"எண்ணெய் தேய்த்துக்கொண்டு எத்தனை முறை உருண்டாலும் ஒட்டுவது தான் ஒட்டும்; விதிப்படிதான் நடக்கும்' என்று குடிசையில் பிறந்தவர்கள் அமைதியாக வாழ்நாளை ஓட்டிவிடுகின்றனர். "விதி வலியது', "விதிப்படிதான் நடக்கும்' என்னும் இரண்டு வாக்கியங்களின் பொருளை நாம் தவறாகப் புரிந்துகொண்டுள்ளோம். அதனா லேயே வாழ்க்கை என்னும் கணக்கில் விடை காண முடியாமல் வெற்றிடமாகக் கடந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுவிடுகிறது.
மறுமுறை சொல்லிப்பாருங்கள். விதி வலியது- நமக்கு இறைவன் இட்ட நல்ல தலைவிதி வலிமையானது. அது கொடுப்பதை யாரும் தடுக்கமுடியாது. வந்தே தீரும்! விதிப்படிதான் நடக்கும்- நமக்குச் சேரவேண்டிய சௌபாக்கியங்களும் யோகங்களும் இறைவன் சொன்ன அளவு- விதிப்படி வந்துதான் தீரும். அவன் சொன்ன பூஜாவிதிகளையும் நாம் கடைப்பிடித்தால் நமக்கு விதிக்கப்பட்டிருக்கிற ஐஸ்வர்யங்கள் வாழும்போதே வந்துவிடுமே!
சிந்தாமணி குபேர தந்திர யோகம்
மனிதனது ஆயுட்காலத்தில் குபேரனின் அருட்பார்வை கிடைக்கப்பெறும் காலங் களில் துர்தசைகளோ மாரக விதிகளோ குறுக்கிட்டால், அந்த சதி செய்யும் விதியை விலகிப்போகச் செய்யும் சக்தி சிந்தாமணி குபேர தந்திர வழிபாட்டுக்கு இருக்கிறது. பாற்கடலைக் கடைந்தபோது கற்பக விருட்சமும், கேட்டதைத்தரும் சிந்தாமணியும் வெளிவர, அதைச் சிவபெருமான் அங்கத்தில் ஏற்றுக்கொண்டதால் அவருக்கு ஐஸ்வர்யங்களைக் கொடுக்கும் சக்தியும் சாந்நித்யமும் அதிகமாகிவிட்டது என்று நாம் படித்திருக்கிறோம். எல்லாவகை தந்திர வழிபாடுகளிலும், சிவபெருமானது சிந்தா மணி மந்திரவிதி சூட்சுமமாக உள்ளது.
● வலம்புரி கணபதியின் உருவம்- சங்கு வடிவ முகத்தில் சிவனது வடிவம் உள்ளது.
● லட்சுமி தேவி- பரமனின் தங்கையாக, அருள்தரும் மணிகளை சிந்தாமணியாகச் சூடிக்கொண்டிருப்பவள். இதற்கு சாட்சியாக ஸ்ரீலலிதாசகஸ்ர நாமத்தில் "சிந்தா மணி க்ருஹாந்தஸ்தா' என்று வருகிறது.
● மகாமேரு- ஆதிசங்கரர் தன் ஆனந்த சௌந்தர்யலஹரியில் "சிந்தாமணி ருணநிபத் தாக்ஷ வலயா' என்றும், துதி 8-ல் "சிந்தா மணிக்ருஹம்' என்றும் சிறப்பிக்
"எண்ணெய் தேய்த்துக்கொண்டு எத்தனை முறை உருண்டாலும் ஒட்டுவது தான் ஒட்டும்; விதிப்படிதான் நடக்கும்' என்று குடிசையில் பிறந்தவர்கள் அமைதியாக வாழ்நாளை ஓட்டிவிடுகின்றனர். "விதி வலியது', "விதிப்படிதான் நடக்கும்' என்னும் இரண்டு வாக்கியங்களின் பொருளை நாம் தவறாகப் புரிந்துகொண்டுள்ளோம். அதனா லேயே வாழ்க்கை என்னும் கணக்கில் விடை காண முடியாமல் வெற்றிடமாகக் கடந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுவிடுகிறது.
