உலகில் பிறந்த அத்தனை மனிதரும் காதல் வயப்படக் கூடிய வர்கள்தான். அதற்குரிய காலம் வருகின்றபோது அந்த நிலைக்கு அவர்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது.
இந்த நிலையில் ஒருசிலர் மட்டும் அதுபற்றிய எண்ணத்துடனே வாழ்ந்துகொண்டு, ஒருவரைவிட்டு வேறு ஒருவருடன் பழக்கம் வைத்துக்கொள்வது என்பது சமூகத்தில் பரவலாக இருக்கிறது.
இதற்கெல்லாம் என்ன காரணம்? இந்த இடத்தில் ஒருசில ஜோதிடர்கள் கற்பு நிலையினையும், காதல் ஈடுபாட்டையும் பற்றி பேசுகின்றபோது ஒரு பாலினரையே குறிப்பிட்டுப் பேசிவருகின்றனர். முதலில் இது மிகப்பெரிய தவறாகும்.
ஜாதகம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. தாயின் கருவிலிருந்து ஒரு குழந்தை வெளிவரும்போதே அதன் தலையெழுத்துடன்தான் பிறக்கிறது. அக்குழந்தையின் கர்ம வினைகளுக்கேற்ப அதே நிமிடத்தில் பிறந்த குழந்தை களுக்கும் அதற்குமான பலன்கள் ஏற்ற- இறக்கமாக இருக்கும். இதுதான் விதி.
ஒரு குழந்தை பிறந்து வளர்ந்த பிறகு, பிறப்பில் நிர்ணயிக்கப் பட்ட அதன் தலையெழுத்து மாறுவதில்லை. இப்போது செய்யும் வினைகளாலும் பெறும் சாபங்களாலும் யாருக்கும் இப்பிறப் பில் எதுவும் உண்டாவதில்லை.
கடந்த பிறவியின் தொடர்ச்சி யான இப்பிறப்பில், கருவில் இருந்து வெளிப்படும்போதே நம் ஒவ்வொரு வரின் தலையெழுத்தும் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.
கடந்த பிறவியில் நாம் பெற்ற சாபங்களே, தோஷங்களாக நம் ஜாதகத்தில் வெளிப்படுகிறது. இதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் காந்தாரி, ஸ்ரீமன் நாராயணனுக்கு வழங்கிய சாபம்.
கடந்த பிறப்பில் நாம் பெற்ற சாபங் களையும் வரங்களையும் அனுபவிப்பதற் காகத்தான் இப்பிறப்பு நமக்கு.
ஒருவரின் லக்னம், லக்னாதிபதி நின்ற நட்சத்திரம், ராசி, ராசியாதிபதி நின்ற நட்சத்திரம், தசாபுத்தி, அவர்களின் காரகங்கள், கோட்சார நிலைகளை வைத்து ஒருவரின் தலையெழுத்தை நன்றாக கணிக்கமுடியும்.
ஆனால், பெரும்பாலானவ

ஆனால், பெரும்பாலானவர்கள் ஆண்களுக்கு ஒரு நியதி; பெண்களுக்கு ஒரு நியதி இருப்பதுபோல், அவர்களுக்கு வேறு விதி; இவர்களுக்கு வேறு விதி இருப்பதுபோல் பிரித்துப் பிரித்துப் பலன்களைக் கூறிவருகின்றனர்.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான தகவல் என்னவென்றால், சனிப் பெயர்ச்சி வருகிறது, ஒரு ராசியில் பிறந்த ஆணாக இருந்தாலும் சரி- பெண்ணாக இருந்தாலும் சரி; இரு பாலினருக்குமே அவர்கள் பிறந்த ராசியின் அடிப்படையில் அவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்பது ஒன்று பட்டதாகத்தான் இருக்கும்.
குருப்பெயர்ச்சி வருகிறது. ஒரு ராசியினருக்கு திருமண யோகம் வருகிறது என்றால் அந்த ராசியில் பிறந்த ஆணுக்கும் திருமண யோகம்தான். பெண்ணுக்கும் திருமண யோகம்தான். அதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
ஒருசிலர் பெண்களை மட்டுமே மையமாக வைத்து, இந்த கிரகம் இந்த இடத்தில் இருந்தால் இந்த ஜாதகி கற்பு நிலை தவறக் கூடியவள் என்றும், இந்த கிரகம் இந்த இடத்தில் சஞ்சரித்தால் அந்த ஜாதகி காதல் வயப்படக்கூடியவள். அதன்காரணமாக மாற்றங்களை விரும்பிடக்கூடியவள் என்றும் பேசிவருகின்றனர்.
இத்தகைய பேச்சு ஜோதிட விதிமுறைக்கு எதிரானதாகும். முற்றிலும் தவறானதுமாகும்.
பொதுவாக கற்புநிலையையும், காதல்நிலையையும் வெளிப்படுத் தும் இடங்கள் 4-ஆமிடமும், 5-ஆமிடமு மாகும்.
களத்திர ஸ்தானம் என்பது இருபாலினருக்கும் பொதுவாக 7-ஆமிடமாகும். பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம் 8-ஆமிடமாகும்.
