பெற்றோரை மதிக்காத பிள்ளைகள்! -மகேஷ் வர்மா

/idhalgal/balajothidam/children-who-do-not-respect-their-parents-mahesh-verma

ந்த பெற்றோராக இருந்தாலும், தங்கள் பிள்ளைகள் புகழுடன் இருக்க வேண்டுமென்றுதான் எதிர்பார்ப்பார்கள். ஆனால், பல வீடுகளில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை மதிப்பதில்லை. அதற்கு முக்கிய காரணம் பெற்றோரின் ஜாதகம்தான்.

parents

ஒரு தந்தையின் ஜாதகத்தில் 5-ஆம் பாவாதிபதி 6, 8, 12-ல் இருந்து, அதை பாவகிரகம் பார்த்தால், அவரது பிள்ளைகள் தந்தைப் பேச்சைக் கேட்கமாட்டார்கள்.

ஒரு ஜாதகத்தில் 5-ஆம் பாவத்தில் குரு நீசமாக இருந்து, அதை பாவகிரகம் பார்த்தால், அவருக்கு எத்தனைப் பிள்ளைகள் இருந்தாலும், யாராலும் எந்தப் பயனும் இருக்காது.

5-ஆம் பாவத்தை சனி, செவ்வாய் பார்க்க, 5-ஆம் பாவாதிபதி அஸ்தமனமாக அல்லது பலவீனமாக இருந்தால், அவருக்குத் தன் பிள்ளைகளால் பிரயோஜனம் இருக்காது.

2-ஆம் பாவத்தில் செவ்வாய், 5-ஆம் பாவத்தில் கேது, 11-ல் சனி, ராகு இருந்தால், அந்த ஜாதகரின் பிள்ளைகளால் எப்போதும் தலைவலிதான். ஏனென்றால், 2-ல் இருக்கும் செவ்வாய் தன் 4-ஆவது பார்வ

ந்த பெற்றோராக இருந்தாலும், தங்கள் பிள்ளைகள் புகழுடன் இருக்க வேண்டுமென்றுதான் எதிர்பார்ப்பார்கள். ஆனால், பல வீடுகளில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை மதிப்பதில்லை. அதற்கு முக்கிய காரணம் பெற்றோரின் ஜாதகம்தான்.

parents

ஒரு தந்தையின் ஜாதகத்தில் 5-ஆம் பாவாதிபதி 6, 8, 12-ல் இருந்து, அதை பாவகிரகம் பார்த்தால், அவரது பிள்ளைகள் தந்தைப் பேச்சைக் கேட்கமாட்டார்கள்.

ஒரு ஜாதகத்தில் 5-ஆம் பாவத்தில் குரு நீசமாக இருந்து, அதை பாவகிரகம் பார்த்தால், அவருக்கு எத்தனைப் பிள்ளைகள் இருந்தாலும், யாராலும் எந்தப் பயனும் இருக்காது.

5-ஆம் பாவத்தை சனி, செவ்வாய் பார்க்க, 5-ஆம் பாவாதிபதி அஸ்தமனமாக அல்லது பலவீனமாக இருந்தால், அவருக்குத் தன் பிள்ளைகளால் பிரயோஜனம் இருக்காது.

2-ஆம் பாவத்தில் செவ்வாய், 5-ஆம் பாவத்தில் கேது, 11-ல் சனி, ராகு இருந்தால், அந்த ஜாதகரின் பிள்ளைகளால் எப்போதும் தலைவலிதான். ஏனென்றால், 2-ல் இருக்கும் செவ்வாய் தன் 4-ஆவது பார்வையால் கேதுவைப் பார்க்கும். அதே நேரத்தில்- 11-ல் இருக்கும் சனியும் கேதுவைப் பார்க்கும். அதனால் அந்த பாவம் கெட்டுவிடும்.

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் 12-ல் இருந்து, 7-ல் செவ்வாய், 9-ல் சனி இருந்தால், பிள்ளைகள் பெற்றோரை மதிக்கமாட்டார்கள்.

லக்னத்தில் நீசச் செவ்வாய், 7-ல் சனி இருந்தால் அந்த ஜாதகர் கோபக்காரராக இருப்பார். வீட்டில் எல்லாருடனும் சண்டையிடுவார். தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும்.

ஒரு ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரன் லக்னத் தில் இருந்து, 7-ல் செவ்வாய், சனி இருந்தால், அந்த ஜாதகர் ஆடம்பரமாக செலவு செய்வார். அப்படிப்பட்ட பிள்ளையால் வீட்டில் அமைதி கெடும்.

லக்னத்தில் சுக்கிரன், கேது, 4-ல் செவ்வாய், 6-ல் சனி இருந்தால், அந்த பிள்ளையால் வீட்டில் பிரச்சினைகள் உண்டாகும். அவர் வீட்டில் அனைவருடனும் சண்டையிடுவார். பிள்ளையால் பெற்றோரின் மனம் மிகவும் கவலைப்படும்.