மறுமுறை சொல்லிப்பாருங்கள். விதி வலியது- நமக்கு இறைவன் இட்ட நல்ல தலைவிதி வலிமையானது. அது கொடுப்பதை யாரும் தடுக்கமுடியாது. வந்தே தீரும்! விதிப்படிதான் நடக்கும்- நமக்குச் சேரவேண்டிய சௌபாக்கியங்களும் யோகங்களும் இறைவன் சொன்ன அளவு- விதிப்படி வந்துதான் தீரும். அவன் சொன்ன பூஜாவிதிகளையும் நாம் கடைப்பிடித்தால் நமக்கு விதிக்கப்பட்டிருக்கிற ஐஸ்வர்யங்கள் வாழும்போதே வந்துவிடுமே!
சிந்தாமணி குபேர தந்திர யோகம்
மனிதனது ஆயுட்காலத்தில் குபேரனின் அருட்பார்வை கிடைக்கப்பெறும் காலங் களில் துர்தசைகளோ மாரக விதிகளோ குறுக்கிட்டால், அந்த சதி செய்யும் விதியை விலகிப்போகச் செய்யும் சக்தி சிந்தாமணி குபேர தந்திர வழிபாட்டுக்கு இருக்கிறது. பாற்கடலைக் கடைந்தபோது கற்பக விருட்சமும், கேட்டதைத்தரும் சிந்தாமணியும் வெளிவர, அதைச் சிவபெருமான் அங்கத்தில் ஏற்றுக்கொண்டதால் அவருக்கு ஐஸ்வர்யங்களைக் கொடுக்கும் சக்தியும் சாந்நித்யமும் அதிகமாகிவிட்டது என்று நாம் படித்திருக்கிறோம். எல்லாவகை தந்திர வழிபாடுகளிலும், சிவபெருமானது சிந்தா மணி மந்திரவிதி சூட்சுமமாக உள்ளது.
● வலம்புரி கணபதியின் உருவம்- சங்கு வடிவ முகத்தில் சிவனது வடிவம் உள்ளது.
● லட்சுமி தேவி- பரமனின் தங்கையாக, அருள்தரும் மணிகளை சிந்தாமணியாகச் சூடிக்கொண்டிருப்பவள். இதற்கு சாட்சியாக ஸ்ரீலலிதாசகஸ்ர நாமத்தில் "சிந்தா மணி க்ருஹாந்தஸ்தா' என்று வருகிறது.
● மகாமேரு- ஆதிசங்கரர் தன் ஆனந்த சௌந்தர்யலஹரியில் "சிந்தாமணி ருணநிபத் தாக்ஷ வலயா' என்றும், துதி 8-ல் "சிந்தா மணிக்ருஹம்' என்றும் சிறப்பிக்கிறார்.
● ஸ்வர்ணாகர்ஷண பைரவர்- ஈஸ்வரனின் அனாதி ரூபமாய் விளங்கும் ஐஸ்வர்ய சிவ மூர்த்தம்.
● லட்சுமி குபேரன்- பாற்கடலில் தோன்றி நாரணன் பத்தினியாகி தனவளத்தை இவன் தூண்டிட, குபேரன் தகுதியுடையோருக்கு அள்ளிக்கொடுக்கிறார். சிவனின் நண்பனாக இருப்பதாலும், திருமகளின் வாசம் இருப்பதாலும் அவருக்கு தொடுவதெல்லாம் தனமாகிறது.
இந்த விசேட மூர்த்தியுடன் சிந்தாமணி மந்திரமும் இணைந்தால் எப்படி இருக்கும்? சுபரும் சுபரும் இணைந்து உச்சத்தில் இருப்பதுபோல்தானே!
சிந்தாமணி குபேரனின் யோகசித்தி நமது இல்லங்களில் சிந்தாமணி குபேரனின் வாசம் நிரந்தரமாக இருந்து விட்டால் பொன்னுக்கும் பொருளுக்கும் குறைவிருக்காது. இதை ஆதிசங்கரர் சௌந்தர்யலஹரியின் "சுதாசிந்தோர்' எனத் தொடங்கும் எட்டாவது மந்திரத்தில்- "அமிர்தக் கடலின் நடுவே கற்பக விருட்சத் தோப்புகளால் சூழப்பட்ட ரத்னத் வீபத்தில், கதம்ப மரங்கள் நிறைந்த சிந்தா மணி வீட்டில் தேவி பராசக்தியாய் அமர்ந் திருக்கிறாள்' என்று கூறியுள்ளார். இவர் சொன்ன வாக்கியத்தின்படி ஒவ்வொரு இல்லமும் சிந்தாமணி கிருஹம் போலதான். அங்கே நாம் முறைப்படி லட்சுமி குபேரனை சிந்தாமணி மகாமந்திரத்துடன் வழிபடல் வேண்டும்.
