுரா, உஜ்ஜயினி, வாராணாசி, கொல்கத்தா, பெங்களூரு, தமிழ்நாட்டில் சென்னை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, செங்கோட்டை, கோவில்பட்டி, தென்காசி, குற்றாலம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வெளிநாடுகளான மாஸ்கோ, காபூல், இஸ்லாமாபாத், பாக்தாத், டெஹ்ரான், ஐரோப்பாவின் சில பகுதிகளிலும், ஆப்பிரிக்கா வடகிழக்குப் பகுதி, மேற்கு ஆசியா, ஆகிய நாடுகளிலும் தெரியும்.

கிழக்காசியா, ஆஸ்திரேலியா, வட மற்றும் தென்னமெரிக்கா, ஆப்பிரிக்காவின் வடகிழக்குப் பகுதி ஆகிய நாடுகளில் தெரியாது. சந்திர கிரகணத்தின் விளைவு களைப் பின்னொரு கட்டுரையில் காண்போம்.

செல்: 97891 01742

bala281022
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe