நடக்கவிருப்பதை அறிந்து கொள்ள ஜோதிட வழிமுறைகள் பல உள்ளன. அதில் சோழி ஆரூடமும் ஒன்று.
12 சோழி அல்லது பலகரை (பள்ளம் உள்ளது) எடுத்துக்கொள்ளவேண்டும். வீட்டில் ஆறு வயதிலிருந்து 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளிலிருந் தால் இதனை இலகுவாகச் செய்யலாம். இஷ்ட தெய்வத்தை மனதில் தியானித்து, குழந்தைகளைக்கொண்டு சோழியை உருட்டும்படி செய்யவேண்டும். அவ்வாறு உருட்டப்பட்டவற்றில் எத்தனை நிமிர்ந்து நிற்கின்றன என்பதைக்கொண்டு பலனை அறியலாம். 12 சோழிகளுக்கான பலன்கள் கீழே தரப்பட்டுள்ளன.
ஒரு சோழி நிமிர்ந்திருந்தால்
நினைத்த காரியம் முடிவாகும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மருந்துண்ண பிணிகள் மறையும். பால் பாக்கியங்கள் ஏற்படும். பெண்களால் செல்வம் பெருகும். உறவினர்கள் வருவார்கள். முருகன் துணைநிற்பான்.
இரண்டு சோழி நிமிர்ந்திருந்தால்
நினைத்த காரியம் சற்று தாமதமாக முடியும். நோயானது ஒரு மாதத்தில் குணமாகும். தூரதேசம் சென்றவர் ஓராண்டுக்காலத்தில் திரும்புவார். வழக்குகள் வெற்றியுடன் முடியும். திருப்பதி வேங்கடாசலபதியை நினைத்தால் எண்ணியவை ஈடேறும்.
மூன்று சோழி நிமிர்ந்திருந்தால்
முயற்சித்த காரியம் குறையாக முடியும். கைப்பொருள் விரயமாகி கஷ்டங்கள் நேரிடும். செய்தொழிலில் சச்சரவு ஏற்படும். வார்த்தைகள் பயனற்றுப் போகும். பிள்ளைகளும் பகையாவார்கள். நண்பர்களால் கலகங்கள் வரும். குலதெய்வத்தை சீக்கிரமாய் பூஜை செய்தால் துன்பங்கள் தீரும். துர்க்கா பூஜையும் நல்லது.
நான்கு சோழி நிமிர்ந்திருந்தால்
நினைத்த காரியங்கள் நிச்சயமாய் வெற்றியாகும். மனம்போல மேலோர் உதவி கிட்டும். தொழிலில் விருத்தி ஏற்பட்டு, செல்வச்சேர்க்கையும் உண்டாகும். மாடு, மனை சேர மகாலட்சுமி அருளும் உண்டு. எதிர்பட்ட கண்டம் எளிதில் விலகும். தீர்க்கமான வயதும் உண்டு. திரிமூர்த்தி களின் அருளுமுண்டு. திருச்செந்தூர் முருகனைப் பூஜித்தால் எதிலும் வெற்றி காணலாம்.
ஐந்து சோழி நிமிர்ந்திருந்தால்
நினைத்த பொருள் தேடி வந்துவிடும். பயணத்தில் பொன், பொருள் சேரும். நோயும் போகும். வீட்டைவிட்டுப் போன நாற்கால் ஜீவன் வந்துசேரும். ஆண்டவன் அருள் எப்போதும் உண்டு.
ஆறு சோழி நிமிர்ந்திருந்தால்
நினைத்த செயல் நடவாது. பேயினால் மனையாளுக்கு உபாதை உண்டாகும். போகும் பாதையெல்லாம் துன்பம் நேரும். வருத்தம் அதிகமாகத் தோன்றும். வீட்டைவிட்டு வெளியேறும் சூழலும் வரும். ஆஞ்சனேயர் மந்திரத்தைச் சொன்னால் அல்லது ஆஞ்சனேயரை வணங் கினால் துன்பங்கள் அகலும்.
ஏழு சோழி நிமிர்ந்திருந்தால்
ஏழுமலையான் ஆசியுண்டு. எண்ணிய பொருள் யார் மூலமேனும் கிடைத்திடும். சண்டையுடன் போனவர் சிரித்துக்கொண்டே வருவார். ஒரு மாதத்திற்குள் வீட்டில் மகிழ்ச்சியான சம்பவம் நடக்கும். புண்ணியத்தின் பலனால் புத்திர பாக்கியம் ஏற்படும். செய்தொழிலில் வெற்றியுண்டு; லாபமுண்டு. வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.
எட்டு சோழி நிமிர்ந்திருந்தால்
எண்ணிய காரியம் ஈடேறாது. போன பொருள் போனதுதான். பொல்லாப்பு உண்டாகும். பாகப்பிரி வினை ஏற்படும். பொருட்கள் சேதமாகும். இந்த நேரத் தில் சூரிய பகவானை வழிபட்டால் துன்பங்கள் குறையும்.
ஒன்பது சோழி நிமிர்ந்திருந்தால்
உங்கள் தொல்லை ஓடிவிடும். நினைத்த பொருளைப் பெற்றிடலாம். வழக்கு களில் வெற்றி காணலாம். பிணி பனிபோல மறையும். பணம் வரும். உறவினர் வருகையுண்டு. இஷ்டதேவதையைப் பூஜித்துவந்தால் எதிலும் வெற்றி; தோல் வியே இல்லை. ராமாயணத்தைப் பாரா யணம் செய்துவந்தால் ராமபிரானின் அருள் கிட்டும்.
பத்து சோழி நிமிர்ந்திருந்தால்
பழிகள் வரும். தொழிலில் நஷ்டங்கள் வரலாம். இடமாற்றம் ஏற்படும். எதைச் செய்தாலும் பகையாய் முடியும். பணமும் சமயத்தில் கிடைக்காது. மனைவியே பகையாய் இருப்பார். விநாயகரைப் பூஜைசெய்தால் வினைகள் அகலும்.
பதினோரு சோழி நிமிர்ந்திருந்தால்
லாபங்கள் பன்மடங்கு உண்டு. எண்ணிய காரியம் எளிதில் முடியும். குடும்பத்தில் நிலவும் கவலைகள் தீரும். மனைவிக்கு குழந்தை பிறக்கும். உத்தியோகம் கிடைக்கும். வெளிநாடு செல்ல விரும்புபவர்களின் எண்ணம் ஈடேறும். பலவிதத்தில் உதவிகள் கிடைக்கும். உயர்பதவிகள் கிட்டும். தேவி பூஜை செய்தால் மேலும் நன்மையடை யலாம்.
பன்னிரண்டு சோழி நிமிர்ந்திருந்தால்
பொருள் விரயமாகும். போன பொருள் வராது. களவு போகும். வம்பு, வழக்குகள் வந்துசேரும். பெண்களால் சண்டை ஏற்படும். முருகனைப் பிரார்த்தித்து வந்தால் விரயங்கள் ஏற்படாது. நிம்மதி காணலாம்.
"ஓம் ஹ்ரீம் ஆதித்யாய சோமாய மங்களாய புதாய குரு சுக்ர சனிப்யச்ச ராகவே கேதவே நமஹ' என்று தினமும் 16 முறை சொல்லி வணங்கிவர, தீய பலன்கள் மாறும். வாழ்வில் வறுமை, பிணி, பகை நீங்கி மேன்மை பெறலாம்.
செல்: 94871 68174