"சிவசகம்' என்று சிவபெருமானை அழைத்தால் அங்கே குபேரன் வந்து விடுவார் என்று சொல்லப்பட்டுள்ளது. இங்கே சில சிந்தாமணி மந்திர மூலத்தையும், லட்சுமி குபேரனின் சிந்தாமணி மந்திர மூலத் தையும் இரு அனுவாகங்களாகஉள்ளதைச் சேர்த்து ஜபம் செய்யவேண்டும்.
""ஓம் ஹ்ரீம் பரஞ்சோதி
பரஞ்ஜோதி ஹம்ஸ ஹம்ஸ
வ்யோம வ்யோம ந்ருத்த
பரப்ரகாசானந்த நாதாய
ஹ்ரீம் சிவாயை நம:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம்
உனபதுமாம் தேவ ஸக:
கீர்த்திஸ்ச மணினா ஸஹ:
ப்ராதுர்பூதோஸ்மி ராஷ்ட்ரேஸ்மின்
கீர்த்திம் தனவ்ருத்திம் ததாதுமே
ஓம் குபேராய ஐஸ்வர்யாய
தன தான்ய மகதைஸ்வர்யாதி பதயே
தனவிருத்திம் குருதே நம:''
யக்ஞத்தால் வசமாகும் சிந்தாமணி குபேரன் இங்கே சொல்லப்பட்டுள்ள சிந்தாமணி குபேரனது வழிபாட்டை எளிமையான அக்னி வழிபாடு, தியான யோகத்தால் செய்து வெற்றி காணலாம்.
பெரிய டம்ளர் ஒன்றில் நவதானியம், ஹோம மூலிகைப் பொருட்களை இட்டு, சுற்றிலும் நவ சமித்து அல்லது அரசு, மாங்குச்சிகளைச் சிறிதாகக் கட்டிவைத்து, சுபநாளில் பஞ்சாங்கக் குறிப்புடன் சங்கல்பம் செய்து, நெய்விட்டு ஆகுதி செய்து, 108 முறை மந்திரம் சொல்லி எளிய அக்னி பூஜை செய்யவேண்டும். அடுத்ததாக பூஜையறையிலேயே கிழக்கு முகமாக அமர்ந்து மூன்றுமுறை கைகளில் காசு வைத்து, கை விரல்கள், கண்களை மூடியபடி குபேர முத்ரா வைச் செய்தபடி- "ஏ சிந்தாமணி குபேரப் பெருமானே! நான் உன்னை வழிபடுவதால் எனக்கு படிப்படியாக நிதிப் பெருக்கம், சௌபாக்கியங்கள் வந்துசேரும் என்று நம்புகிறேன். இந்த வீட்டை (அலுவலகம் என்றால் தொழில்கூடத்தை) தாங்கள் வந்து நிரந்தரமாகத் தங்கக்கூடிய சிந்தாமணிக் கிருஹமாக ஆத்ம கிருஹ சுத்தத்துடன் வைத்திருக்கிறேன் சிவபெருமானின் மந்திரங்களில் பொக் கிஷமாக விளங்கும் ஸ்ரீருத்ரமும், ரிக் வேதத்தில் உயர்ந்த மந்திரமாகிய ஸ்ரீசூக்தமும் இங்கே ஒலித்துக்கொண்டிருப்பதால் தாங்கள் நிரந்தரமாகத் தங்கி என்னை வளமாக் கிட வேண்டும். என் குடும்பத்திற்கு மட்டு மின்றி, பரந்த மனம்கொண்ட தாங்கள் எல்லா குடும்பத்திற்கும் கேட்டதைத் தரும் சிந்தா மணிபோல் மகதைஸ்வர்யத்தை எப்போதும் தந்தருள்வீராக! எனக்குப்பின்னால் குலதெய்வ, இஷ்ட தெய்வங்களின் ஆசிர்வாதமும், சிந்தா மணி குபேரனாகிய நிதிகளின் தாயகமும் இருக்கும்போது, வாழ்வில் நல்ல நிதிப் பெருக்கமும் தேகநலமும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஓம் ஸ்ரீம் சிந்தாமணி குபேராய நம: ஸ்வாகதம் ஸ்வாகதம் ஸ்வாகதம்' என்று தியானம் கூறவேண்டும்.