இந்த நிலையில், ஒவ்வொருவருக்கும் அவருடைய லக்னத்தை வைத்து 4-ஆமிடம் மாறுபட்டிருக்கும். அப்படி பார்க்கும்போது அந்த 4-ஆமிடத்தின் அதிபதி முதலில் யார் என்பதைப் பார்க்க வேண்டும். அவர் எந்த நிலையில், எந்த இடத்தில் சஞ்சரிக்கி றார் என்பதைப் பார்க்கவேண்டும். அதன் பிறகு அந்த 4-ஆமிடத்தில் எந்த கிரகம் அமர்ந்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
மேலோட்டமாக 4-ஆமிடத்தில் ராகு- கேது போன்ற பாப கிரகங்கள் ஒரு ஜாதகத்தில் சஞ்சரிக்கிறபோது அந்த ஜாதகர் கற்பு நிலையில் சரியாக இருந்திட வாய்ப்பில்லை என்பது பொதுவான விதி. ஆனால், அந்த விதிக்கும் ஒரு மாற்று விதி இருக்கிறது. 4-ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் பாப கிரகம் யாருடைய நட்சத்திரத்தில் சஞ்சரிக்கி றது? அதை யார் பார்க்கி றார்? சுப கிரகத்தின் பார்வை அந்த இடத்திற்கு இருக்கிறதா? என்பதையும் பார்க்க வேண்டும். இத்தனையும் பார்த்துதான் அந்த ஜாதகர் எத்தகையவராக இருப்பார் என்பதை நம்மால் கண்டுபிடிக்கமுடியும்.
இந்த விதி என்பது பெண்களுக்கு மட்டு மல்ல; ஆண்களுக்கும் பொதுவான விதிதான்!
இந்த இடத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது அந்த ஜாதகரின் நிலை, அவரு டைய வாழ்க்கை, அவர் பெண்ணோ அல்லது ஆணோ யாராக இருந்தாலும் சரி- அவரு டைய பிறப்பு வழியாக, அவர் சுமந்துவரும் வினைகளின் வழியாக, அவருடைய வாழ்க்கை அமைந்துவிடுகிறது. இந்த நிலைக்கு எந்த வகையிலும் நாம் அவரைக் குறைகூற முடியாது. காரணம் அது அவர் வாங்கிவந்த சாபம், கர்மா. இப்படித்தான் வாழவேண்டும் என்பது அவருடைய விதி.
அந்த விதியின்படி கிரகங்கள் அமைந்து அந்த கிரகங்கள்தான் அவருடைய வாழ்க்கை யின் ஒவ்வொரு நகர்வையும் நகர்த்திக் கொண்டுள்ளது. அதனால் கிரகங்கள் இயக்குவதுபோல் இயங்கிடும் நம் வாழ்க்கை யில் எதையும் நாம் செய்வதல்ல. அனைத்துமே கிரகங்களால்தான் செய்ய வைக்கப்படுகிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் முதலில் உணரவேண்டும்.
இதேபோல்தான் 5-ஆமிடத்தினை வைத்து அனைத்து ஜாதகரின் காதல் நிலை யினையும் அறியலாம்.
அந்த ஜாதகர் காதலில் எப்படி இருப்பார்? மன்னனாக இருப்பாரா? ஒழுக்கமாக இருப்பாரா? என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.
இதற்கும் காரணம் முன்ஜென்ம வினைகளும், அவரை அதை அனுபவிக்க வைத்திடும் வகையில் உண்டான அவருடைய பிறப்பும்தான்.
அடுத்து, 7-ஆமிடம். இதனை அனைவரும் களத்திர ஸ்தானம் என்போம்.
பொதுவாக, நட்பு நிலையை உணர்த்துகிற இடம் இது.
முன்பு நாம் சொன்ன 4-ஆமிடத்தின் நிலையைப்போலவே ஒவ்வொரு ஜாதகருக் கும் அவருடைய 7-ஆமிடத்தின் நிலையைப் பார்க்கவேண்டும்.
அந்த இடத்தின் அதிபதி யார்?
அவர் எந்த நிலையில், யாருடைய வீட்டில் சஞ்சரிக்கிறார்? யாருடைய நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்? அடுத்து 7-ஆம் இடத்தில் எந்த எந்த கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர்?
அவர்களுடைய காரகத்துவம் என்ன என்பதையும் பார்க்கவேண்டும். இவற்றுடன் களத்திரகாரகன் சுக்கிரன் சஞ்சரிக்கும் நிலையையும் பார்க்கவேண்டும்.
இவையனைத்தையும் பார்க்கும் போதுதான் அந்த ஜாதகரின் திருமண வாழ்க்கையை அறியமுடியும்.
