இன்றைய அவசர உலகில் நாம் காலற்ற, உடலற்ற, தலையற்ற நாட்களை கவனிப் பதில்லை.
சூரிய தசையில் வரும் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நாட்கள் காலற்ற நாட்களாகும்.
செவ்வாய் தசையில் வரும் மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நாட்கள் உடலற்ற நாட்களாகும்.
குரு தசையில் வரும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நாட்கள் தலையற்ற நாட் களாகும். இதற்கொரு பாடல் உண்டு.
"காலற்ற வுடலற்ற தலையற்ற நாளிற் கோலக்குய மடவார் தமைக் கூடின் மலடாவார் மாலுக்கொரு மனை மாளிகை கோலினது பாழாம் ஞாலத்தவர் வழிபோகினு நலமெய்திடாரே.'
காலற்ற, உடலற்ற, தலையற்ற நாட்களில் பெண
இன்றைய அவசர உலகில் நாம் காலற்ற, உடலற்ற, தலையற்ற நாட்களை கவனிப் பதில்லை.
சூரிய தசையில் வரும் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நாட்கள் காலற்ற நாட்களாகும்.
செவ்வாய் தசையில் வரும் மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நாட்கள் உடலற்ற நாட்களாகும்.
குரு தசையில் வரும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நாட்கள் தலையற்ற நாட் களாகும். இதற்கொரு பாடல் உண்டு.
"காலற்ற வுடலற்ற தலையற்ற நாளிற் கோலக்குய மடவார் தமைக் கூடின் மலடாவார் மாலுக்கொரு மனை மாளிகை கோலினது பாழாம் ஞாலத்தவர் வழிபோகினு நலமெய்திடாரே.'
காலற்ற, உடலற்ற, தலையற்ற நாட்களில் பெண்களைக் கூடின் மலடாவார் என்று இப்பாடல் கூறுகிறது.
அதாவது, முதலிலிரவு வைக்கும் நேரத்தை மறைமுகமாகச் சொல்லியுள்ளார்கள். எனவே, தங்களது பிறந்த நட்சத்திரத்திலும், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களிலும் முதலிரவு வைக்கக்கூடாது. அந்த நட்சத்திரங்களில் திருமணம் செய்யலாம்.
முதலிரவை மட்டும் மாற்றி வைத்துக் கொள்ளவேண்டும்.
இதனைக் கடைப்பிடிப்பவர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதில்லை. குழந்தை பாக்கியம் கிட்டும். குழந்தை இல்லாதவர்களுக்கு மேற்சொன்ன நாட்களை கவனிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். எனவே அதற்குரிய பரிகாரத்தைச் செய்துகொள்ளவேண்டும்.
அதேபோல மேற்சொன்ன நட்சத்திரம் வரும் நாட்களில் புதுமனைப் புகுவிழா நடத்தக்கூடாது. யாத்திரை போகவும் ஆகாது. உடல்நலம் குன்றியவர்களை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லக்கூடாது. பல லட்சம் செலவு செய்து வீடு கட்டும் நாம் நல்ல நாட்கள் பார்க்காமல் புதுமனைப் புகுவிழா நடத்திவிடுகிறோம். அதனால் சிரமங்களை அனுபவிக்கிறோம். இனியாவது இத்தகைய நாட்களைத் தவிர்த்து, எல்லா வளமும் பெற திருச்செந்தூர் முருகனைப் பிரார்த்திப்போம். பயன்பெறுவோம்.
பரிகாரம்-1
27 கருப்புக் கொண்டைக்கடலை எடுத்துக்கொள்ளவேண்டும். மஞ்சள்நிறத் துணியில், துணிக்கு மூன்றுவீதம் வைத்து முடிந்து அதனை பூஜையறைக்குள் வைக்க வேண்டும். பின்பு தினசரி ஒன்றுவீதம் எடுத்து தலையணைக்குக்கீழ் வைத்துக்கொள்ள வேண்டும். அன்றைய தினம் கணவன்- மனைவி உறவில் வழக்கம்போல இருக்கலாம். காலையில் மனைவி எழுந்தவுடன் தலையணைக்குக் கீழுள்ள முடிச்சை எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, "திருச்செந்தூர் முருகா! எங்களுக்கு குழந்தைவரம் வேண்டும்' என்று மௌனமாக ஒன்பதுமுறை முடிச்சைப் பார்த் தபடி கேட்கவேண்டும். பின்பு அந்த முடிச்சை வேறிடத்தில் (டப்பாவில்) வைத்துக்கொள்ள வேண்டும். இதுபோல மற்ற முடிச்சுகளை ஒன்பது நாட்கள் செய்யவேண்டும். 10-ஆம் நாள் ஒன்பது முடிச்சுகளும் வெளியில் வந்து விடும். அவற்றை அவிழ்த்துப் பார்க்காமல்- யாருக்கும் தெரியாமல் தண்ணீரில் போட வேண்டும். இவ்வாறு செய்த நூறாவது நாளில் குழந்தை உருவாகும் என்பது அனுபவப் பூர்வமான உண்மை. எனவே முன்சொன்ன ஒன்பது நட்சத்திரங்களில் முதலிலிரவை ஆரம்பித்திருந்தால், இந்தப் பரிகாரத் தின்மூலம் குழந்தைப்பேறு அடையலாம்.
பரிகாரம்-2
மேற்கண்ட ஒன்பது நட்சத்திர நாட்களில் புதுமனைப் புகுவிழா நடத்தியிருந்தாலும் கவலையடைய வேண்டாம். மீண்டும் ஒரு கணபதி ஹோமத்தை நல்லநாள் பார்த்து வைத்துக்கொள்ளலாம். செவ்வாயின் அதிபதியான திருச்செந்தூர் முருகனை வணங்கி எல்லா வளமும் பெறலாம்.
செல்: 94871 68174