"அம்பிகையின் இருப்பிடமே சிந்தாமணி வீடு' என்ற ஆதிசங்கரர், அந்த சக்தியை சிவாக்னியான முக்கோணமிட்டு வழிபடு வதும் சிந்தாமணி மந்திர ஜெபத்திற்கு ஈடான பலன் தரும் என்கிறார். இதிலிருந்து நாம் தெளிவாக ஒரு விஷயத்தைப் பெறவேண்டும். சிந்தாமணி குபேரனை வீட்டினுள் தக்க வைத்துக்கொள்ள அக்னி ஹோமம் செய்தால், செல்வ யோகங்கள் எளிதில் கிடைத்துவிடும்.
எப்படி வழிபடலாம்?
ஒரு வீட்டில் ஸ்ரீலலிதாதேவியின் சகஸ்ர நாமம் ஒலிப்பதாலும், சுத்தமாக மேரு பூஜை செய்வதாலும் அந்த இடம் "சிந்தாமணி கிருஹம்' என்னும் சௌபாக்கியம் உள்ளே வருகிற வீடாகிறது என்கிறார் லக்ஷ்மீதரர்.
அடுத்ததாக "சிவாக்னெû- ஜுஹ்வந்த' என்ற பொன் வரிகளால் செல்வம் யோகம் சேர்கின்ற அதிசூட்சுமத்தை ஆதிசங்கரர் சொல்லுகையில், "சிவாக்னியில் பகவானை ஆராதனை செய்' என்று சொல்லிவிட்டார்.
முதலில் சிந்தாமணி குபேரனின் அருட் பார்வை பெற நமது ஜனன ஜாதகத்தில் அவயோக கிரகநிலை இருக்கிறதா என்று ஆராய்ந்து, அதற்கு முதலில் பரிகாரம் செய்து விட வேண்டும். உதாரணமாக துலா ராசியில் பிறந்த ஒருவருக்கு சிந்தாமணி குபேர வழி பாடு பலன் தந்து, தனாகர்ஷண யோக சித்தி வரவேண்டுமென்றால்-
"ஓம் பதார்த்தமான சித்யர்த்தம்
ப்ரம்மணா கல்பிதம் புரா
துலாவாமேதி கதிதாம்
ஸங்க்யா ரூபா முபாஸ்மஹே'
என்றும்; சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த
வரானால்-
"ஓம் மகா த்வஷ்டாய வித்மஹே
ப்ரஜா ரூபாய தீமஹி
தந்நோ சைத்ர; ப்ரசோதயாத்'
என்றும் ராசி, நட்சத்திர சுத்தி செய்யும் ஹஸ்த யக்ஞ பரிகாரம் செய்ய வேண்டும். (இப்படி 12 ராசி, 27 நட்சத்திரங்களுக்கும் மந்திரங்கள் உண்டு).
தொடர்ந்து வலம்புரிச்சங்கில் சிந்தாமணி குபேரனை அவருடைய மூர்த்தி ரகஸ்ய மந்திரத்தால் வர்ணித்து ஆவாஹனம் செய்தல் முக்கியம். இதில் அட்சர குற்றம் இல்லாமல் மந்திரங்களைக் கூறப் பழகிக்கொள்வது அவசியம்.
ஸுபீன தேஹோ யக்ஷேசோ
ஹார கேயூர பூஷித:/
ஸர்வ லட்சண சம்பூர்ணோ
கதா சங்கத ரோசந://
நாநா ரத்ன ஜ்வலே
நாத மகுடேந விபூஷித:/
கர்த்தவ்யோ வாமநா காரோ
த்விபுஜோ நரவாகந://
இந்த தியானத்தில் இதுவரை சொல்லப் படாத குபேரனின் உருவ லட்சணம் மூர்த்தி ரகசியமாக சொல்லப்பட்டிருப்பதை கவனியுங்கள்.