அவருக்கு காதல் திருமணமா? பெரியோரால் நடத்தி வைக்கப்படும் திருமணமா? திருமணம் குறித்த வயதில் நடக்குமா? தாமதத் திருமணமா? தனக்குத் தகுதியானவரை மணப்பாரா? தகுதியில்லாத வரை மணப்பாரா? சொந்த ஜாதியில் திருமணம் செய்துகொள்வாரா? வேறு ஜாதியில், மதத்தில் திருமணம் செய்து கொள்வாரா? திருமணத்திற்குப்பின் அவருடைய வாழ்க்கை நிலை எப்படி யிருக்கும்? தன் துணைக்கு துரோகம் செய்வாரா? திருமண வாழ்க்கையில் முறிவு ஏற்படுமா? அடுத்த துணைக்கு வாய்ப்புண்டா? என்பதையெல்லாம் அறியமுடியும்.
இந்த நிலையும் ஆணுக்கும், பெண்ணுக்கு மான பொதுவான நிலைதான்.
இவற்றுக்கும் காரணம், அந்த ஜாதகரின் முந்தைய பிறப்பில் அவர் செய்த வினைகளும், அவர் பெற்ற வரங்களும் சாபங்களும்தான். அதையொட்டிதான் அவருடைய ஜாதகம் அமைகிறது. 7-ஆமிடத்தின் நிலை அமைகிறது.
அடுத்து 8-ஆமிடம். இந்த இடத்தைப் பொதுவாக மறைவு ஸ்தானம், அஷ்டம ஸ்தானம், ஆயுள் ஸ்தானம் என்று கூறப் பட்டாலும் பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம் இந்த 8-ஆமிடம்தான்.
இந்த இடத்தை வைத்தே ஒரு பெண்ணின் மாங்கல்ய நிலையை அறிந்துவிடமுடியும்.
அந்தப் பெண்ணுக்கு ஒரே மாங்கல்யம் தானா? அந்த மாங்கல்யக் காரகனின் நிலை என்ன? அடுத்த மாங்கல்யம், அடுத்தடுத்த மாங்கல்யங்கள் அப்பெண்ணுக்கு உண்டா என்பதை அறியலாம்.
இதற்கும் காரணம் கடந்த பிறப்பின் வழியிலான கர்மவினைகளும், அதை அனுபவிக்கும் வகையில் நம் பிறப்போடு வரும் கிரகங்களின் காரகங்களும்தான்.
இந்த நிலையை நமக்குத் தெரிவிப்பதுதான் ஜோதிட சாஸ்திரம்.
அடுத்து அனைவரின் ஜாதகத்தி லும் கவனிக்கப்பட வேண்டிய இடம் 11-ஆமிடமாகும்.
இந்த இடத்தின் அதிபதியினுடைய நிலையை முதன்மையாக பார்க்கவேண்டும். அவர் சஞ்சரிக்கும் இடம், 11-ஆமிடத்தில் சஞ்சரிக்கும் கிரகங்கள், 11-ஆமிடத்தைப் பார்க்கும் கிரகங்கள் என்று அனைத்தையும் பார்க்கும்போது அந்த ஜாதகரின் திருமண வாழ்க்கைக்கு அடுத்ததான வாழ்க்கையை அறிந்துகொள்ளமுடியும்.
இந்த நிலைக்கும் காரணம் அந்த ஜாதகர் அல்ல. அவரை வழிநடத்தும் கிரகங்கள்தான் என்பதே உண்மை.
இந்த நிலைகளை எல்லாம் கடந்து ஒரு ஜாதகர் ஒழுக்கமாக வாழ்ந்துவருகிறார் என்றாலும், அந்த ஜாதகருக்கு சுக்கிர தசையோ, ராகு தசையோ வருகிறபோது, அல்லது 4-ஆமிடத்தில் கோட்சார ரீதியாக பாபகிரகங்கள் சஞ்சரித்து, அதன் தசையோ புக்தியோ நடைபெறும் காலத்தில் அந்தக்கிரகங்களின் காரகத்துவத்தை அந்த ஜாதகர் அனுபவித்தாக வேண்டும் என்ப தால், அவருடைய வாழ்க்கையில் தடுமாற்றம், தடமாற்றம் என்பதையெல்லாம் அந்த கிரகங்கள் செய்துவிடுவார்கள்.
அதே நேரத்தில், ஒருவர் எத்தனைதான் தவறு செய்தாலும் அவருடைய லக்னத்திற்கு குருபகவானின் பார்வையோ தொடர்போ உண்டாகும்போது அவர் செய்யும் தவறுகள் வெளியில் தெரியாமல் போய்விடும்.
தவறு செய்வதை வெளிச்சம்போட்டுக் காட்டுவதில் முதலிடம் வகிப்பவர்கள் போகக்காரகனான ராகுவும், களத்திரக் காரகனான சுக்கிரனும்தான். எப்படிப் பட்டவரையும் மாற்றம் செய்திடக் கூடியவர்கள் இவர்கள். இவர்களுடைய தசை யாருக்கு வந்தாலும் அவர்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
அதனால் இங்கு எதுவுமே நாம் அல்ல, நம்மால் நடத்தப்படுவதும் அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
அதேபோல் காதல், கற்பு, ஒழுக்கம், தவறு என்பதெல்லாம் பெண்களுக்கு மட்டும்தான் என்ற எண்ணத்தையும் கைவிட வேண்டும்.
செல்: 94443 93717