லக்னத்தில் சனி, 8-ல் சுக்கிரன், கேது, 12-ல் சந்திரன் இருந்தால், அந்த ஜாதகர் ஆணவத்துடன் அனைவரிடமும் பேசுவார். வீட்டில் சாப்பாடு ருசியாக இல்லையென்று சண்டை போடுவார். அப்படிப்பட்ட பிள்ளை களால் பெற்றோருக்குக் கவலை ஏற்படும்.

லக்னத்தில் செவ்வாய், 3-ல் நீசச் சந்திரன், 7-ல் சனி, 8-ல் ராகு இருந்தால், அவர் எல்லாருடனும் விவாதம் செய்வார். அந்த பிள்ளை, தன் தந்தையின் சொத்தினை அழிப்பார். அவர் தன் பெற்றோரின் பேச்சை சிறிதுகூட கேட்கமாட்டார்.

லக்னத்தில் சூரியன், புதன், 4-ல் செவ்வாய், 7-ல் சனி இருந்தால், அவர் வீட்டில் எல்லாருடனும் சண்டையிடுவார். தனக்குத் தெரிந்தது யாருக்குமே தெரியா தென்று அடம் பிடிப்பார்.

பெற்றோரை விட்டெ றிந்து பேசுவார்.

9-ல் செவ்வாய், 11-ல் சனி, சந்திரன், கேது இருந்தால், விஷயோகம் காரணமாக அவர் கடுமையாகப் பேசுவார். தன் தந்தையை மதிக்க மாட்டார். அவரால் நிறைய பண இழப்பு உண்டாகும்.

3-ல் நீச சூரியன், 5-ல் ராகு, 6-ல் நீச குரு, 9-ல் செவ்வாய், 11-ல் சனி, கேது இருந்தால், அவர் வீட்டிலுள்ள அனைவரிடமும் அடாவடித் தனமாகப் பேசுவார். தன் தந்தையின் சொத்தை அபகரிப்பதற்கு முயல்வார். அதனால் தந்தையின் மனம் வேதனைப்படும்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 2-ல் செவ்வாய், புதன், 5-ல் சந்திரன், கேது, 12-ல் சனி இருந்தால், அந்தப் பெண் திருமணத்திற்குமுன்பே பலருடன் பழகி, பெற்றோருக்குப் பிரச்சினையை உண்டாக்கு வாள். திருமணத்திற்குப்பிறகுகூட பழைய காதலனுடன் பழகுவாள். சில நேரங்களில், கணவனைத் துறந்தும்விடுவாள். அதனால் பெற்றோரின் பெயர் கெடும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 5-ல் ராகு, 6-ல் சனி, 9-ல் நீசச் செவ்வாய் இருந்தால், அவள் பல தவறுகளைச் செய்து பெற்றோருக்கு அவப்பெயரை வாங்கித் தருவாள்.

5-ல் ராகு, 9-ல் செவ்வாய், 10-ல் சூரியன், சுக்கிரன், 11-ல் சந்திரன், கேது இருந்தால், அந்த ஜாதகர் மனக் கட்டுப்பாடில்லாமல் நடப்பார். அதனால் பெற்றோரின் பெயர் கெடும்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 2-ஆம் பாவத்தில் சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன் இருந்து, 5-ல் சனி இருந்தால், நன்கு படித்துக்கொண்டி ருக்கும் அவளுக்கு ராகு தசை நடந்தால், அந்த ராகு 6 அல்லது 11-ல் இருந்தால், அவள் தவறான ஆணிடம் பழகுவாள். அதனால் குடும்பத்திற்கு அவமானம் உண்டாகும். பெற்றோரின் பேச்சைக் கேட்கமாட்டாள்.

பரிகாரங்கள்

பெற்றோர் செய்ய வேண்டியவை...

தினமும் காலையில் விநாயகரை வணங்க வேண்டும். "ஓம் கன் கணபதயே நமஹ' என்ற மந்திரத்தைக் கூறவேண்டும். தினமும் ஆஞ்சநேயரை நான்குமுறை சுற்றிவர வேண்டும். தன் லக்னம், 5-க்கு அதிபதியின் ரத்தினத்தை அணியலாம். வியாழக்கிழமை பசுவுக்கு வெல்லம் அல்லது மஞ்சள் வாழைப்பழத்தைத் தரவேண்டும். குலதெய்வத்தை வணங்கவேண்டும். நாய்க்கு இனிப்பு, பிஸ்கட் ஆகியவற்றை தினமும் தருவது நல்லது. ஞாயிற்றுக்கிழமை மாமிசம் சாப்பிடக்கூடாது. வீட்டில் தென்கிழக்கில் நீர்த்தொட்டி இருக்கக்கூடாது. பிள்ளைகள் கிழக்கில் தலைவைத்துப் படுக்கவேண்டும்.

செல்: 98401 11534

bala111220
இதையும் படியுங்கள்
Subscribe