குபேர சிந்தாமணியை 27 நட்சத் திரக்காரர்களும் தனியாக தங்கள் பெயரை நட்சத்திரத்துடன் எழுதி வைத்துக்கொண்டு ஹஸ்த யக்ஞமுறை, ஜபத்யானம் செய்து பலனை எளிதில் பெறலாம். இவ்வழிபாட்டால் கடன் தொல்லையும் தீர்கிறது.
யார் பெறுவார் சிந்தாமணி குபேரனின் அருட்பார்வை?
● தனஸ்தானாதிபதி கேந்திர ஸ்தானங் களில் இருப்பினும், தனகாரகன் குரு உச்சமடைந்திருந்தாலும் நீடித்த குபேர தனயோகம் ஏற்பட்டுவிடும்.
● தனஸ்தானத்தை பாக்யாதிபதியும் லாபஸ்தானாதிபதியும் பார்த்தால் நீண்ட ஆண்டுகள் நிலைத்திருக்கும் செல்வத்துடன் வாழ்வார்.
● ஒரு ஜாதகர் பகலில் பிறந்து சந்திரன் உச்சம் அல்லது ஆட்சி பெற்று, சந்திரன் குருவால் பார்க்கப்பட்டால் ஐஸ்வர்யங்களை வாழ்நாள் முழுவதும் பெறுவார்.
● செவ்வாய் மேஷம் அல்லது விருச்சிகம் அல்லது மகரத்தில் இருக்கப்பெற்று, அந்த இடம் கேந்திரங்களில் ஒன்றானால் ருசக யோகத்தைக் கொடுத்து குபேரன் தரும் செல்வ யோகத்தை அதிகம் பெறுவார்.
● புதன் மிதுனம் அல்லது கன்னியில் இருக்கப்பெற்று, அந்த இடம் கேந்திரங்களில் ஒன்றானால் பத்ரயோகம் அமைந்து குபேரனின் அருட்பார்வை தரும்.
● புதன், குரு, சுக்கிரன் மூவரும் லக்னத் திலிருந்து, சனி 7-ல் அமர்ந்துவிட ஜாதகர் சுகபோக வாழ்வைப் பெற்று பணபலம் அடைவார்.
● லக்னாதிபதியும் பாக்யாதிபதியும் 4-ஆம் இடத்தில் அமர்ந்து, 4-க்குடைய அதிபதி லாபஸ்தான வீட்டில் அமர்ந்தால் கோடியில் புரளும் குபேர யோகம் வரும்.
● பத்துக்குரியவர் தனது உச்சவீட்டிலிருந்து தன் சொந்த வீடாகிய பத்தாம் இடத்தைப் பார்வையிட்டால் செல்வ யோகத்தில் திளைப்பார்.
● குருவும் சந்திரனும் உச்சம்பெற்று, செவ் வாயும் புதனும் 7-ல் இருக்க, சனி மகரத்தில் ஆட்சி பெற்றிருந்தால் குபேர ராஜதனயோகம் உண்டாகும்.
● லட்சுமி யோகம், சச யோகம், மகா பாக்கிய யோகங்களை மட்டுமே கணக் கிட்டுக்கொள்ளும் நாம், குரு- சுக்கிரன் பரிவர்த் தனை, சனி- செவ்வாய் தரும் சுபமங்கள யோகங்களையும் கணக்கிட்டு, அந்த யோகங் கள் பங்கமடைந்திருந்தால் அதற்குப் பரிகாரம் தேடவேண்டும்.
பொதுவாக பன்னிரு ராசிகளுக்கும் சாந்தி குஸுமாகார வழிகாட்டி நூலில் சொல்லப் பட்ட ராசி சூட்சும மந்திரங்களால் ஆன்ம சாந்தி பரிகாரத்தை விதிப்படி செய்யவேண்டும். இதற்கான யந்திரத்தை வரைந்து சிந்தாமணி குபேரனை வீட்டிலோ, தொழிற்கூடத்திலோ ராசிக்கான பரிகாரம், நட்சத்திர சக்தியூட்டும் வழிபாடு, சிந்தாமணி குபேரனை வழிபடும் ஹஸ்த யக்ஞ விதி, ஆன்ம தியானம் ஆகிய நான்கு படிநிலைகளை சரியாகச் செய்தாலே குபேரனின் அகலாத நிதிகள் சேர்ந்திடும்.
செல்: 91765 39026